5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை

author
13
0 minutes, 12 seconds Read
This entry is part 16 of 32 in the series 3 பிப்ரவரி 2013

லாமியா ஐந்து வயது பாதி எகிப்திய – பாதி சவுதி குழந்தை. இக்குழந்தையின் தாயார் எகிப்தில் பிறந்து சவுதி அரேபியாவுக்கு 25 வருடத்துக்கு முன்னர் வந்தார். அக்குழந்தையின் தந்தை பாயான் அல் காம்தி என்பவர் இஸ்லாமிய பிரச்சார தொலைக்காட்சிகளில் இஸ்லாமை பிரச்சாரம் செய்பவர். அல் காம்தி லாமாவின் தாயாரை விவாகரத்து செய்துவிட்டு அந்த குழந்தையை எடுத்துகொண்டார். இந்த வீடியோவில் குழந்தையை தத்தெடுத்துகொண்டால் மதரீதியாக என்ன பயன் பெறலாம் என்று உள்ளம் உருகுவதை காணலாம்.

 

fayhan-al-ghamdi

 

செய்திகளின் படி, லாமா வினோதமான நடத்தை காரணமாக அக்குழந்தையின் கன்னித்தன்மையை தான் சந்தேகித்ததாக இந்த காம்தி நீதிபதியிடம் கூறியிருக்கிறார். ஒரு மருத்துவரை வைத்து இந்த குழந்தை கன்னித்தன்மையுடன் இருக்கிறதா என்று பரிசோதித்திருக்கிறார். இக்குழந்தையின் தாயார் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் லாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றதும் தான் ஏதோ தவறான விஷயம் நடந்திருக்கிறது என்று சந்தேகித்ததாக கூறியிருக்கிறார். ஆனால், லாமாவின் தந்தை தன்னை குழந்தையோடு பேச அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

தாயார், குழந்தையின் தந்தையிடம், தன் குழந்தையை தன்னிடம் கொடுத்துவிடும்படி கெஞ்சி கேட்டதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்  ஒருவழியாக குழந்தையை அவர் பார்க்கும்போது குழந்தை ICU தீவிர கண்காணிப்பு பகுதியில் மருத்துவமனையில் இருந்தது. அக்குழந்தையின் ஒரு விரலில் நகம் பிடுங்கப்பட்டிருந்ததை பார்த்ததாகவும் கூறினார். அக்குழந்தையின் ஒருபக்க தலை சிதைக்கப்பட்டிருந்தது. அக்குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு சூடு மூலமாக அதனை மூட முயற்சி நடந்திருந்தது.  ராண்டா அல் கலீப் என்ற சமூக சேவகி அல் குலாயானி தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் நடந்த பேட்டியில், லாமாவின் முதுகு உடைக்கப்பட்டிருந்ததாகவும், அக்குழந்தை உடலெங்கும் பாலுறவு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

lama1

 

இந்த பயங்கர கதை லாமா கடந்த வருடம் அக்டோபரில் இறந்தபோதும் முடிவடையவில்லை. மகளை பாலுறவு பலாத்காரத்துக்கு உட்படுத்தி கொன்ற தந்தை அதுவரையில் சிறையில் இருந்ததே போதுமான தண்டனை என்றும், இனி அவர் ரத்தப்பணத்தை தாயிடம் கொடுத்தால் போதுமானது என்றும்  நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது. நான்கு மாதங்களும், சில ஆயிரம் ரியால்களும், லாமாவின் வாழ்க்கைக்கு பதிலீடு. இந்த தீர்ப்பு ஹதீஸிலிருந்து பெறப்பட்டது.

 

பெண்மகவை கொல்லும் தந்தைகளுக்கு எதிரான குரானின் போதனைக்கும் எதிராக இந்த தீர்ப்பு செல்கிறது. ஹதிஸ் “குழந்தையின் சாவுக்கு தந்தைக்கு  மரண தண்டனை கிடையாது” என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சொல்லப்படுகிறது. இந்த தீர்ப்பின் நீண்டகால விளைவை கணக்கில் எடுத்துகொள்ளாமல், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுஹைலியா ஜைனுலபிதின் என்ற மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர் கூறுவதன் படி, தன் மகளை சித்ரவதை செய்து கொன்ற ஒரே ஒரு தந்தைக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதே போல, தன் மனைவியை கொன்ற கணவன்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்கிறார்.  இதற்கு இரண்டு உதாரணங்களை தருகிறார்.  தன் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவனுக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில் தன் மனைவியை தன் காரின் பின்புறத்திக் கட்டி அவள் சாகும் வரை வண்டி யோட்டி கொன்ற கணவனுக்கு 12 வருட தண்டனை வழங்கப்பட்டது.

 

ஆண் கார்டியன்களுக்கு தங்கள் பாதுகாப்பில் உள்ளவர்களை கொல்வதற்கு இந்த தண்டனைகள்தான் கிடைத்தால், ஏன் இப்படிப்பட்ட தீச்செயல்கள் தொடராது? இந்த ஆண் கார்டியன்கள் தங்களது பாதுகாப்பில் உள்ள  பெண் குழந்தைகளை  சட்டப்பூர்வமாக விற்க அனுமதி பெறுகிறார்கள். குழந்தைகளை முக்கியமாக பெண் குழந்தைகளை காப்பாற்ற சட்டங்களே இல்லை.  ஷூரா கவுன்ஸிலில் குழந்தை பாதுகாப்பு சட்டம் என்று பிரேரணை செய்யப்பட்டபோது, குழந்தை என்று யாரை வரையறுப்பது என்று சிக்கல் வந்ததால், குழந்தை திருமணத்தை கூட தடை செய்யமுடியவில்லை.  தன் பெண் குழந்தைகளுக்கான கஸ்டடியை பெற முடியாததால், தந்தைகளால் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்குழந்தைகளின் கதைகள் ஏராளமாக இருக்கின்றன.

 

கணவனால் அடிக்கப்பட்ட பெண் போலீசுக்கு போனால் என்ன நடக்கும் என்று  ஒரு பெண் சமூக சேவகி விவரித்தார்.  அந்த போலீஸ் உடனே  Commission for the Promotion of Virtue and Prevention of Vice (CPVPV) அமைப்பையும், அந்த பெண்ணின் ஆண் கார்டியனையும் கூப்பிடும். பெரும்பாலான நேரங்களில் அந்த ஆண்கார்டியனே அந்த பெண்ணை அவலத்துக்கு ஆளாக்குபவர். ஆகவே அந்த பெண்ணை சுற்றி, மத குருக்களும், போலீஸும், அந்த பெண்ணை அடிப்பவரும் சுற்றி நிற்பார்கள். அந்த பெண்ணையும் அந்த ஆண்கார்டியனையும் சேர்த்து வைப்பதுதான் அங்கிருப்பவர்களின் பணி.  நான்கு மணி நேரம் அந்த பெண்ணை அந்த ஆணுக்கு அடங்கிப்போக வற்புறுத்துவார்கள். அதன் பின்னரும் அந்த பெண் பிடிவாதமாக இருந்தால்தான் பாதுகாப்பு வழங்கப்படும்.

 

தன் மகளையும் தன் மனைவியையும் வன்முறைக்குள்ளாக்கிய ஆணுக்கு தண்டனை வழங்கப்பட்ட வரலாறே இல்லை.  சில நேரங்களில் சிலமணிநேரம் சிறை தண்டனை, இல்லையென்றால், இனி செய்யமாட்டேன் என்று எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.

இந்த ஆண் கார்டியன் அமைப்பு பெண்களை ராணிகளாக வைத்திருக்கிறது என்று இதற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள் கூறுகிறார்கள். 

http://saudiwoman.me/2013/01/31/rest-in-peace-lama/

நேஷனல் பத்திரிக்கை செய்தி

5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை

 

லாமியா அல் காம்தி என்ற 5 வயது குழந்தை டிசம்பர் 25 ஆம் தேதி 2011இல் பலவிதமான காயங்களுடனும், நசுக்கப்பட்ட தலையுடனும், உடைக்கப்பட்ட நெஞ்செலும்பு, இடது கை, உடலெங்கும் காயங்களும் சூடுகளும் போன்ற பலவிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தை அக்டோபர் 22 ஆம் தேதி 2012இல் மரணமடைந்தது.

இந்த குழந்தையின் தந்தை பாயன் அல் காமிதி என்பவர் இஸ்லாமிய பிரச்சாரகர். இவர் முஸ்லீம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்து இஸ்லாமை விளக்குபவர். இவர் கம்பிகளாலும், குச்சிகளாலும் இந்த குழந்தையை சித்ரவதை செய்ததை ஒப்புகொண்டிருக்கிறார் என்று Women to Drive என்ற சவுதி பெண்கள் குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த தந்தை லாமியாவின் கன்னித்தன்மையை சந்தேகித்தார் என்றும், அந்த குழந்தையை ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறது இந்த குழு.

ராண்டா அல் கலீப் என்ற மருத்துவமனை சமூகசேவகி இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர். அந்த குழந்தையின் முதுகு உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த குழந்தை உடலெங்கும் பாலிலல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

”அந்த குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு அதனை சூடு வைத்து மூட முயற்சிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அந்த குழந்தையின் தாயார் அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை இதுவரை சிறையில் இருந்த காலமே அவருக்கு தகுந்த தண்டனை என்றும், அவர் அந்த குழந்தைக்காக ரத்தப்பணத்தை அந்த குழந்தையின் தாயிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே இஸ்லாமிய நீதி என்றும் நீதிபதி தீர்ப்பு அளித்திருப்பதை பெண்கள் உரிமை குழு எதிர்க்கிறது.

மனல் அல் ஷரிப் உட்பட மூன்று சவுதி பெண்கள் உரிமை போராட்டக்காரர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்திருக்கிறார்கள்.
ஒரு தந்தை தன் குழந்தைகளை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்க முடியாது, ஒரு கணவன் தன் மனைவியை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது என்ற இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.

நன்றி அரபு எமிரேட்ஸ்லிருந்து வெளிவரும் நேஷனல் பத்திரிக்கை செய்தி

Read more: http://www.thenational.ae/news/world/middle-east/saudi-preacher-who-raped-tortured-daughter-5-to-pay-blood-money

Series Navigationகைரேகையும் குற்றவாளியும்செவ்விலக்கியங்களில் உழவும் உழவரும்
author

Similar Posts

13 Comments

  1. Avatar
    punaipeyaril says:

    இது தான் முகமது நபி இவர்களுக்கு சொல்லிச் சென்றதா..? இது தான் அல்லாவின் பெயரால் நடக்கும் அமைதி மார்க்கமா..? மலாலா சக்தியின் வடிவம். விடுதலைக்கு வ்ந்த காளி… ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும். கடவுள் வெறும் ஆண் மட்டும் அல்ல.. இரண்டும் கலந்த மரூஉ . கடவுளின் பெயரால் கட்டவிழ்த்துப்பட்டுள்ள காட்டுமிராண்டிகளை விரட்டிட மத இன சாதி வித்தியாசம் இன்றி பெண்கள் படிக்க வேண்டும். விஸ்வரூபத்தை தூக்கியெறியுங்கள் , இந்த சம்பவத்தை சினிமாவாக எடுத்தால், என்ன..? இனி ஒவ்வொரு முஸ்லீமும் தன் மகளையும் தாயையும் பார்த்தால் இந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் முகம் தெரியட்டும்… அதனால் தான் இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களில் மாரியம்மாவும், மேரியம்மாவும் கடவுளறாய்… தாய்மை கடவுளாய்..

  2. Avatar
    டோண்டு ராகவன் says:

    இச்செய்திக்கு சுவனப்பிரியர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள். இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியும் இசுலாமிய மதச்சட்டத்தின்படித்தான் செய்ததாகக் கூறிக் கொள்வார்.

    எனது வலைப்பூவில் இதை இட உங்கள் அனுமதி கிடைக்குமா?

    அன்புடன்,
    டொண்டு ராகவன்

  3. Avatar
    paandiyan says:

    //இச்செய்திக்கு சுவனப்பிரியர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள்//
    என்ன பண்ணுவார்கள், ஹிந்து பெயர் தாங்கி நீ மட்டும் என்ன என்று விளாசி ஹிந்து முஸ்லிம் என்று இல்லாமல் ஹிந்து வில் பிராமின் தனி என்று ஓங்கி அடித்து பிராமின் vs முஸ்லிம் என்று குளிர்காயவர்கள் . எல்லா பிளாக் இலும் இதுதான நடகின்றது

  4. Avatar
    Rishan says:

    சவூதி அரேபிய சட்டங்களெல்லாம் பிரயோகிக்கப்படுவது அந் நாட்டுக்குப் பணி புரிய வரும் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் மேல் மாத்திரம்தான். குற்றம் செய்யும் அரேபியர்கள் மீது எந்தச் சட்டமும் பிரயோகிக்கப்படாது.

  5. Avatar
    சீனு says:

    அங்கே ஒரு கமென்ட்:

    Qamar
    February 1, 2013 at 1:26 am
    There are two sides to every story and I believe this is not a dispassionate view of what really happened. I think saudiwoman is taking the opportunity to ‘bash’ the clerical as she does so often.

  6. Avatar
    suvanappiriyan says:

    தொடர் வேலை காரணமாக செய்தியை முழுவதும் படிக்கவில்லை. இது உண்மையான செய்தியாக இருந்தால் எனது வன்மையான கண்டனம். மனநலம் பாதித்த இந்த காமுகனை தூக்கில் இடுவதே சிறந்தது. உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டு விளக்கமாக பதில் அளிக்கிறேன்.

  7. Avatar
    தங்கமணி says:

    இது சம்பந்தமாக தாயாரின் பேட்டி. மே மாதம் 2012 இல் வெளியான செய்தி
    http://www.emirates247.com/news/region/scholar-s-torture-causes-child-s-brain-damage-2012-05-01-1.456522
    Alsaudi Arabic language daily, which carried the film, identified the Sheikh as FGH and described him as a well-known scholar who has been in the media for a long time preaching for kindness and mercy.

    “This Sheikh who has always preached for mercy, kindness and sympathy is the same man who has used all machines of torture against his own daughter, throwing her into coma and threatening her innocent life,” it said.

    She went back home to the eastern port of Dammam with her little daughter while the father was allowed by court to see the girl for three hours every month. When she was five years old, he was permitted 12 hours.

    “Once he asked me to have the girl for a few days and I agreed…when many days passed and I no longer heard her news, I was worried,” she said.

    “One day I received a phone call from the police in Riyadh…they told me my daughter has been admitted to the intensive care unit…I rushed to her and I was shocked to see her in that condition…I got another shock when I was told that the one who did this to her was her own father,” she added.

    “He did that to my child at a time when he orders people to be nice and to fear God…he is the same person who used sticks, hot iron and whips to torture a girl not more than five years old…I appeal for the authorities and for all officials concerned to take action against this man.”

  8. Avatar
    Indian says:

    SP, the point is not whether this man is innocent or guilty. It is Islamic Sharia law which allowed him to get away with it. Yes, this man should be hanged. We all agree on that. But,what about the Islamic Sharia laws which allowed him to go, sort of, Scot free.
    Now, please do not test our intelligence and give excuses for Sharia laws and how they have been misinterpreted. The judges,the Saudis,(the people you worship)obviously know more about Sharia laws than you ever will.
    You should condemn this beastly father as well as the Sharia laws.

  9. Avatar
    suvanappiriyan says:

    அந்த குழந்தை வன்கொடுமை செய்யப்படவும் இல்லை, கொலை செய்தவன் தண்டனையில் இருந்து தப்பவும் இல்லை.

    லுமாவின் தாய் ‘தன் மகள் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று மருத்துவமனை ஆதாரங்கள் மற்றும் போலிஸ் ஆதாரங்கள் தெரிவிக்கும்போது, இப்படியான குற்றச்சாட்டுகளை தன் மகளை அசிங்கப்படுத்தும் நிகழ்வாகவே தான் கருதுவதாக’ வருத்தத்துடன் கூறியுள்ளார். தன் முன்னாள் கணவர் தன் குழந்தையை துன்புறுத்தியதாக புகார் செய்த இவர், தன் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பரப்பியதை மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இந்த கொலைகாரன் தற்போது சிறையில் தான் உள்ளதாகவும், இவர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் சவூதி நீதித்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் ஒரு செய்தியின் உண்மை நிலையை தெளிவாக ஆராய்ந்த பிறகு செய்தி வெளியிடுவது சிறந்தது என்று நீதித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நான் மேலே சொன்ன சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தியை காண

    http://gulfnews.com/news/gulf/saudi-arabia/killer-cleric-not-sentenced-yet-saudi-arabia-1.1143203

    என்ன ஆச்சர்யம்…சவூதி நீதித்துறை செய்யாததை செய்ததாக பரபரப்பை கிளப்பிய ஊடகங்கள், சவூதி அரசாங்கத்தின் மறுப்பை அதே வீரியத்தோடு கொண்டு செல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த மறுப்பு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கூட தெளிவாகவில்லை.

    உண்மை அடுத்த தெருவுக்கு செல்வதற்குள் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

    திண்ணை போன்ற நம்பகமான இணைய இதழ்கள் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும். அல்லது உண்மை தெரிந்த பிறகு அதற்கு மறுப்பாவது வெளியிட வேண்டும்.

    எனது நண்பர் டோண்டு ராகவன் இதற்கு சுவனப்பிரியனின் பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாக பின்னூட்டமிட்டிருந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு ராகவன் அவர்கள் இறந்து விட்டார். ஒரு உண்மையை விளங்காமலேயே அந்த நண்பர் சென்று விட்டார்.

    அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  10. Avatar
    பசுந்தமிழன் says:

    ஒரு காமுக முஸ்லீம் உலிமா தவறு செதால் தண்டனை வழங்க வேண்டும்.

    நீங்கள் சொன்ன அதே GULF NEWS இல் தான் வந்தது,

    Saudi preacher gets light sentence for killing daughter

    http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-preacher-gets-light-sentence-for-killing-daughter-1.1141045

    //Luma died in November at the Shumaisy Hospital in the Saudi capital Riyadh six months after she was admitted in May in an unconscious state.
    Doctors said that she had suffered internal bleeding from multiple injuries on her body and a skull fracture.//

    http://www.newiraqidinar.net/saudi-court-releases-imam-who-raped-murdered-his-5-yr-old-daughter/

    //He was then arrested in November after Lama died. He admits responsibility and says his assault began because he suspected her, a mere five-year old, of losing her virginity. A social worker said she was “raped” everywhere, but her mother says that part of the story isn’t true. Lama was beaten with electric shocks, whips and an iron. Her skull was crushed. Her back and arms were broken. Her ribs were fractured. The hospital said al-Ghamdi even tried to burn her rectum closed.//
    http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20121114142796

    Luma’s mother vows to fight for justice
    Last Updated : Wednesday, November 14, 2012 1:44 PM

    Saudi Gazette report

    RIYADH — The mother of a young girl who allegedly died after being tortured by her father has said she will pursue the case against her former husband until justice prevails.

    Five-year-old Luma died a few days ago at Shumaisy Hospital in Riyadh where she was admitted last May in an unconscious state. She had suffered internal bleeding due to skull fracture in addition to multiple injuries on her body, according the doctors.

    The girl’s mother said Luma had sustained the injuries after her father hit her repeatedly in an attempt to discipline her. She accused her Egyptian ex-husband and his current wife of constantly mistreating the girl.

    The woman said she had realized the hostile nature latent in her Egyptian husband within three months of their marriage. She said he used to beat her and abuse drugs, and was unemployed. He practiced preaching only as a front to hide his criminal behavior, the woman claimed.

    Luma’s mother separated from her husband after she became pregnant. On giving birth, the Egyptian asked her to return to him, swearing he had changed. Her return did not change anything, and she filed for divorce when Luma was three years old.

    Nine months after the divorce, she was informed that her child — who was with the father — was admitted to hospital. The father claimed that the child incurred bodily injuries while playing. She asked the girl to be transferred to a hospital in the Eastern Province, but she had already died.

    Her only wish, she said, is that this case will end with the execution of her ex-husband.

    Informed sources said a wrong diagnosis was one of the reasons for the child’s death. The resident doctor ordered her transfer from the intensive care unit to a normal patient’s bed, completely ignoring medical reports. A day later she succumbed to her injuries.

    Luma’s mother is also demanding the prosecution of the intensive care unit’s director for the critical error. The girl’s body has been lying in the mortuary since Oct. 21 and the mother is asking the authorities to release the body for burial.

    Riyadh police spokesman Fawwaz Al-Maiman said that the father was transferred to the general penitentiary, awaiting trial. All legal procedures were taken, and the case is referred to the Bureau of Investigation and Public Prosecution.
    http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20121111142523
    DAMMAM — A five-year-old child has died after she was allegedly severely beaten by her religious scholar father, Al-Yaum reported.

    The child, identified as Luma, suffered severe injuries after her father disciplined her by hitting her repeatedly, his ex-wife said.

    She lost consciousness and was admitted to Al-Shemaisi Hospital in Riyadh.

    The child’s mother, who is divorced from the father, accused her ex-husband and his current wife of injuring her daughter so badly.

    She added he is a religious scholar who lectures on television and advocates Islamic values and merits, but does not practice what he preaches.

    She pointed out her child suffered internal bleeding in her brain after her skull was fractured.

    In addition, her left hand was also fractured with burn marks and bruises on different parts of her body.

    Luma was admitted to the hospital’s intensive care unit and the mother has appealed to human rights bodies to look into the case. She called for legal action to be taken against the father.

    She said: “I call on the authorities to apply Islamic laws. Although the child’s father has been detained, his wife is still at large. I hold them responsible for my child’s death.”

    A source at the National Society for Human Rights said the mother has submitted a complaint. The society will coordinate with the Riyadh health directorate to unveil the causes of the child’s death, the source added.

    Al-Yaum called Riyadh police to find out what had happened to the child’s father and his wife, but there was no answer. — SG
    http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20121112142560

    NSHR seeks death for dad who killed girl
    Last Updated : Monday, November 12, 2012 12:26 AM

    RIYADH — The National Society for Human Rights (NSHR) has demanded the death penalty for a father accused of physically abusing Luma, a five-year-old girl who died of injuries sustained during the assault. Dr. Khalid Al-Fakhri, the NSHR supervisor in the region, said the crime was one of the most heinous he had come across. The NSHR had previously contacted the concerned authorities eight months ago asking them to interfere to stop the abuse. Luma died a few days ago at Shumaisy Hospital in Riyadh. She was admitted to the hospital in an unconscious state last May. She had suffered internal bleeding due to skull fracture in addition to multiple injuries on her bodies. She sustained the injuries as her father hit her repeatedly in an attempt to discipline her, the girl’s mother said. She accused her ex-husband and his current wife of treating her daughter badly.
    http://saudiwoman.me/2013/02/03/whats-up-with-the-national-society-of-human-rights/

    FEBRUARY 3, 2013 · 5:25 PM ↓ Jump to Comments
    What’s up with the National Society of Human Rights?
    Is it strange to believe that a human rights organization would prioritize human rights? In the case of the five year old Lama who was tortured to death by her father, the NSHR seem to want to downplay both the crime and the judicial rulings. On the one hand, we have Itimad Al Sonaidi, an NSHR legal investigator, stating to the newspapers that there is no truth to the news reports that blood money had been offered. And on the other hand we have Khalid Al Fakhri, NSHR general director, denying that Lama had been sexually assaulted. Even Suhaila Zain Alabdeen, before strongly speaking out on the case and giving details was careful to have it made clear that she was on the news program as an activist and not as a member of the NSHR.

    First, when it comes to whether or not Fayhan Al Ghamdi had raped his daughter, the social worker assigned to the case, Randa Al Kaleeb stated so in a phone interview with an investigative program host, Ali Al Olayani. And we have Dr. Mohammed Mahdi, the medical examiner in Lama’s case, from the Forensic Medicine Department in Riyadh, who stated to Asharq Aawsat:

    The offender committed all types of physical abuse on the victim as well as her exposure to sexual assault as a result of swelling in the region of the genitals and laceration in the anal area. There is ambiguity and secrets and the narrative is incomplete. In domestic abuse cases, injuries are usually afflicted over several months and not all in one bout. Also there is disparity in the type of injuries, from burns to those afflicted with sharp tools, along with the presence of strikes that take distinctive forms. All of these specifications have been identified on Lama’s body through the bruises and effects of burns and blows and led to them being afflicted with a thick electrical cable and a cane. These tools have been seized from the offenders home at the request of the Forensic Medicine Department as evidence. It’s Lama’s right that we reveal the truth of what happened to her.

    Second, when blood money is offered and accepted then all maximum penalties are off the table. Over and over again, the courts have let fathers and husbands literally get away with murder by paying blood money and at most serving five to twelve years. I’ve given examples in my previous post, but I’ll give you another example that’s as recent as January 6th 2013. Wissam was a 13 year old to an Egyptian mother and a Saudi father. His mother came to Saudi as a 16 year old bride twenty years ago. Five years ago her husband divorced her and the torment began. It ended with the father chasing Wissam from the street to the door and stabbing him over and over again. Wissam died minutes later in his mother’s arms at the entrance of his home. The final ruling on January 6th was that blood money be paid and a five year sentence. After the judge ruled, Wissam’s sister turned to her mother and asked “Mama when father comes out of prison, will he kill us like he killed Wissam?”
    Dr. Amal Al Kafrawi psychiatric and addiction specialist told Alwatan that protection from domestic violence committees under the Ministry of Health are unavailable and non-existent, despite the existence of them in name within the ministry. She added that the impact of domestic violence is mostly suffered by the children. She stated that we find that the weak individual is assaulted in every way without having the chance to defend himself or his human rights, which must be guaranteed by his community, so children grow up in an atmosphere of constant persecution and humiliation that destroy their innocence.

    The only case in Saudi history when a father/murder was made to pay is that of Ghusoon, an eight year old girl who was chained and tortured over a year by her father and stepmother while her mother ran from one official to the next asking for help. Ghussoon was starved, had kerosene poured over her, burned and even hit with a car in her father’s yard. All of this because the father doubted his paternity. Alas Ghusoon died before anyone would listen to her mother. In only that case was it considered murder and the father executed. You would think that Ghusoon’s case would create a precedent, right? Wrong. Because Saudi’s (reminiscently medieval) justice system is resistant to codification. Every judge can rule in whatever way he sees fit, as long as he can find a religious text to base his ruling on. That means you can have two cases of murder, divorce or whatever with the exact same specifications and in the courtroom of the same judge and still get two different rulings depending on who the defendants are, what they wore, their piety…etc.

    I can only guess what the motive is behind NSHR statements and actions. The only thing that’s apparent is that they are downplaying the case.

  11. Avatar
    Indian says:

    @ SP
    Read the above response. I do not think that you yourself believe your own version of events and the PR bull given by the Saudis. You know that and we know that you do.
    Now, are you prepared to condemn Sharia?

  12. Avatar
    suvanappiriyan says:

    இந்தியன்!

    //Now, are you prepared to condemn Sharia?//

    தீர்ப்பின் விபரத்தையே சரியாக உள்வாங்காமல் ஷரீயாவின் மீது குறை காண வந்து விட்டீர்கள். இந்த லிங்கில் சென்று முழு விபரத்தையும் தமிழில் பார்க்கவும்.

    ஃபய்ஹானுக்கு என்ன தண்டனை?

    ஃபய்ஹான் அல் காமிதி, தன் மகள் லமாவைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு சித்திரவதை செய்திருந்தான் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், விரைவில் ஒரு வெள்ளிக்கிழமை பொதுவெளியில் தலை சீவப்படுவான். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அல்லது லமாவின் தாய், தம் முன்னாள் கணவனான ஃபய்ஹானை மன்னித்தால் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பமுடியும். கூட்டு மனசாட்சிக்காக ஷரீஆவில் எவரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

    இன்னும் தீர்ப்பே வெளிவராத ஒரு வழக்கை, “எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகக் கொல்லப்படக்கூடாது” எனும் நபிமொழியின் அடிப்படையில் தீர்ப்பு வெளிவந்துவிட்டதாகக் கதைகட்டிப் புனைந்து எழுதும் பாவனை அறிவுசீவிகளுக்கு, இஸ்லாத்தின் மீதான காழ்ப்பைத் தவிர இரண்டாவது காரணம் ஏதும் இருக்கமுடியாது என்பது திண்ணம்.

    http://www.satyamargam.com/2060

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *