(Song of Myself)
என் மீது எனக்குப் பித்து
(1819-1892)
(புல்லின் இலைகள் –1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
என் மீது எனக்குப் பித்து
என் மீதுள்ள பித்து மிகையானது
களிப்புணர்வு எழுவது என்மேல் தான்
எல்லாக் கணமும், எது நடந்தாலும்
புல்லரிக்க வைத்திடும்
பூரிப்பில் என்னை !
கணுக்கால் எனக் கெப்படி
நெளிந்துள்ள தென
என்னால் கூற முடியாது !
பிறரோடு நான்
சேர்ந்துலாவும் எனது நட்புக்குக்
காரணமும்,
பிறரது நட்பை நான் மீண்டும்
கோரும் நடத்தைக்குக்
காரணமும்
கூற இயலாது !
கூன் விழுந்து போய்
நான் நிமிர்ந்து நடக்கிறேன் !
மெத்தப் பௌதிகப்
புத்தக அறிவைக் காட்டிலும்,
பலகணி வழியே ஊடுருவித் தெரியும்
காலை இளம் பரிதியின்
உன்னதம் பற்றிச்
சிந்திக்க நிற்கிறேன் நான் !
பொழுது விடிவதைப் பார்ப்பது,
ஒளிக்கதிரும் பளிங்கு அடர்த்தியில்
நிழலை மறைக்கும் !
காற்றும் என் வாய்ச் சுவைக்கு
ஏற்றதாய் உள்ளது !
காண முடியா ஏதோ ஒன்று
தானே போடுது
மோக முள் ஆயுதமாக !
பழச் சாறான ஒளிக் கடல்கள்
வானுலகில்
பரவிச் செல்லும் !
வையகம்
வானுடன் ஐக்கியம் !
அனுதினம் அவற்றின் சங்கமம்
அத்தமிக்கும் !
கிழக்கி லிருந்து சவால் மூச்சு
எழுந்திடும் அக்கணம்
ஏளனக் கடுஞ்சொல்
என் தலைக்கு மேல் செல்லும் !
பார் நீ பிறகு
யார் நீயா அதிபன் என்று ?
+++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (April 4, 2013)
http://jayabarathan.wordpress.
- பொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்
- சின்னஞ்சிறு கிளியே
- காலத்தின் கொலைகாரன்
- அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11
- சங்க இலக்கிய மகளிர்: விறலியர்
- தங்கமே தங்கம்
- விண்மீனை தேடிய வானம்
- தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !
- வெல்லோல வேங்கம்மா
- கனிகரம்
- பணிவிடை
- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்
- செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]
- அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்
- எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்
- வெற்றிக் கோப்பை
- புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15
- புகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்
- நம்பி கவிதைகள் இரண்டு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5
- அக்னிப்பிரவேசம்-29
- நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
- முத்தம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்
- புகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்
- தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்