தவ்லீன் சிங்
இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுருத்தல் இன்று ஜிகாதி பயங்கரவாதமே. எப்போதாவது நமது அரசியல்தலைவர்கள் இதனை அங்கீகரித்து கேட்டிருக்கிறீர்களா? ஜிகாத் என்பது இந்தியா என்ற கருத்துக்கே எதிரானதாகவும், அதன் அடிப்படை கருத்து இந்தியாவை இன்னொரு முறை இஸ்லாமின் பெயரால் உடைப்பதுதான் என்பதை ஒப்புகொண்டு பார்த்திருக்கிறீர்களா? இந்த நாட்டின் மக்களிடம், தெளிவாக, கார்கில் போருக்கு பின்னால், பாகிஸ்தானிய ராணுவம், இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்கு பணம் பொருள், ஆயுத உதவி கொடுத்து உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக அதன் உள்ளிருந்தே ஒரு போரை, நேரடியாக போர்களத்தில் சந்திக்கும் போரை விட கடுமையான ஒரு போரை நடத்திவருகிறது என்பதை இந்த அரசியல்தலைவர்கள் சொல்லி பார்த்திருக்கிறீர்களா?
அதற்கு நேர்மாறான ஒரு விஷயமே டாக்டர் மன்மோகன்சிங் அவர்களது “மதச்சார்பற்ற” அரசாங்கம் 2004இல் ஆட்சிக்கு வந்தபின் நடந்துள்ளது. பல முறைகள் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உண்மையான அச்சுருத்தல் “காவி பயங்கரவாதத்திலிருந்து”தான் வருகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். ராகுல்காந்தி இதனை அமெரிக்க தூதரிடம் சொன்னதாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கிறது. அவரது அரசியல் ஆலோசகர் திக்விஜய்சிங் பகிரங்கமாக ஒரு புத்தகத்தை பிரபலப்படுத்தினார். அதன் தலைப்பு. “26/11 ஒரு ஆர்.எஸ்.எஸ் சதித்திட்டம்”.
இதுமாதிரியான ஒரு பேச்சு சமீபத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சரிடமிருந்தே வந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகிறது என்பது அது. அது சொன்ன உடனேயே ஹபீஸ் முகம்மது சையது உடனே ஆதரவு தெரிவிக்கிறார். இந்தியா தேடும் மிகப்பெரிய பயங்கரவாதி சென்றவாரம் ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் உள்துறை அமைச்சர் சொன்னதை கேட்டிருந்தால், இந்திய அரசாங்கம் ஜிகாதி பயங்கரவாதத்தோடு போராடுவதில் சீரியஸாக இல்லை என்றே முடிவு செய்திருப்பார். ”ஆளுனரோடும், முதலமைச்சரோடும், மற்றும் இதர அமைச்சர்களோடும், இந்த நிகழ்ச்சிகள் நடந்த இடங்களுக்கு சென்று பார்த்தேன். பிறகு மருத்துவமனைக்கு சென்று அதிகம் பாதிக்கப்படாத சில காயம்பட்டவர்களை பார்த்தேன். இதில் பாதிக்கப்பட்டவர்களோடு பேசினேன்”
குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் போகமாட்டார்கள் என்று பிரதமர் சொன்னதாக தெரிகிறது. சோனியா காந்தி துக்கமும், துயரமும் அடைந்தார் என்று சொல்லபடுகிறது. ஆமாம், இப்படிப்பட்ட உப்புக்குச் சப்பாணி எதிர்வினைகள் இருப்பதால்தான் நான்கு வருடங்களுக்கு முன்னால் மும்பய் தாக்கப்பட்ட பின்னாலும் ஜிகாதி பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நம்மால் வெல்ல முடியவில்லை என்பதை ஒப்புகொள்ளும் நேரம் வந்துவிட்டது. 26/11 தாக்குதலுக்கு பிறகு ஒரு திட்டமிடப்பட்ட போர் தந்திரம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். நேரத்துக்குள் நடக்கும்படி செய்திருக்க வேண்டும். ஆனால் ஏன் நடக்கவில்லை என்று கேட்கும் நேரம் வந்துவிட்டது. இதன் மூலம் இந்திய முஸ்லீம்களை நம் அந்நியப்பட்டுவிடுவார்கள் என்ற பயம் காரணமா? அதுதான் காரணமாக இருந்தால், அது எல்லா முஸ்லீம்களும் ஜிகாதி பயங்கரவாதத்துக்கு ஆதரவாளர்கள் என்று அவர்களை அவமரியாதை செய்வதல்லவா? இதுதான் “மதச்சார்பற்ற” காங்கிரஸ் தலைவர்கள் ரகசியமாக நம்புகிறார்களா?
26/11க்கு பிறகு, இந்திய அரசாங்கம் உண்மையிலேயே பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெல்ல வேண்டுமென்று நினைத்திருந்தால், கடைமட்டம் வரைக்கும் போலீஸை வலுப்படுத்தியிருக்க வேண்டும். எவ்வளவுதான் நாம் எத்தனை தேசிய புலனாய்வு துறைகளை நாம் உருவாக்கினாலும், உண்மையான புலனாய்வு கடைமட்டத்தில் உள்ள சாதாரண போலீஸ்காரர்கள், இந்த எதிர்பயங்கரவாத பயிற்சி சரியாக அளிக்கப்பட்டிருந்தாலே வரமுடியும். வெகுகாலமாக மும்பையில் வாழும் என்னால், சொல்லக்கூடியது என்னவென்றால், நடப்பில் ஒன்றுமே மாறவில்லை என்பதுதான். இப்போதோ அப்போதோ ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள் தெருக்களில் செல்கிறார்கள். இது முக்கிய அரசியல்தலைவர்களை பாதுக்காக்கத்தானே தவிர சாதாரண பொதுமக்களுக்கு பாதுகாப்பாக அல்ல. நான்கு வருடங்களுக்கு முன்னால் எப்படி பாதுகாப்பற்றதாக இந்த நகரம் இருந்ததோ அதே போலத்தான் இன்றும் இந்த நகரம் இருக்கிறது. மற்ற எல்லா இந்திய நகரங்களும் அப்படித்தான்.
பி சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, தேசிய புலனாய்வு ஏஜென்ஸியை உருவாக்க வலியுறுத்தினார். அதே நேரத்தில் மாநில அரசாங்க துறைகளும், பிராந்திய லோக்கல் போலீஸ் நிலையங்களும் ஒத்துழைக்கக்கூடிய அமைப்பை உருவாக்கியிருந்தால் அதில் தவறில்லை. அது நடக்காமல், இந்தியா ஜிகாதி பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. இங்கே ஜிகாதி என்பதை வேண்டுமென்றேதான் உபயோகப்படுத்தியிருக்கிறேன். ஏனெனில், பயங்கரவாதத்துக்கு வண்ணம் இல்லை, மதம் இல்லை என்று சொல்லும் அபத்த அரசியல்ரீதியில் சரியான வார்த்தைகளை கேட்டு புளித்துவிட்டது. நிச்சயமாக பயங்கரவாதத்துக்கு மதம் ஒரு காரணி. ஜிகாதி குழுக்கள் அப்பாவி மக்களை தங்களது கோழைத்தனமான யுத்தத்தில் கொல்லுவதற்கு காரணம் அது தங்களது இஸ்லாமின் பெருமைக்காக என்று கருதித்தான் கொல்லுகிறார்கள். அவர்கள் முஸ்லீம் அல்லாதவர்களின் உயிர்கள் மதிக்கத்தக்கவை அல்ல என்று நம்புகிறார்கள். மேலும், இந்துத்துவா குழுக்கள் இதனை எதிர்த்து அவர்களது கோழைத்தனத்தில் மசூதிகளையும் அப்பாவி மக்களை கடைத்தெருக்களிலும் கொல்லும்போது, அவர்கள் இந்து மதத்தை காப்பாற்ற என்று நம்புகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் இந்து பயங்கரவாத குழுக்களை மட்டுமே தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்று சொல்லுவதுதான் மிகப்பெரிய தவறு. அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தல் அல்ல.
இந்தியாவின் பாதுகாப்புக்கு உண்மையான அச்சுருத்தல் ஜிகாதி பயங்கரவாத குழுக்களிலிருந்துதான் வருகிறது. ஏனெனில், அவர்கள் பாகிஸ்தானின் ராணுவத்தால் பணம் கொடுத்தும் ஆயுதம் கொடுத்தும் பயிற்சி கொடுத்தும் அவர்களை ஐந்தாம் படையாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருப்பவர்கள் இதனை அங்கீகரிக்காத வரை, ஜிகாதி பயங்கரவாதம் இந்தியாவின் நாளங்களில் தனது விஷத்தை பரப்பிகொண்டே இருக்கும்.
Follow Tavleen Singh on Twitter @ tavleen_singh
- ரிஸானாவிற்கு சவுதிஅரசின் மரணதண்டனை
- அவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை
- இரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதை
- ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில்
- எம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வீக யுகத்தில் நிலவை முடுக்கி ஓட்டியது உள்ளிருந்த மின்காந்த உந்துசக்தியே
- அங்கீகரிக்கப்படாத போர்
- ‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -7
- டப்பா
- குறட்டை ஞானம்
- துளித்துளியாய்…
- சுழலும் நினைவுகள்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..18. நாஞ்சில்நாடன் – ‘எட்டுத் திக்கும் மதயானை’
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 9
- பல
- வால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5
- அக்னிப்பிரவேசம்-24
- ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 1
- ஸ்பெஷல் 26 ( இந்தி) – சிறகு ரவி.
- அமீரின் ஆதிபகவன் – “கலாச்சார தீவிரவாதத்தின் உச்சம்”
- தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தை
- சிலம்பில் அவல உத்தி
- தாகூரின் கீதப் பாமாலை – 53 ஆத்மாவில் நுழையும் புன்னகை !
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.
- நாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள்