திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்

This entry is part 28 of 29 in the series 3 நவம்பர் 2013

சத்யானந்தன்

செப்டம்பர் 5, 2000 இதழ்:

கட்டுரை : இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்: சின்னக் கருப்பன் – கண்ணப்பன் என்பவர் ஆரம்பித்துள்ள ஜாதிக் கட்சி பற்றிக் கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உள்ள ஜாதிக் கட்சிகளைப் பட்டியலிடுகிறார். சி.க. திரு.வி.க. அவர்களையும் ஜாதி நோக்கில் குறுக்க முயலும் ஒரு ஜாதியைச் சாடுகிறார்.

(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200090515&edition_id=20000905&format=html> )
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்: “அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கை ” – ஆசை. ஆசைத்தம்பி- “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்னும் பழைய தமிழ் சினிமாப் பாட்டு மெட்டில் எழுதப்பட்டுள்ள நகைச்சுவைக் கவிதை அல்லது பாடல். இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ள நிலை இப்போது இந்தியாவிலேயே வந்து விட்டது.

(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=70009053&edition_id=20000905&format=html> )
அறிவியலும் தொழில் நுட்பமும் – கணினிக் கட்டுரைகள் -9 – மா.பரமேஸ்வரன்- Dynamic Fonts என்னும் எழுத்துரு பற்றி விளக்கும் கட்டுரை.
(< www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000905&format=html>)

கதைகள்: ஆயா- தி. ஜானகிராமன், நெற்றிக் கண்- லா.ச. ராமாமிர்தம், கவிதைகள் – மெழுகுவர்த்தியோடு ஒரு பேச்சு – ருத்ரா – (இ.பரமசிவன்), கனவுகள் – திலகபாமா

****************************
செப்டம்பர் 9 2000 இதழ்: சமையல் குறிப்புகள் : சிக்கன் கட்லட், நண்டு பிரை

****************************
செப்டம்பர் 10 2000 இதழ்: கட்டுரை : “நாம் எங்கே இருக்கிறோம் (எழுதியவர் பெயர் இல்லை) – GDP- Gross Domestic Product (தேச மொத்த உற்பத்தி + சேவைகளின் மதிப்பு) ன் அடிப்படையில் உலக நாடுகளின் வரிசைப் படுத்தப் பட்ட பட்டியல்.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=70009101&edition_id=20000910&format=html>)

****************************
செப்டம்பர் 11 2000 இதழ்: மா.அரங்கநாதனின் சில பத்திக் கட்டுரைகள்: மா அரங்கநாதனின் பதிவுகளில் சில துணுக்குகளாக வந்துள்ளன.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60009111&edition_id=20000911&format=html>)
அறிவியல் கட்டுரைகள்: லீனக்ஸ் இயங்குதளம் ஒரு அறிமுகமும் அழைப்பும்- வே.வெங்கடரமணன். வின்டோஸுக்கு இணையாக ஆனால் இலவசமாக இயங்கும் லீனக்ஸ் என்னும் இயங்குதளம் பற்றிய விளக்கக் கட்டுரை
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400091111&edition_id=20000911&format=html>)
அறிவியல் கட்டுரைகள்: கணினிக் கட்டுரைகள் -10 – மா.பரமேஸ்வரன் – வினைத்தள மென்பொருட்கள் – System Software and Application Software பற்றிய கட்டுரை.

(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400091112&edition_id=20000911&format=html> )
கதைகள்: விடுதலை -முடவன் குட்டி, தெய்வம் தீர்ப்பளிக்காது – ராம்ஜி

********************************

செப்டம்பர் 17, 2000 இதழ்:
அறிவியல் கட்டுரை: லினக்ஸ் இயங்குதளம் ஒரு அறிமுகமும் அழைப்பும் – பகுதி 2 – வே.வெங்கடரமணன்
லினக்ஸ் (Operating System) பற்றிய கட்டுரையின் இரண்டாம் பகுதி . (< www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000917&format=html> )

JeyakanthanTW92112

ஜெயகாந்தனுடன் ஒரு உரையாடல் – பேட்டி- பகுதி 1- திண்ணைக்கென ஜெயகாந்தனுடன் எடுத்த பேட்டியின் முதல் பகுதி. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், கங்கை எங்கே போகிறாள் ஆகிய அவரது படைப்புகள் பற்றிய உரையாடல். “டால்ஸ்டாய் இந்தியராக வாழ்ந்த ஐரோப்பியர், நாம் ஐரோப்பியராக வாழ்கிற இந்தியர்கள்” என்னும் ஜெயகாந்தனின் பதில் கூர்மையானது.

(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600091715&edition_id=20000917&format=html> )

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் : எத்தனை முறை படித்தாலும் தமிழர்களுக்கு அலுக்காத தமிழ் ஜோக்குகள்

கதைகள்: அப்பாவின் பிறந்த நாள் – சூசன், சட்டை -ஷாராஜ்; கவிதைகள்: தேவதச்சன் கவிதைகள், இரவின் மடியில் -கோகுல கண்ணன்

கேரள தேசத்தில் தலித்துகளின் பள்ளி நுழைவுப் போராட்டம் – எ.எம்.சாலமன் – 1908 முதல் 1910 வரை அய்யங்காளி என்னும் தலித், எல்லோரையும் போல தலித் பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நடத்திய போராட்டம் பற்றிய கட்டுரை. தலித் பிள்ளைகள் படிப்பதை எதிர்த்துப் பத்திரிக்கைத் தலையங்கம் எழுதப்பட்டது. வன்முறையாலும் அவர்களைப் பள்ளிக் கூடம் செல்லாமல் தடுக்க முயற்சி நடந்தது என்பதை வாசிக்கும் போது அதிர்ச்சி அடைகிறோம்.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20009181&edition_id=20000918&format=html>)

அரங்கம் – பார்வையாளர் – விடுதலை – அகஸ்டோ போவால் எழுதிய Theatre of the oppressed நூலிலிருந்து சில பக்கங்களின் மொழிபெயர்ப்பு. பார்வையாளன் அன்னியப்படுத்தப் படாமல் அவர் மேடையில் அரங்கேறும் நாடகம், கவிதைகளின் செயற்பாடான புரட்சிகரமான ஒரு மாற்றத்துக்கான ஒரு ஒத்திகையாக நாடகத்தைப் பார்ப்பது பற்றிய பதிவு.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60009181&edition_id=20000918&format=html>)

***************************************

செப்டம்பர் 23, 2000 இதழ்:

சுந்தர ராமசாமியின் “குழந்தைகள், பெண்கள், ஆண்கள்” நாவல் விமர்சனம்- க. பஞ்சாங்கம் – பகுதி 1- அவரது விமர்சனத்தை சுருக்குவது கடினம். ஒரு பகுதி: “நாவல் அடிப்படையில் சுயவரலாற்று நாவலாக இயங்குவது தான். கதை சொல்லியின் ஆளுமை எஸ்.ஆர்.எஸ் ஸுக்குள் மட்டுமல்ல, எல்லா பாத்திரங்களுக்குள்ளும் நீக்கமற நிறைந்து வழிகிறது. மேலும் சுரா என்னும் மனிதரும் நாவலின் கதை சொல்லியும் பிரித்துப் பார்க்க முடியாத படி கரைந்து கிடக்கின்றனர்”
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60009231&edition_id=20000923&format=html> )

******************************************
செப்டம்பர் 24, 2000 இதழ்:

கட்டுரை: இந்த வாரம் இப்படி- சின்னக் கருப்பன்- செப்டம்பர் 2000 மூன்றாம் வாரத்தின் மாநில, தேசிய, உலக நடப்புகள் பற்றிய செய்திகளை அலசுகிறார். (< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200092414&edition_id=20000924&format=html>)

கட்டுரை: ” என் ராம் சொல்கிறார் ‘சீனா வாழ்க; தலாய் லாமா ஒழிக’ – சீனாவின் அழைப்பை ஏற்று திபெத் சென்ற என்.ராம் சீன அரசின் புகழ் பாடி அதன் அடக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதைச் சாடுகிறார் மஞ்சுளா நவநீதன் (< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200092415&edition_id=20000924&format=html> )

ஜெயகாந்தன் பேட்டி – பகுதி -2: ரிஷிமூலம் மற்றும் ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன பற்றிய பரிமாற்றங்களில் பெரியாரை எதிர்த்த ஜெயகாந்தன் எப்படி சங்கராச்சாரியாரின் பரிந்துரைப்படி சில படைப்புகளை எழுதினார் என்பதை தன்னிலை விளக்கமாக அளிக்கிறார்.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600092414&edition_id=20000924&format=html> )

அறிவியல் கட்டுரை: லினக்ஸ் இயங்குதளம் பிரபலமானது ஏன்? வே.வெங்கடரமணன் – லினக்ஸ் மற்றும் விண்டோஸை ஒப்பிடும் போது முன்னதன் வசதிகளை விளக்கும் கட்டுரை.
(< www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000924&format=html>)
கதைகள்: கண்ணம்மா – கு.அழகிரிசாமி, துறவு- ஜெயகாந்தன், கவிதைகள் : வானமும் கூரையும் – முகையூர் அசதா, திறந்த கடிதம் – மேக குமாரன், பரம்பரை -அமானுஷ்யன்

*******************************************

அக்டோபர் 1, 2000 இதழ்:

கட்டுரை: இந்த வாரம் இப்படி – அக்டோபர் 2, 2000 – சின்னக் கருப்பன் – காந்தி பிறந்த நாள் பற்றிக் குறிப்பிடும் போது ஒரு வங்காள எழுத்தாளர் ஆதரங்களுடன் எழுதியுள்ள கட்டுரையில் மக்களிடையே தேசீய உணர்வைக் கொழுந்து விடச் செய்தது நேதாஜியின் தேசிய ராணுவத்தின் பல தலைவர்கள் பிரிட்டிஷாரால் தூக்கிலடப் பட்டதே என்று குறிப்பிடுகிறார். 2. பங்களாதேஷில் நடந்த ராணுவ வெறியாட்டத்துக்கு மன்னிப்புக் கேட்காத பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையை மட்டும் ஏன் விடாமல் எழுப்பி வருகிறது? 3.சட்டதுக்கு உட்பட்டவரானதால் நரசிம்மராவ் சி.க. மதிப்பில் உயர்ந்திருக்கிறார். 4. இளைய ரத்தமாக மத்திய அரசில் 48 வயது பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சராகி இருக்கிறார். 5. ஓஸோனில் ஓட்டை போடும் நச்சுப் புகையைக் குறைக்க டீஸல் பெட்ரோல் விலையை அரசு உயர்த்த வேண்டும்.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200100115&edition_id=20001001&format=html>)

விமர்சனம்: சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் விமர்சனம் – க.பஞ்சாங்கம்-
இரண்டாவது மற்றும் நிறைவுப் பகுதியாக வரும் விமர்சனத்தின் ஒரு பகுதி கீழே:
சுத்தம் துல்லியம் என்று அடைய முடியாத ஒன்றிற்காக “மேன் மேலும் கழுவிக் கொட்டுகிறா வாளித் தண்ணீரோடு குழந்தையும் போய்விடக் கூ” என்னும் விழிப்புணர்வோடும் இந்தப் பிரதி தயாரிக்கப் பட்டுள்ளது. அதே அளவிற்கு கவனத்தோடும் நிதானத்தோடும் இப்பிரதி தமிழ்ச் சூழலில் வாசிக்கப் படுமா?
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60010011&edition_id=20001001&format=html> )

திண்ணைக்கு ஜெயகாந்தனின் பேட்டி – நிறைவுப் பகுதி – இதில் ஜெயகாந்தன் திராவிடக் கட்சிகள் மீது தமக்குள்ள அவநம்பிக்கையையும் , இந்திரா காந்தி மீதுள்ள அபிமானத்தையும், மௌனி பற்றி தமக்குள்ள சில மனத்தடைகள் பற்றியும் பேசுகிறார்.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600100115&edition_id=20001001&format=html>)

அறிவியலும் தொழில் நுட்பமும் – மென் கலன் காப்புரிமை – தர்க்க ரீதியான சில முரண்பாடுகள் – வெங்கட ரமணன் – “லினக்ஸ்” பற்றிய் கட்ட்ற்றையின் நான்காம் பகுதி.
(< www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20001001&format=html> )
கதைகள் -தேவன் வருவாரா -ஜெயகாந்தன் , மக்களை ஈர்த்த மகராசர் -தி.ஜானகி ராமன்
கவிதைகள்- திலக பாமாவின் இரண்டு கவிதைகள், சங்க காலத்திய முருகன் பாட்டு- வெறி பாடிய காமக் கண்ணியார்

***********************************************
அக்டோபர் 3 இதழ்

ஒரு வாய்மொழிக் கதை -கி.ராஜநாராயணன்
அக்டோபர் 8,2000:

கட்டுரை: இந்த வாரம் இப்படி- சின்னக் கருப்பன்- 1. நேரு ஐநாவில் பாதுகாப்பு சபை உறுப்பினராக இந்தியாவுக்கு இடம் தரப் பட்ட போது அதை வேண்டாம் என்று மறுத்து அந்த இடத்தை சீனாவுக்குத் தரும்படி கூறினார் என்று ஜஸ்வந்த் சிங் அமெரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டி ஆதாரமுள்ளதா? 2. திபெத்திய பௌத்த பிட்சுணி ஒருவரைச் சீன ராணுவம் சித்திரவதை செய்து கொன்ற செய்தி. இதை என்.ராம் ஆதரிக்கிறாரா? 3.சர்வாதிகாரியைத் தூக்கி எறிந்த யுகோஸ்லேவியப் புரட்சி பாராட்டுக்குரியது.4.ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் ஒரு புலி கொல்லப் பட்டது கண்டனத்துக்கு உரியது. 5. காஞ்சிபுரத்துக்கு ஏன் வெடிகுண்டு மிரட்டல் விடுகிறார்கள்?
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200100814&edition_id=20001008&format=html> )
கட்டுரை: அமெரிக்காவில் வாஜ்பாயியுடன் சென்ற போது ஜஸ்வந்த் சிங் அளித்த பேட்டி.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200100815&edition_id=20001008&format=html> )
கட்டுரை: உயர்ந்த மனிதர் ஜோச்சின் அற்புதம் – பாரி- ஜோச்சின் என்னும் இயற்பெயருடைய தமிழர் ஜோக்கின் என்று மருவி அழைக்கப் பட்டார். மும்பை சேரிப் பகுதியில் வாழ்ந்த அவர் அந்தப் பகுதி மக்களை ஒன்று திரட்டி அவர்களது சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காகப் போராடி வென்றார். அவர்களுக்கென ஒரு கூட்டுறவு வங்கியை நிறுவிய அவர் கீழை நாடுகள் பலவற்றிலும் இந்தப் பணியை விஸ்தரித்தார்.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600100815&edition_id=20001008&format=html> )
ஜெயகாந்தனுடன் ஓர் உரையாடல் – ஒரு பின்னுரை – கோபால் ராஜாராமின் மிகவும் ஆழமான கட்டுரை. அவர் ஜெயகாந்தனின் படைப்புகளில் “ஒரு மனிதன் ஒரு உலகம்” இந்திய மொழிகளில் வந்த தலை சிறந்த நாவல் என்று கருதுகிறார். திராவிட இயக்கங்கள் கலை, பண்பாட்டுக்குப் பங்களிப்பு செய்யவில்லை என்பதை ஏற்கும் அவர், ஜெயகாந்தன் திராவிட இயக்கங்களை முற்றிலுமாக நிராகரிப்பதை ஒப்புக் கொள்ளவில்லை. மன்னர் மானியச் சட்டம் ஒழிக்கப் பட்டு அவர்கள் ஏமாற்றப் பட்டதற்கு ஜெயகாந்தன் கண்டனம் தெரிவித்தார். இது கிட்டத்தட்ட அவர் ஒருவரே எடுத்த நிலைப்பாடு. அரசாங்கம் வாக்குத் தவறக் கூடாது என்றே அவர் கருதினார். தூக்கு தண்டனையை மார்க்ஸியவாதிகள் ஒரு காலகட்டத்தில் ஆதரித்த போது ஜெயகாந்தனே முதலில் எதிர்ப்புத் தெரிவித்தவர். தனி மனிதனின் புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் சுதந்திரத்தில் அரசு தலையிடுவதை அவர் ஏற்கவில்லை. அதே சமயம் கோபால் ராஜாராம் ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் எல்லோருமே கோடுகளைத் தாண்டாத கோலங்களே என்று சுட்டிக் காட்டுகிறார்- ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனையும் சேர்த்து. ஏனெனில் அவன் ஒரு பைத்திய மனநிலையிலேயே காட்டப் படுகிறான்.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600100816&edition_id=20001008&format=html> )

அறிவியலும் தொழில் நுட்பமும்

தளையறு மென் கலன் வரலாறு-வே.வெங்கட ரமணன்- லினக்ஸ் பற்றிய கட்டுரைத் தொடாரின் 5ம் பகுதி
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400100812&edition_id=20001008&format=html>)

கணினிக் கட்டுரைகள் -10- வினைத்தள மென்பொருள்கள் – மா.பரமேஸ்வரன் – வினைத்தள மென்பொருள் (OS) பற்றிய கட்டுரை
(< www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20001008&format=html> )
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

ஆண்களைக் கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள்

கதைகள்:
விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் – தி.ஜானகிராமன், பொம்மை- ஜெயகாந்தன்

கவிதைகள்:
மந்த்ரம், கொள்கை – பசுவய்யா

**************************************************************************
அக்டோபர் 15,2000 இதழ்:

கட்டுரை: இந்த வாரம் இப்படி – அக்டோபர் 16,2000: 1. சீன மொழியின் குவாங் ஜாங் நோபல் பரிசு பெற்றுள்ளார். இதை சீனா கண்டித்திருக்கிறது. இதே போல தலாய் லாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்ட போதும் சீனா கண்டித்தது. 2. பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த இக்பாலின் ஸாரே ஜஹான் ஸே அச்சா பாடலை நாம் கொண்டாடுகிறோம். வாஜ்பாயியின் கவிதையை மொழிபெயர்த்தற்காக அங்கே ஒருவர் தேசத் துரோகி என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளார். 3.வீரப்பனிடமிருந்து சினிமா நடிகரை மீட்க நெடுமாறன் தூது போயிருக்கிறார். அவர் தேசியக் கட்சியில் இருந்து பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து விட்டார். 4. இணைய தளத்தில் பாகிஸ்தான் பத்திரிக்கைகளைப் பார்க்கும் போது அங்கும் ஊழல் தலை விரித்தாடுவதும் , பத்திரிக்கைகளின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதும் தெரிகிறது. 5.இஸ்ரேல் போரை விட்டு அமைதிக்கான முயற்சியில் பாலஸ்தீனத் தலைவர் அராஃபத்துடன் பேச்சு நடத்த வேண்டும்.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200101515&edition_id=20001015&format=html> )

கணினிக் கட்டுரைகள் -11. மா.பரமேஸ்வரன்- விண்டோஸ் 2000த்தின் பயன்கள் பற்றிய கட்டுரை. அதில் தமிழ் பயன்படுத்தும் மென்பொருள் விரைவில் வர இருக்கிறது.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400101511&edition_id=20001015&format=html> )

கதைகள் – கற்பக விருட்சம் – கு.அழகிரிசாமி, கவிதைகள் -சங்ககாலத்திய அகநானூற்று இராமன் பாடல் – மதுரைத் தமிழ் கூத்தன் கடுவன் மன்னன், கூத்தாடி அப்பா – நாகரத்தினம் கிருஷ்ணா, ஏதோ ஒரு பறவை – உமா மகேஸ்வரி

******************************************************************************

அக்டோபர் 22, 2000 இதழ்:

இந்த வாரம் இப்படி – சின்னக் கருப்பன் – 1.மார்க்ஸிஸ்ட் கட்சியை தேர்தல் ஆணையம் பிராந்தியக் கட்சி என்று அறிவித்து விட்டது. 2. கிறித்துவர்கள் ஆதியில் ஹிந்துக்களாக இருந்தவர்கள் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சனம் பேசியிருப்பது விஷமத்தனமான பேச்சு. 3. பாரதி திரைப்படம் வரவேற்புப் பெற்றிருப்பது நல்ல விஷயம்.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200102214&edition_id=20001022&format=html>)

மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும் – ஃப்ரான்ஷ்வா காதியே என்னும் பிரென்சு பிரஜை ஆரோவில்லில் வசிப்பவர். இவரது புத்தகமான “இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதுவது ” என்பதின் ஒரு பகுதியின் மொழி பெயர்ப்பே இந்தக் கட்டுரை. மறுப்புவாதம் (negationism) என்பதற்குப் பொருள் ஒரு இனப் படுகொலையைச் செய்து விட்டு அதை முற்றிலுமாக அல்லது பகுதியாக மறுப்பது அல்லது பாதிக்கப் பட்டோரது எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுவது. இந்தக் கட்டுரையின் படி லட்சக் கணக்கான கொலைகள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் நிகழ்ந்தன. இவற்றை லேசாகவும் நீர்க்கச் செய்து சித்தரித்தும் அணுகும் போக்கே நேரு, எம்.என். ராய், உதுபி ஆகிய அறிவு ஜீவிகளிடம் காணப் பட்டது.

(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200102215&edition_id=20001022&format=html>)

அக்டோபர் 30 இதழ்:

கட்டுரை: இந்த வாரம் இப்படி- சின்னக் கருப்பன்
தமிழக அரசு பாரதி படத்துக்கு வரி விலக்கு அளித்தது, மயிலை சீனி வேங்கடசாமி, சாமி சிதம்பரனார் நூல்கள் நாட்டுடமையாக்கப் பட்டது , மனோன்மணி சுந்தரனார் பல்கலைக் கழகம் கைதிகளுக்குக் கல்வி தர முன் வந்திருப்பது இவை யாவும் பாராட்டுக்குரியவை. அன்னை தெரஸாவுக்குப் புனிதர் பட்டம் தரப்படுவது நல்லதே. ஆனால் அற்புதங்கள் என்று எவற்றை அவர் பற்றிக் குறிப்பிடுவார்கள்?

(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200102912&edition_id=20001029&format=html> )

பௌத்தமும் ஹிந்து இயக்கமும் – பிரமிள் (லயம் இதழில் 1994ல் பீற் ட்ரேவர்ஸ்ஸின் நூல் விமர்சனமாக வந்த கட்டுரை).பிரமிள் இந்தக் கட்டுரையில் நூல் விமர்சனம் மட்டும் செய்யாமல் இந்தக் கட்டுரையில் இந்தியாவில் பௌத்தம் வேரூன்ற முடியாமற் போனாலும் காலத்தால் அதற்கும் முந்திய ஜைனம் எப்படி பிராமணர்களின் தாக்குதலில் இருந்து தப்பியது என்னும் கேள்விக்கு விடையை அளிக்கிறார். ஜைனம் ஜாதி ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொண்டதே காரணம். காலங்காலமாக கொலைகள், பௌத்தப் புனிதத் தலங்களைப் பாவச் சின்னங்களாகக் கொச்சைப் படுத்துதல் என்று பிராமணர்களின் முயற்சியால் பௌத்தத்தில் இருந்து மக்களை விலக வைக்க் இயன்றது. மேலும் பகவத் கீதை, மகாபாரதம் இவை திரித்து எழுதப் பட்டன. இது மனு தர்மத்துக்கும் பொருந்தும். போக வாழ்க்கையை பௌத்தம் நிராகரிப்பதை மக்கள் ஏற்கத் தயங்கியதும், பிட்சுக்களின் ஒழுக்கக் குறைவும் காரணங்கள். இந்தக் கட்டுரை முழுமையாக அனைவராலும் படிக்கப் பட வேண்டியது.

www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600102911&edition_id=20001029&format=html )

இலக்கியக் கட்டுரை: பாரதி காலம் மீறிய கலைஞன் – யமுனா ராஜேந்திரன்- ஞான ராஜசேகரனின் பாரதி படம் பற்றிய விமர்சனம் – பாரதி படத்தில் மூன்று நிலைகளில் காட்டப் பட்டிருக்கிறார். ஒன்று பாரதி என்னும் குடும்பத் தலைவன், பாரதியின் சுதந்திரப் போர் மற்றும் (சாதி அடிப்படையிலான) இன்றைய விமர்சனங்களுடன் பாரதியை மறு வாசிப்புச் செய்தல். சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவரது பங்களிப்பு நாடக மயமாக்கத்துடன் காட்டப் பட்டாலும் ஒரு மனிதனாகவும் ஒரு கவிஞனாகவும் அவரது அடையாளம் சிதைவில்லாமல் சொல்லப் பட்டிருக்கிறது.

(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600102914&edition_id=20001029&format=html> )

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்: லினக்ஸும் இந்தியாவும் – வெங்கட ரமணன்- லினக்ஸ் இயங்கு தளம் பற்றிய தொடரின் ஏழாவது பகுதி.
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400102911&edition_id=20001029&format=html>)

சனிக்கிரகத்தைச் சுற்றி மேலும் நான்கு சந்திரன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400102912&edition_id=20001029&format=html> )

உலக வெப்ப ஏற்றம் நாம் பயந்ததை விட மோசம்
(< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400102913&edition_id=20001029&format=html> )

கவிதை – தானா -வ.ஐ.ச.ஜெயபாலன்
கதைகள்- மிதிபட- வண்ணதாசன், எனது ஊர் – சித்திரலேகா

*****************************************************************

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7 ஜராசந்தன்தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. !
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Comments

 1. Avatar
  ஷாலி says:

  தமிழ் நாட்டில் தலித்கள் ஆலய நுழைவு போராட்டம் நடத்தியதை படித்திருக்கின்றோம்.ஆனால் கேரளாவில் படிப்பதற்கு பள்ளி நுழைவு போராட்டம் நடந்தது, ஹிந்து மேல்ஜாதி ஆதிக்க சக்திகளின் கோரமுகத்தின் மறு பக்கம்.

  உதாரணத்திற்கு ..
  ‘நம் (மேல்சாதியினருடைய) ஆசாரங்களிலும் கூட தலித்துகளுக்கு சமத்துவம் வேண்டும் என வாதிடக்கூடியவர்கள் ஒரு காரியத்தை மறந்து போகிறார்கள். அதாவது, நம் பாடசாலைகளில் சேர்ப்பதற்காக வேநி கொண்டுவரக்கூடிய பிள்ளைகளின் யோக்கியதையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவது நல்லது. அவர்கள் தங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இப்படி முன்வரத் துவங்குகிறார்கள் எனத் தெரியவில்லை. தலைமுறை தலைமுறையாக தங்கள் அறிவை, சேற்றில் இறங்கி வேலை செயவதிலேயே ஈடுபடுத்தி வந்த இந்த சாதிக்காரர்கள், காலங்காலமாக மேல்நிலையிலேயே இருந்து வருகின்ற சாதிக்காரர்களுடைய பிள்ளைகளுக்கு சரி-நிகர் சமானமாக உட்கார்ந்து படிப்பதென்பது – ஒரு குதிரையையும் ஒரு எருமை மாட்டினையும் பிடித்து ஒரே நுகத்தடியில் கட்டுவதற்கு சமம் அல்லவா…! ‘ என்று சுதேசாபிமானி என்ற மலையாள இதழில் , 1910இல், நெய்யாற்றின் கரையிலுள்ள கே. ராமகிருஷ்ணப்பிள்ளை என்ற அறிவு ஜீவியின் தலையங்கம் இங்கு குறிப்பிடத்தகுந்ததாகும்.
  அன்று அவர்களது தலைவராக இருந்தவர் கொச்சப்பி பிள்ளை என்பவராவார்.
  ‘எங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் கீழ்ச்சாதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு படிப்பதற்காக அனுமதி வழங்கக் கூடாது. அதையும் மீறி அவர்கள் உள்ளே அனுமதிக்கப் படுவார்களேயானால், அப்பள்ளிக்கூடம் அடித்து நொறுக்கப்படும் ‘ என மேல்சாதியினர் ஓர் அணியில் நின்று கொண்டு, ஒரே குரலாக எச்சரிக்கை செய்தனர்.
  இந்த மேல்சாதி ஆணவத்தை அன்றே உடைத்தெரிந்ததால்தான் இன்று முழு எழுத்தறிவு பெற்ற மாநிலங்களில் கேரளம் முதலிடத்தில் உள்ளது.
  http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20009181&edition_id=20000918&format=html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *