தாகூரின் கீதப் பாமாலை – 84 புயல் அடித்த இரவில் .. !

This entry is part 11 of 33 in the series 6 அக்டோபர் 2013

 

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

என்னைக் கண்டு கொள்ள வில்லை  நீ

என்று எடுத்துக் கொள்ளவா ?

விளக்கொளி இல்லாத ஓர் மூலையில்

ஒளிந்தேன் கவன மின்றி .

திரும்பிப் போனாய்   நீ

எவரையும் காணாது.

கதவருகில் வந்து நின்று

தொட்டதும் அது

திறக்கு மென்று நீ மறந்தாய் !

சிறிய தடுப்பரண் ஒன்றினில்

சிக்கிக் கொண்டது என்

அதிர்ஷ்டப் படகு  !

 

புயலடித்த இரவிலே

மணியை எண்ணிக் கொண்டு

துடிப்புடன்  இருந்தேன்.

உன் தேர்  வருகைச் சத்தம்

அந்தோ

என் செவிதனில் விழ வில்லை.

நடுங்கியது அந்தத் தேர்

இடி இடிப்பின்

கர்ச்சனை உறுமலில் !

கைகளை  மடித்தென் மார்பினில்

கட்டி கொண்டேன்  !

மின்னல் வெடிப்புகள்

வீசி எறியப் பட்டு

விண்ணைக் கீறிப் பிளந்தன,

எனக்காக  ஒளிச்சுடரில்

சாபத்தை

எழுதிய வண்ணம்  !

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 335   1937  ஆண்டு ஆகஸ்டு –செப்டம்பர்  மாதங்கள் இடையில் தாகூர்  76 வயதினராய்  இருந்த போது எழுதப் பட்டு பிரபசி [Prabasi] இதழில் வெளியிடப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  October  1 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationதிருவரங்கக் கலம்பகத்தில் மறம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் -27
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *