தாகூரின் கீதப் பாமாலை – 62 தீராத ஆத்ம தாகம் .. !

This entry is part 22 of 29 in the series 28 ஏப்ரல் 2013

 

Tagore

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

விழிகள் உன் முகம் நோக்கும் போது

வேதனை அடையுது மனம் !

திரும்பி நீ வருவாயோ

வராது போவாயோ,  அதை நான்

அறிவ தெப்படி  ?

நானுனக்கு ஆசனம்  அமைப்பதும்,

பூமாலை பின்னுவதும்

வீணாகுமா என்று நான்

வியப்புறு கின்றேன்

சில வேளை !

 

பொழுது சாயும் வேளையில்

புள்ளினங்கள் கூட்டுக்குத்

திரும்பி வரும் !  

மலை அடிவாரக் கரையில்

படகு வந்து நிற்குது

அறுவடை நெற் பொதியுடன் !

தேடல் முடிந்த பிறகு நீ

வீடு நோக்கி வர வில்லையா ?

கொந்த ளிக்கும் உன்  ஆத்ம தாகம்

இன்னும்  இருக்கிறதா

உன்னிரு விழிகளில்

எரிந்து கொண்டு  !

   

+++++++++++++++++++++++++

பாட்டு : 159   தாகூர்  தன் 66 ஆம் வயதில் [ஜூலை  1927] சாந்தி நிகேதனத்தில் அரங்கேறப் போகும் ஷேஸ் ரக்ஸா [Shesh Raksha] என்னும் பாட்டு நாடகத்துக்காக எழுதப் பட்டது.   

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 23, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -21 என்னைப் பற்றிய பாடல் – 15 (Song of Myself) நாணல் புல் கீழானதில்லை..!போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *