தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்

This entry is part 8 of 22 in the series 15 செப்டம்பர் 2013

TH07_GANDHIAN_SRIN_1577190e

கடந்த சனிக்கிழமை செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். அவ்வப்போது இலங்கைத் தமிழர் பற்றிய செய்திகளை, தமிழ் நாட்டுச் செய்திகளைத் தொகுத்து திருவள்ளுவர் இலக்குவனார் அனுப்பும் மடல் ஒன்றில் இந்த செய்தியும் இருந்தது. தமிழ்த் தினசரிப் பத்திரிகை எதிலும் இந்த செய்தி வந்துள்ளதா என்பது எனக்குத் தெரியாது. வாரப் பத்திரிகைகள் எதுவும் இதை ஒரு பொருட்டாகக் கருதுமா என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு இந்தப் புறக்கணிப்பு அதிர்ச்சி தரவில்லை. இது இந்தக் காலத்தில் நடப்பது தான், ஒன்றும் புதிதல்ல என்ற காலத்தை ஒட்டி உணரும் புத்தி இருந்தாலும், வேதனையாகத்தான் இருந்தது. இப்போது இது குறித்து நான் எழுதும் போது எந்தனை பேர் தமிழர்கள், இணையங்களில் தொடர்பு கொண்டவர்கள் என் வேதனையைப் பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஒரு வேளை நான் யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்பதும் தெரிகிறது. பி.என். ஸ்ரீனிவாசனும் இது பற்றியெல்லாம் கவலைப் பட்டவரில்லை. ஆனால் தனக்கு எது சரி, எது நடப்பது சரியல்ல, எது சரி செய்யப் படவேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்வதில் முனைப்புக் கொண்டு செயல்பட்டு வந்தார். அது என்ன பலனைத் தருகிறது, யார் தனக்கு துணைவருவார்கள் என்பது பற்றியும் அவர் கவலைப் பட்டவர் இல்லை. அப்படி ஒரு ஜீவன், அப்படி ஒரு வாழ்க்கை. தான் வாழும் காலத்தின் தர்மங்களை, வாழ்க்கை முறைகளை, நம்பிக்கைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது தன் வழியில் தான் நினைத்ததை முடிந்த அளவில் செயல் படுத்தி வந்தவர். அவர் வேறு ஒரு யுகத்தில், யுக தர்மத்தில் வாழ்ந்தவர். அந்த தர்மங்கள் இப்பொது அழிந்து விட்டன். செலவாணி அற்றுப் போய்விட்டன.

அவரது மரணத்தைப் பற்றி அடுத்த நாளே தனது மடலில் எழுதிய திருவள்ளுவர் இலக்குவனார் பின் வரும் செய்தியையும் உடன் தருகிறார்.

”ரயில்வே பணியை ராஜிநாமா செய்துவிட்டு 1987-ஆம் ஆண்டு காந்திய தரிசன கேந்திரம் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, காந்திய சிந்தனைகளைப் பரப்பும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.

எழுத்தாளர் கா.சீ.வேங்கடரமணி தொடங்கிய பாரதமணி பத்திரிகையை இவர் தொடர்ந்து நடத்தி வந்தார்.

 

சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் உள்ள திடலுக்கு திலகர் கட்டம் என்ற பெயரை மீண்டும் வைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்.

அதன் விளைவாக கடந்த 2010-ஆம் ஆண்டு திலகர் கட்டம் என்ற பெயர் சூட்டப்பட்டு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. இளைஞர்களை ஆண்டுதோறும் மகாத்மா காந்தி தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதன் மூலம் இளைஞர்களுக்கு காந்தியின் மகத்துவத்தை உணரச் செய்தார்”

 

திரு பி.என். ஸ்ரீனிவாசனை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது எழுத்து ஆசிரியர் சி.சு. செல்லப்பா தான். அது நான் தில்லியில் இருந்த போது. எண்பதுகளின் நடு வருடங்கள் ஒன்றில். எனது அலுவலகத்துக்கு தொலை பேசி செய்தி வந்தது. செல்லப்பா தான் பேசினார். தான் தில்லி வந்திருப்பதாகவும் ரகாப் கஞ்ச் ரோடில் ஒரு எம்.பி.யின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் தில்லிக்கு எப்படி வந்தார்?. எதற்கு வந்தார்? இந்த மாதிரி தூரப் பயணங்கள் எல்லாம் போகும் வசதி அவருக்கு இருந்ததில்லை. போயும் போயும் தில்லி எப்படி அவர் விருப்ப வலையில் விழுந்தது?. அதெல்லாம் போக, அவருக்கு என் அலுவலக தொலைபேசி எப்படித் தெரிந்தது?. நான் சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்று பரவலாக தமிழ் உலகில் செய்தி பரப்பிய பொதுத் தொண்டை கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய அங்கமான முற்போக்குகள் சுமார் முப்பது வருடங்களாக அயராது பாட்டாளி மக்கள் நலன் கருதி தொண்டு ஆற்றி வந்துள்ளனர். ஆனால் அது செல்லப்பாவுக்கு எந்த விதத்திலும்  உதவியாக இருந்திருக்குமா என்ன? சாமிநாதன், சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்று டைரக்டரியில் தேடினால் கிடைக்குமா? இல்லை அமெரிக்க தூதராலயம் தான் உதவுமா? முற்போக்குகளின் பிரசாரத்துக்கு பயன்பட்டது உண்மை. ஒரு வேளை அவர் தங்கியிருந்த எம்,.பி உதவியிருக்கக் கூடும். அப்படியும் அது சுலபத்தில் கிடைத்திராது. சரி எப்படியோ தன் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விட்டார்.

அந்த எம்.பியின் வீடு அலுவலகத்திலிருந்து நடை தூரத்தில் தான் இருந்தது ரகாப் கஞ்ச் குருத்வாரா செக்ரெடேரியேட்டுக்கு அடுத்து எதிர்த்தாற்போல் இடது பக்கம். அதைச் சுற்றியிருக்கும் ரோடில் தான் எம்.பி. இருக்கும் வீடு நான் போன போது எம்.பி. இல்லை. யார் அந்த எம்.பி என்பதும் இப்போது நினைவில் இல்லை. வீட்டில் இருந்தது செல்லப்பாவும், கூட நீண்ட தலைமுடியும் தாடியுமான ஒரு பெரியவர். அறுபது வயதுப் பிராயர். பின்னர் பேச்சில் தெரிந்தது அவரும் ஒரு தீர்க்க காந்தி பக்தர். அவர் தான் பி.என். ஸ்ரீனிவாசன். இருவருக்கும் மிக நெருங்கிய தோழமை தெரிந்தது. “இப்போ எனக்கு அரசு கொடுக்கும் தியாகிகள் உதவித் தொகை 1,500 ரூபாய் ஆகியிருக்கிறது .அதோட உங்களுக்கெலலாம் கொடுக்கறது போல, இந்தியாவில் எங்கே வேணுமானாலும் ரயிலில் இலவசமாகப் போய்க்கலாம். வயசானவாளுக்கு கூட ஒருத்தரைத் துணைக்கு கூப்பிட்டுக்கொள்ளலாம். அவருக்கும் பயணம் இலவசம் தான். சரி, தில்லி போய்ட்டு வரலாம்னு கிளம்பிட்டோம்.” என்றார் செல்லப்பா. இதோ ஸ்ரீனிவாசன். முதல் தடவையாகப் பார்க்கும் பி.என். ஸ்ரீனிவாசன் முகம் மலர்ந்து வெகு நாட்கள் பழகியவரைப் போல மிகுந்த சினேக பாவத்தோடு சகஜமாகப் பேசத் தொடங்கிவிட்டார். “இங்கே தான் இருக்கணுமா? எத்தனை நாட்களுக்கு? என்று கேட்டேன். “இங்கே இருந்து என்ன பண்றது? நீங்க இருக்கற இடத்துக்குப் போகலாம் வாங்கோ. இனிமே உங்களோட தான்” என்றார் செல்லப்பா அவருடைய வழக்கமான குரலில்.

அவர்கள் இருந்தது இரண்டோ, மூன்றோ நாட்கள் தான். என் விடு போய்ச் சேர்ந்ததும், அவர்களுக்கு உடன் கிடைத்தது ரொட்டியும் சப்ஜியும் தான். “இதென்ன சாப்பாடு? என்றார் செல்லப்பா. ”ராத்திரியிலேர்ந்து நமக்கு பழக்கமான சாப்பாடு கிடைக்கும்”, என்றேன். இரண்டு நாட்களும் பேச்சு, பேச்சு பேச்சுத் தான். வழக்கம் போல பிள்ளையார் கோயில் தெரு 19A வீட்டு சூழல் மீண்டும் உருவாகியது. ஒரே சத்தம். பி.என். ஸ்ரீனிவாசன் நானும் செல்லப்பாவும் சண்டை போடுவதை ஆச்சரியத்துடன் மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். என் மனைவிக்கு இதெல்லாம் சகஜமானது தான். விடுமுறையில் சென்னை வரும்போதெல்லாம் பார்த்திருக்கிறாள்.

பின்னர் பி.என். ஸ்ரீனிவாசன் என்னிடம் தன் ஆச்சரியத்தை மிகுந்த பரவசத்துடன் சொன்னார். இரண்டு மூன்று முறை சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். செல்லப்பா இருந்த போதும், இல்லாத போதும். அது ஏதும் ஒரு பொருட்டல்ல. “என்னமா நீங்க சண்டை போட்டுக்கறேள். விரோதம் இல்லாமல், கல்மிஷம் இல்லாம. சண்டை போட்டுக்கறேள். பின்னர் கூடிக்கறேள். என்ன இது? இப்படி நான் பார்த்ததே இல்லை” என்றார். “அவருக்கும் உங்க கிட்ட ரொம்ப பாசம். உங்களுக்கும் அவர் கிட்டே ரொம்ப மரியாதை” இப்படித் தான் இருக்கணும்”. என்றார்.

தீஸ் ஜனவரி மார்க் என்று 30.1.1948க்குப் பிறகு பிர்லா மாளிகை இருந்த ரோடு பெயர் மாற்றப்பட்டது. செல்லப்பாவும் ஸ்ரீனிவாசனும் சுற்றி வந்தனர். காந்தி கடைசியாக இருந்த அறை அன்று இருந்த வாறே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அந்த அறையிலிருந்து புல்வெளியைத் தாண்டி பிரார்த்தனை மேடைக்கு மனு, அபாவின் தோள் பற்றி நடந்து செல்ல, கோட்சேயால் சுடப்பட்டு வீழ்ந்த இடம் வரை அவரது காலடிகள் கான்க்ரீட் சுவடுகளாக பதியப்பட்டுள்ளன.  செல்லப்பா அங்கு வந்ததும் கண்மூடி நின்று பிரார்த்தனை செய்தார். அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

தில்லியைத் தேர்ந்தெடுத்ததும், தில்லி யாத்திரை வந்ததும் இங்கு நின்று பிரார்த்திக்கத்தான் போல யாத்திரை சாபல்யம் அடைந்தது.

சுந்தர ராமசாமியும் இதே போலத்தான். எங்கும் போக அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை. “இங்கே எதுக்கு வந்திருக்கு. உங்களையெல்லாம் பார்த்து பேசீண்டிருக்கத் தான்” என்பார் சிரித்துக்கொண்டே. அவர் வந்த போதெல்லாம் நண்பர்களோடு தான் அவர் பொழுது கழிந்தது. ரவீந்திரன் அறையில், ப்ரெஸ் க்ளப் பாரில். அல்லது அவரது சகோதரி வீட்டில்.

பின் கடைசியாக பூஸா ரோடில் இருக்கும் தில்லித் தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் நடந்த தில்லி தமிழ் எழுத்தாளர் சந்திப்பு. அதிகப் பேர் இல்லை. பத்து பதினைந்து பேர் இருந்திருப்போம். புதிதாக அறிமுகம் ஆகிறவர்கள். எல்லோரும் இளைஞர்கள். ஏதோ சந்திப்புப் போலத் தான் அது கழிந்தது. செல்லப்பாவும் பி.என். ஸ்ரீனிவாசனும் நடு நாயகமாக இருக்கச் சுற்றிச் சூழ்ந்திருப்பவர்கள் மரியாதை உணர்வோடு இருந்தவர்களே அன்றி, கேள்விகள் கேட்டுத் தெளிய வந்தவர்கள் அல்ல. சம்பிரதாயக் கூட்டமாகக் கழிந்தது அது.

செல்லப்பாவும் சரி, பி.என். ஸ்ரீனிவாசனும் சரி, கடந்து கல்வெட்டுச் சமாசாரமாகிவிட்ட காந்தியுகத்தில் பிடிவாதமாக வாழ்பவர்கள். இன்னமும் அந்த யுகத்துக்கான வாழ்வுக்கும் உயிர்ப்புக்கும் தேவை இருப்பதாக, அது இன்னமும் வாழும் நியாயம் கொண்டதாக நம்பி வாழ்ந்திருப்பவர்கள்.

இந்தத் தோழமையை செல்லப்பா முன்னர் சொல்லி நான் கேட்டதில்லை. சந்தர்ப்ப வசமாக தில்லி வந்தபோது ஸ்ரீனிவாசனும் கூடத் துணைக்கும் உதவிக்கும் வந்த காரணத்தால் நான் தெரிந்து கொண்டவர். காந்தி ஒன்றே அவர்களைப் பிணைக்கும் ஒரே சக்தி என்றே நான் நினைத்துக்கொண்டேன். அது போக, ஸ்ரீனிவாசன், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்பதும் ஒரு கூடுதல் மகிழ்ச்சி.

இதன் பிறகு ஸ்ரீனிவாசன் காந்தி பற்றிய சிந்தனைகளை பரப்புவதற்காகவும் காந்திய வழியில் செயலபடவும் ஒரு மேடையாக பாரத மணி என்று ஒரு மாதப் பத்திரிகை நடத்தி வருவதாகச் சொல்லப்பட்டதே அது எனக்கு வரத் தொடங்கியது. எப்போதிருந்து என்பது இப்போது எனக்கு நினைவில் இல்லை.

நான் சென்னைக்கு குடி பெயர்ந்ததும் ஸ்ரீனிவாசன் திடீரென்று ஒரு நாள் என் மடிப்பாக்கம் வீட்டிற்கு வந்தார். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. பாரத மணிக்கு என் சென்னை முகவரி மாற்றத்தை தெரிவித்ததிலிருந்து அவர் தெரிந்திருக்க வேண்டும். அவர் திடீரென்று முன்  நின்றது மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தந்த விஷயம். அவரது அத்யந்த நண்பர் செல்லப்பா மறைந்து விட்டார். இப்போது இல்லை. இருந்தாலும் அவருடன் ஒரு நட்பும் நேரிடை பழக்கமும் புதுப்பிக்கப்படுவதில் சந்தோஷம் தான். சிட்லபாக்கத்தில் இருப்பவர். அங்கிருந்து ரயில் ஏறி மௌண்ட் வந்து அங்கிருந்து மறுபடியும் பஸ் பிடித்து பின்னர் மறுபடியும் பஸ் நிறுத்தத்திலிருந்து மடிப்பாக்கம் தெருக்களில் இவ்வளவு தூரம் வருவது என்பது, ஏதோ சந்திர மண்டலத்தில் நடப்பதற்கு இணையானது தான் கற்களும், சின்னச் சின்ன பாறைகளும், குழிகளும், வழிந்தோடும் சாக்கடைத் தண்ணீருமான மடிப்பாக்கம் தெருக்களில் நடந்துவருவது ஒரு பெரிய சாகஸ காரியம் தான். என்னிலும் ஐந்தாறு வயது மூத்தவர் தனித்து வந்திருக்கிறார். பக்கத்தில் யாரும் தெரிந்தவர் இருக்கக் கூடும், , ஏதோ காரியமாக வந்தவர் என்னையும் நினைத்து வந்திருக்கக் கூடும். இருப்பினும், திரும்பியும் போகணுமே. சிட்ல பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து அவர் வீடு எவ்வளவு தூரமோ?

எனக்குத் தான் இந்த குழப்பங்கள் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தனவே தவிர அவர் எந்த கவலையுமின்றி, சௌஜன்யத்தோடு ஏதோ அடுத்த வீட்டீலிருந்து அரட்டை அடிக்க வந்த தோரணையில் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு நான் பாரத மணிக்கு எழுத வேண்டும். பாரத மணிக்கு எழுத எனக்கு என்ன தெரியும்? என்ன தகுதி? என்று கேட்டால், எல்லாம் எழுதலாம் எழுதுங்கோ. நீங்க எழுதணும்” இதே பல்லவி.. பின் செல்லப்பாவும் நானும் சண்டையா இலக்கிய விவாதமா என்று கேள்வி தொனிக்க சத்தமிட்டுக்கொண்டிருந்ததை நினைவு படுத்தி அட்டகாசமாகச் ஒரு சிரிப்பு வெடிக்கும். ”.இப்படிக் கூட நடக்குமான்னு நான் அதிசயப்பட்டுப் போனேன்,” என்று மறுபடியும்.. அவரை  பஸ் நிறுத்தம் வரை சென்று பஸ்ஸில் ஏற்றித் திரும்பினேன். அதன் பிறகு அவர் அனேகம் முறை இப்படி வந்திருக்கிறார். இல்லையெனில் தொலை பேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். நான் அவ்வப்போது, ஆறு மாதம் கழித்தோ,பத்து மாதங்கள் கழித்தோ இப்படி தோன்றுகிறபோது அவருக்கு நூறு ரூபாய் பாரதமணி சந்தா என்று அனுப்பி வந்தேன். “இல்லாவிட்டால் மறந்து போகும்” என்றும் ஒரு குறிப்புடன்.

பாரத மணியில் காந்தியை நினைவு படுத்தும் அவரது செயல்கள் பற்றித் தகவல்கள் இருக்கும். கூட்டங்கள், பேச்சுக்கள், பாரதி நினைவு விழாக்கள்

நமக்கெல்லாம் மறந்துவிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், யாருக்கு ந. சோமையாஜுலுவை நினைவில் இருக்கும்? ஒரு காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்ட காலங்களில் தன் பெயரை பிரகாசிகக்ச் செய்தவர். அவரைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை, பாரத மணியில் வந்திருந்தது. ஸ்ரீனிவாசனிடமிருந்து தொலைபேசிவரும்.” எழுதணும் நீங்களென்று”.  எனக்கு எந்த சோமையாஜுலுவைத் தெரியும்? 40 களின் ஆரம்பத்தில் காந்தி மதுரை வந்த போது அவரை அம்மையநாயக்கனூர் ரயில் நிலையத்தில் பார்க்க பக்கத்து கிராமங்களிலிருந்தெல்லாம் திரள் திரளாக மக்கள் திருவிழாவுக்குப் பொவது போல் காந்தி தரிசனம் செய்து வந்ததை எழுதினேன் அது என் நினைவுகளின் சுவட்டில் எழுதியது. அது ஏற்கனவே வந்தது என்றோ இல்லை வேறு எந்த காரணமோ அவர் அதை பயன் படுத்திக் கொள்ளவில்லை. வேறு என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை. அவர் நேரில் வரும் போதும் அவ்வப்போது தொலை பேசியில் பேசும் போதும் நினைவு படுத்திக்கொண்டிருப்பார். சிட்ல பாக்கம் போய் அவரை ஒருதரம் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னவோ எனக்கு இருந்தது தான். என்னிலும் ஐந்து வயது மூத்தவர் செய்த சாகஸ காரியத்தை நான் செய்ய முடியவில்லை.

இப்படி. பின்னர் அவர் திலகர் கட்டம் என்ற சரித்திரப் பதிவுகள் கொண்ட பெயரை அந்த சரித்திரத்தோடு தனக்கு எவ்வித உறவோ மரியாதையோ கிடையாது என்று சொல்லும் வகையில், எத்தனையோ சரித்திரப் பதிவுகள் நினைவுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அறநிலையத் துறையே, திருவொற்றியூர் கோயில் கல்வெட்டுக்களை அழிக்கும் காரியத்தைச் செய்கிறது. கோவில் புனருத்தாரணம் என்று சொல்லி. கோயில் நிலங்கள் பறிக்கப்பட்டதை ஒரு வேளை திரும்பப் பெறலாம். கோயில் வருமானம் சூறையாடப்படுவதை ஒரு வேளை ஒரு காலம் நிறுத்தலாம். ஆனால், உடைத்து நிர்மூலமாக்கப்பட்ட கல்வெட்டுக்களை எப்படி  திரும்பப் பெறுவது? சரித்திரமும் சரித்திரச் சின்னங்களும் அல்லவா அழிகின்ன்றன? அழிந்தது அழிந்தது தானே.

இங்கு நினைவில் இருப்பது காந்தி என்ற பெயர் தான். காந்தியா சிந்தனையே யாருக்கும் இல்லையென்றால்…..அவரால் செய்யக் கூடியது என்ன? யார் அவரோடு ஒத்த சிந்தனை கொண்டவர் இருக்க முடியும்? அவர் கடைசியில் செய்ய முடிந்தது என்ன? இவரும் ஒரு கல்வெட்டை அங்கு நிறுவியது தான். மனித வாழ்வில், மனித சிந்தனையில் இந்த பிரக்ஞை இல்லையெனில் அந்தக் கல்வெட்டும், திலகர் கட்டம் என்ற பெயரும் எத்தனை நாட்கள் நிற்கும்?.. இப்பொது அது இருக்கிறதோ என்னவோ?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு என ஒரு சிலை கம்பீரமாக,,  காந்தி சிலையே ஒரு ஓரத்துக்கு ஒதுங்கிக் காண்பது போல, ஒரு நடு நாயகமான இடத்தில் நிறுவ அரசு தீர்மானித்து விட்டால், அதை யார் எதிர்க்கக் கூடும். ஒன்று அரசு பலம். இன்னொன்று சிவாஜி கணேச மகாத்மியம் மக்கள் மனதில். இரண்டும் மகா சக்திகள். நீதி மன்றம் சென்றார். வேறென்ன செய்ய இயலும்?

அவருக்கு துணை நிற்க யாரும் இருந்தனரா?. அவர் போல் ஒத்த சிந்தனையும் செயலூக்கமும் கொண்டவர் யாரும் இருந்தனரா? காந்தியைப் பற்றி அதே உணர்வு கொண்டவர் இன்று இருக்கிறார்களா? தமிழகத்தை விடுங்கள். தமிழ்க அரசை விடுங்கள். காங்கிரஸ் கட்சியை விடுங்கள் காந்தி பெயர் கொண்டு வாழும், அரசோச்சும் குடும்பத்திலாவது யாரும் உள்ளார்களா?

கடைசி காந்தி சிந்தனை கொண்ட, செயல் கொண்ட ஒரு மனிதர் இருந்தார். அவரும் இரண்டு நாட்களுக்கு முன் மறைந்துவிட்டார். தாகூரின் ஒரு கவிதை “ஏக்லா சொல்” என்று. உன் பேச்சைக் கேட்க யாரும் இல்லையெனில்,தனித்தே செல், தனித்தே செல் என்று. கடைசியில் தனித்துச் சென்ற ஒரு மனிதர் இருந்தார். இப்பொது அவருக்கு அந்தக் கவலையும் இல்லை.

—————————————————————–

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம் ……19ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

28 Comments

 1. Avatar
  sathyanandhan says:

  தங்கள் கட்டுரை மூலமே. திரு.சீனிவாசன் அவர்களின் பணி பற்றித் தெரிந்து கொள்கிறோம். அவரின் மறைவும் கவனிக்கப் படாதது பெரிய சோகம். தங்களுடன் வாசகரும் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அன்பு சத்யானந்தன்

 2. Avatar
  ஷாலி says:

  // கடைசி காந்தி சிந்தனை கொண்ட, செயல் கொண்ட ஒரு மனிதர் இருந்தார். அவரும் இரண்டு நாட்களுக்கு முன் மறைந்துவிட்டார்.//
  இந்த இரண்டுவரி,பெர்னாட்ஷா கூறிய “ உலகத்தில் ஒரே ஒரு நல்ல கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார், அவரையும் சிலுவையில் அடித்து கொன்றுவிட்டார்கள்.” வரிகளை நினைவு படுத்துகிறது. இந்தியாவில் என்றைக்கு பெரோஷ காந்தி என்னும் பார்சியின் குடும்பம் பதவி ஏறியதோ, அன்றிலிருநது இன்றுவரை இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி,சஞ்சய் காந்தி,வருண் காந்தி சிந்தனைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது புதியதாக எழுந்த காந்தி சிந்தனை ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதுதான். எப்படியோ காந்தியின் நாமம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று ஆறுதல் அடைய வேண்டியதுதான் .இந்தக்குடும்பம் மட்டும் இல்லாதிருந்தால், காந்தியை நம்ம மக்கள் எப்பவோ மறந்திருப்பார்கள்.” அரசோச்சும் குடும்பத்திலாவது யாராவது உள்ளார்களா?” என்னும் தங்கள் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

 3. Avatar
  அமீதாம்மாள் says:

  கடைசிவரிகளைப் படித்தபோது ஒரு சொட்டுக் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. சில கொடுமைகளை தடுக்கவும் முடியவில்லை தாங்கவும் முடிவதில்லை

 4. Avatar
  N Sivakumar, New Delhi says:

  ஒரு நல்ல மனிதர் இறைவனடி சேர்ந்து விட்டார், அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த நிலையிலும் ஷாலி அவர்களின் கருத்து சிந்திக்க வைக்கின்றது..

 5. Avatar
  poovannan says:

  திலகர் அவர்களின் கருத்துக்கள் சிலவற்றை பார்ப்போமா

  http://ambedkar.org/jamanadas/TilakGandhi.htm

  1915 – Tilak opposed the Age of Consent Bill, brought in by Shastri, to raise the minimum Age for marriage.
  1916 April 28 – Established “Home Rule League” at Belgaon
  1916 December – Lukhnow Congress – Recognized Muslim Demands of Separate Electorates for Muslims.
  1918 – He opposed, a Bill by Vithalbhai Patel, to legalize the inter-caste marriages. He described such marriages as “hindu-hindu che sankar karak vivah”. He declared the Bill to be against Hindu religion and said that the progeny of such marriages may inherit the property of father only and not of others. A Brahmin looses his brahmin-hood, if he marries a shudra woman, he opined.
  1918 – Trip to England to file suit of defamation against Sir Valentine Chirol, who had held Tilak’s writings and work responsible for violence in India and called him “Father of Indian Unrest”. Tilak lost the case in Feb. 1919 and Returned back to Bombay in Nov. 1919
  1919 December – Amrutsar Congress
  1920 Feb. – March – His meetings were disrupted in Sangali, Pune and Bombay by non-Brahmins because of his speech at Athani saying non-Brahmins had no business to take education or to take part in politics.

  சாதி மறுப்பு திருமணம் பெரும்பாவம்
  சூத்திரர்கள் கல்விக்கு,அரசியலில் பதவிக்கு வர ஆசைப்பட கூடாது என்று கூறியவர்கள் எல்லாம் பெரும் தலைவர்கள்.

  சூத்திரர்கள் அவர்கள் சாதி தொழிலை தான் செய்ய வேண்டும்.அரசியலுக்கு வர எந்த உரிமையும் கிடையாது ,குழந்தை திருமணம்,வர்ணாசிரமம் தான் என் மதத்திற்கு ஆணி வேர்.அதை மாற்ற கூடாது
  விதவை திருமணம் பெரும்பாவம்
  வினயாகர் ஊர்வலத்தை வைத்து மக்களுக்கு வெறி ஏற்றுவதை முதலில் துவங்கி வைத்தவர் பெரிய தியாகி.
  அந்த காலத்தில் அதற்க்கு மாற்றாக இவர்களை எதிர்க்க வந்தவர்கள் மிகவும் கெட்டவர்கள்

  காந்தியர்கள் திலகரின் பெயருக்காக துடிப்பது எதனால் என்று புரியவில்லை

 6. Avatar
  ஷாலி says:

  நண்பர் பூவண்ணன் கூறும் கருத்தையும் நாம் மறுப்பதிற்கில்லை.சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெரும் தலைவர்களில் பலர் வெள்ளையனை வெளியேற்றத்தாத்தான் காங்கிரசில் இருந்தார்களே தவிர சமூதாயத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க,மூட நம்பிக்கைகளை களைய ஒரு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. ஜெய மோகன் கூறுகிறார்.
  “திலகர் அவர் வாழ்ந்த காலத்தின் பிரதிநிதி. தீண்டாமையை எதிர்த்தார் அதே நேரத்தில் சாதி கட்டுப்பாடுகளை முழுமையாக மறுதலிக்க அவரால் இயலவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் வேதங்கள் பயிலுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்ர் சார்ந்திருந்த சித்பவன் அந்தண வகுப்பினரே பிற அந்தணர்களால் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டு வந்ததுதான். சித்பவன் அந்தணர் குறித்த ஐதீக கதைகளின் ]]”
  http://www.jeyamohan.in/?p=275

  திலகரின் மதக்கொள்கை எந்தளவுக்கு தீவிரமாக இருந்தது என்று சொன்னால், 1897 ல் புனே,பம்பாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் “பிளேக்” என்னும் கொடிய நோய் பரவி மக்கள் பெருமளவில் இறந்து போனார்கள்.இந்நோய்க்கு முக்கிய காரணம் “எலி” என்று கண்டறியப்பட்டது.உதவிக் கலைக்டராக அப்போது பதவி வகித்த வந்த “ராண்ட்”மற்றும் “அயர்ஸ்ட்”ஆகியோர் கொண்ட குழு தீவிரமாக செயல்பட்டு பிளேக்குக்கு காரணமான எலிகளை ஒழிக்க முனைந்தார்கள்.
  உடனே “வினாயகனின் வாகனமான எலியை ஒழிப்பதா?” என திலகர் பொங்கி எழுந்தார்.”எலிகளைக் கொல்வதன்மூலம் இந்துக்களின் மனதை பிரிட்டீஷ் அரசு புண்படுத்துகிறது.”என்று அறிக்கையிட்டார்.
  “இந்து மதத்திற்க்கெதிராக செயல்படுபவர்களை சிவாஜி வழியில் நின்று கொன்றால் அது தேச பக்தியே ஆகும்.” என்று தனது “கேசரி” இதழில் எழுதி இளைஞர்களை உசுப்பேற்றினார்.சனாதன கொள்கையை இறுகப்பிடித்த இரு பிராமண இளைஞர்கள்,தாமோதர ஹரியும்,பாலகிருஷ்ண ஹரியும் இவர்களைக்கொல்ல திட்டமிட்டனர்.விக்டோரிய மகாராணி பதவியேற்ற வைரவிழா 1897 ம் ஆண்டு நடைபெற்றது.அந்த விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வழியில் “ராண்ட் மற்றும் அயர்ஸ்ட்” இருவரும் அவ்விளைஞர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.

  1918 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கலப்புத் திருமண சட்ட மசோதாவை திலகர் கடுமையாக எதிர்த்தார்.”பிராமணர்கள் பிராமண அல்லாதவர்களை திருமணம் செய்து கொண்டால் பிராமணத்தன்மையை இழந்து விடுவார்கள்.”என்றார்.”அனுலோகத் திருமண்ங்களை ஆதரித்தால்,பிரதிலோகத் திருமண்ங்களை தடுக்க முடியாது.”என்றும் எச்சரித்தார்.

  பிராமணரல்லாதவர்கள் அரசியல் உரிமை கோரி இயக்கங்கள் வைத்து போராடியபோது,சென்னை வந்த திலகர் பொதுக்கூட்டம் ஒன்றில்,”செக்காட்டும் செட்டியும்,செருப்பு தைப்பவனும்,துணி துவைப்பவனும் சட்டசபைக்கு வர நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சூத்திரர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர,சட்டத்தை இயற்றுபவர்கள் அல்ல” என்று பேசினார்.

  தேசப்பக்தி, நாட்டுப்பற்று போர்வையைப் போர்த்திக்கொண்டு அப்பாவி ஆடுகளுடன் சேர்ந்து அடப்பாவி ஓநாய்களும் ஒன்றாக மேயும் தேசம் நம் புண்ணிய தேசம். இங்கு யார் காந்தியவாதி?
  அல்லது காந்-தீயவாதி என்று யாருக்கும் புரியவில்லை!

 7. Avatar
  வெங்கட் சாமிநாதன் says:

  பூவண்ணன் எழுதியிருப்பதற்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?
  எங்கோ எழுதவேண்டியதை தவறிப்பொய் இங்கு போஸ்ட் செய்து விட்டாரா, இல்லை திண்ணைதான் தவறிப் போய் இங்கு போஸ்ட் செய்துவிட்டதா?

 8. Avatar
  poovannan says:

  வெ சா ஐயா

  இது கட்டுரையில் முக்கியமான பகுதி இல்லையா

  சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் உள்ள திடலுக்கு திலகர் கட்டம் என்ற பெயரை மீண்டும் வைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்.

  அதன் விளைவாக கடந்த 2010-ஆம் ஆண்டு திலகர் கட்டம் என்ற பெயர் சூட்டப்பட்டு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.

  காந்தியவாதிகள் திலகரின் மேல் பாசம் கொள்வது , ராம கோபாலன் அவர்களுக்கு மாலப்புரத்தில் சிலை வைக்க வேண்டும்,அங்குள்ள திடலுக்கு பெயர் வைக்க வேண்டும் மதானி அவர்களுக்கு நாக்பூர் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் சிலை வைக்க வேண்டும் என்று காந்தியவாதிகள் போராடுவது போல

  இது எதனால் என்ற கேள்வி முக்கியம் இல்லையா

  திலகரின் கூற்றுக்களை விட பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் எழுத்துக்கள் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

  அவருக்கு தமிழகத்தில் உயரிய இடம் வேண்டும் என்று போராடுவது,போராடி கொண்டு வந்த திலகர் கட்டத்தை மதிக்கவில்லை என்று தமிழர்களை கடிந்து கொள்வது மற்றவர்களின் சிலையை கிண்டல் செய்வது சரியான செயலா

 9. Avatar
  IIM Ganapathi Raman says:

  நான் எழுதியதன் சாராம்சம்-

  பி.என். ஸ்ரீனிவாசன் ஒரு காந்தியவாதி. காந்தி தீண்டாமைக்கு எதிராக போராடினார்; விதவை மணங்களை ஆதரித்தார்; கலவரங்களில் அநாதைகளானப்பெண்களை மணம் செய்துகொள்ள வேண்டுமென்றார். இந்து முசுலிம் ஒற்றுமையை ஆதரித்ததனால் கொல்லப்பட்டார்.

  இக்கொள்கைகளுக்கு எதிரான திலகரைப்பற்றி ஷாலியும் பூவண்ணனும் எப்படி என்று விவரித்துள்ளார்கள்.

  பி.என். ஸ்ரீனிவாசன்.ஒரு காந்திய வாதி எப்படி திலக்வாதியாக இருக்க முடியும்? என்பதுதான் என் கேள்வி.

  இக்கேள்விக்கு பதில் சொல்லும் கடமை வெ சாமிநாதன் ஐயா அவர்களுக்கே சாலப்பொருந்துமெனப்து அடியேனின் தாழ்மையான அபிப்பிராயம்.

 10. Avatar
  paandiyan says:

  i really do not know the links provided in the above article. JMO ; http://www.jeyamohan.in/?p=275 — talks about different things.
  and
  http://www.tamilhindu.com/2011/06/why_ambedkar_converted_to_buddhism-06/
  and fianlly — all should read in this article;
  http://ipurush.blogspot.in/

  புகழ்பெற்ற நிர்வாகியும், வரலாற்று அறிஞருமான கே.எம்.பணிக்கர் (1895-1963), ஆசியக் கண்டம் முழுவதும் காலனியாதிக்கமும், நிறுவன கிறித்துவ மதமும் இணைந்து நிகழ்த்திய அக்கிரமங்களையும், அறமீறல்களையும் உலகத்தின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்.

  ==
  and like Ve sa said, people wants to share some junk message and started using this article.

 11. Avatar
  Dr.G.Johnson says:

  திலகரின் ஜாதி வெறி அருவருக்கத்தக்கதோடு , இப்படியும் ஒரு ” மனிதரை ” ஒரு சாரார் போற்றுகிறார்களே என்பது வியப்பையும் உண்டுபண்ணுகிறது… டாக்டர் ஜி. ஜான்சன்

 12. Avatar
  paandiyan says:

  In 1896, When the entire nation was gripped by the famine and plague, the British government declared that there was no cause for anxiety. The government also rejected the need to start a ‘Famine Relief Fund’. The attitude of the government was severely criticized by both the newspapers. Tilak fearlessly published reports about the havoc caused by famine and plague and government’s utter irresponsibility and indifference.
  http://www.culturalindia.net/leaders/bal-gangadhar-tilak.html

 13. Avatar
  admin says:

  அன்புடையீர்
  பின்னூட்டங்களை சுருக்கமாக படைப்பின் மையத்துடன் தொடர்பு கொண்டதாக அமைக்கவும்.
  விரிவாக எதிர்வினை ஆக்க எண்ணினால் தனிக் கட்டுரையாக அனுப்பவும்.

 14. Avatar
  paandiyan says:

  TRUTH 1:
  இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டதற்கு பிரித்தானிய ஆட்சியாளரே பொறுப்பு என்று அடித்துக் கூறுகிறார் நோம் கொம்ஸ்கி:

  “வங்காளத்தைக் கைப்பற்றிய பிரித்தானியர் வங்காளத்தின் செல்வம், பண்பாடு, நவீனத்துவம் கண்டு வியந்தார்கள். அதனை, உலகம் தமக்களித்த அரிய பரிசுகளுள் ஒன்றாகக் கருதினார்கள். வங்காளத்தைக் கைப்பற்றிய ராபர்ட் கிளைவின் சிலை – பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் குடிமக்களைத் தாழ்த்தி இழிவுபடுத்தி இழைத்த வன்முறையின் நினைவுச்சின்னம் – கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா அரும்பொருளகத்தின் வாயிலில் மக்களை வரவேற்கிறது! கிளைவ், டாக்காவைக் கண்டு வியந்தான். தற்பொழுது வங்காள தேசத்தின் தலைநகரமாக விளங்கும் டாக்கா என்னும் புடவை மாநகரத்தை, ‘இலண்டனைப் போலவே மக்கள்தொகை மிகுந்த பாரிய செல்வ மாநகரம்’ என்று வர்ணித்தான். டாக்காவின் மக்கள்தொகை 1,50,000 ஆக இருந்து, ஒரு நூற்றாண்டு நீடித்த பிரித்தானிய ஆட்சிக்குப் பிறகு 30,000 ஆக வீழ்ந்தது. டாக்கா மலேரியா பீடித்த காடாக மாறியது. அதுவரை வங்காளத்தில் உணவுக்குப் பற்றாக்குறை நிலவியதுண்டு. அபின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன், ‘உழவர்கள் நெல், தானியப் பயிச்செய்கையை விடுத்து அபின் பயிர்ச்செகையில் ஈடுபட வேண்டும்’ என்று பிரித்தானியர் வகுத்த விதியின் விளைவாக வங்காளத்தில் நிலவிய ‘பற்றாக்குறை, பஞ்சமாக’ மாறியது; ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மாண்டார்கள் என்று ஆதாம் சிமித் எழுதிச் சென்றார். ‘வணிக வரலாற்றில் இத்தகைய அவலம் இடம்பெறல் அரிது. மாண்டுமடிந்த பஞ்சு நெசவாளர்களின் எலும்புகளால் இந்திய சமவெளிகள் வெள்ளைவெளேரெனக் காட்சியளிக்கின்றன’ என்று பிரித்தானிய ஆட்சியாளரே எழுதிச் சென்றார்கள். வங்காளத்துக்கே சொந்தமான அரும்பஞ்சு அருகிப்போயிற்று. அதன் மேம்பட்ட புடவை உற்பத்தி பிரித்தானியாவுக்கு பெயர்க்கப்பட்டது” (Noam Chomsky, Hopes and Prospects, Haymarket Books, Chicago, 2010, p. 14-15).

  TRUTH2:
  இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டதற்கு பிரித்தானிய ஆட்சியாளரே பொறுப்பு என்று அடித்துக் கூறுகிறார் நோம் கொம்ஸ்கி:

  “வங்காளத்தைக் கைப்பற்றிய பிரித்தானியர் வங்காளத்தின் செல்வம், பண்பாடு, நவீனத்துவம் கண்டு வியந்தார்கள். அதனை, உலகம் தமக்களித்த அரிய பரிசுகளுள் ஒன்றாகக் கருதினார்கள். வங்காளத்தைக் கைப்பற்றிய ராபர்ட் கிளைவின் சிலை – பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் குடிமக்களைத் தாழ்த்தி இழிவுபடுத்தி இழைத்த வன்முறையின் நினைவுச்சின்னம் – கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா அரும்பொருளகத்தின் வாயிலில் மக்களை வரவேற்கிறது! கிளைவ், டாக்காவைக் கண்டு வியந்தான். தற்பொழுது வங்காள தேசத்தின் தலைநகரமாக விளங்கும் டாக்கா என்னும் புடவை மாநகரத்தை, ‘இலண்டனைப் போலவே மக்கள்தொகை மிகுந்த பாரிய செல்வ மாநகரம்’ என்று வர்ணித்தான். டாக்காவின் மக்கள்தொகை 1,50,000 ஆக இருந்து, ஒரு நூற்றாண்டு நீடித்த பிரித்தானிய ஆட்சிக்குப் பிறகு 30,000 ஆக வீழ்ந்தது. டாக்கா மலேரியா பீடித்த காடாக மாறியது. அதுவரை வங்காளத்தில் உணவுக்குப் பற்றாக்குறை நிலவியதுண்டு. அபின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன், ‘உழவர்கள் நெல், தானியப் பயிச்செய்கையை விடுத்து அபின் பயிர்ச்செகையில் ஈடுபட வேண்டும்’ என்று பிரித்தானியர் வகுத்த விதியின் விளைவாக வங்காளத்தில் நிலவிய ‘பற்றாக்குறை, பஞ்சமாக’ மாறியது; ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மாண்டார்கள் என்று ஆதாம் சிமித் எழுதிச் சென்றார். ‘வணிக வரலாற்றில் இத்தகைய அவலம் இடம்பெறல் அரிது. மாண்டுமடிந்த பஞ்சு நெசவாளர்களின் எலும்புகளால் இந்திய சமவெளிகள் வெள்ளைவெளேரெனக் காட்சியளிக்கின்றன’ என்று பிரித்தானிய ஆட்சியாளரே எழுதிச் சென்றார்கள். வங்காளத்துக்கே சொந்தமான அரும்பஞ்சு அருகிப்போயிற்று. அதன் மேம்பட்ட புடவை உற்பத்தி பிரித்தானியாவுக்கு பெயர்க்கப்பட்டது” (Noam Chomsky, Hopes and Prospects, Haymarket Books, Chicago, 2010, p. 14-15).

  and
  புகழ்பெற்ற நிர்வாகியும், வரலாற்று அறிஞருமான கே.எம்.பணிக்கர் (1895-1963), ஆசியக் கண்டம் முழுவதும் காலனியாதிக்கமும், நிறுவன கிறித்துவ மதமும் இணைந்து நிகழ்த்திய அக்கிரமங்களையும், அறமீறல்களையும் உலகத்தின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்.

 15. Avatar
  paandiyan says:

  1896ம் ஆண்டு மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. 1897ல் பிளேக் நோய் பூனாவில் மிகவும் தீவிரமாக பரவியது. சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலன் இல்லாமல், அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயர் துடைத்தார்.அந்த நேரத்தில் விக்டோரியா மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மக்கள் பஞ்சத்திலும், நோயிலும் அவதியுறும் வேளையில், இப்படிப்பட்ட கொண்டாட்டம் தேவையா? என மக்கள் அரசை எதிர்த்தனர். ஆட்சியாளர்கள் மக்கள் மீது அடக்குமுறையை மேற்கொண்டனர். இதைக் கண்டித்து திலகர் பத்திரிகையில் எழுதினார்.1897ம் ஆண்டு இந்தக் கட்டுரைகளை காரணம் காட்டி, 1.25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது ஆங்கில அரசு. சிறைவாசத்தில் அவர் உடல் நிலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. சிறைவாசத்திலிருந்து மீண்டபோது, மக்கள் அவரை ‘லோகமான்யர்’ என்று அழைத்தனர்.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   காந்தி மிதவாதி; திலகர் தீவிரககொள்கைகள் கொண்டவர். இருவரையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. கட்டுரை ஸ்ரீனிவாசனை ஒரு காந்தீயவாதி என்று போற்றுகிறது. இல்லையா?

  2. Avatar
   IIM Ganapathi Raman says:

   இதைப்படியுங்கள் கட்டுரையில் முடிவு இது:

   //கடைசி காந்தி சிந்தனை கொண்ட, செயல் கொண்ட ஒரு மனிதர் இருந்தார். அவரும் இரண்டு நாட்களுக்கு முன் மறைந்துவிட்டார். தாகூரின் ஒரு கவிதை “ஏக்லா சொல்” என்று. உன் பேச்சைக் கேட்க யாரும் இல்லையெனில்,தனித்தே செல், தனித்தே செல் என்று. கடைசியில் தனித்துச் சென்ற ஒரு மனிதர் இருந்தார். இப்பொது அவருக்கு அந்தக் கவலையும் இல்லை.//

 16. Avatar
  பக்கிரிசாமி N says:

  நான் அறிந்தவரை காந்தியும் திலகரும் இரு துருவங்கள். பூவண்ணன் எழுதியதில் தவறு இருப்பதாகப்படவில்லை. திலகரைப்பற்றி அதிகம் தெரிந்தால் குமட்டுகிறது. ஒரு காந்தியவாதி எப்படி திலகர் கூறுவதை ஒப்புக்கொண்டிருக்கமுடியும்?

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   இக்கருத்தையே நான் எழுதினேன் இப்படி: எப்படி ஒரு காந்தீயவாதி (இக்கட்டுரை நாயகர்) ஒரு திலக்வாதியாகவும் இருக்க முடியும் என்று கேட்டதைப்போட மறுக்கிறது திண்ணை.

   இது பாண்டியன் போன்றோருக்கு வைக்கப்படும் கேள்வி. திண்ணை என் ஆக்டிவி ஈமெயைல் ஐ டியக்கேட்டது. கொடுத்தும் ஆகிவிட்டது. ஏன் சுருக்கியெழுதப்படும் பின்னூட்டங்களும் தடுக்கப்படுகின்றன திண்ணை ஆசிரியர் குழவே?

   இப்போது சொல்லுங்கள்: தலித்துகளையும் பிராமணர்களையும் சமமாக ஏற்க மாட்டோம் என்பவரையும் ஏற்போம் என்பவரையும் ஒன்றாக எடுக்க எப்படி மறைந்த பி.என். ஸ்ரீனிவாசனால் ஏற்க முடிந்தது?

 17. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ திலகரின் ஜாதி வெறி அருவருக்கத்தக்கதோடு , இப்படியும் ஒரு ” மனிதரை ” ஒரு சாரார் போற்றுகிறார்களே என்பது வியப்பையும் உண்டுபண்ணுகிறது… டாக்டர் ஜி. ஜான்சன் \

  எந்த ஒரு மனுஷ்யரின் வாழ்க்கையும் அவரது ஏற்கத்தகுந்த ஏற்கவொண்ணா பக்கங்களைக் கொண்டதே.

  புனித ரெவரெண்டு தெரசாள் அவர்கள் சேவை செய்ததைப் ஒப்புக்கொண்டு போற்ற முடிந்த என்னால்….

  அந்த அம்மணி போதைமருந்து கடத்தல் பேர்வழிகளிடமும் உலகத்தின் பயங்கரமான எதேச்சாதிகாரிகளிடமும் தன் மதமாற்றத்தைக் குறியாகக்கொண்ட மிஷநரி சேவைக்குப் பணம் வாங்கியது சேவா க்ருஹங்களில் பிணியாளர்களுக்கு வலிநீக்கி கொடுக்காமல் வெறுமனே ப்ரார்த்தனை செய்தது – இவையெல்லாம் அருவருக்கத்தக்கது. இப்படி அருவருக்கத்தக்க ஒரு பக்கங்கள் உள்ள ஒரு அம்மணியை (அதைப் பற்றி லவலேசமும் பேசாது தொடாது) ஒரு சாரார் ஒரு சில காரணங்களுக்காகப் போற்ற முடியுமானால் …….

  பலமடங்கு நற்பண்புகளைக் கொண்டு சில ஏற்கவொண்ணா நிலைப்பாடுகளையும் கொண்ட தேசத்திற்குச் சேவை செய்த திலகரைப் போற்றலாமே.

  எந்த ஒரு மனுஷ்யராக இருக்கட்டுமே அவரது நல்ல விஷயங்களுக்காக அவரை ஏற்பதும் அவரிடம் ஏற்கவொண்ணா விஷயங்களை மறுப்பதும் நேர்மையான போக்கு.

  திலகராகட்டும் புனித ரெவரெண்டு தெரசளாகட்டும் ஏற்க முடிந்த ஒரு பக்கத்தை மட்டிலும் தொட்டு ஏற்கவொண்ணா பக்கங்களை புறக்கணித்தல் கண்யமான போக்கு அல்ல. ஒரு மனுஷ்யரின் ஏற்கவொண்ணா நிலைப்பாடுகளை மிகைப்படுத்தி அவரில் நற்பண்புகளை அவரது சேவைகளை மறைத்து அவரை அருவருக்கத்தக்க மனிதராகச் சித்தரிப்பது கண்யமான போக்கு இல்லை. அது டிலகருக்கும் பொருந்தும் புனித ரெவரெண்டு தெரசாளுக்கும் பொருந்தும்.

  நேர்மையான காந்தியவாதியான ஸ்ரீநிவாஸன் திலகரின் நற்பண்புகளுக்காக அவரது தேச சேவைக்காக அவரை ஏற்பதில் எந்த தவறும் இல்லை.

  அதற்காக அவரிடம் இருந்த ஏற்கவொண்ணா நிலைப்பாடுகளை ஏற்றாக வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தம் இல்லை.

 18. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ நான் அறிந்தவரை காந்தியும் திலகரும் இரு துருவங்கள். பூவண்ணன் எழுதியதில் தவறு இருப்பதாகப்படவில்லை. திலகரைப்பற்றி அதிகம் தெரிந்தால் குமட்டுகிறது. ஒரு காந்தியவாதி எப்படி திலகர் கூறுவதை ஒப்புக்கொண்டிருக்கமுடியும்?\

  அன்பின் பக்கிரிசாமி,

  ஈ.வெ.ராமாசாமி நாயக்கவாள்ளு அரவாள்ளு (தமிழர்களுடைய) பாஷை காட்டுமிராண்டி பாஷை என்று சொல்லியதை என்னால் ஏற்க முடியாது. இங்கு தமிழின் பெயரால் முதலைக்கண்ணீர் வடிக்கும் எந்த நபராலும் ஏற்க முடியாது. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தலித் சஹோதரர்களைப் பற்றி அவதூறாகப் பேசிய விஷயங்களைக் கேட்டீர்கள் என்றால் மனுஷ்யனை மனுஷ்யனாக மதிக்க வேண்டும் என்று நினைக்கும் எவருக்கும் குமட்டும்.

  ஆனால் அது மட்டும் ஈ.வெ.ரா அன்று. அந்த மனுஷ்யராலும் அவரால் நிகழ்த்தப்பட்ட சமூஹ முன்னேற்றத்துக்கான பங்களிப்புகளும் உண்டே. அதை ஒதுக்கிவிட்டு வெறுப்புக் கண்ணோடு மட்டும் பார்க்கும் ஒருவரால் அவர் சம்பந்தப்பட்ட ந்யாயமான விஷயங்கள் எதுவும் கண்ணில் படவே படாது.

  காந்தியடிகளுடைய பக்தர்கள் அவர் ப்ரம்மசர்யத்துக்காக வேண்டி நிகழ்த்திய பரிசோதனைகளை வ்யாக்யானாதிகள் மூலம் பூசி மொழுகலாம். அது தானே பக்தர்களின் வழி. எனக்கு ஆனால் அது குமட்டும் விஷயம். ஆனால் காந்தியடிகளின் ராம பக்தி எனக்குப் பிடித்துள்ளதே. ஹிந்துஸ்தானம் பிளக்கப்பட்டதில் காந்தியடிகளின் பங்கு காந்தியடிகளின் பக்தர்களால் புறக்கணிக்கப்படுகிறது. என்னால் புறக்கணிக்கப்பட முடியவில்லையே.

  ஒரு காந்திய வாதி திலகர் கூறும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எங்கும் நிர்ப்பந்தம் ஏதும் இல்லை. ஆனால் எல்லா காந்தியவாதிகளாலும் திலகருடைய ஸ்வராஜ்யக் கொள்கைகள் போன்றவற்றைப் புறக்கணிக்கவும் முடியாது. காந்தியடிகளே திலகருடைய தீவ்ரவாதக் கொள்கைகளிலிருந்து வேறுபட்டாலும் அவரைக் கிட்டத்தட்ட தன் குருஸ்தானத்தில் கொண்டிருந்தார் என்பதையும் மறுக்க முடியாது.

  எந்த ஒரு மனிதரையும் அவருடைய ஆளுமையை அவருடைய ஓரிரு நிலைப்பாட்டுகளால் அலகிட்டு முத்ரை குத்த விழைந்தால் நீங்கள் அந்த முத்ரைக்குள் சென்று விடுவீர்கள். ஒரு மனுஷ்யனை முற்றிலும் நல்லவனாக அல்லது முற்றிலும் அயோக்யனாக சித்திரப்படுத்துவீர்கள். ஆனால் வாஸ்தவம் அப்படி இருக்கவே இருக்காது.

 19. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ இப்போது சொல்லுங்கள்: தலித்துகளையும் பிராமணர்களையும் சமமாக ஏற்க மாட்டோம் என்பவரையும் ஏற்போம் என்பவரையும் ஒன்றாக எடுக்க எப்படி மறைந்த பி.என். ஸ்ரீனிவாசனால் ஏற்க முடிந்தது?\

  தலித்துகளையும் ப்ராம்மணர்களையும் சமமாக ஏற்க வேண்டும் என்று போராடிய பூஜ்ய ஸ்ரீ வீர்சாவர்க்கர் அவர்களுடைய நிலைப்பாடுகள் ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களால் போற்றப்பட்டது. ஆனால் பூஜ்ய வீரசாவர்க்கர் அவர்களுடைய ஹிந்துத்வ நிலைப்பாடுகள் அம்பேத்கர் அவர்களுடைய நிலைப்பாடுகளிலிருந்து வேறுபட்டன. வீரசாவர்க்கரை வெறுப்புக்குடுகையில் அடைக்க முனையும் திரிபு வாதிகள் அவர்களுடைய சௌகர்யத்துக்கு ஏற்றபடி அவருடைய இந்த சமூஹ ஐக்யப்பங்களிப்பைப் பற்றி வாயே திறவாது கீறல் விழுந்த ரெகார்டு போல அவரைப்பற்றி எதிர்மறைக்கருத்துக்களைப் பற்றி மட்டிலும் பெரிய பலூனாக ஊதித்திளைப்பார்கள்.

  காந்தியைப் பற்றியும் தெரியாது திலகரைப் பற்றியும் தெரியாது ஜாதித்வேஷ, ஆப்ரஹாமிய மதவெறி, ஹிந்துத்வேஷ வெறுப்புக்கருத்துக்களில் ஊறித்திளைக்கும் நிலைப்பாடுகள் மட்டிலும் மறைந்த பி.என்.ஸ்ரீனிவாசன் திலகரைப்போற்றியதை ஜாதித்வேஷம் என்ற குடுகைக்குள் மட்டிலும் அடைத்து திலகருடைய மற்றைய அனைத்து தேசசேவைபங்களிப்புகளை அறவே புறக்கணித்து மேதாவித்தனமாக கேழ்விகள் கேழ்க்கும்.

  லோகமான்ய என்ற சஞ்சிகையின் 4ஆகஸ்ட் 1920 இதழில் காந்தியடிகள் திலகரைப் போல் ஸ்வராஜ்யத்திற்கு முனைப்புடன் பாடுபட்டவர்கள் அரிதானவர்கள் என எழுதியுள்ளார்.
  1-12-1920 திகதியன்று திலக வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்தைத் திறந்த காந்தியடிகள்….. திலகரைப் பாராட்டிப் பேசிய காந்தியடிகள்…. ஸ்வராஜ்யத்திற்காக திலகரைப்போன்று வேறு யாரும் இந்தளவு த்யாகம் செய்திருக்கமுடியாது. ஆகவே இந்தப் பள்ளிக்கு இப்பெயர் வருவது ந்யாயமே என்று ச்லாகித்துப்பேசியுள்ளார்.

  இப்படி காந்தியடிகளாலேயே போற்றப்பட்ட திலகரை காந்தியவாதியாகிய ஸ்ரீனிவாசன் போற்றினார் என்றால் அவர் காந்தியடிகளுக்கு என்ன பெரிய தீங்கிழைத்துவிட்டார்?

  அவர் திலகருடைய அனைத்து நிலைப்பாடுகளையும் ஏற்க வேண்டும் என்றோ அல்லது ஸ்ரீனிவாசன் ஒரு காந்தியவாதி என்பதால் காந்தியடிகளுடைய நிலைப்பாடுகளைக் கூட எல்லாவற்றையும் ஏற்கவேண்டும் என்பதோ திரிபு வாதம்.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   செபடம்பர் 30 5 04 பி எம் என் பின்னூட்டம் இன்னும் போடப்படவில்லை. போடப்பட்டிருந்தால், மஹாஸ்யர் கிருட்டிணக்குமார் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் வரும்.

   இங்கு எவருமே சாவர்க்கர் பற்றிப்பேசவில்லை. திலகரையும் ஸ்ரீனிவாசனையும் பற்றித்தான் பேசுகிறோம்

   திலகரின் ஜாதிவெறியைப்பற்றி நாம் கவலை கொள்ளத்தேவையில்லை. அவரின் மற்ற பரிமாணங்களை ஏற்றுக்கொள்வோம் என்பது உங்கள் வாதம். என் வாதம் – 25 கோடி தலித்துமக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தீண்டாமைக்கொடுமைக்குள்ளாகினர் என்பது வரலாற்றுண்மை. ஆனால் திலகரின் ஜாதிவெறி அதை ஆமோதிக்கிறது. காந்தியார் அதைச்செய்யவில்லை. வெறுத்தார்.

   ஸ்ரீனிவாசன் காந்தீயவாதி. திலகரின் ஜாதிவெறியைத்தள்ளி விட்டு மற்றதை ஏற்றுக்கொண்டாரென்பது உங்கள் கருத்து. இல்லையா?

   எதைத் தள்ளுகிறோம் எஃதை ஏற்கிறோம் என்பதிலிருந்தே நம் குணம் வெளிப்படும்..

   எடுத்துகாட்டு: இராவணனின் பலபல நற்குணங்களுக்காக நாம் அவனின் அடாத செயலை (சீதையை கடத்திச் சென்று கட்டாய மணம் செய்ய முயன்றது) ஏற்றுக்கொண்டால், நமக்கு அப்படிப்பட்ட அடாத‌ செயல் ஒரு பொருட்டல்ல என்பது தேற்றம். நாம் தரும் ஆதரவு அல்லது நிராகரிப்பால் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்கிறோம். ஸ்ரீனிவாசன் தன் திலகரின் ஆதரவால் தன் காந்தீயத்தை மாசுபடுத்தினார் என்பதே என் கருத்து. இதை நேர்கொண்டு பதில் சொன்னால் படிக்க சுவையாக இருக்கும்.

   திண்ணை ஏன் என் பின்னூட்டத்தைப் போட மறுக்கிறது? ஏதேனும் தனிநபர் தாக்குதலா அல்லது கட்டுரைக்குப்பொருந்தா பின்னூட்டமா?

 20. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ திலகரின் ஜாதிவெறியைப்பற்றி நாம் கவலை கொள்ளத்தேவையில்லை. அவரின் மற்ற பரிமாணங்களை ஏற்றுக்கொள்வோம் என்பது உங்கள் வாதம். \

  மேற்கண்ட வாதம் அபத்த வாதம். திரிபு வாதம். உத்தரங்களை வாசிக்காது செய்யப்படும் வெட்டி வாதம்.

  நன்றாக திலகரின் ஜாதித்வேஷம் பற்றி முரசடியுங்கள். ஆனால் அதற்காக அவருடைய தன்னலமற்ற ஸ்வராஜ்யத்திற்கான சேவையைப் புறந்தள்ளாதீர்கள் என்பது தான் வாதம்.

  க்ருஷ்ணகுமாரோ ஸ்ரீமான் கள் ஸ்ரீனிவாசனோ வெ.சா அவர்களோ காந்தியடிகளோ திலகரைப் போற்றுவது என்பது அவருடைய தன்னலம் கருதா ஸ்வராஜ்யக்கொள்கைக்கு. அதற்காக அவர் பாடுபட்டமைக்கு. தேச சேவை செய்தமைக்கு. அதற்காக திலகர் அவர்களுடைய ஜாதித்வேஷத்தை கவலை கொள்ளத் தேவையில்லை என்று இவர்கள் யாரும் எங்கும் சொல்லவும் இல்லை… அப்படி சொன்னதாகச் சொல்ல முயற்சிப்பது குயுக்தி. வாதத்தை முனைந்து திசை திருப்பும் முயற்சி. எழுதாப்புறத்தை முழக்கி பேச வேண்டியதைப் பேசாது வெட்டிப்பொழுது போக்கும் அருவருக்கும் செயற்பாடு.

  வெட்டி வாதத்துடன் மண்டையை உடைத்துக்கொள்வது வீண்வேலை. பின்னும் ஒரு முயற்சி.

  திலகரின் வாழ்க்கையில் அவருடைய ஜாதித்வேஷ நிலைப்பாடுகள் ஒரு அங்கம். அவை ஏற்கவொண்ணாதவை என்பது என் நிலைப்பாடு. ஆயினும் எந்த ஒரு மனுஷ்யரின் வாழ்க்கையும் நல்ல மற்றும் அல்லாத நிலைப்பாடுகளைக் கொண்டவை.
  அல்லாததை மட்டும் வைத்து ஒருவரை அயோக்யனாக சித்தரிப்பதும் தனக்குப்படும் நல்லதை மட்டும் வைத்து ஒருவரின் அல்லாததை மறைப்பதும் கண்யமற்ற போக்கு. இது திலகர் மற்றும் புனித ரெவரெண்டு தெரசாள் இருவருக்கும் பொருந்தும் என்று சொல்லியுள்ளேன்.

  இதை விளக்கத்தான் காந்தியடிகள், திலகர், ஈ.வெ.ரா, வீர்சாவர்க்கர் — இத்தனைபேரை — இயன்றவரை த்ருஷ்டாந்தகளுடன் கூட — சொல்லியுள்ளேன்.

  வீர்சாவர்க்கர் வ்யாசத்துடன் சம்பந்தப்படாதவர் தான். இங்கு விதண்டாவாதம் செய்ய விழைபவர்கள் வீரசாவர்க்கர் பற்றி பேச்சு வருகையில் அவரது ஜாதி சம்பந்தமான பக்ஷபாதமின்மையை எப்படி ஒதுக்கி விதண்டாவாதம் செய்கிறார்கள் — அதுவும் ததாகத பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் போன்று ஜாதிக்கொடுமைக்கு எதிராகப் போராடிய ஒரு பெருந்தகை உட்பட =– சாவர்க்கரின் ஹிந்து ஐக்யதைக்குப் பாடுபட்டமையை போற்றிய பின்பும்.

  லோகமான்ய பாலகங்காதர திலகர் அவர்களிடம் அக்காலத்தில் புழங்கிய ஜாதித்வேஷ நிலைப்பாடுகள் காணப்பட்டன. இதை அன்று காந்தியடிகள் சாவர்க்கர் போன்ற பலரும் ஏற்கவில்லை. ஜாதித்வேஷம் திலகரிடம் காணப்படினும் அவரிடமிருந்த ஸ்வராஜ்யத்துக்கான தன்னலமற்ற சேவாமனோபாவம் காந்தியடிகளால் விதந்தோதப்பட்டது. காந்தியடிகள் திலகர் அவர்களுடைய தேச சேவையைப் பலமுறை சஞ்சிகைகளிலும் தனது பாஷணங்களிலும் மிகத் தெளிவாக விதந்தோதியுள்ளார் என்பது சரித்ரத்தை பக்ஷபாதமில்லாது வாசிப்பவர் அறிய நேரும் விஷயம்.

  இங்கு காந்தியவாதியான ஒரு அன்பர் திலகரைப் போற்றுதல் என்பது காந்தியடிகளின் அடியொற்றியே. எப்படி காந்தியடிகள் திலகரின் ஸ்வராஜ்யத்திற்கான அற்பணிப்பை ஏற்று ஆனால் அவருடைய ஜாதித்வேஷ நிலைப்பாடுகளை புறந்தள்ள முடியுமோ — அப்படியே காந்தியவாதிகளாலும் அதையே அடியொற்றிச் செல்ல இயலும்.

  ஏதோ ஸ்ரீனிவாசனும் ஸ்ரீ வெ.சா அவர்களும் காந்தியின் பெயரில் (திலகரை நுழைத்து) அடாவடி செய்வது போன்று எழும் விதண்டாவாதங்கள் அருவருக்க வைக்கின்றன. அதுவும் இப்படிப்பட்ட அருவருப்பு தரும் அபத்த வாதங்கள் மெத்தப்படித்த மேதாவிகள் என்று நான் கருதும் சிலரிடம் இருந்து எழும் போது சலிப்பே வருகிறது.

  நாம் எப்போது —- எந்த ஒரு மனிதரைப் பற்றியும் —- முழுமையாக — அறியவாவதுமுற்பட — முயற்சியாவது செய்வோமா என்று அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் போல் கேழ்க்கத் தான் முடியும்.

  திலகரின் எதிர்மறைப் பக்கங்களை ஊதிப்பெரிதாக்கும் மேதாவிகள் ஈ.வெ.ராவின், காந்தியடிகளின், புனித ரெவரெண்டு தெரசாளின் எதிர்மறைப்பக்கங்களைப் பற்றி மூச்சாவது விடுவார்கள்? இது வரை அப்படி மூச்சு விட்டுப் பார்த்ததில்லையே. இவர்களுடைய எதிர்மறைப் பக்கங்களைப் பற்றி பேச்சு எழும்போதெல்லாம் கண்ணாமூச்சியாடுதல் பதுங்கியோடுதல் திசைதிருப்புதல் — இப்படித்தானே வாதங்கள் நிகழ்கின்றன. இது லஜ்ஜையற்ற பக்ஷபாதம்.

  நேர்மைக்கு அழகு சமநோக்கு. அதற்கு முயற்சியாவது செய்வோம்.

 21. Avatar
  ஷாலி says:

  நண்பர் பாண்டியன் அவர்களே!இதோ உங்கள் ராமசாமி பதிலளிக்கிறார்.

  நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.

  ——————11-12-1968 அன்று சென்னை – அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. “விடுதலை” 15-12-1968 “பெரியார் களஞ்சியம்” தொகுதி 18- “ஜாதி-தீண்டாமை” பாகம்- 12 பக்கம் 73

  பெரியார் ஈ வெ ரா அவர்களுக்கு சிலை இருப்பது அவர் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டதற்காக. தன் வாழ் நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராக அதாவது சூத்திரர்களுக்கு சம உரிமை கொடுக்க மறுத்த திலகருக்கு திடல்…. பாண்டியன் ஸார்! தமிழை கொஞ்சம் பார்த்து அடிங்க!
  பரட்சி என்று எழுதி புரட்சி பண்ணாதிங்க! பறைச்சி அதாவது பறை அடித்து மக்களுக்கு செய்தி சொல்பவர்கள்.அந்தக்கால தமிழ் ஊடகம் அவுங்கதான்.

 22. Avatar
  ஷாலி says:

  க்ருஷ்ணகுமார் says:
  September 30, 2013 at 3:36 pm

   //ஈ.வெ.ராமாசாமி நாயக்கவாள்ளு அரவாள்ளு (தமிழர்களுடைய) பாஷை காட்டுமிராண்டி பாஷை என்று சொல்லியதை என்னால் ஏற்க முடியாது. இங்கு தமிழின் பெயரால் முதலைக்கண்ணீர் வடிக்கும் எந்த நபராலும் ஏற்க முடியாது. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தலித் சஹோதரர்களைப் பற்றி அவதூறாகப் பேசிய விஷயங்களைக் கேட்டீர்கள் என்றால் மனுஷ்யனை மனுஷ்யனாக மதிக்க வேண்டும் என்று நினைக்கும் எவருக்கும் குமட்டும். //
  இதோ ஈ.வெ.ராமசாமி பேசுகிறார்,

  “நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.”

  ——————11-12-1968 அன்று சென்னை – அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. “விடுதலை” 15-12-1968 “பெரியார் களஞ்சியம்” தொகுதி 18- “ஜாதி-தீண்டாமை” பாகம்- 12 பக்கம் 73

  “இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர்கூட சிந்தித்துப் பேசுவதில்லை. ‘வாய் இருக்கிறது; எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

  இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், ‘தமிழ் மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனவாயா?”
  தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று ஈவேரா சொன்னதை க்ருஷ்ணக்குமாரால் ஏற்றுக்கொள்ள முடியாதாம். தூய தமிழில் வ்யாஷம் எழுத்தும் அன்பருக்கு என்னே தமிழ் பற்று! புல்லரிக்கிறது. நீங்களும் காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டிங்க. ரசிப்போம்….சிரிப்போம்!

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   மஹாஸ்யர் கிருஸ்ணகுமாருக்கு ‘கேள்வி’ என்று எழுதுவதே தமிழ் என்று சொல்லியும் ‘கேழ்வி’ என்றே பிடிவாதமாக எழுதிவருமிவர், தூய தமிழைப் பற்றி கவலை கொள்கிறார்!

   வயதில் பெரியவர்கள் இவர்கள் !!

 23. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ தூய தமிழில் வ்யாஷம் எழுத்தும் அன்பருக்கு என்னே தமிழ் பற்று! \மஹாஸ்யர் கிருஸ்ணகுமாருக்கு ‘கேள்வி’ என்று எழுதுவதே தமிழ் என்று சொல்லியும் ‘கேழ்வி’ என்றே பிடிவாதமாக எழுதிவருமிவர், தூய தமிழைப் பற்றி கவலை கொள்கிறார்!\

  1. தூய தமிழ் என் கவலைக்கான விஷயமே இல்லை. மொழிக்கலப்பு இயல்பான விஷயம் என்பது என் நிலைப்பாடு.
  2. வேறு யாரும் கலப்பு மொழிநடையில் எழுதுவதும் எனக்கு விவாதத்துக்கான விஷயம் இல்லை.
  3.என்னால் தூய தமிழ் எழுத முடியாதென்றாலும், தூய தமிழ் மீது எனக்கு மதிப்பிருப்பதை அன்பர் பாலா அவர்களின் எழுத்துக்களை சுட்டி பகிர்ந்துள்ளேன். தமிழ் பற்றி முதலைக்கண்ணீர் வடிப்பவர்களின் தமிழ் கலப்புடையதா கலப்பில்லாததா என்பது வெளிப்படையான விஷயமே.
  4. விஷயம் ஈ.வெ.ரா அவர்கள் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. இது பற்றி நீங்கள் மௌனம் சாதித்தால் நீங்களும் அவருடன் ஜால்ரா போடுகிறீர்கள் என்றே அமையும்.
  5. என் உத்தரங்கள் என் வ்யாசம் இவை எப்படி அமைகின்றன என்பதை முன்னமே பகிர்ந்துள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *