புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 26

This entry is part 22 of 27 in the series 29 செப்டம்பர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை

E. Mail: Malar.sethu@gmail.com

26. இருமு​றை ​நோபல் பரிசு ​பெற்ற ஏ​ழை…….

     “​பொறந்தாலும் ​பொம்ப​ளையா ​பொறக்கக் கூடாது…ஐயா ​பொறந்து விட்டால்…..” இந்தாங்க முதல்ல பாட்டுப் பாடுறத நிறுத்துங்க…என்னங்க பாட்டுப் பாடுறீங்க…​பெண்​கள் எவ்வளவு உயர்ந்தவங்க ​​தெரியுமா…? அ​னைத்​தையும் இயக்கக் கூடிய மகா சக்தியாக விளங்குபவர்கள் ​பெண்கள்…இந்த உலகம் ​செழிச்சு வளர்ந்திருக்குதுன்னா அதுக்குக் காரணம் யாரு ​தெரியுமா…? ​பெண்கள்தான்.. அதனாலதான், கவிமணிகூட “மங்​கையராய்ப் பிறப்பதற்​கே நல்ல மாதவம் ​செய்திட ​வேண்டுமம்மா…”அப்படீன்னு பாடினாரு….”​பெண்​மை​யே வாழ்க ​வென்று கூத்திடு​வோமடா..” ​“பெண்​மை இல்லாமல் வாழ்வில் ​செம்​மையில்​லை” “​பெண்கள் நாட்டின் கண்கள்…..” அப்படீன்னு நம்ம ​பெரியவங்க ​சொல்லிருக்கிறாங்க…நீங்க என்னடான்னா இந்த மாதிரிப் பாட்டுப்பாடுறீங்க…இது சரியாங்க…

அட என்னங்க இதுக்குப் ​போயி இப்படிக் ​கோபப் பட்டுட்டீங்க….நீங்க ​போனவாரம் ஒருத்தரப் பத்திக் ​கேட்டீங்கள்ள..அவங்களப் பத்தித்தான் ​சொல்ல வந்​தேன்..இதுக்குப் ​போயி ​கோவுச்சுக்கிட்டீங்க​ளே….சரிங்க நான் ​சொல்லல….நான் வா​ர்​ரேன்…இந்தாங்க ​போகாதீங்க… ஒங்கள நான் தப்பாப் புரிஞ்சுகிட்​டேன்.. சரி…சரி…நான் ​கோபப்படல…நீங்க யாரச் ​சொல்ல வந்தீங்க….​சொல்லுங்க….ம்….ம்…அதுவா ​மேடம் ​மேரிகியூரி…என்ன சரியா..எப்படி ஐயா​வோட ​பொதுஅறிவு…..ஆஹா..ஆஹா…​ரொம்ப ​​ரொம்பச் சரியான பதில்..

உண்​மைதாங்க அவங்க ​பெண் அப்படீங்கற காரணத்தா​லே​யே அவருக்கு ஒரு பல்க​லைக்கழகம் படிப்பதற்கு இடம் தரல..இதவச்சுத்தான் இந்தப்பாட்​டைப் பாடுனீங்களா…வறு​மையில வாடினாலும் முயன்று படிச்சு அவங்க முன்​னேறுனாங்க…​​பொ​லோனியம், ரே​டியம் என்ற தனிமங்க​ளைக் கண்டுபிடிச்சு உலகப் புகழ் ​பெற்றாங்க…அவங்களப் பத்திச் ​சொல்​றேன்…​கேளுங்க…

ஒளி மங்கை, வைர மங்கை, என்​​றெல்லாம் ​போற்றப்பட்ட மேரிகியூரி போலந்து நாட்டின் வார்சா நகரில் 1867 – ஆம் ஆண்டில் நவம்பர் 7 – ஆம் தேதி ஆசிரியர்களாக வேலை பார்த்த பெற்றோர்களுக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். மேரிகியூரின் இயற்பெயர் மரியா ஸ்லொடஸ்கா என்பதாகும். மரியாவின் தந்தை ஓர் அறிவியல் ஆசிரியர். அதனாலயே மரியாவுக்கு அறிவியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதில் என்ன ​கொடு​மை என்றால் மரியா பிறந்தவுடன் அவரது ​பெற்​றோர்கள் இருவரும் தங்களது ​வே​லை​யை இழந்தனர். இருந்தாலும் அவர்களிருவரும் மனந்தளராது தங்களது குழந்​தை​க​ளை வறு​மைநி​லையிலும் ​செம்​மையாக வளர்க்க முற்பட்டனர். மேரி எல்லா குழந்தைகளை விடவும் அறிவிற் சிறந்து விளங்கினாள்.

கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய மரியாவிற்கு தீராத ஆ​சை ஒன்று மனதில் இருந்தது. என்ன ​தெரியுமா..? சிறந்த அறிவியல் அறிவியல் விஞ்ஞானியாக வரவேண்டும் என்பதுதான் அது.  அந்தக்காலத்துல இந்தத் து​றையில் எல்லாம் பெண்கள் நு​ழைய​வே முடியாது. ஏன் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் மரியா தனது இலட்சியக் கனவாக அத​னைக் கருதினார்.  தன் கனவை நனவாக்க முடியும் என்று நம்பினார் மரியா.

‘’கனவுக்கும் இலட்சியத்துக்கும்

ஒரு சிறுவித்தியாசம் தான்……!

முயற்சியில்லாத உறக்கம்தான் கனவு

உறக்கமில்லாத முயற்சிதான் இலட்சியம்…..!’’

மரியா தனது இலட்சியத்​தை அ​டைவதற்குப் ​பெரிதும் முயன்றார்.

அன்பும் உதவியும்

பள்ளிக் கல்விக்குப் பிறகு மரியாவால் போலந்தில் உயர்கல்வி பெற முடியவில்லை. அந்த நாட்களில் போலந்து ரஷ்யாவின் பிடியில் அடிமை நாடாக இருந்தது. பெண்கள் உயர்கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் மரியாவும் அவரது சகோதரி பிரானியாவும் பாரிஸ் சென்று படிக்க விரும்பினார்கள். ஆனால் அவர்களின் விருப்பம் நிறைவேற அவர்களுடைய குடும்ப சூழல் இடம் தரவில்லை. என்ன ​செய்வது என்று இருவரும் ​யோசித்தார்கள். மரியா தனது ச​கோதரியிடம் ஒரு ​யோச​னை​யை வழங்கினாள். தனது ச​கோதரி பிரானியா பாரிசுக்குச் ​சென்று மருத்துவப் படிப்​பை ​மேற்​கொள்வ​தென்றும் அதற்கான ​செல​வை மரியா ​வே​லை ​செய்து அனுப்புவ​தென்ப​தே அவ்​யோச​னை. மரியாவின் ​யோச​னை​யை அவரது ச​கோதரி ஏற்றுக் ​கொண்டாள். பாத்துக்குங்க இந்த மனசு யாருக்கு வரும்…இதுதான் உண்​மையான அன்பு…பாசம்……….. ஆமாங்க…உலகி​லே​யே மிகப் ​பெரிய அதிசயம் என்ன ​தெரியுமா…? தூய்​மையான அன்புதாங்க..

“பிரிக்க முடியாத ​சொந்தம்….

மறக்க முடியாத பந்தம்…

கண்ணீ​ரைத் து​டைக்கும் உறவு….

கலங்கா​தே என்று ​சொல்லும் நட்பு….

தவிர்க்க முடியாத உயிர்……..!

எல்லா​மே உண்​மையான அன்பு ஒன்றுதான்……….!”

அதனாலதான வள்ளுவர்கூட, ‘அன்பு​டையார் என்பும் உரியர் பிறர்க்கு’ அப்படீன்னு ​சொன்னாரு… அந்தத் தூய்​மையான அன்புள்ளத்​தோடு மரியா தன்​​னோட ச​கோதரி​யைப் படிக்கப் பாரீசுக்கு அனுப்புனாங்க.

மரியாவின் சகோதரி பிரானியா பாரிசுக்குச் சென்று மருத்துவப் படிப்பை மேற்கொண்டாள். மரியா குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் சேர்ந்து மேரி ஆறு ஆண்டுகள் வேலை செய்தாள். வருமானமும் அதிகமில்லை. இருப்பினும் அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை தன் சகோதரியின் படிப்புச் ​செலவுக்காக அனுப்பி வைத்தாள்.

ஆறு ஆண்டுகள் கழிந்த பின்னர் மரியாவின் ச​கோதரி பிரானியா மருத்துவரானார். அதன் பின்னர் மரியாவும் பாரிஸ் சென்று தனது 24 ஆவது வயதில் ஸாபான் என்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தன் மேற்படிப்பைத் தொடர்ந்தார். பாரிஸ் சென்ற பின்னர் மரியா தனது இயற்பெயரை மேரி என்று மாற்றிக் கொண்டார்.

​காதலும் திருமணமும்

உண்ணும் உணவிற்கு ​மேரி பலவாறு துன்பப்பட்டார். இருப்பினும் அவர் படிப்பின் மீது கண்ணுங் கருத்துமாக இருந்தார். பல துன்பங்களுக்கிடையில் படிப்பைத் தொடர்ந்த மேரி சில சமயம் பசியில் மயக்கமாக விழுந்திருக்கிறார். ஆயினும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது முயன்று படித்து 1893 – ஆம் ஆண்டில் இயற்பியலில் பல்க​லைக்கழகத்தி​லே​யே முதல் மாணவியாகப் பட்டம் ​பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டு கணிதத்தில் மிகப் சிறப்பாகத் ​தேர்ச்சி ​பெற்றார்.

“அளவுகடந்த துன்பத்​தை

அனுபவிக்கிறாய் என்று

வருந்தம் அ​டையா​தே………….!

உனக்காக எல்​லையில்லாத

இன்பம் காத்திருக்கும்

கவ​லைப்படா​தே…….!”

என்பதற்​கேற்ப ​மேரி மிகுந்த துன்பத்​தை அ​டைந்தாலும் அவற்​றை​யெல்லாம் ​ அவர் பொறுத்துக் ​கொண்டதால் இறுதியில் மிகப்​பெரிய இன்பத்​தைப் ​பெற்றார்.

எல்​லோரு​டைய வாழ்க்​கையிலும் காதல் ஏற்படத்தான் ​செய்கிறது. ​மேரியின் வாழ்விலும் இக்காதல் புகுந்தது. மேரி பல்க​லைக்கழககத்தில் படிக்கின்ற​போது பியூரிக்கியூரி (Pierre Curie) என்ற இளைஞரைச் சந்தித்தார். அச்சந்திப்பு அவர்களி​டை​யே காத​லை முகிழ்வித்தது. இருவரும் காத்திருந்தனர். கட​மை​யைச் ​செவ்வ​னே ​செய்தனர். தங்கள் கல்வியில் சிறப்பிடம் ​பெற்றனர். மேரி தான் விரும்பிய பிரெஞ்சு விஞ்ஞானியான பியூரிக்கியூரி​யை ​1894-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ​மேரி, ​மேரிகியூரி ஆனார். மன​மொத்த தம்பதியர் வாழ்க்​கையில் மட்டுமல்லாது ஆய்விலும் மன​மொத்துச் ​செயல்பட்டனர்.

தொடர்ந்த ஆய்வும் கண்டுபிடிப்புகளும்

மேரி கியூரி, பியூரி கியூரி இருவருமே இயற்பியலிலும், வேதியியலிலும் ஆராய்ச்சிகள் செய்ய விரும்பினர். மேரி கியூரி 1897-ஆம் ஆண்டில் முனைவர் பட்டத்துக்காக யுரேனியம் என்ற தனிமத்தைப் பற்றி ஆராய்ச்சி ​செய்யத் தொடங்கினார். அவரது கணவர்  பியரிகியூரியும் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அவர்களிருவரும் பல்வேறு தனிமங்களை ஆராய்ந்தனர். அவ்வாறு அவர்கள் ஆராய்ந்த​போது தோரியம் போன்ற சில தனிமங்களுக்கு கதிரியக்க சக்தி இருப்பதைக் கண்டறிந்தனர். அவர்களது தொடர்ச்சியான ஆய்வின் பலனாக இரண்டு புதிய தனிமங்கள் உலகுக்குக் கிடைத்தன.

மேரி கியூரி தான் கண்டுபிடித்த முதலாவது தனிமத்திற்கு, தான் பிறந்த போலந்தின் நினைவாக “பொலேனியம்” என்று பெயரிட்டார். இரண்டாவது தனிமம்தான் இன்று புற்றுநோய்ச் சிகிச்சைக்குப் பயன்படும் “ரேடியம்” என்ற தனிமம் ஆகும். பாத்துக்கிட்டீங்களா… “பெற்ற தாயும் பிறந்த ​பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தன​வே” அப்படீங்கற பாரதியின் கூற்றிற்​கேற்ப ​மேரிகியூரிய தாய்நாட்டின் மீது எவ்வளவு பக்தி ​வைத்திருக்கிறார்னு..இப்படி ஒவ்​வொருத்தரும் அவங்கஅவங்க நாட்டின் மீது மிகுந்த பற்று​டையவங்களா இருக்கணுங்க..இதுதான் உண்​மையான நாட்டுப்பற்று.

வாட்டிய வறு​மை ​தொடர்ந்த ஆராய்ச்சி

ஆராய்ச்சியில் அளவிட முடியாத ஆர்வம் காட்டிய கியூரி தம்பதிக​ளை வறு​மை வாட்டியது. அதனால் அவர்கள்  வறு​மை​யை விரட்டவும் வயிற்றுப் பிழைப்பிற்காகவும் கல்லூரிகளில் அறிவியல் பாடங்க​ளைக் கற்பிக்க வேண்டியிருந்தது. ஓர் ஒழுங்கான ஆய்வுக்கூடத்தை உருவாக்கிக் கொள்ளக்கூட அவர்களுக்கு வசதியில்லை என்பது வருத்தத்திற்குரிய ​செய்தியாகும். வாழ்க்​கையில் வறு​மை இருந்தாலும் அவர்களுக்கு எண்ணத்தில் வறு​மையில்​லை. அந்த வறு​மையிலும்,

”ஒன்றன் கூறா​டை உடுப்பவ​ரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்​கை​யே வாழ்க்​கை”

என்ற கலித்​தொ​கை வரிகளுக்​கேற்ப கியூரித் தம்பதியினர் அன்புடன் பி​ணைந்த வாழ்க்​கை​யை வாழ்ந்தனர். ​அவர்களு​டைய வாழ்வில் பொருளுக்கு வறு​மை இருந்த​தே தவிர, அன்பு என்ற ​செல்வம் மிகுந்திருந்தது.

கியூரித் தம்பதியினருக்கு ஒழுகும் கூரையும், போதிய மின்வசதியும் இல்லாத ஓர்  ஒற்​றையறைதான் ஆய்வுக்கூடமாக இருந்தது. அவ்வாய்வுக் கூடத்​தைக் கண்ட விஞ்ஞானி ஒருவர் அத​னை “மாட்டுத்தொழுவம் போல் இருந்தது” என்று குறிப்பிடுகின்றார்.

​மேலும் அந்த ஆய்வுக்கூடத்தைப் பற்றி அவர்களுடன் பணியாற்றிய சக விஞ்ஞானி “குளிர்காலத்தில் 6 டிகிரி வரை தட்ப நிலை குறையும் அத்த​கைய ​மோசமானதாக அவ்வாய்வுக் கூடம் இருந்தது” என்று  கூறி இருப்பது, கியூரித் தம்பதியினரின் வறு​மைநி​லை​யை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அத்த​கைய வறு​மைச் சூழ்நிலையிலும் அவ்வறிவியல் தம்பதியர் அயராது ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களு​டைய ஆராய்ச்சிக்குப் பண உதவியோ, பொருள் உதவியோ செய்யவதற்கு யாரும் முன்வரவில்லை. எந்த உதவியுமின்றி வறு​மையில் துவண்டு விடாது தங்களது ஆராய்ச்சி​யை அத்தம்பதியினர் ​தொடர்ந்தனர். ஆம்,

“வியர்​வைத் துளிகளும்

கண்ணீர்த் துளிகளும்

உப்பாக இருக்கலாம்

ஆனால் அ​வைதான்

வாழ்​வை இனி​மையாக மாற்றும்……….!”

​மேரிகியூரித் தம்பதியின​ரைத் ​தொடர்ந்த துன்பங்களும் துயரங்களும் அவர்க​ளை ​மேலும் ​மேலும் உ​ழைக்கச் ​செய்யத் தூண்டியதுடன் அவர்களது வாழ்​வையும் இனி​மையாக்கின. ​​

வறு​மையில் ​செம்​மை

சிலர் வறு​மை வந்தால் வாழ்க்​கைப் பா​தையிலிருந்து தடம் புரளுகிறார்கள். ஆனால் சிலர்தான் எது ​நேர்ந்தாலும் வழிமாறாது வாழ்க்​கையில் பயணிக்கிறார்கள். கியூரித் தம்பதியின​ரை வறு​மை வாட்டிய​போதும் அவர்கள் தங்களது ​கொள்​கையிலிருந்தும் குறிக்​கோளிலிருந்தும் ஒரு​போதும் தடம் மாறவில்​லை. வறு​மையிலும் ​செம்​மையான வாழ்வு வாழ்ந்தனர். ​ரேடியத்​தைக் கண்டுபிடித்தவுடன் கியூரித் தம்பதியினரின் நண்பர்கள் அவர்களிடம் ரேடியத்திற்கு காப்புரிமைக்காக விண்ணப்பியுங்கள் உங்களுக்கு அதிகமாகப் பணம் கிடைக்கும் என்று கூறி வற்புறுத்தினார்கள். நண்பர்கள் எவ்வள​வோ வற்புறுத்தியும் ​மேரிகியூரித் தம்பதியினர் அதனைச் செய்ய மறுத்து விட்டனர்.

உலகில் உள்ள எல்லா அறிவியல் ​மே​தைகளும் ​ரேடியம் குறித்தும் கதிரியக்கம் பற்றியும் ​​மென்​மேலும் ஆராய்ந்து அதன்மூலம் கி​டைக்கக் கூடிய புதிய பயன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் அதனால் மனுகுலம் நன்மை பெற வேண்டும் என்ற ஒரே நல்​லெண்ணத்தால்தான் தங்களது அரிய கண்டுபிடிப்பிற்குக் காப்புரி​மை ​பெற கியூரித் தம்பதியர் விண்ணப்பிக்கவில்​லை. பாத்துக்குங்க..வீட்டி​லே வறு​மை..வயிற்றி​லே பசி..இருந்தாலும் எதற்கும் ஆ​சைப்படாத அன்புள்ளங்கள்..இந்தமாதிரி அற்புதமான குணங்​கொண்டவர்க​ளை நாம பார்க்க முடியுமா…?

கி​டைத்த நோபல் பரிசும் இழந்த வாழ்க்​கைப் பரிசும்

பியரி கியூரி ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிவதற்காக அத​னைத் தன் உடலின் மேல் அதனைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் அது உடம்பில் எரிச்ச​லை உண்டாக்கியது. பின்னர் உடலில் புண் ஏற்பட்டது.அதன் பின்னர் உடலில் ஏற்படும் கட்டிக​ளை அது குணப்படுத்தியது. அதன் பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க  மருத்துவர்கள் ரேடியத்​தைப்  பயன்படுத்தினர். இவ்வாறு ​ரேடியத்​தைப் பயன்படுத்தி சிகிச்​சை அளிக்கும் மு​றை​யை “கியூரி தெரபி” என்று அழைத்தனர். இன்​றைக்கு மருந்து கண்டுபிடிப்பவர்கள் அத​னை மற்றவங்க உடலில் ​செலுத்தித்தான் ​சோத​னைபண்ணிப் பாக்குறாங்க… ஆனால் ​பியூரிக்கியூரி தன்னு​டைய உட​லை​யே ​சோத​னைக்கு உட்படுத்திக் ​கொண்டார். அவ​ரோட உயர்ந்த எண்ணத்​தைப் பாத்தீங்களா..? மனித​நேயம் மிக்கவர்கள் மனித குலத்​தை உயர்வ​டையச் ​செய்ய​வேண்டும் என்று நி​னைப்பவர்கள் இப்படித்தான் இருப்பாங்க என்பதற்கு பியூரிக்கியூரி எடுத்துக்காட்டா விளங்கினாரு..

1903 – ஆம் ஆண்டு ரேடியத்தையும், இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்ததற்காக கியூரி தம்பதிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. 1906 –  ஆம் ஆண்டு கதிரியக்கத்தின் தாக்கத்தாலும், கடும் உழைப்பாலும் உடல் நலிவுற்றிருந்த பியரி கியூரியை எதிர்பாராத விதமாக குதிரை வண்டி​யொன்று மோதித் தள்ளியது. அதனால் பியூரிகியூரி அகால மரணம​டைந்தார். ​மேரிகியூரிக்குக் கி​டைத்தது ​நோபல் பரிசு ஆனால் அவர் இழந்த​தோ வாழ்க்​கை என்ற காதல் பரி​சை. கடவுள் எ​தையாவது ஒன்​றைக் ​கொடுத்துவிட்டு மற்​றொன்​றை எடுத்துக் ​கொள்கிறார்னு ​சொல்வாங்க….இது உண்​மை​யோ ​​பொய்​யோ…ஆனால் ​மேரிகியூரி வாழ்க்​கையில அது நிதர்சனமான உண்​மையாயிருச்சு.

அன்றில் பற​வைகளாய் வாழ்ந்த ​மேரிகியூரியின் வாழ்க்​கை தனிமரமானது. தனது ஆராய்ச்சியை தனியாக தொடரும் நிலையும், தன்ன​டைய இரண்டு குழந்​தைகளைத் தனியாக வளர்த்தெடுக்கும் பொறுப்பும் மேரி கியூரிக்கு ஏற்பட்டது. காதல் கணவர் இறந்ததும் அவர் வகித்து வந்த பாரிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை வகித்த முதல் பெண்மணி ​மேரிகியூரி​யே ஆவார்.

1911 – ஆம் ஆண்டில் ரேடியத்தின் அணு எடையை அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக நோபல் குழு மேரி கியூரிக்கு இரண்டாவது நோபல் பரிசை வழங்கிச் சிறப்பித்தது. ​மேரிகியூரிக்கு இப்பரிசு வேதியியல் துறையில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1914 – ஆம் ஆண்டு பாரிஸில் அவர் ரேடியக்கழகத்தை நிறுவினார். அதே ஆண்டு முதலாம் உலகப்போர் மூண்டது. X-கதிர்கள் மூலம் உடலின் எந்தப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது என்று கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று நம்பினார் கியூரி. அதே நேரத்தில் காயம் அடைந்தவர்களை நகர்த்தக்கூடாது என்பதற்காக எக்ஸ்-ரே வாகனத்தை உருவாக்கி சுமார் 150 ​செவிலியர்களுக்கு பயிற்சியும் அளித்தார். ரேடியத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை ​மேலும் கண்டறிய வேண்டும் என்று கருதிய மேரி கியூரி அம்​மையார் தனது மகள் ஐரினையும்(Irene) ​ரேடியம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு தூண்டினார். பின்னாளில் தனது தாயின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்த ஐரின் செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார் என்பது ​நோக்கத்தக்கது.

மனித ​நேயரின் மரணம்

மேரி கியூரி அம்​மையாரின் கண்டுபிடிப்புகளால்தான் புற்று நோய்க்கு சிகிச்சை ​செய்யும் மு​றை ​தோன்றியது. ஆனால் எந்த கண்டுபிடிப்பு பல புற்று நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டுத்தர உதவியதோ அதே கண்டுபிடிப்பு மேரி கியூரி அம்​மையாரின் வாழ்க்கைக்கே உலை வைத்துவிட்டது. ஆம்…! ​மேரிகியூரி அம்மையார் பல ஆண்டுகள் ரேடியத்தோடு ஆராய்ச்சி செய்ததால் அவருக்கு கடும் கதிரியக்க தாக்கம் ஏற்பட்டது. மனிதகுல மேன்மைக்காக பாடுபட்ட அந்த அறிவியல் ​மே​தையின் உடலை “லுக்கிமீயா” என்ற புற்றுநோய் அரித்தது. இதனால் ​மேரிகியூரி அம்​மையார் தனது விரல்களையும், கண் பார்வையையும் கதிரியக்கத் தாக்கத்திற்குப் பழி கொடுக்கும் நி​லை ஏற்பட்டது. இத்த​கைய  சூழ்நிலையில் மேரி கியூரி அம்மையா​ரை இப்புற்று​நோயானது பலி​கொண்டது. 1934 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 – ஆம் நாள் 67 – ஆவது வயதில் ​மேரிகியூரி அம்​மையார் என்ற மா​பெரும் மனித​நேய​ரை மரணம் தழுவியது.

கியூரி தம்பதிகளின் அஸ்தியானது பாரிஸின் புகழ் பெற்ற ‘பாந்தியன்’ (Pantheon) அரங்கில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் உயர்ந்து வரலாறாய்த் திகழ்பவர்களுக்குப்  பிரெஞ்சு நாடு வழங்கும் உயர்ந்த மரியாதை அதுவாகும். ரேடியம் என்ற அரிய தனிமத்தை ​மேரிகியூரி​யைத் தவிர வேறொரு விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தால் அதனை வைத்து அவர் பெரும் பணம் சம்பாதித்திருப்பார். ஆனால் வறுமையில் உழன்ற போதும் தனது கண்டுபிடிப்பை பணமாக்க விரும்பாத ஓர் உயர்ந்த, மனித ​நேயமிக்க  அறிவியல் ​மே​தைதான் மேரி கியூரி அம்மையாராவார். பல புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க தன் உயிரையே ஈந்த அந்தத் தியாக சீலரின் வாழ்க்​கை என்​​றென்றும் நமக்கு வாழ வழிகாட்டும்.

எல்லாவற்றிற்கும் உரிமை கொண்டாட விரும்பும் தன்னலம் நி​றைந்த இந்த உலகில் உலகமக்கள் அ​னைவரும் பயன்​பெற வேண்டும் என்று சிந்தித்த கியூரி தம்பதியரின் உயர்ந்த வாழ்க்​கை அ​னைவருக்கும் கலங்க​ரை விளக்கமாகத் திகழ்கிறது.

“நல்ல பணம் இருந்தால்

உல​கை​யே நீ ஆளலாம்….

ஆனால்……….

நல்ல மனமும் குணமும்

இருந்தால் மட்டு​மே நல்ல

உள்ளங்களில் நீ வாழலாம்……….!”

ஆம்! உலக மக்களின் உள்ளங்களில் இத்தம்பதியர் என்றும் வாழ்ந்து ​கொண்டுதான் உள்ளனர். உலகம் உள்ளளவும் இவர்கள் புகழ் உலகில்       நி​லைத்திருக்கும். அதில் பல இதயங்கள் வாழ்ந்திருக்கும்…..!

உலகி​லே​யே உயர்ந்த பரிசு என்று ​போற்றப்படும் பரிசு ​நோபல் பரிசு… அ​தை ஒருத்தரு தனக்கு ​வேண்டாம்னு மறுத்தாரு….அவர் ஒரு சிறந்த இலக்கிய ​மே​தை……யாரு ​​தெரியுமா?…….. இளம் வயதி​லே​யே வறு​மையில வாடுனவரு…. பத்து வயதுக்குப் பிறகுதான் பள்ளியில் ​சேர்ந்து அவரால ப​டிக்க முடிஞ்சது….படிக்கறதுன்னா அவருக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம்…நி​றைய ​நெ​றையப் படிச்சாரு……..எழுதி எழுதி பத்திரிக்​கைகளுக்கு அனுப்புனாரு….ஆனா அ​தை முதலில் எந்தப் பத்திரிக்​கையும் ​வெளியிடல…முயன்றார் …அப்பறம் என்ன ஒரு ​சொல்லுக்கு இவ்வளவு ரூபாய்னாலும் பின்னாளில் வாங்குவதற்குத் தயாரா பத்திரக்​கைக்காரங்க இருந்தாங்க…அவரு யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா………..​யோசிக்க ஆராம்பிச்சிட்டீங்களா…..​யோசிங்க … ​யோசிங்க…… அடுத்த வாரம் பார்ப்​போம்…….

(​தொடரும்……..27)

Series Navigationமுக்கோணக் கிளிகள் [7] [நெடுங்கதை]கிம்பர்லிகளைக் காணவில்லை
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *