-தாரமங்கலம் வளவன்
சித்தப்பா திருச்சி ஜெயிலில் இருப்பதாக கல்யாணி சொன்னதைக் கேட்டதும் சந்தானத்திற்கு ஏன் எப்படி என்று கேட்க வாய் வந்தது.
ஆனால் பேச வில்லை…
அவர்களாக சொன்னால் சொல்லட்டும், இல்லையென்றால் தான் கேட்க கூடாது என்று நினைத்துக்கொண்டான்.
இருவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள்….
கொஞ்ச நேரம் சந்தானம் காத்திருந்தான்…
மேற்கொண்டு அவர்கள் ஏதும் பேசாததால், நாளை வருவதாக சொல்லி விட்டு வந்தான்.
நேரம் கிடைத்ததால் ஊரைச் சுற்றி பார்க்க கிளம்பினான்.
தியாக ராஜரை தரிசித்து விட்டு ரூமுக்கு வந்தான்..
கொஞ்சம் யோசித்தான்..
பிறகு, அம்மாவிடம் போனில் தொடர் கொண்டு தான் கல்யாணியை மணம் செய்து கொள்ள விருப்ப பட்டதையும், அவள் மறுத்து விட்டதையும் ஒன்று விடாமல் கூறினான்.
இதைக் கேட்ட அம்மா ஏறக்குறைய அழ ஆரம்பித்து விட, தான் கல்யாணியை சென்னைக்கு அழைத்து வர இருப்பதையும் கூறினான்.
அம்மா கொஞ்சம் ஆறுதல் அடைய வேண்டி, தான் கல்யாணியை எப்படியும் சம்மதிக்க வைத்து விட முடியும் என்று நம்புவதாகவும் கூறினான்.
இது வரை கல்யாணம் வேண்டாம் என்று இருந்தவன், தான் போட்டோவில் மட்டும் பார்த்த ஒரு பெண்ணை மணந்து கொள்வதாக சொன்னது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், அவள் அதை மறுத்து விட்டாள் என்பது வருத்ததை கொடுத்தது லட்சுமிக்கு.
மறுபடியும் யோசித்தான்..
தன்னுடன் கல்யாணியை சென்னைக்கு அழைத்து போகும் முடிவு சரிதானா…
அப்படியே சரி என்றாலும், எல்லோரையும் சேர்ந்து அழைத்து போவதாக அல்லவா சொல்லி இருக்க வேண்டும்….
அல்லது சென்னை விலாசத்தை கொடுத்து அவர்களை வந்து சேருமாறு அல்லவா சொல்லி இருக்க வேண்டும்….
பயணச் செலவுக்கு வேண்டுமானால், பணம் கொடுத்து விட்டு போகலாம்….
கல்யாணியை பார்த்ததும், புத்தி தடுமாறுகிறதா….
மறு நாள் விடிந்தது….
காலையில் கல்யாணியின் வீட்டுக்கு போன போது, கல்யாணியின் தங்கை வந்து கதவை திறக்க, கல்யாணி உள்ளே இருந்து,
“ இவ பேர் வசந்தி…. சித்தப்பாவோட பொண்ணு…. இவளும் எங்க தாத்தாவோட பேத்தியை தான்… பேசாம இவள கல்யாணம் பண்ணிக்கோங்களே…..”
இதைக் கேட்ட வசந்தி வெட்கப்பட்டு, “ அக்கா…பேசாம இருக்க மாட்டியா….. எல்லாமே உனக்கு விளையாட்டு தான்..”
வசந்தி உள்ளே ஓடி விட…. சந்தானம் கேட்டான்…
“ அப்பா எங்கே…..”
“ வெளியே போயிருக்காங்க….” கல்யாணி.
“ நீங்க மூனு பேருமே சென்னைக்கு என் கூட வாங்க…. உங்க குடும்பம் தங்கறதுக்கு ஒரு வீடு, ஒரு பிஸினஸ் ரெடி பண்ணி அப்பா தருவாரு. போன் போட்டு தரேன்.. என் அப்பாகிட்ட உங்க அப்பாவை பேச வைக்கிறேன்…. பேசி விட்டு ஒரு முடிவு சொல்லுங்க…. ” சந்தானம்
“ வெளியில போயிருக்கிற அப்பா வந்ததும் போன் பேசலாம்..” கல்யாணி.
அதற்குள், வசந்தி பால் வாங்கி வருவதாக கூறி வெளியில் சென்று விட சந்தானமும், கல்யாணியும் தனியே விடப்பட்டார்கள்.
தனியே விடப்பட்ட கல்யாணி, வசந்தி வருவதற்குள், தன்னிடம் ஏதோ பேச விரும்புவதாக விரும்புவதாகத் தோன்றியது.
தன்னை மணந்து கொள்வது பற்றி இருக்கலாம் என்று நினைத்த சந்தானம்,
“ ஏதாவது சொல்லணுமா…”
“ ஆமாம்…”
“சொல்லலாம்….”
கல்யாணி பேச ஆரம்பித்தாள்..
“ வசந்தி என்னோட சித்தப்பா பெண்….. சித்தப்பா ஜெயிலுக்கு போனதுக்கு என் அப்பாதான் காரணம் …. சித்தப்பா ஒரு ஏமாளி.. கொஞ்சம் புத்தி குறைவுன்னே சொல்லலாம்… படிப்பும் குறைவு. அப்பா பத்தாம் கிளாஸ்னா, சித்தப்பா எட்டாம் கிளாஸ்…” சொல்லி விட்டு நிறுத்தினாள்…
சந்தானத்திற்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. தான் எதிர்பார்த்த விஷயத்தை பேசாமல் வேறு எதுவோ பேசுவதற்காக..
அவளே தொடர்ந்தாள்….
“ அப்பா, சித்தப்பா ரெண்டு பேத்துக்கும் வருமானம் கிடையாது. குடும்பம் வறுமையில கஷ்டப் பட்டுக்கிட்டு இருந்ததனால, தாத்தாவோட சொத்தை ஒவ்வொன்னா வித்து சாப்பிட ஆரம்பிச்சாங்க…. இடையில அம்மாவும், சித்தியும் இறந்து போனாங்க.. அதுக்கு கூட பணக் கஷ்டம் தான் காரணம்.. தாத்தாவுக்கு பூர்விக நிலம் இருந்தது. பக்கத்தில ஒரு கோயில் நிலம் இருந்திச்சு. அது கோயில் நிலம்ங்கிறது அப்பாவுக்கு தெரியும்…… ஆனா சித்தப்பாவுக்கு தெரியாது…. தாத்தாவோட நிலத்தை இரண்டா பிரிக்கும் போது கோயில் நிலத்தை சித்தப்பா பங்குல சேத்தி காண்பிச்சுகிட்டாரு அப்பா… பின்னாடி ரண்டு பேருமே அவங்களுக்கு கெடைச்ச நிலத்தை வித்தாங்க… அப்பா வித்த நிலத்து மேல எந்த புகாரும் வரலே….. ஆனா சித்தப்பா நிலத்தை வாங்கினவறு பாங்க் லோனுக்கு விண்ணப்பிச்சாரு…. அவங்க அது கோயில் நிலம்னு கண்டு பிடிச்சிட்டாங்க… அப்புறம் போலீஸ் கேஸாய் சித்தப்பா ஜெயிலுக்கு போயிட்டாரு…..” கல்யாணி சொல்லி முடிப்பதற்கும் வசந்தி பால் வாங்கி வருவதற்கும் சரியாக இருந்தது.
அதற்கு பிறகு பட்டாபி, போனில் சந்தானத்தின் அப்பா வெங்கட்டிடம் பேச, வெங்கட் ரொம்ப சந்தோசப்பட்டார்… தங்கள் வீட்டிலே தங்கிக் கொள்ளலாம் என்றும் சந்தானம் சொன்னபடி அவர்கள் குடும்பம் சென்னையில் வாழ ஒரு ஓட்டல் ஆரம்பித்து கொடுக்க இருப்பதாகவும் சொல்லி சென்னை அழைக்க, மூன்று பேருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.
சந்தானம் மூன்று பேரையும் அழைத்து கொண்டு சென்னை வந்து சேர்ந்தான்…
-
தொடரும்
- பொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்
- சின்னஞ்சிறு கிளியே
- காலத்தின் கொலைகாரன்
- அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11
- சங்க இலக்கிய மகளிர்: விறலியர்
- தங்கமே தங்கம்
- விண்மீனை தேடிய வானம்
- தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !
- வெல்லோல வேங்கம்மா
- கனிகரம்
- பணிவிடை
- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்
- செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]
- அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்
- எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்
- வெற்றிக் கோப்பை
- புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15
- புகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்
- நம்பி கவிதைகள் இரண்டு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5
- அக்னிப்பிரவேசம்-29
- நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
- முத்தம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்
- புகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்
- தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்