This entry is part 15 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

மு.கோபி சரபோஜி

எவரிடமும்

பறித்து உண்ணாது

எவரிடமும்

வாய்சவடால் செய்யாது

துருத்தி தெரியாத

பாவங்களை சுமக்காது

தன் சுகமென்பது கூட

தன்னை லயிப்பதே

என்றிருப்பவனை நோக்கி

எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கிறோம்

“பைத்தியம்” என்ற வசைச்சொல்லை!

————————————–

மு.கோபி சரபோஜி

இராமநாதபுரம்

Series Navigationகொம்புத்தேன்மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு