மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
கடுந்தவசிகள் கடிய நோன்பினைக்
கடைப் பிடிப்பார் !
அதுபோல்
காதற் துயரில் முறிந்து போய்
நிரந்தரப் பிரிவில்
இறங்க முனைந்து விட்டீர்.
புறக்கணித்து விடாதீர் ,
காதலை இழக்காதீர் .
போலி உணர்வுக்கு
காதலர் இரையாக வேண்டாம் !
உமது நெஞ்சங்கள் அமைதி
அடையட்டும்
பிரிவுத் துயரில் விடுபட்டு !
உள்ளெழும் புரட்சியி லிருந்து
வெளி வருவீர் இருவரும்
வெற்றியுடன் !
தாக வெறிகள்,
தகாத நம்பிக்கைகள்
தகர்ந்து போகட்டும் !
வேட்கை மூடுபனி மூட்டம்
கரைந்து போகட்டும் !
கால் கட்டின்றி
கனவு மயக்க மின்றிப்
பாதையில் நடந்து வருவீர் !
வெக்கை நீங்கிய பிறகு
வீற்றிருக்கும்
இனிய நினைவுகள்
மௌனமாய் !
++++++++++++++++++++++++++++++
பாட்டு : 336 1936 செப்டம்பரில் தாகூர் 75 வயதினராய் இருந்த போது “பரிசோத்” என்னும் பாட்டு நாடகத்துக்கு முதலில் எழுதப் பட்டது. பின்னர் அதே பாடல் காதலர் பிரிவுத் துயரால் நோகும் “ஷியாமா” என்னும் நாட்டிய நாடகத்துக்காக மாற்றப் பட்டது.
++++++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] September 11 , 2013
http://jayabarathan.wordpress.
- எதிரி காஷ்மீர் சிறுகதை
- உணவு நச்சூட்டம்
- நட்பு
- புகழ் பெற்ற ஏழைகள் – 24
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி
- ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……19
- தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்
- ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.
- தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. !
- கம்பராமாயணக் கருத்தரங்கம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…
- முக்கோணக் கிளிகள் [5]
- ஞாநீ
- ஆமென்
- துகில்
- அப்பா என்கிற ஆம்பிளை
- சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. !
- தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு