“காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்

This entry is part 22 of 31 in the series 20 அக்டோபர் 2013

தேமொழி

 

commondசர்வதேச மனித உரிமை அமைப்பினர் அறிக்கையின்படி,  40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும் தமிழுலகத்திற்குப் புதிதல்ல.  தமிழக முதல்வர் பிரதமருக்கு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்குமாறு வலியுறுத்திக் கடிதம் எழுதுகிறார் [1].  இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைத் தவிர்க்கக்கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு பொதுநல நோக்கு அமைப்புகளும் வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.  தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு அவர்களும் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி  அக்டோபர் 1, 2013 முதல் 15 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். மக்கள் உணர்வை மதித்து நல்லதொரு முடிவெடுப்பேன் என்ற இந்தியப் பிரதமரின் உறுதிமொழியின் பேரில் அவரது உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது [2].

 

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று காமன்வெல்த் நாடுகளில் ஒன்றான கனடாவின்  பிரதமர்  ஸ்டீஃபன் ஹார்பர் புறக்கணித்துவிட்டார் [3].  இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் [4].  உலக அளவில் இலங்கையில் காமன்வெல்த்  மாநாடு நடத்த எதிர்ப்புகள் கிளம்பினாலும் உறுதியான முடிவு எதுவும் தெரியவில்லை.

 

இந்த நிலையில் பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள், Commonwealth National) என்ற அமைப்பு தேவையா? அதனால் யாருக்கு என்ன பயன் என்பதை ஆராய்வது பலனளிக்கும்.  காமன்வெல்த் நாடுகள் என்பவை சென்ற நூற்றாண்டு வரை இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த 54 நாடுகள்.  தற்பொழுது இவையாவும் சுதந்திர நாடுகள்.  முன்னாள் இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த  இந்த நாடுகள் யாவும் இணைந்து, இங்கிலாந்து நாட்டுடனும்;  அதன் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த தங்கள் நாடுகளுக்கு  இடையேயான நல்லுறவுக்காகவும்  தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு காமன்வெல்த் நாடுகள் என்ற அமைப்பு.  ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளின் பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றை மேம்படுத்த தோற்றுவிக்கப்பட்டதே  இந்த அமைப்பு என்று இந்த அமைப்பு தோன்றியதற்குக்  காரணம், நோக்கம் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.  அத்துடன் அமைப்பின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைவதே அமைப்பின்  கொள்கைகளும், செயல்பாடுகளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் உறுப்பினர் பதவி என்பது கட்டாயம் அல்ல.  இங்கிலாந்தின் வரலாற்றுடன் தொடர்புடைய எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக விண்ணப்பித்து இந்த காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் [5] [6].

 

flagledஉறுப்பினர் பதவி கட்டாயம் இல்லை என்பது மிக மிக முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.   இதையும் தெரிந்துகொண்டே உறுப்பினராக இருக்க விழைவது இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் அடிமை மனப்பான்மையையே காட்டுகிறது.  ஒருகாலத்தில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த அமெரிக்கா இந்த அமைப்பில் பங்கெடுக்க விண்ணப்பிக்கவும் இல்லை, உறுப்பினராகவும் இல்லை. இது அமெரிக்காவின் சுயமதிப்பின் நிலையை, சுதந்திர மனப்பான்மையை பறைசாற்றுகிறது.  வரலாற்று உண்மையாக இருந்தாலும் தங்கள் நாடு அடுத்த நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த நாடு என்ற அவமானகரமான காலநிலையை அமெரிக்கா மறக்கவிரும்பும் செயலாகவே இதைக் கருதலாம்.  அமெரிக்கா எடுத்த இந்த நிலைப்பாட்டின் காரணமாக அமெரிக்காவின் சுயகெளரவத்தை பாராட்டவேத் தோன்றுகிறது.

 

அமெரிக்காவைப் போன்றே எகிப்து, ஜோர்டான், ஈராக், பாலஸ்தீனம், சூடான், சோமாலியா, குவைத், பஹ்ரெய்ன், ஓமன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் யாவும்  தங்களுக்கு இங்கிலாந்துடன் வரலாற்றுத் தொடர்பு இருந்தும் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை [5].

 

இம்மாத துவக்கத்தில் (அக்டோபர் 3, 2013)  காம்பியா காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் இருந்து வெளியேறி உள்ளது [7]. அதன் தலைவர் யஹ்யா ஜம்மே  (Yahya Jammeh) இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடு என்பதனைக் குறிக்கும் அமைப்புடன் எந்த உறவும் தங்கள் நாட்டிற்குத் தேவையில்லை என அறிவித்துள்ளார் [8]. இரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையையும், 4,000 சதுர மைல் பரப்பளவுள்ள மிகச் சிறிய நாடு  இந்தக் காம்பியா.

 

 

 

இதனால் இந்த அமைப்பில் பெருமையுடன் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு, “காமன்சென்ஸ் இல்லாத காமன்வெல்த் நாடுகளே, தெளிவு பெறுங்கள், நாமார்க்கும் குடியல்லோம்,” என்று உணர்த்த வேண்டும் என்பது தெரிகிறது. இந்நாடுகளுக்கு அடிமை நாடாக இருந்தோம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை  என்பது  விளங்கவில்லை.  இதுவரை காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு உருப்படியாக என்ன சாதித்தது என்பதும் கேள்விக்குரியதே.

 

உலக அமைதிக்காக தோற்றுவிக்கப்பட்ட உலக ஐக்கிய நாடுகளின் சபையே இலங்கையின் தமிழர்களுக்கு சரியான உதவி செய்யாமல் இருக்கும் நிலையில்,  காமன்வெல்த் நாடுகள் அமைப்பு பெரிதாக என்ன உதவி செய்துவிடப்போகிறது? காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் ‘ஹாரேர் பொதுநலப் பிரகடனம்’ (Harare Commonwealth Declaration) அறிவுறுத்தும் கொள்கைக்குப் [9] புறம்பாக, மக்களாட்சி வழிமுறைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நைஜீரியாவும், பாகிஸ்தானும், சிம்பாபுவே நாடுகளும் முறையே 1995, 1999, 2002 ஆண்டுகள் தற்காலிகமாக உறுப்பினர் பதவில் இருந்து நீக்கப்பட்டன.  அதிலும் பாகிஸ்தான் இருமுறை நீக்கப்பட்டுள்ளது.  தற்பொழுது ஃபிஜி நாடு நீக்கப்பட்ட நிலையில் உள்ளது [5].  இலங்கையின் மனித உரிமை மீறல் செயல்களுக்காக அந்நாட்டின் மீது இது போன்ற நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தி கனடாவும் [10], இங்கிலாந்தும் [11] இந்த ஆண்டின் துவக்கத்தில் கண்டனக் குரல்கள் எழுப்பின.  ஆனால் இந்தியாவில் இருந்து எந்த எதிர்ப்பும் இருப்பதாக இதுவரைத் தெரியவில்லை.

 

Adding insult to injury என்று ஆங்கிலத்தில் கூறுவது போல பட்ட காயத்தினை பெரிதுபடுத்தி நோகச் செய்யும் செயலாக இருக்கிறது மனிதஉரிமைகளை மீறிய, காமன்வெல்த் மாநாட்டின் கொள்கைக்கு எதிராகச் செயல்படும்  இலங்கையிலேயே காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் செயல். நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்பினர் பதவியை நீக்கப்பட வேண்டிய நாட்டில் நடக்கப்போகும் இம்மாடு இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இல்லவே இல்லை என்பதைச்  சிறு குழந்தை கூட சொல்லிவிடும்.  காமன்வெல்த் நாடுகளின் இந்த மாநாடு [12] இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுவது வழக்கம்.  வரும் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 17 தேதி வரை நடக்கப்போகும் மாநாட்டின் விளைவுகள்  இலங்கை அதிபதிக்கு ஒருவகையில் பாராட்டாகவே அமையும்.  சென்றமுறை 2011 ஆம் ஆண்டு நடந்த இம்மாநாடு ஆஸ்திரேலியாவில் கூட்டப்பட்டதால்  அந்த நாட்டின் பிரதமர் ‘ஜூலியா கில்லர்ட்’ ( Julia Gillard) ‘காமன்வெல்த் சேர் பெர்சன் இன் ஆஃபிஸ்’ (Commonwealth Chairperson-in-Office) என்ற தலைவர்  பதவியைப் பெற்றார்.  ஆஸ்திரேலியப் பிரதமரின் இப்பதவிக்காலம் வரும் மாநாட்டுடன் முடிவடைந்து அடுத்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இப்பதவியைப் பெறுவார்; தொடர்ந்து அடுத்த மாநாடு நடக்கும் 2015 ஆம் ஆண்டு வரை இப்பதவியையும் வகிப்பார் [5].  இந்த பதவியளிப்பு நடவடிக்கை இலங்கையின் மனிதநேய மீறல்களை ஆதரிப்பதாகவே அமைகிறது. நடக்கப்போகும்  இலங்கை மாநாட்டினால் அநியாயமாக உயிர்நீத்த அல்லது உயிர் நீக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கும் நீதி என்ன என்பது விளங்கவில்லை.

 

 

காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பது என்பது ஒரு தனிப்பட்ட நாட்டின் விருப்பத்தின் பேரில் அமைந்திருக்கும் பொழுது (அதாவது உறுப்பினராக இருக்க எந்த ஒரு கட்டாயமும் இல்லாத பொழுது); காமன்வெல்த் நாடுகள்  அமைப்பு ஏற்பட்ட நோக்கத்திற்கும் செயல்பாடுகளுக்கும்  முரணாக இலங்கையில் நிலைமை மாறும்பொழுது; முதன் முதலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்து வெளிவந்திருக்க வேண்டிய இந்திய அரசு ஏன் இன்னமும் உறுப்பினராக ஒட்டிக் கொண்டிருக்கிறது?  பங்களாதேஷை 1972 ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு  ஒரு தனி நாடாக அங்கீகரித்த பொழுது, தனது கண்டனத்தைக் காட்ட பாகிஸ்தான் கூட உறுப்பினர் பதவியை ஒருமுறை  நீக்கிக் கொண்டு தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது [5].  காமன்வெல்த் நாடுகள்  அமைப்பில் அதிக மக்கட்தொகை உள்ள நாடான இந்தியா இது போன்று அமைப்பை விட்டு வெளியேறும் முடிவை எடுத்திருந்தால் அது இலங்கை அரசின் மனிதநேயத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு நல்லதொரு கண்டனமாக அமைந்திருக்கும்.

 

குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டிக்காத பொழுது அவர்கள் குற்றத்தை ஊக்குவிப்பவர்களாக ஆகிறார்கள், அத்துடன் அவர்களும் குற்றத்திற்கு உடந்தையாகவும்  ஆகிறார்கள் என்பது பொது மொழி.  இந்திய அரசுக்குத்  தான் இன்னமும் இங்கிலாந்து நாட்டின் அடிமைநாடு என்ற எண்ணம் மாறவில்லை என்பதையே காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இந்தியாவின் இச்செயல் தெளிவு படுத்துகிறது.  இந்தியா ஒரு  சுதந்திரநாடாக இருக்கும் பொழுது, காமன்வெல்த் நாடுகள் அமைப்பு சரிவரத் தன் கடமையை ஆற்றாத பொழுது அந்த அமைப்பில் இருந்து வெளியேற இந்தியாவிற்கு என்ன தயக்கம்? ஏன் துணிச்சல் இல்லை?

 

எதற்கெடுத்தாலும் அமெரிக்கா என்று பெருமை பேசி அதன் வழி நடக்க ஆசைகொள்ளும் இந்தியர்கள் இந்த நிலைமையில் அமெரிக்காவின் நிலைபாட்டை முன்னுதாரணமாகக் கொள்வது நல்லது. காமன்வெல்த் நாடுகளின் அமைப்பின் உறுப்பினர் பதவியை மறுக்கும் இந்தியாவின் நடவடிக்கை மனித உரிமைகளை ஆதரிக்க முன்வருவம் செயலாக அமையும், பாராட்டவும் படும்.  இந்தியா ஒரு நல்ல வழிகாட்டியாக அமையுமா?

 

 

 

ஆதாரங்கள்:

1. காமன்வெல்த் மாநாடு: பிரதமருக்கு ஜெ., கடிதம், அக்டோபர் 17, 2013, http://www.dinamalar.com/news_detail.asp?id=828940

 

2. தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்,  அக்டோபர் 15, 2013, http://www.bbc.co.uk/tamil/india/2013/10/131015_thiyaguwid.shtml

 

3. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பில்லை: கனடா பிரதமர் முடிவு, அக்டோபர் 7, 2013, http://tinyurl.com/kk7orao

 

4. இலங்கையில், காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது : இங்கிலாந்து எம்.பிக்கள் வலியுறுத்தல்,  அக்டோபர் 18, 2013, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=65720

 

5. Commonwealth of Nations – https://en.wikipedia.org/wiki/Commonwealth_of_Nations

 

6. Commonwealth of Nations membership criteria  – https://en.wikipedia.org/wiki/Commonwealth_of_Nations_membership_criteria

 

7. Statement by Commonwealth Secretary-General Kamalesh Sharma on The Gambia – http://thecommonwealth.org/media/news/statement-commonwealth-secretary-general-kamalesh-sharma-gambia

 

8. Q & A: Gambia and the Commonwealth,  David Blair1, 03 Oct 2013, Telegraph, http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/gambia/10352888/Q-and-A-Gambia-and-the-Commonwealth.html

 

9. Harare Declaration – https://en.wikipedia.org/wiki/Harare_Declaration

 

10. Mike Blanchfield (14 January 2013). “Harper rebukes Sri Lanka over jurist’s dismissal as talk of summit boycott heats up”. The Globe and Mail.  – http://www.theglobeandmail.com/news/politics/harper-rebukes-sri-lanka-over-jurists-dismissal-as-talk-of-summit-boycott-heats-up/article7341673/

 

11. David Miliband (11 March 2013). “Britain must stand up for human rights in Sri Lanka”. M.guardian.co.uk. – http://www.theguardian.com/commentisfree/2013/mar/11/britain-human-rights-sri-lanka?view=mobile

 

12. Commonwealth Heads of Government Meeting 2013 – http://thecommonwealth.org/

 

 

Picture Courtesy:

Wikipedia: https://upload.wikimedia.org/wikipedia/commons/5/51/Commonwealth_of_Nations.svg

The Commonwealth – http://thecommonwealth.org/sites/default/files/styles/large/public/images/event/chogm-flags.jpg?itok=gXMAF4HF

 

Series Navigationசீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்
author

தேமொழி

Similar Posts

47 Comments

 1. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  கனல் மூட்டும் விழிப்பூட்டும் கருத்து மிக்க வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அழுத்தமான கட்டுரை.

  எங்கள் கனடா பிரதமர்தான் துணிந்து காமன்வெல்த் மாநாட்டில் பங்கொள்ள மறுத்துள்ளார்.

  பாராட்டுகள் தேமொழி.

  சி. ஜெயபாரதன், கனடா.

 2. Avatar
  Dr.G.Johnson says:

  காமன்வெல்த் என்பது என்ன அமைப்பு, அது ஆங்கில அரசுக்கு அடிமையாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பு என்பதை விளக்கி , அதனால் எந்த பயனும் இல்லை என்பதையும் வற்புறுத்தி, அதில் இந்தியா கலந்துகொள்வது தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்பதை சிறப்பாக எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. இப்போதுதான் தமிழனுக்கென்று ஒரு தனி நாடு இல்லையே என்று ஏங்க வேண்டியுள்ளது. ஆயிரம் ஆனாலும் வடக்கு வடக்குததான், தெற்கு தெற்குதான் ! தமிழ் நாட்டவரின் உணர்வை வட நாட்டவர் மதித்து நடக்க அவர்களுக்கு என்ன வேண்டி வந்துள்ளது? பாராட்டுகள் தேமொழி. உங்கள் நாட்டு பிரதமரை வணங்குகிறேன் நண்பர் சி. ஜெயபாரதன் அவர்களே! … டாக்டர் ஜி. ஜான்சன்.

 3. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  காமன்வெல்த் என்ற பரங்கிய அடிமைகளின் அரட்டை க்ளப்பிலிருந்து காம்பியா என்ற தேசம் வெளியேறி விட்டது. ஹிந்துஸ்தானத்திற்கு சுதந்திரம் கிடைத்தவுடனேயே இந்த மாதிரி அடிமை க்ளப்பிலிருந்து பண்டித நேரு வெளியேறியிருக்க வேண்டும். பரங்கி தேசத்தில் மேற்படிப்பு படித்த பண்டித நேரு ஹிந்துஸ்தானத்தையே பரங்கிய கண்ணாடி வழியே பார்த்தவருக்கு ஆளும் சுகம் கிடைத்தாலும் அடிமை சுகத்திலும் அவருக்கு இருந்த ருசிக்கு குறைவில்லையே.

  \ இந்தியா கலந்துகொள்வது தமிழர்களுக்கு பெருத்த அவமானம் \

  இப்படிப்பட்ட அடிமைகள் க்ளப்பில் ஹிந்துஸ்தானம் இருப்பது ஒட்டு மொத்த ஹிந்துஸ்தானத்துக்கும் அவமானம்..

  \ இப்போதுதான் தமிழனுக்கென்று ஒரு தனி நாடு இல்லையே என்று ஏங்க வேண்டியுள்ளது. ஆயிரம் ஆனாலும் வடக்கு வடக்குததான், தெற்கு தெற்குதான் ! தமிழ் நாட்டவரின் உணர்வை வட நாட்டவர் மதித்து நடக்க அவர்களுக்கு என்ன வேண்டி வந்துள்ளது? \

  இதற்கு ஆங்க்ல பாஷையில் sedition என்று சொல்வார்கள். காஷ்மீரத்தில் ஒரு வருஷம் இல்லை இரண்டு வருஷமில்லை முழுக்க ஐந்தரை வருஷம் உத்யோகத்தில் இருந்து…. அங்கு வேலை செய்யும் ராணுவத்தினரையும் சிவிலியன் களையும் பார்த்த பின்……இப்படி ஒரு உத்தரம் படிக்க நேர்வது ஹிந்துஸ்தானத்தின் பிரிவினை வாதத்தின் வேர் எந்த அளவுக்கு பாய்ந்துள்ளது எனத் தெரிகிறது.

 4. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அருவருக்க வைக்கும் sedition வாதம் சமூஹத்தில் படித்த பெரியோரிடம் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

  வடக்கில் உள்ளவர்களெல்லாம் தமிழகத்திற்கு மட்டிலும் சதி செய்கிறார்கள். வங்காளம், கர்நாடகம், கேரளம் இங்கெல்லாம் ஏன் சதி செய்யவில்லை. தெலுகு மொழி பேசுபவர்களுக்கு ஒரு மாகாணம் போதவில்லையே. தமிழகத்துக்கு சுதந்திரமான ஒற்றைத் தனித் தமிழ்நாடு எப்படிப் போதும்.

  பாங்க்ளாதேசத்தை பாகிஸ்தானத்தில் இருந்து துண்டித்த ஹிந்துஸ்தானம் ஸ்ரீலங்காவில் இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

  பாங்க்ளாதேஷ் வந்த பிறகு நதிப்பங்கீடாகட்டும் அல்லது enclave பரிமாற்றம் ஆகட்டும் வங்காளிகள் ஹிந்துஸ்தான சர்க்கார் மண்டையில் அடிக்கிறார்களே.

  அடைந்தால் த்ராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று வசனம் பேசி பின்னர் மயிரைக் கட்டி மலையை இழுக்கிறேன் வந்தால் மலை போனால் மயிர் என்று வ்யாக்யானம் சொன்ன த்ராவிடர்களைக் கொண்டதே தமிழகம்.

  தனியாக தமிழ்நாடு சமைப்பதெல்லாம் இருக்கட்டும். கையில் இருந்த கச்சத்தீவை தங்கள் சொந்த ஊழல் விசாரணை….குடும்ப சொத்து குவிப்பு இதற்காக பயந்து …..கூசாது தாரை வார்க்கத் தயாராக இருந்த தமிழ் அரசியல் வ்யாதிகள் எல்லாம் ரொம்ப நல்லவங்க. ஈழத்தில் ஸ்ரீலங்கா ராணுவம் தமிழர்களைக் கொன்று குவிக்கையில் காலை நாஷ்டாவுக்கும் மதியம் லஞ்சுக்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்து நாடகமாடிய தமிழர்கள் செய்ததெல்லாம் சரி…….கேந்த்ர சர்க்காரின் ஆட்சிக்கட்டிலில் சுகம் கண்டு தமிழர்களை ஸ்ரீலங்கா வதம் செய்து போரெல்லாம் முடிந்த பின் வெளியே ஒரு வழியாக வந்து விட்டனர் கூட்டாளி கட்சிகள்……ஏன் அதுக்கப்புறம் மானம் ரோஷம் வந்திருக்கலாமே……வரவில்லையே……. ஒரு எம்.பி சீட்டுக்காக மணிமேக்கிங்க் கலையை பூஷணமாகக் கொண்ட இத்தாலி ராஜமாதாவை மணிமேகலை என்று புகழ்ந்து…. டெசோ அரட்டை க்ளப்பில் பேசிப் பேசி பேப்பரை ரொப்பியே தமிழீழம் காண விழையும் அரசியல் வ்யாதிகள் செய்வதெல்லாம் சரி……. வடக்கில் இருப்பவர்கள் செய்வது மட்டிலும் தவறு…….

  பிரிவினை வாதம் பேசுவது யாசின் மாலிக்காக இருந்தாலும் அது தவறு தான் வைத்யர் ஜான்சனாக இருந்தாலும் தவறு தான்.

  முகமூடிகள் பிரிவினை வாதம் பேசுவது வியப்பளிக்காது……ஒரு பொறுப்பான வ்யக்தி பிரிவினை வாதம் பேசுதல் அருவருக்க வைக்கிறது.

 5. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  காஷ்மீரத்தில் இருந்து நம் நாட்டுக்குடிமக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக விரட்டப்பட்டதைப்பற்றி தமிழகத்திலும் பல மக்கள் கவலைப்பட்டுள்ளனர். குஜராத்தில் கோத்ராவில் ரயில் எரிந்து நூற்றுக்கணக்கில் ஹிந்துக்கள் எரித்துக் கொலைசெய்யப்பட்ட போதும் அதற்குப்பிறகு நடந்த கலஹத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இறந்தவர்கள் ஹிந்துக்கள் மற்றும் முஸல்மாணியர் என்று நேர்மையாக கவலைப்பட்டவர்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். (இறந்தது முஸல்மாணியர் மற்றும் என்று முதலைக்கண்ணீர் வடிப்பவர்களுக்கு கலஹத்தில் படுகொலை செய்யப்பட்ட ஹிந்துக்கள் — ஒருவேளை மனிதர்களாகத் தெரிந்திருக்காது)

  அது போலவே குஜராத் மீனவர்கள் பாக்கிஸ்தானால் கைது செய்யப்படும் போதும் தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் போதும் முழு ஹிந்துஸ்தானமும் கவலைப்படுகிறது. பின் ஏன் இரண்டு ப்ரச்னைகளும் விதவிதமாகக் கையாளப்படுகிறது.

  குஜராத்திற்கு கஷ்டம் என்றால் — குஜராத் ஹிந்துஸ்தானத்திலிருந்து பிரியும் என்று எந்த அரசியல் வ்யாதியும் முழக்க முடியாது……அந்த காமெடி ஷோ – அடைந்தால் த்ராவிட நாடு என்ற காமெடி ஷோ – தமிழகத்திற்கு மட்டுமே உரித்தானது.

  தமிழக அரசியல் வ்யாதிகள் —- சொத்து கணக்கு பார்ப்பது தவிர்த்து — ஒற்றுமையாக தமிழக ப்ரச்சினைகளுக்கு லோக்சபையில் உருப்படியாக ஒரு குரலில் பேச முனைவதைப்பற்றி தமிழகத்தில் கனவாவது காணமுடியும்?

  அப்படிக் கவலைப்படாது……ஹிந்துஸ்தானம் சுக்குநூறாக உடைக்கப்பட வேண்டும் என நினைப்பவர்…… காஷ்மீரிலிருந்து சொந்த நாட்டில் அகதியாக விரட்டப்பட்ட சஹோதரர்களுக்குப் பதிலாக…… காஷ்மீரம் ஹிந்துஸ்தானத்திலிருந்து பிளக்கப்பட வேண்டும் என்று முழக்குபவர்களுடன் இசைந்து …… வேலை செய்பவர்கள்……. ஹிந்துஸ்தானத்திலிருந்து தமிழகம் பிரியவேண்டும் என்பதற்கும் வேலை செய்வார்கள் தான்.

  ஹிந்துஸ்தானம் தேயாது…..பிளவாது…..அகண்ட ஹிந்துஸ்தானம் மீண்டும் மலரும்.

 6. Avatar
  paandiyan says:

  //தமிழனுக்கென்று ஒரு தனி நாடு இல்லையே என்று ஏங்க வேண்டியுள்ளது.//

  நீங்கள் இதை Malaysia il கேட்டு பார்கலாம் , போராடலாம் ..

  1. Avatar
   paandiyan says:

   காடாரம் கொண்டான் என்றால் அது நம்ப சொத்துதான ??

 7. Avatar
  ஷாலி says:

  //அல்லது ஃபர்லாங்க் – மைல் நீள — படிப்பவரை சலிக்க வைக்கும் – கருத்தோட்டங்கள் என்றும் சொல்லலாம்.//
  என்று பிறருடைய பின்னூட்டங்களை மைல் நீளம், படிப்பவர்களை சலிக்க வைக்கிறது என்று கூறும் க்ருஷ்ண குமார் உபதேசியார். தனக்கு அவ்வுபதேசத்தை கைக்கொள்ளமாட்டாரோ? டாக்டர்.ஜான்சன் அவர்களின் எட்டு வரி பின்னூட்டத்திற்கு மறுப்பாக எழுபது வரிகளில் மூன்று பாகம் பிரித்து விரித்து எழுதுவது படிப்பவர்களை சலிப்படையச் செய்யாதா? ஆபிரகாமிய முகமூடிகளை அவ்வளவு லேசா விட்டுருவாரா?
  அதுதான் அண்ணன் பின்னி பெடலெடுக்குராரு.என்னமோ போங்கள்.அவருக்கு தேவை அகண்..ண்..ண்..ட ஹிந்துஸ்தான். பஞ்சாப் சிங்குகாரனுக்கு காலிஸ்தான்,பரிவார்களுக்கு பள்ளிவாசல்களை இடித்து ஜென்மஸ்தான்,ஆபிரகாமிய கிறிஸ்தவனுக்கு கல்லறைஸ்தான்,அவரது முசல்மானிய சகோதரர்களுக்கு கபரஸ்தான்.இதுதான் அவுக எதிர்பார்க்கும் அகண்ட ஹிந்துஸ்தானின் தேசிய ஒருமைப்பாடு.குமாரண்ணே!
  கொஞ்சம் பொறுங்க! வருங்கால ஹிந்துஸ்தானின் பிரதமராக உத்தமர் மோடியை அறிவிச்சாச்சு.இனி எல்லாம் உங்க நல்ல மனசு போல எல்லாம் நடக்கும்.முகமூடி மருத்துவரை கண்டுக்காதிங்கே…..ஆபிரகாமியவாதிகளே இப்படித்தான்.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   “இந்தியா” என்ற தேசத்துக்கு வரைபடம் மூலம் மேதை அரிஸ்டாட்டில் வழி சொல்லி கிரேக்க மன்னன், மகா அலெக்ஸாண்டர் இந்தியாவின் வடமேற்குப் பகுதிமேல் படையெடுத்து இந்திய மன்னன் புருஷோத்தமனோடு போரிட்டதைக், கிரேக்க வரலாற்று மேதை புளுடார்க் எழுதி வைத்துள்ளார்.
   சி. ஜெயபாரதன்

 8. Avatar
  Dr.G.Johnson says:

  ஹிந்துஸ்தானம் என்பது எங்கே உள்ளது? என்னிடமுள்ள நாட்டுப்படச் சுவடியில் ( Atlas ) தேடினேன். ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளன. ஆனால் ஹிந்துஸ்தான் என்ற நாடு இல்லை. இல்லாத ஒன்றைப் பற்றி என் எழுதி குழப்பம் விளைவிக்கிறீர்கள்?

  அந்த காலத்தில் ஆஃப்கானிஸ்தான் நாட்டவரும், முகலாயர்களும் , கிரேக்கர்களும் , ரோமர்களும் இந்து நதிக்கு கிழக்கே உள்ள பகுதியை இந்து நாடு என்று அழைத்தனர். ஆனால் அப்போதுகூட இந்து நதிக்கு கிழக்கே ஒரே நாடாக இல்லை. பாபர், ஹுமாயுன், அக்பர் போன்ற முகலாயர்கள் படையெடுத்து வந்தபோது ஒவ்வொரு நாடாக கைப்பற்றி avatrai ஹிந்துஸ்தானம் என்றனர். அதன்பின்பு ஆங்கிலேயர்கள் வந்தபின் பிரித்து கிடந்த பல ” ராஜ்யங்களை ” ஒன்று சேர்த்து அதற்கு இந்தியா என்று பெயர் சூட்டியுள்ளனர். அவ்வாறு ஆங்கிலேயர்களால் ஒன்று சேர்க்கப்பட்ட நாடுகளில் அல்லது ராஜ்யங்களில் ஒன்றுதான் தமிழர்கள் வாழும் தமிழ் நாடு.

  அதுபோலவே ஒரு காலத்தில் சோழர்கள் ஈழத்தையும் ஆண்டுள்ளனர். கல்கியின் ” பொன்னியின் செல்வன் ” நாவலில்கூட இதுபற்றி நிறைய ” கதைகள் ” கூறியுள்ளார்.

  இவற்றை ( வரலாற்றை ) வைத்து எண்ணியபோது எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கற்பனை தோன்றியது:

  இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க ( சங்கம் வைத்து வாழ்ந்த தமிழன் ) தமிழர்களுக்கு இப்போது இது என் நாடு என்று உரிமையோடு ( ஒரு மத்திய அரசிடம் ஒவ்வொன்றுக்கும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லாத ) சொல்ல ஒரு தமிழ் நாடு இல்லையே என்ற ஆதங்கம் தோன்றியது. அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன். நான் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு பிரிந்து போகவேண்டும் என்று கூறவில்லை. அதைத்தான் பண்டித ஜவகர்லால் நேரு ” நான்சென்ஸ் ” என்று அப்போதே கூறிவிட்டாரே!..டாக்டர் ஜி. ஜான்சன்.,

 9. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ பிறருடைய பின்னூட்டங்களை மைல் நீளம், படிப்பவர்களை சலிக்க வைக்கிறது என்று கூறும் க்ருஷ்ண குமார் உபதேசியார். \

  அன்பர் ஷாலி, cool! Could you ever avoid reading between the lines…….

  I never advised anyone to write shortly. If at all anybody in the web site had done it, that is அய்.

  சிறு வாக்யங்களில் முக்யமான கருத்துக்களை பகிர்வதை நான் ச்லாகிக்கிறேன். நான் குறிப்பிட்ட நபர்களைத் தவிர நான் உட்பட நீளமான பின்னூட்டங்களே பகிர்கிறோம்.

  அன்பர் அய் அவர்களை இது சம்பந்தமாகக் குறிப்பாகச் சொன்னமை — தான் செய்ய முடியாததை ஏன் அடுத்தவருக்கு உபதேசம் சொல்கிறார் என்று.

  நான் நிச்சயம் சிறிய உத்தரங்கள் பகிர முயற்சி செய்கிறேன்.

 10. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ ஹிந்துஸ்தானம் என்பது எங்கே உள்ளது? என்னிடமுள்ள நாட்டுப்படச் சுவடியில் ( Atlas ) தேடினேன். ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளன. ஆனால் ஹிந்துஸ்தான் என்ற நாடு இல்லை. இல்லாத ஒன்றைப் பற்றி என் எழுதி குழப்பம் விளைவிக்கிறீர்கள்? \

  தூங்குபவர்களை கண்டிப்பாக எழுப்ப முடியும். தூங்குவது போல நடிப்பவர்களைக் கண்டிப்பாக எழுப்ப முடியாது.

  அரசியல் சாஸனத்தில் நம் தேசத்தை India that is Bharath என்று குறிப்பிட்டுள்ளனர்.

  நம் தேசத்தில் நிகழும் ஒவ்வொரு Independence Day Parade மற்றும் Republic Day Parade இவற்றில் ராணுவ ஜவான் களால் மிகவும் உகப்புடன் வாசிக்கப்படும் கானம் “ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” —- இங்கு *ஹிந்துஸ்தான்* என்ற சொல்லை கையாண்டவர் மொஹம்மது இக்பால். முஸல்மான் ஆன இவர் இந்த தேசத்தை ஹிந்துஸ்தான் என்று சொல்வதற்கு எந்த தயக்கத்தையும் கொள்ளவில்லை. இதில் குறிப்பிடப்படும் ஹிந்துஸ்தானம் வாடிகனுக்கு அருகில் இல்லை என்றும் அது எங்கு உள்ளது என்பது இந்த நாட்டிலும் இந்த நாட்டின் இறையாண்மையில் பெருமை கொள்ளும் ஒவ்வொரு குடிமகனும் அறிவர். இந்த நாட்டைத் துண்டாட விழையும் சக்திகளும் அதற்குத் துணைபோகும் சக்திகளும் கண்டிப்பாக அறியவொண்ணார்.

  *ஹிந்துஸ்தானம்* எங்கே உள்ளது என்ற உங்கள் கேலி — நமது தேசத்து சுதந்திர தின மற்றும் குடியரசு தின அணிவகுப்புகளையும் அதில் பங்கு கொள்ளும் ராணுவ ஜவான் களையும் — அதற்குப் பின் ராஷ்ட்ரபதி பவனின் முன்பு இந்த கானத்திற்கு முறையாக மதிப்பளிக்கும் ராஷ்ட்ரபதி, ப்ரதமமந்த்ரி — இந்த தேசத்தின் பெருமை மிகு ப்ரஜைகள் அவர்கள் அனைத்து பேரின் மீதும் என்றால் மிகையாகாது.

 11. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க ( சங்கம் வைத்து வாழ்ந்த தமிழன் ) தமிழர்களுக்கு இப்போது இது என் நாடு என்று உரிமையோடு ( ஒரு மத்திய அரசிடம் ஒவ்வொன்றுக்கும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லாத ) சொல்ல ஒரு தமிழ் நாடு இல்லையே என்ற ஆதங்கம் தோன்றியது. அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன். நான் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு பிரிந்து போகவேண்டும் என்று கூறவில்லை. \

  வாசிப்பவர்கள் இந்த வாக்யத்தில் உள்ள கழுவும் மீனில் உள்ள நழுவும் மீனை நன் கு அவதானிப்பர்.

  த்ராவிட வ்யாதிகள் தமிழ்நாட்டையும் முஹம்மது அலி ஜின்னா என்ற தேச த்ரோஹி போன்று — தேசத்திலிருந்து துண்டிக்க முனைந்தனர். வெற்றி அடையவில்லை.

  கால்பனிகமான —- த்ராவிடநாட்டை — இது எங்கே என்று அனந்த நாயகி கேட்டதற்கு — த்ராவிட மடாதீசர் அந்த காலத்தில் — நாடாவைத் திறந்து பார்த்தால் தெரியும் — என்று கூறி — பிறகு அதற்கு வ்யாக்யானமும் கொடுத்துள்ளார். அது போன்ற வ்யாக்யானங்கள் த்ராவிட மடாதீசரை ஆதர்சமாகக் கொள்பவர்களிடம் காணக்கிட்டுவது புதிதல்ல.

  இந்த தேசத்தின் இறையாண்மையின் மீது பிடிப்பு உள்ள சக்திகளுக்கு — இந்த தேசத்தை துண்டாட விழையும் சக்திகள் எவை — அவற்றின் செயல்பாடுகள் எவை என்பது தெளிவாகத் தெரியும்.

 12. Avatar
  Dr.G.Johnson says:

  திரு ஷாலி அவர்களே , தங்களின் பின்னூட்டம் படிக்க ஜாலி யாக இருந்தது. தற்போது நான் அக்பர் ஆண்ட ஹிந்துஸ்தான் பற்றிதான் படித்து வருகிறேன். அதுவும் ரொம்ப ஜாலியாகத்தான் உள்ளது.ஹிந்துஸ்தானை அவர் ஒன்றாக இணைத்து ஆட்சி செய்ய பட்ட பாடுகள் ஏராளம். எப்படியோ ஆங்கிலேயர்கள் எல்லா ஸ்தான்களையும் ஒன்று படுத்தி பின்பு இயாறண்டாகப் பிரித்து தந்துவிட்டு ஆளை விட்டால் போதும் என்று ஓடிவிட்டனர். இப்போது மீண்டும் பழைய ( அக்பர் காலத்து ) ஹிந்துஸ்தான் மலர்ந்துள்ளது. அது பற்றியெல்லாம் நமக்கு கவலை இல்லை. இந்த ஹிந்துஸ்தான் ஸ்ரீ லங்காவில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருந்தால் சரிதான்!…டாக்டர் ஜி. ஜான்சன்.

 13. Avatar
  திருமூர்த்தி says:

  என் தன்மானத்தை இந்திய பிரதமரின் முடிவில் தேடும் கேவலம். தமிழா நமக்கு ஏன் இந்த தாழ்வு

  1. Avatar
   புனைப்பெயரில் says:

   ஒரு தாழ்வும் இல்லை… அரசு கட்டமப்பு முறை அப்படித்தான் இருக்கும் அது மட்டும் இல்லாமலிருந்தால் முள்ளிவாய்க்காலுக்கு தன் இனத்தை அலைத்துச் சென்ற முட்டாள்தனம் காவிரிக்கரையிலும் நடந்திருக்கும். முதலில் அயலானுக்கு – பிரபாகரன் – துதி பாட வேண்டாம்.

 14. Avatar
  Dr.G.Johnson says:

  உண்மைதான் திரு பாண்டியன் அவர்களே. கடாரம் என்ன ,சிங்கப்பூர், கம்போடியா, இந்தோணேசிய எல்லாம் ஒரு காலத்தில் நம்ப சொத்த்துதான். அதுதான் வரலாறு. சிங்கப்போர் என்பது சமஸ்கிருத பெயர்..அதாவது சிங்கத்தின் ஊர். அல்லது மஹாவிஷ்ணுவின் நகரம். பெயர் சூட்டியவன் பரமேஸ்வரன் என்ற தமிழ் இளவரசன். அவன்தான் மலேசியாவில் மலாக்கா எனும் மாநிலத்தின் பெயர் சூட்டினான். ஆனால் அந்தோ பரிதாபம். அவன் ஜாவா சுமத்திராவின் இளவரசி மீது காதல் கொண்டு அவளை மணமுடித்துக் கொண்டதால் மொஹமட் இஸ்கண்டர் ஷா வாக மதம் மாறிவிட்டான் அவன் ஆண்ட மலாக்கா சாம்ராஜ்யத்தில் இருந்துதான் மலாயா உருவானது. பெண்ணுக்காக இனத்தையும் கிடைத்த நாட்டையும் கோட்டை விட்டு விட்டான்!

  இதுபோல்தான் கம்போடியாவும். அங்கு சென்ற ஜெயவர்மன் என்ற பல்லவ இளவராசன்தான் உலகம் வியக்கும் ” அங்கோர் வாட் ” அரண்மனையையும் விஷ்ணு கோவிலையும் கட்டி ஆண்டான். அவனும் கம்போடியா பெண் மீது கொண்ட மோகத்தில் அவளையே மணமுடித்து நாட்டை அவளின் சந்ததிக்கு தந்துவிட்டான்.

  இந்தோனேசியாவில் நாம் ஆட்சி செய்ததற்கான ஆவணங்கள் ஜாக்கர்த்தா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் மொழிகூட பல்லவர்களின் மொழியிலிருந்து வந்ததாக பகிரங்கமாக அங்கு எழுதி வைத்துள்ளனர். ஜொஜாகார்த்தாவில் போரோபுதூர் மிகப் பெரிய புத்தர் கோவில் உள்ளது. சிவன், விஷ்ணு கோவில்களும் உள்ளன. அங்கும் நமது ஆட்கள் பெண்களிடம்தான் அடிமையாகி நாட்டைக் கோட்டை விட்டிருப்பார்கள்!

  ஆகேவே திரு பாண்டியன் அவர்களே, நாம் அன்றும் இன்றும் நாட்டை பெண்களிடம்தான் கோட்டை விடுகிறோம்! ( செங்கோட்டை முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உட்பட )…டாக்டர் ஜி.ஜான்சன்

 15. Avatar
  paandiyan says:

  ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடம் தமிழ்நாடு ஆகவே இங்கு எங்கள் நாட்டு தூதரகம் வேண்டாம் என்று மர்ற நாடு சொன்னால் கூட கட்டுரையாளர்
  – சரியான பார்வை – என்றுதான் சொல்லுவார் . அது சரி சக தமிழர்களை புலிகள் போட்டு தள்ளினார்கலே
  அதுவும் விசாரணை வேண்டாமா ?

 16. Avatar
  paandiyan says:

  //ஹிந்துஸ்தானம் என்பது எங்கே உள்ளது? என்னிடமுள்ள நாட்டுப்படச் சுவடியில் ( Atlas ) தேடினேன். ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளன. ஆனால் ஹிந்துஸ்தான் என்ற நாடு இல்லை. இல்லாத ஒன்றைப் பற்றி என் எழுதி குழப்பம் விளைவிக்கிறீர்கள்?//

  நீங்கள் படித்த வரலாறு எப்படி என்றால் – சுருக்கமாக இப்படி விளக்கலாம் :-

  1: பல கிறுத்துவர்கள் ஏசுவிற்கும் பையிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். பைபிள் ஏசுவிற்குப் பின் 200 ஆண்டுகள் கழித்து ஒரு மாபியா கும்பலால் எழுதப்பட்டது.
  2. பௌத்த மத சாஸ்திரத்தை இவர்கள் அட்டைக் காப்பி அடித்து “புது ஏற்பாடு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர் என்று (ironically) Christian Lindtner என்ற பெயருள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். இங்கே பார்க்கவும்: http://www.jesusisbuddha.com/CLT.html//

 17. Avatar
  Dr.G.Johnson says:

  ஒரு அதிசயம். இப்போதுதான் ஒரு அழகான தமிழ்ப் பெண் இரண்டு குழந்தைகளுடன் வந்தார் . அவர் பெயர் ருக்குமணி. அரை பாவாடை அணிந்திருந்தார். நெற்றியில் போட்டு வைத்திருந்தார். கைக் குழந்தைக்குக் காய்ச்சல். அவருக்கு தமிழில் சரிவர பேசத் தெரியலை. மலாய் மொழியில் பேசினார். ஏன் தமிழ் தெரியலை என்று கேட்டேன். ” நான் இந்தோனேசியா தமிழ்ப் பெண் ” என்றார்.

  ” பாலித் தீவா? ” என்று கேட்டேன்.

  ” இல்லை மேடான் ” என்றார்.

  இந்தோனேசியாவில் தமிழ் மன்னர்கள் ஆட்சியின்போது குடியேறிய தமிழர்களின் சந்ததியினர் இவர்கள். தமிழ்க் கலாச்சாரத்துடன், இந்து மத வழிபாட்டிலுள்ள இவர்கள் பாலித் தீவு, மேடான் பகுதிகளில் ஏராளமானோர் வாழ்கின்றனர். தமிழை மறந்து கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி பேசுகின்றனர்…

  டாக்டர் ஜி. ஜான்சன்.

  1. Avatar
   புனைப்பெயரில் says:

   இது மாதிரி நிறைய தகவல்கள் தாருங்கள் திரு.ஜான்சன் அய்யா. நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது

 18. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  மிகவும் ச்வாரஸ்யமான உத்தரங்கள்.

  ஒரு புறம் ஹிந்துஸ்தானத்தின் எல்லைகள் எங்கும் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து எல்லையைக் காக்கப் பாடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் தங்கள் குடும்பம் குழந்தைகளை விட்டு உயிரைப் பணயம் வைத்து இந்தப் பகுதிகளில் உத்யோகத்த்திலிருக்கும் சிவிலியன் கள்.

  மறுபுறம், ஹிந்துஸ்தானம் – பாரதம் – என்ற தேசத்தின் இறையாண்மையை கேலிக்கு உட்படுத்தி — ஜாலியாக நுனிக்கிளையிலிருந்து அடிக்கிளையை வெட்டும்படிக்கான உரையாடல்கள். இப்படி உரையாடுவதில் ஒருவர் நான் மதிக்கும் மெத்தப்படித்த க்றைஸ்தவ அன்பர். மற்றொருவர் தன்னை அடையாளப்படுத்த விரும்பாத அன்பர்.

  இந்த தேசம் பின் சொன்ன நிலைப்பாடுகளை உடையோரால் எப்படி இன்னும் உடைபடாது இருக்கிறது என வினா எழுந்தது உண்டு. ஆனால் முன் சொன்னவர்கள் பின் சொன்னவர்களின் நிலைப்பாடுகளையும் மீறி — அவர்களுடைய நலனுக்காகவும் சேர்த்தே– ஹிந்துஸ்தானத்தை காக்க உறுதி பூண்டுள்ளமை இந்த தேசம் உறுதியாக உள்ளமையை விளக்குகிறது.

  தொல் தமிழ் நூல்களில் தமிழ்நாடு என்று விளக்கப்படாவிடினும் — உணர்வு பூர்வமாக — அதை ஒவ்வொரு தமிழராலும் உணர முடியும். உணர்வு பூர்வமாக பாரதத்துடன் – ஹிந்துஸ்தானத்துடன் — தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாதவர்கள் — இந்த தேசத்தைத் துண்டாட — தங்களால் இயன்ற வரை — நேரடியாக அல்லது இலை மறைவு காய் மறைவாக — அதற்கு பணியாற்ற முடியும் என புரிகிறது.

  ஜெய்ஹிந்த். வெற்றிவேல்

 19. Avatar
  Dr.G.Johnson says:

  நான் வரைபடத்தில் இந்துஸ்தான் என்ற நாடு காணப்படவில்லை என்றேன். நண்பர் கிருஷ்ணகுமார் அவர்கள் , ” ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா .” என்று முஹம்மது இக்பால் எழுதிய பாடலில் உள்ளது என்று ஆதாரம் காட்டியுள்ளார். ஒத்துக்கொள்கிறேன். அதே வேளையில் ஒரு கேள்வியும் கேட்கிறேன். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ” ஜன கன மன ” என்று துவங்கும் நம்முடைய தேசிய கீதத்தில் ” திராவிட ” என்ற சொல் உள்ளதே? அப்படியானால் திராவிட நாடு என்பதும் ஹிந்துஸ்தான் போல உள்ளதா?அப்படி இல்லையேல் அதை ஏன் இன்னும் நீக்காமல் அப்படியே இன்றும் போர்வீரர் முதல் பாமரர் வரை பாடுகின்றனர்? அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

  1. Avatar
   paandiyan says:

   பாண்டிய , சேர , சோழ நாடுகள் தான வரலாறில் . தமிழ்நாடு என்று ஒன்று எது ??

 20. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் ஜான்சன்

  \ ” திராவிட ” என்ற சொல் உள்ளதே? அப்படியானால் திராவிட நாடு என்பதும் ஹிந்துஸ்தான் போல உள்ளதா?அப்படி இல்லையேல் அதை ஏன் இன்னும் நீக்காமல் அப்படியே இன்றும் போர்வீரர் முதல் பாமரர் வரை பாடுகின்றனர்? \

  த்ராவிடம் என்பது பரந்த ஹிந்துஸ்தானம் போன்ற ஒரு தேசமன்று. மாறாக பரந்து விரிந்த பாரதம் – ஹிந்துஸ்தானத்தில் உள்ள ப்ரதேசங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்ட ப்ரதேசம். தேசிய கீதம் எவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டது. எந்த காரணத்திற்காக அது பாடப்பட்டது என்பது சரித்ரம். அது விவாதத்திற்கு உரியது. ஆயினும் பாரத சர்க்காரால் இது தேசிய கீதம் என்று பரிந்துரை செய்யப்பட்டபடி – இந்த கீதத்தை தேசிய கீதமாகக் கொள்வதிலும் — இந்த கீதத்தைப் பாடுவதிலும் நான் பெருமையே கொள்கிறேன்.

  த்ராவிடம் என்பது சம்ஸ்க்ருத பதம். பழந்தமிழ் நூற்களில் த்ராவிடம் பற்றிய குறிப்புத் உள்ளதா — எனக்குத் தெரியவில்லை.

  ஹிந்துஸ்தானம் – பாரதம் என்ற நமது தேசத்தின் ப்ரதேசங்கள் பற்பல நூற்களில் பலவாறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

  *ஜனகண* தேசிய கீதத்தில் ஹிந்துஸ்தானத்தின் ப்ரதேசங்கள் (சிலவற்றை) குறிப்பிடுகையில்

  पंजाब सिंध गुजरात मराठा
  द्राविड़ उत्कल बंग ।

  பஞ்சாப் சிந்த் குஜராத் மராடா
  த்ராவிட உத்கல பங்க

  இவ்வாறு குறிப்பிடப்படுகிறது

  த்ராவிடம் என்ற பதம் வெறுமனே த்ராவிடம் என்று மட்டுமின்றி பஞ்சத்ராவிடம் என்று விகுதியுடனே சம்ஸ்க்ருத இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. செவி வழியாக நான் கேள்விப்பட்ட செய்தி த்ராவிடம் என்ற பதம் உள்ளடக்கிய ஹிந்துஸ்தான ப்ரதேசங்கள், தமிழகம், ஆந்த்ரம், கர்நாடகம், கேரளம் மற்றும் மஹாராஷ்ட்ரம்.

  இந்த விஷயத்தை நான் தமிழ் ஹிந்து தளத்தில் *எல்லைகளைத் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்* என்ற அருமையான வ்யாசம் சமர்ப்பித்த பண்டித ஸ்ரீ தேவ் அவர்களுடன் கலந்துரையாடுகையில், ஸ்ரீமான் தேவ் அவர்கள் இது சம்பந்தமாக கல்ஹணரின் ராஜதரங்கிணியிலிருந்து விளக்கியதை கீழே கொடுத்துள்ளேன்.

  \ கர்ணாடகஸ்²ச தைலங்கா³ த்³ராவிடா³ மஹாராஷ்ட்ரகா:
  கு³ர்ஜராஸ்²சேதி பஞ்சைவ த்³ராவிடா³ விந்த்⁴யத³க்ஷிணே |
  (தைலங்கம் என்றது ஆந்திர தேசத்தை)

  ஸ்ம்ருதி நிபந்த நூல்களிலும் கௌட, த்ராவிடப் பிராந்திய எல்லைகள் கூறப்பட்டுள்ளதாகச் சொல்வர்.\

  மேற்சொன்ன ச்லோகத்தில் முதல் வரியிலுள்ள த்ராவிடம் சுட்டுவது தமிழகம் மற்றும் கேரளம் உள்ளடக்கிய பகுதிகள். குர்ஜரம் – குஜராத்.

  ப்ஞ்ச த்ராவிடம் போன்றே பஞ்ச கௌட என்று கிழக்கு பாரதப் பகுதிகளும் அடையாளம் காணப்படுகின்றன. இதற்கான இலக்கியக் குறிப்பு தற்சமயம் என்வசமில்லை.

  கீழ்க்கண்ட சுட்டியில் பண்டித ஸ்ரீ தேவ் அவர்களின் வ்யாசமும் அதை ஒட்டிய அருமையான உத்தரங்களும் உள்ளன. தங்களுடைய இந்த ப்ரச்னத்தினால் நான் அந்த வ்யாசத்தையும் அதையொட்டிய உத்தரங்களையும் மறுபடி வாசிக்க நேர்ந்தது. தாங்களும் வாசித்துப் பயன்பெறுமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  http://www.tamilhindu.com/2011/07/power-of-literature-in-explosion-of-boundaries/

  அன்புடன்
  புதஜனவிதேயன்
  க்ருஷ்ணகுமார்

 21. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  ஸாரே ஜஹான் ஸே அச்சா பற்றி மாற்றுக் குறிப்புகள் வாசித்தால் உங்களுக்கு சம்சயங்கள் வரலாம். ஆதலால் அது சார்ந்த விஷயங்களையும் இத்துடன் பகிர்ந்துள்ளேன்.

  அமர கவியான மொஹம்மது இக்பால் பரந்த வாசிப்புள்ள அன்பர். தீவிர முஸ்லீம் கருத்தாக்கத்துக்கு இவர் உள்ளாகும் வரை ஹிந்துஸ்தானத்தையும் அதன் பன்முகத்தையும் மிகவும் உகந்து பாடியுள்ளார். தீவிர முஸல்மான் ஆன பின்பு அவர் தான் போற்றியுள்ள இந்த கருத்தாக்கத்தை வேறுபடி பாடியுள்ளார்.

  முதலில் ஹிந்துஸ்தானத்தைப் போற்றி அவர்புனைந்த பாடல் தரானே-இ-ஹிந்த் என்ற பாடல் – ஸாரே ஜஹான் ஸே அச்சா

  मज़हब नहीं सिखाता आपस में बैर रखना
  हिन्दी हैं हम वतन है हिन्दोस्ताँ हमारा

  மஜ்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே பைர் ரக்னா
  ஹிந்தி ஹை ஹம் வதன் ஹை ஹிந்தோஸ்தான் ஹமாரா

  Religion does not teach us to bear ill-will among ourselves
  We are of Hind, our homeland is Hindustan.

  தீவிர முஸல்மான் ஆன பின்பு இங்கு அவர் பகிர்ந்த மத இணக்கத்தை ஒதுக்கி முஸல்மான் – உலகளாவிய இஸ்லாம் என்ற கருத்தில் ஆர்ஜவம் கொண்டு அவர் இயற்றிய தரானே மிலி என்ற பாடலில் கீழ் வருமாறு பாடியுள்ளார்.

  चीन-ओ-`अरब हमारा , हिनदूसितां हमारा
  मुसलिम हैं हम , वतन है सारा जहां हमारा

  சீன் – ஓ – அரப் ஹமாரா, ஹிந்தூஸிதா ஹமாரா
  முஸ்லிம் ஹை ஹம், வதன் ஹை ஸாரா ஜஹான் ஹமாரா

  Central Asia and Arabia are ours, Hindustan is ours
  we are Muslims, the whole world is our homeland

  Though ‘Chin’ nowadays refers to China, it used to be used for Central Asia, and that’s probably how it’s meant here.

  பாரதி தாசனார் முதலில் தீவ்ர தேசிய வாதியாக இருந்து பின்னாட்களில் த்ராவிட கும்பல்களுடன் கலந்தவர். அப்படி இருப்பினும் தேசியச் சுவை சொட்டும் அவரது முந்தைய பாடல்கள் இன்றும் தேசிய ஒற்றுமையில் – ஸ்வதந்த்ர போராட்டம் – போன்ற விஷயங்களில் நாட்டம் கொண்டவர்களுக்கு உகப்பே அளிக்கும். அது போன்று தரானே மிலியில் உலகமுழுதும் முஸல்மான் களது என்ற நிலைப்பாட்டை — பின்னர் கொண்ட — ஜெனாப் மொஹம்மத் இக்பால் அவர்களது — தேசபக்தி மற்றும் மத நல்லிணக்கும் பகரும் தரானே- இ-ஹிந்த் (ஸாரே ஜஹான் ஸே அச்சா) என்ற கானம் — அமர கானம் என்றால் மிகையாகாது.

  1. Avatar
   Paramasivam says:

   What is that “dravida kumbal” Mr Krishnakumar?Why that much contempt for people belonging to southern states as per your definition?Having worked in all states of the country,your vision should be broad.Bharathidaasan later found what the so called nationalists were doing for example the Cheranmaadevi Gurukulam.

   1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    pardon for my reply in English to queries in English.

    \ Does he want to know about Cheranmaadevi Kurukulam? \

    I know about it. That has no relevance to the topic under disucssion. You may discuss about that with someone who is interested in such topic.

    \ What is that “dravida kumbal” Mr Krishnakumar? \

    yes, by Dravida kumbal, I mean the “dravidian movement” and their negative contribution for the cause of Ezham Tamils. Dhanam of katcha thivu for saving self from corrupt cases, fasting between breakfast and lunch are some of illustrious contribution of Dravidian political drama troup’s contribution for Ezham cause.

    \ Why that much contempt for people belonging to southern states as per your definition? \

    Hope earlier answer should have cleared your misinterpretation. I have no contempt for any Hindusthani of any region on regional basis for that matter. Thats your figment of imagination. If anybody have such contempt you can have your further discussion with them.

    regards

 22. Avatar
  paandiyan says:

  க்ருஷ்ணகுமார் அவர்கள் breaking india வையும், சுப்புவின் திராவிட மாயையும் சேர்த்து சொல்லி இருக்கலாம் .

 23. Avatar
  புனைப்பெயரில் says:

  வெளிநாடு பல சென்று வாழ்ந்திருந்தாலும் இந்தியத் திருநாட்டில் அதன் சாதக பாதகங்கள் ஊடே வாழும் ஒரு இந்தியத்தமிழன் நான். எமது இந்திய அரசு ஒரு சரியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது – காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்று. நாங்கள் அதை முழுமனதாக வரவேற்கிறோம். இலங்கைத் தமிழர்கள் என்பது ஒரு தீவிரவாத குழுசார்ந்த கூட்டம் மட்டுமல்ல. மேலும், வெளிநாடுகளில் சுக போக வாழ்வில் திளைத்துக் கொண்டு , கொஞ்சம் ரொட்டித் துண்டை தமிழகத்தில் சில கும்பலுக்கு எறிந்து அவற்றில் குரைப்புடன் இந்திய தேசத்தை விமர்சிப்பவர்கள், இலங்கையில் போய் போராடட்டும், இல்லை இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு படிப்பு, மருத்துவம் , இருத்தல் ஆகியவற்றிற்கு உதவட்டும். ஜெயபாரதன், கனடா பிரதமரிடம் சொல்லி மிச்சமிருக்கும் தமிழர்களுக்கு குடியுரிமை வாங்கித் தரட்டும். கனடா பிரதமரும், ஜெயாவுடம் ஆடுவது ஓட்டு வங்கி அரசியல். இலங்கையில் மிச்சமிருக்கும் தமிழர்களுக்காக இந்தியா முயற்சித்தல் வேண்டும். 40வருடமாக சுற்றியிருக்கும் எல்லோரையும் பகைத்து ஒரு இனத்தையே அழித்த ஒரு கும்பலுக்கு இந்தியா சித்தும் கரிசனம் காட்டத் தேவையில்லை.

 24. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  ஸ்ரீமான் புனைப்பெயரில்,

  காமன்வெல்த் என்ற முன்னாள் ப்ரிட்டிஷ் ராஜ்யத்தின் அடிமைகளின் அரட்டை க்ளப்பில் ஹிந்துஸ்தானம் இன்னும் கலந்து கொள்வதில் லவலேசமும் ஏதாவது ப்ரயோஜனம் இருக்கவியலும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? காம்பியா போன்ற துக்குளியூண்டு தேசம் இந்த அரட்டை க்ளப்பிலிருந்து சமீபத்தில் விலகியுள்ளது. இந்தக் குழுமத்தின் மாநாட்டில் ஹிந்துஸ்தானம் கலந்து கொள்வதன் மூலம் ஹிந்துஸ்தானத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கும் எந்த விதத்தில் நன்மை கிட்ட வாய்ப்புள்ளது என நீங்கள் கருதுகிறீர்கள்.

  ஹிந்துஸ்தானம் ஸ்ரீலங்காவில் உள்ள ஈழத்தமிழர்களின் புனர்வாழ்வுக்காக கொடுத்த உதவித்தொகை அவர்களுக்கு பயன்படுத்தப்படாது — அங்குள்ள அங்குள்ள கோவில்களை சூறையாடுவதற்கும் ஈழப்பகுதிகளில் புதியதான புத்த விகாரங்கள் கட்டுவதற்கும் பௌத்தர்களை ஈழப்பகுதிகளில் குடியேற்றவும் பயன்படுத்தப்படுகிறது — என்றெல்லாம் செய்திகள் வருகின்றனவே. இது ஏற்புடையதாக இல்லையே.

  வெளிநாடுகளில் குடியேறியுள்ள ஈழத்தமிழர்களின் செயல்பாடுகள் ஈழத்தில் இன்று வசிக்கும் தமிழர்களுக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பது புரிகிறது.

  ஸ்ரீமான் பாண்டியன்,

  ஜம்மு காஷ்மீரத்தில் ஜம்மு முதல் ஸ்ரீநகர், ஊரி, லே கர்கில் வரை பல பகுதிகளில் சிவிலியனாக உத்யோகத்தில் இருந்த எனக்கு தேச ஒற்றுமை தேசத்தின் இறையாண்மை — இவற்றைக் காக்கப் பாடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் சிவிலியன் களின் நிலை நிதர்சனமாகத் தெரியும்.

  ஹிந்துஸ்தானத்தை துண்டாட விழையும் சக்திகளின் செயல்பாடுகள் breaking India வில் விவரிக்கப்பட்டுள்ளதை கேள்விப்பட்டுள்ளேன்.

  தேச ஒற்றுமையில் கவனம் உள்ள சக்திகள் பிரிவினைவாத சக்திகளையும் மீறி தங்கள் பணிகளை ஆற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். அதில் வெற்றியும் பெறுவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

  ஜெய்ஹிந்த், வெற்றிவேல்

  1. Avatar
   paandiyan says:

   //ஹிந்துஸ்தானத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கும் எந்த விதத்தில் நன்மை கிட்ட வாய்ப்புள்ளது என நீங்கள் கருதுகிறீர்கள்.//

   கலந்துகொள்ள கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? புலிகளின் கொலை, கொள்ளை , போதை மருந்து கடத்தல். சக புலிகளின் கொல்லை , அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களை வெளிய செல்ல முடியாமல் உயிருடன் விளையாடியது — யாரு விசாரணை நடத்த வேண்டும். இது எல்லாம் விசாரணை வேணாமா ?

   நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம் = வெளிஉறவு துறைக்கு அதிகாரம் பன்ண ஒரு மாநில கட்சிக்கு என்ன அதிகராம் இருக்கின்றது ? விலைவுகளை அனுபவி என்றால் ? இன்னொரு மனித வெடிகுண்டா?

   //ஈழத்தமிழர்களின் புனர்வாழ்வுக்காக கொடுத்த உதவித்தொகை அவர்களுக்கு பயன்படுத்தப்படாது — அங்குள்ள அங்குள்ள கோவில்களை சூறையாடுவதற்கும் ஈழப்பகுதிகளில் புதியதான புத்த விகாரங்கள் கட்டுவதற்கும் பௌத்தர்களை ஈழப்பகுதிகளில் குடியேற்றவும் பயன்படுத்தப்படுகிறது — என்றெல்லாம் செய்திகள் வருகின்றனவே. இது ஏற்புடையதாக இல்லையே.//

   இதை மகாதீர் பண்ணியபோது இங்கு உள்ளவர்கள் என்ன பன்ணினார்கள்?? பேசாமல் தமிழர்கள் அங்கு அவர்களோடு ஒன்றாகிவிடட்டும் . அது அவர்களுக்கு ரொம்ப நல்லது .

   1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // தமிழர்கள் அங்கு அவர்களோடு ஒன்றாகிவிடட்டும் . அது அவர்களுக்கு ரொம்ப நல்லது //

    பாண்டியன்,

    அபத்தமாக இருக்கிறது. எந்த ஜனனாயக தேசத்திலும் சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும். இலங்கையில் அவ்வாறு நடக்கவில்லை என்பதாலேயே இவ்வளவு எதிர்ப்பும். ராகஷஸபக்சே கும்பல் ஒழுங்காக அப்படி நடந்திருந்தால் ஏன் இவ்வளவு எதிர்ப்பு ? அவ்வளவு ஏன், முதலில் இந்த இன அழிப்பு வேலைகள் எதுவும் இல்லாமல் இருந்திருந்தால் இத்தனை ஆண்டுகால பிரச்சினை எதுவமே தோன்றியிருக்காதே !

    உடனே அவர்களை தங்களது அடையாளங்களை அழித்துக்கொண்டு பெரும்பான்மையினரோடு ஒன்றாகிவிட அறிவுரை கூறுவது கொடூர நகைச்சுவை.

   2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // கலந்துகொள்ள கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? //

    அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பு. ஜனனாயக அரசியல் அமைப்பில் இப்படித்தான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் அழுத்தம் தரும். இது அங்கீகரிக்கப்பட்ட முறையே. இங்கு நடப்பது காட்டாட்சியோ சர்வாதிகார ஆட்சியோ அல்ல, ‘அப்படி சொல்ல அவர்கள் யார், இப்படி சொல்ல இவர்கள் யார்’ என்றெல்லாம் கேள்வி கேட்பதற்கு.

    // புலிகளின் கொலை, கொள்ளை , போதை மருந்து கடத்தல். சக புலிகளின் கொல்லை , அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களை வெளிய செல்ல முடியாமல் உயிருடன் விளையாடியது — யாரு விசாரணை நடத்த வேண்டும். இது எல்லாம் விசாரணை வேணாமா ? //

    அப்படியே எல்.டி.டி.இ போன்ற அமைப்புக்கள் எல்லாம் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பே அரசு கட்டவிழ்த்துவிட்ட இன அழிப்பையும் விசாரிக்கவேண்டும், முடியுமா ?

   3. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இவ்வளவு நடந்தும் இன்னும் இலங்கை அரசு அரக்கத்தனமாக மட்டுமல்ல மிக கேவலமாகவும் அருவருப்பாகவும் நடந்துகொள்கிறது.

    ஐ.நா சபையின் நவநீதம் பிள்ளையின் சமீபத்திய இலங்கை வருகையின் போது எவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டார் என்பதை கேள்விப்பட்டீர்களா ? ஒரு அமைச்சன் ‘நான் அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்’ என்றும் ‘என் உடம்பில் இன்னும் அசையும் உறுப்புக்கள் உள்ளன’ என்றும் பொறுக்கித்தனமாக வெளிப்படையாக பொதுவில் பேசுகிறான். இப்படிப்பட்ட அரசு என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள் ? இன்னும் இலங்கை கட்டவிழ்த்துவிட்ட போர் குற்றங்கள் பற்றி எந்த தேசமும் அதை கண்டிக்கவே இல்லை. தமிழர் குடியிருப்பில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற மாட்டோம் என்று திமிராக பதில் சொல்கிறது இலங்கை. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாவிட்டால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று ஆணவமாக பேட்டி தருகிறான் ஒரு தூதன்.

    இவ்வளவும் நடந்தபின்னும் தமிழர்களை மதிக்காமல் இலங்கையோடு உறவாடிக்கொண்டு அதன் கால்நக்கியாக செயல்படுகிறது இந்தியா. இதை எதிர்த்து தமிழகமும், தமிழர்கள் அமைப்பும், தமிழக அரசியல் கட்சிகளும் ஜனநாயக ரீதியில் நெருக்குதல் கொடுத்தல் என்ன தவறு ?

   4. Avatar
    முத்தமிழன் says:

    அய்யா..என்ன ஒரு அருமையான கருத்து. விட்டால் தமிழில் பேசுவதையும் விட்டு விட்டு சிங்களத்துடன் ஒன்றிவிடுங்கள் என்றும் சொல்வீர்கள் போலுள்ளதே. எல்லாம் தமிழனின் தலைவிதி

 25. Avatar
  Dr.G.Johnson says:

  ஈழத் தமிழர்கள் தனி நாட்டுக்குப் போராடுவது, அல்லது அடிப்பதை மனித உரிமைக்காக ஏங்குவது சரியோ சரியில்லையோ, சமீபத்தில் நடந்துள்ள அப்பாவித் தமிழர்களின் படுகொலைக்குப் பின் அதை எதிர்த்து தமிழக மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர் அதோடு தமிழக சட்டமன்றத்திலும் அனைத்து கட்சிகளும் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். இவற்றை எல்லாம் மீறி ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளப்போவதாக ஒற்றைக் காலில் நிற்பது தமிழ் நாடு என்ற மாநிலத்தையும், தமிழ் மக்களையும் அவமதிப்பதோடு , அவர்களை இழிவு படுத்தும் செயலாகும். சொந்த நாட்டிலேயே தமிழனின் நிலை இதுதானா? இதுபோன்று தமிழன் இன்னும் எத்தனைக் காலம் அடிமையாக வாழ வேண்டியுள்ளது.? அப்படி மீறி இந்தியா கலந்துகொண்டால் தமிழ் நாடும் தமிழக மக்களும் என்ன செய்யப் போகிறார்கள்?…..டாக்டர் ஜி. ஜான்சன்.

 26. Avatar
  புனைப்பெயரில் says:

  அப்படி மீறி இந்தியா கலந்துகொண்டால் தமிழ் நாடும் தமிழக மக்களும் என்ன செய்யப் போகிறார்கள்?–> தூரத்து மலேசியாவில் இல்லையய்யா…. என்னப் போல் தமிழக மண்ணில் நிறைய பேர் அதை ஆதரிக்கிறோம் – கலந்து கொள்வதை. உங்களுக்கென்ன… பொழுது போகாமல் எரியும் தீயில் எண்ணெய் அல்ல நெய்யைய்யே ஊற்றுமளவு வசதி இருக்கிறது.. ஆனால் தீயால் கருகப்போவது சொந்த நாடு தாண்டத தமிழ்க் குடிகளல்லவா…. தமிழன் நிலை சொந்த நாட்டில் நல்லாத் தான் இருக்கு… மலேசியாவில் இல்லை என்று கேள்விப்பட்டோம்… அதற்கு நீங்கள் கேள்வி கேட்கலாமே…

 27. Avatar
  Dr.G.Johnson says:

  காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை தமிழ் நாட்டில் நிறைய பேர்கள் ஆதரிப்பதாகக் கூறும் திரு புனைப்பெயரில் அவர்களே, நீங்கள் கூறுவது உண்மையானால் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எதைக் குறிக்கிறது? தேர்தலின்போது வாக்களித்து இவர்களை சட்டமன்றத்துக்கு அனுப்பிய அனைத்து தமிழ் மக்களின் நிலைபாடு இதுதான் என்பதுதானே? தமிழ் நாட்டில் அதிமுக, திமுக, தேமுதிமுக, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டுகள், ஜனதா தளம் , இன்னும் உள்ள பல அரசியல் கட்சிகள் தவிர தங்களைப்போல் ” கட்சி சேரா தமிழர்கள் ” ஏராளமானோர் உள்ளீர்களா?அதனால்தான் சட்டமன்ற தீர்மானம் பற்றி கவலை இல்லை என்று கூறுகிறீர்களா? எப்போது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோ, அதை அனைத்து தமிழ் மக்களும் ஆதரித்து மத்திய அரசுக்கு தமிழர்களின் ஏகோபித்த உணர்வைத் தெரிவிப்பதன்றோ விவேகமானச் செயல்? அதை விடுத்து இதையெல்லாம் சொல்ல நீ யார் என்பதும், உங்கள் நாட்டில் தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று கேட்பதும் எந்த விதத்தில் நியாயம்? திண்ணையில் வெளிவரும் இந்தியப் பிரச்னைகள் குறித்து இந்தியாவில் வாழும் தமிழர்கள் மட்டும்தானா கருத்துச் சொல்ல வேண்டும்? இது இணையப் பத்திரிக்கை என்பதால்தானே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் ஆர்வத்துடன் படித்தும், கருத்துகளும் எழுதிவருகிறோம்? இது தமிழரின் தன்மானப் பிரச்னை என்பதால்தானே உலகத் தமிழர் அனைவரும் இதில் ஈடுபாடு கொள்கிறோம்? …டாக்டர் ஜி. ஜான்சன்.

 28. Avatar
  Dr.G.Johnson says:

  முன்பு இந்திய சீனப் போரின்போது இந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு ஆதரவு நல்கியதுபோல் இப்போது இலங்கை அரசின் தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழக மக்கள் அணி திரள்வதே இனப்பற்றை பிரதிபலிப்பதாகும். …டாக்டர் ஜி. ஜான்சன்.

 29. Avatar
  Dr.G.Johnson says:

  தமிழர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்ற செய்தியை கலைஞர் தொலைக்காட்சியில் செவிமடுத்து அதிர்ச்சி கொள்ளவில்லை. இது எதிர்ப்பார்த்ததுதான்!.டாக்டர் ஜி. ஜான்சன்..

  1. Avatar
   paandiyan says:

   யாரு தமிழர்கள் . போக வேண்டும் என்று சொன்ன நான் , புனை பெயரில் அவர்கள் எல்லாம் தெலுங்கான ?

 30. Avatar
  paandiyan says:

  //உடனே அவர்களை தங்களது அடையாளங்களை அழித்துக்கொண்டு பெரும்பான்மையினரோடு ஒன்றாகிவிட அறிவுரை கூறுவது கொடூர நகைச்சுவை.

  //

  தேச பிரிவினை போது பங்களாதேஷ் தமிழர்களிடம் இப்படி கூறப்பட்டதாம். அப்போது யாரும் பொங்கவில்லை அதுசரி மகாதீர் இதை திட்டமிட்டு பண்ணியபோது யாரும் கூவவில்லை . சோ இது என்னுடிய கருத்து இல்லை .காபீ பன்ணிய ஒன்று

 31. Avatar
  paandiyan says:

  //முன்பு இந்திய சீனப் போரின்போது இந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு ஆதரவு நல்கியதுபோல் இப்போது இலங்கை அரசின் தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழக மக்கள் அணி திரள்வதே இனப்பற்றை பிரதிபலிப்பதாகும். //

  கருணாநிதி தனக்கு தானா கேள்வி பதில் போல இருக்கின்றது இது. ஒரு 20 தடவை படித்துவிட்டன் ஒன்றும் புரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *