ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு
 
குமிழ்ந்து தரை விழுந்த
நீர்க் குமிழி பாதையின் குறுக்காக
சர சர வெனக் கடந்த போது,
வேகச் சீற்றத்துடன் தலை குத்தி
வழிந்த போது,
சாரல் மறைத்த பார்வையில்
சாலை தெரியாக் குருடியாய்
பயணித்த நொடி
எங்கிருந்தோ வந்து
இதயத்தைக் கீறிச் சென்றது உன்
நினைவுகளின் உயிர் !
குடை தாங்கி நீளும்
உன் கரங்கள் தரும்
பாதுகாப்பின் உயிரலைகள்
காற்றில் கரைந்துக் கொண்டிருக்கிறது
நினைவுப் படுகையில்.
நனைந்து விழும் கூந்தல்
நீர்ச் சொட்டுகள் ஏந்த
விரைந்து வரும்
உன் மண் வாசத் துண்டுக்காக
ஏங்கித் தவிக்கிறது
என் கூந்தல் மயிர்கள் !
உன் கைலியைத் தூளியாக்கி
விளையாடிய நாட்களில்
நினைவலைகளைப் பத்திரப்படுத்த
வகை தேடுகிறது
நிரந்தரமற்றுக் கடந்து போகும்
எண்ணத் துளிகள்.
நான் இல்லம் சேரும் வரை
வாசற் படியில் படுத்துக்கிடக்கும்
உன் விழிகள் இல்லா வெறுமை
சுடுகிறது இடி மின்னல்களின்
மொழிதல் வழி !
இருளில் தனித்து நின்ற போதுதான்
தவித்து உணர்கிறேன்
அப்பா நீ இல்லாத வெறுமையை
புழுதி கரைந்த உன் வேர்வை
வாசத்திற்காக நாசி சுழித்த
பொழுதுகள் இன்று திட்டித் தீர்க்கிறது
எனக்கு உள்ளாகவே.
நீ போதித்த கதைகள்
எழுத்தின் சிகரம் நோக்கிப்
பயணப்படும் என் வாழ்க்கை
இப்போது புரிகிறேன் உன்னை,
எழுத்தின் விதையை,
எனக்குள் ஊன்றி சென்றவன் நீ
தர்க்கிப்பிலும் கண்டிப்பிலும்
என் ஆழ்மன ஆண்மனச் சிநேகிதன் நீ !
என்னைக் கையில் ஏந்தி
உச்சி முகர்ந்த முதல் ஆடவன் நீ
ஆண்கள் இல்லாத உலகம் வெறுமை தான்
கயவர்கள் என்று புறந்தள்ள இயலா
இலகு மனம் கொண்ட நட்புறவுகள்.
தரை ஓடும் நீரோடு
உன் பெயர் எழுதிப் பார்க்கிறேன்
முன்பொரு மழைப் பொழுதில்
மழைவிழா குடையாக
உன் உடல் குறுகிக் காத்த காட்சி
மழை ஈரத்தில் கண்கள் கரைந்து
காணாமல் போகிறது.
ஒவ்வொரு முகத்துளிகளிலும்
தாயுமானவனாக ஒளிந்து நிற்கும்
என் தகப்பனே ! உன்னைத் தேடுகிறேன்
இப்பிரபஞ்ச பெருவெளியில்
ஒவ்வொரு தகப்பனுக் குள்ளும்
ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒரு தாயுமானவனை.
++++++++
- நீங்காத நினைவுகள் – 19
 - மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்
 - மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு
 - சிலை
 - அழகிப்போட்டி
 - நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’
 - திண்ணையின் இலக்கியத்தடம்-4
 - புகழ் பெற்ற ஏழைகள் - 28
 - ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்
 - அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”
 - அத்தம்மா
 - டௌரி தராத கௌரி கல்யாணம் …22
 - பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்
 - ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.
 - தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !
 - கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்
 - அவசரகாலம்
 - நீண்டதொரு பயணம்
 - கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?
 - தேடுகிறேன் உன்னை…!
 - வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !
 - ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
 - தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்
 - வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1
 - புண்ணிய விதைகள் – சிறுகதை
 - காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
 - சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை
 - பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா
 - குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31
 - தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’
 - காதலற்ற மனங்கள்