தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !

This entry is part 29 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

இதற்கு முன் நான் என்றும்

இதுபோல் அனுபவப் பட்ட தில்லை,

தோழி சொக்கி* !

கண்ணீர் நிரம்பிய ஒரு வசந்த

காலத்தை !

ஏக்கமுடன் நான்  இச்சைப் படுவது

குருதிச் செந்நிற கின்சுக்* மலர் !

தாக்கும் நறுமண மல்லிகைப் பூக்கள்

பூந்தோட்ட வாசலில்

புது இலைகளை உடுத்தி  இருக்கும்.

இரவு, பகல்

எல்லா நாள் முழுதும்

கண் மூடாது விழித் திருப்பது

எவர் வருகைக்கோ  ?

 

தூரத்துத் தொடுவானில்

தென்திசைத் தென்றல் காற்றில்

கை விடப் பட்ட

காதலன் ஒருவன் கானம் பாடுவது போல்

காதில் விழுகிறது !

பூத்து விரிந்த மலர்கள்

பூந்தோப்பில்

தம் ஆடை உரிக்க விழையும் !

என் ஆத்மாவின் மூடிய கதவினை

நான் ஆசைக் கரங்களால்

மீண்டும் மீண்டும் தட்டுகிறேன் !

அதை நினைப்பதே வலிக்கிறது

தன்னை வேறு ஒருத்திக்கு

ஒருவன்

அர்ப்பணம் செய்ய

முற்படாத தால் !

 

++++++++++++++++++++

சொக்கி என்பவள் – தாகூரின் தோழி

கின்சுக் – Kinshuk Crimson-Orange Flower

+++++++++++++++++++++++++++++

பாட்டு : 251   1935 ஜனவரில் தாகூர்  74 வயதினராய்  இருந்த போது  “சித்ராங்கதா” நாட்டிய நாடகத்துகாக சாந்திநிகேதனத்தில் எழுதப் பட்டது.  பிறகு ஒரு மாதம் சென்று ஒரு பாட்டு நாடகத்தில்  சேர்க்கப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] August 13, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபூரண சுதந்திரம் யாருக்கு ?குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *