வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (14)

This entry is part 12 of 28 in the series 10 மார்ச் 2013

வாலிகையும் நுரையும் (14)

 

பவள சங்கரி

 

பனித்திரை பூண்ட மலையொரு குன்றுமில்லை;

நனைந்த மழையில் துளிக்கும் ஓக் மரம், விசும்பும் வில்லோ (அலரி) அல்ல.

 

பாருங்கள் இங்கேயொரு முரண்பாடான மெய்யுரையை:

ஆழ்ந்ததும், உயர்ந்ததுமான அவைகள் இரண்டிற்கும் இடைப்பட்டதைக் காட்டிலும்

ஒன்றுக்கொன்று நெருக்கமாகவே உள்ளது.

 

உம் முன்னால் தெளிவானதொரு கண்ணாடியாக யாம் நிற்கும் தருணம்,

நீவிர் எம்மை உறுத்துப் பார்த்து உம் உருவத்தையேக் கண்டீர் ஆங்கே…

பின் நீவிர், “யான் உம்மை விரும்புகிறேன்” என்றீர்.

ஆயினும் உண்மையில் எம்முள் இருக்கும் உம்மையே விரும்புகிறீர் நீவிர்.

 

உம் அண்டை அயலாரை நேசித்தலைக் கொண்டாடுவீராயின்

அது உம் நற்குணத்திற்கு இழுக்கு.

 

எஞ்ஞான்றும் கிளர்ந்தெழாக் காதலது எப்பொழுதும் மரித்துக்கொண்டுதானிருக்கும்

 

இளந்தலையையும்,  அதற்கான ஞானமும் உம்மால் ஏகநேரத்தில் கொண்டிருத்தல் சாத்தியமில்லை.

காரணம் இளமை என்பது  அறிந்து கொள்வதற்காக வாழ்வதில் மும்முரமாக இருப்பது. மற்றும் ஞானம் என்பதோ தாமே வாழுவதற்கான தேடலில் மும்முரமாக இருப்பது.

 

உம் சாளரத்தின் புறம் அமர்ந்து கடந்து செல்வோரைக் கண்காணிக்கலாம் நீவிர். அவ்வமயம் உமது வலது புறம் நோக்கியோர் கிறித்துவ கன்னிமாரும், உமது இடப்புறமோ ஓர் விபச்சாரியும் வருவதைக் காணக்கூடும் நீவிர்.

உம் வெண்மையில், “எத்துனை உயர்ந்தோர் அந்த முதலாமவர் என்றும், எத்துனை பாவப்பட்டோர் அந்த மற்றையவர்” என்றும் கூறலாம் நீவிர்..

ஆயின் உம் புறக்கண்களை மூடிக்கொள்வீராயின்    இரண்டினூடேயுமோர் முணுமுணுக்கும் குரலைக் கேட்பீர் நீவிர். “ஒன்று பிரார்த்தனையின் மூலம் எம்மைத் தேடுகிறது, மற்றையதோ வேதனையின் மூலம் அதையேச் செய்கிறது. மேலும் அந்த இரண்டின் ஆன்மாவினுள்ளும் எம் ஆன்மாவினுக்கானதோர் பணிவானவர் இருக்கத்தான் செய்கிறார்.

 

ஒரு காலத்தில் லெபனானின் மலைகளினூடேயானதோர் தோட்டத்தில், நூறாண்டுகளுக்கோர் முறை நசரேத்தின் கிறித்து, கிறித்துவர்களின் கிறித்துவைச் சந்தித்தனர். மேலும நீண்ட உரையாடல்கள் கொண்டிருந்தனர் அவர்கள்; ஒவ்வொரு முறையும் கிறித்துவர்களின்  கிறித்துவிடம், நசரேத்தின் கிறித்து, “எம் நண்பரே, நாம் ஒருபோழ்தும் ஒத்தாங்கு வாழ்தல் இயலாதென அஞ்சுகிறேன் யான்” என்று சொல்லிச் சென்றார்.

 

ஏராளமானோருக்கு இறைவன் உணவளிப்பாராக!

 

உயர்ந்ததோர் மனிதன் கொண்டிருப்பதோ இதயங்கள் இரண்டு: ஒன்று குருதியைச் சொரியும் போழ்து மற்றையது தாங்கிக் கொள்கிறது.

 

ஒருவருக்கு பொய்ம்மைச்சொலல் நேர்ந்தால் அது உம்மையோ அன்றி இன்னொருவரையோ நோகடிக்காமல் இருக்க வேண்டும். அவருடைய ஆடம்பரங்களுக்கு அவருடைய அந்த மெய்ம்மையின் இல்லம் மிகவும் குறுகியதால் அவர் அதை விட்டு விசாலமானதோர் இடம் நாடிச் செல்ல வேண்டும் என்று உம் இதயத்திடம் ஏன் நீவிர் சொல்லலாகாது?

 

மூடிய கதவுகள் ஒவ்வொன்றின் பின்னும் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டதோர் மாயமுமுள்ளது.

 

காத்திருப்பு என்பது காலத்தினந்தக் குளம்புகள்.

தொல்லை என்பதோ உமது இல்லத்தின் கிழக்குச் சுவரின் புதியதோர் சாளரமாக இருக்க வேண்டியிருப்பதாலென்ன?

 

உம் மகிழ்ச்சியைப் பகிர்ந்தோரைக்கூட மறக்கலாம் நீவிர் ஆனால் எக்காலத்தும் உம் துக்கத்தைப் பகிர்ந்தோரை   மறக்கமாட்டீர்.

நம் கண்ணீரிலும் மற்றுமந்த கடலிலும் உள்ள அந்த.உப்பில் ஏதோ சில விநோதங்கள் புனிதமடைந்திருக்க வேண்டும்

 

இறை நம்மீது கொண்ட பெருங்கருணைத் தாகத்தில்   பனித்துளி மற்றுமந்த கண்ணீர் என நம் அனைவரையும் பருகி விடலாம்

 

நீவிர் உம்முடைய பிரம்மாண்ட சுயத்தினோர் சிறுதுளி, உணவிற்காக ஏங்குகிற ஓர் வாய். மற்றும் தாகமுள்ளதோர் வாயிற்காக அந்தக் குவளையை ஏந்துகிற ஓர் குருட்டுக் கை.

 

தொடரும்

KHALIL GIBRAN-  SAND AND FOAM (14)

 

The mountain veiled in mist is not a hill; an oak tree in the rain is not a weeping willow.

 

Behold here is a paradox; the deep and high are nearer to one another than the mid-level to either.

 

When I stood a clear mirror before you, you gazed into me and saw your image.

Then you said, “I love you.”

But in truth you loved yourself in me.

 

When you enjoy loving your neighbor it ceases to be a virtue.

 

Love which is not always springing is always dying.

 

You cannot have youth and the knowledge of it at the same time;

For youth is too busy living to know, and knowledge is too busy seeking itself to live. You may sit at your window watching the passersby. And watching you may see a nun walking toward your right hand, and a prostitute toward your left hand.

And you may say in your innocence, “How noble is the one and how ignoble is the other.”

But should you close your eyes and listen awhile you would hear a voice whispering in the ether, “One seeks me in prayer, and the other in pain. And in the spirit of each there is a bower for my spirit.”

 

Once every hundred years Jesus of Nazareth meets Jesus of the Christian in a garden among the hills of Lebanon. And they talk long; and each time Jesus of Nazareth goes away saying to Jesus of the Christian, “My friend, I fear we shall never, never agree.”

 

May God feed the over-abundant!

 

A great man has two hearts; one bleeds and the other forbears.

 

Should one tell a lie which does not hurt you nor anyone else, why not say in your heart that the house of his facts is too small for his fancies, and he had to leave it for larger space?

 

Behind every closed door is a mystery sealed with seven seals.

 

Waiting is the hoofs of time.

 

What if trouble should be a new window in the Eastern wall of your house?

 

You may forget the one with whom you have laughed, but never the one with whom you have wept.

 

There must be something strangely sacred in salt. It is in our tears and in the sea.

 

Our God in His gracious thirst will drink us all, the dewdrop and the tear.

 

You are but a fragment of your giant self, a mouth that seeks bread, and a blind hand that holds the cup for a thirsty mouth.

 

To Be Contd…….

Series Navigationவம்சி புக்ஸ் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ்வால்ட் விட்மன் வசனக் கவிதை -14 என்னைப் பற்றிய பாடல் – 7 (Song of Myself)
author

பவள சங்கரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *