மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
எனது ஆத்மாவுக்குள் இருப்பது
இன்னமுதம் !
உனக்கது வேண்டுமா சொல் ?
அந்தோ !
அறிகுறி எதுவும் அதற்குத்
தெரியா திருக்கலாம் உன்னிடம் !
வானுலத்தின்
வாடா மல்லிகை நறுமணத்தை
நீ நுகர்வ தில்லையா ?
ஒரு வேளை அது
உன் கையிக் கெட்டாத் தூரத்தில்
உள்ளதா ?
காதலின் மழைப் பொழிவுகள்
நேர்வதுண்டு இங்கு !
அந்தோ
உனக்கது தெரிவது மில்லை !
எப்போ தாவது
மழை முகிலுக்கு நடனமிடும் உன்
மனத்தின் மயில்
அப்படிச் செய்திருக்குமா ?
முறுக்கப் பட்டுள்ளன
சீராயென்
வீணையின் நாண்கள்.
வானலகின் இன்னிசை தன்னை
வாசித்துப் பயில்கிறேன்
தாளமொடு,
ஒன்றிய குரலொடு.
ஆத்மாவும் உள்ளமும்
பிணைந்து நீ
கானம் பாடுவாயா ?
அந்தோ !
ஒருவனாய் இல்லை நீ
குழுமி யுள்ள கூட்டத்தில்.
திரும்பத் திரும்ப உனக்கு
அங்கிருந்து
அழைப்பு வருகிறது.
அதற்குப் பதில் கொடுப்பாயா
குழுவின்
பௌர்ணமிக் கொண்டாட்டம்
துவங்கி விட்டது !
அலை மோதாது இனிமேல்
உன்னிதயம் !
++++++++++++++++++++++++++++++
பாட்டு : 110 1937 வேனிற் காலத்தில் தாகூர் 76 வயதினராய் இருந்த போது எழுதப் பட்டது.
++++++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] September 18 , 2013
http://jayabarathan.wordpress.
- ஜெயந்தன் விருது அழைப்பிதழ்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 20
- ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்
- மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்
- குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..
- சேவை
- க.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை –
- முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34
- தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !
- ஆன்மீகக் கனவுகள்
- அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்
- சிவகாமியின் சபதம் – நாட்டிய நாடகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்
- பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28
- ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி
- நீங்களும்- நானும்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 1
- விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?
- அகநாழிகை – புத்தக உலகம்
- அருளிச்செயல்களில் மச்சாவதாரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்
- கற்றல்
- கவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்
- புகழ் பெற்ற ஏழைகள் 25