கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

தோழியர் கே.வி காலமாகி விட்டார். நண்பர் ரகு என்னிடம் சொன்னார்.  சமுத்திர குப்பத்திலிருந்தும்  எனக்குச் செய்தி  சொன்னார்கள். தொழிற்சங்க இயக்கத்தில் இப்படித்தான்  தோழர் தோழியரை  பெயருக்குப்பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வைத்து மட்டுமே  அழைத்தார்கள் இன்னும் அழைக்கிறார்கள். ஈ எம் எஸ், பி ஆர், எம் கே, ஆர் என் கே, எஸ் எஸ் டி ,ஒ பி ஜி, இப்படித்தான் தலைவர்களின் பெயரைச் சொல்லிக்கொள்வார்கள்.வி¡¢ந்து பறந்து  தேசம் தழுவிய இயக்கங்களில் இது எத்தனையோ சவுகர்யத்தை தரமுடியும்.
இப்போது  என் மனம்  தோழியர் கேவி மறைந்து போன விஷயத்தை  ஜீரணிக்க முடியாமல் திண்டாடிகொண்டிருந்தது.
சமுத்திர குப்பத்தை விட்டு நான்தான் புறப்பட்டுச் சென்னை வந்துவிட்டேன்.நான்காண்டுகள் முடிந்து போனது.  நானும் என் விருப்ப மாற்றலில்தான் இந்நகருக்கு  வந்தேன்.பெற்ற மக்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் ஏதோ நாமும் செய்தோமப்பா, சும்மாவா இருந்தோம்  என்று பார்ப்பவர்கட்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்..   இங்கு வந்தபின்னர்  நான் தொ¢ந்து கொண்ட ஒன்று எல்லோருக்கும் தொ¢யவும்வேணும்.   இச்சென்னை மாநகரம்  வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஒரு மாதி¡¢யாயும் உள்ளே நுழைந்து குப்பை கொட்ட ஆரம்பித்தால் வேறு மாதி¡¢யாயும் அனுபவமாகும் என்பதே அது.  சுயமாக  அனுபவப்பட்டால் மட்டுமே  எதுவும் பு¡¢யக்கூடிய ஒரு இனத்துக்காரன்தானே நான் ஆகத்தான் இப்படியோ.
என் பையனும்  இங்கு ஒரு வேலை தேடிக்கொண்டான்.’ தெருவுல போகிற நாய்க்குட்டிகூட எஞ்ஜினீ¡¢ங்க்  படிக்கிற காலம் இது’ எனக்குத்தொ¢ந்த உள்ளூர் நண்பர்  தருமங்குடி  வாகீசம்பிள்ளை என்னிடம் சொன்னதுதான். வருத்தப்பட்டுக்கொள்ள ஒன்றும் இதில் விஷயமில்லை. அவனும் அந்த இதுதான் படித்தான். கிடைத்தது  சுமாரான வேலை. பார்க்கிற வேலையில் நல்ல வேலை சுமாரான  என்று  என்ன ஜாதி ப்பி¡¢வு வேண்டி இருக்கிறது.   மத்திய மாநில அரசாங்கத்துச்  செங்கோட்டை வேலைக்கே இன்று பென்ஷன் இத்யாதிகள் பூச்சியமாகி விட்ட கலி காலம்.   இங்கு  சென்னையில் என் மகன் அவனோடு நான்.  இது  மட்டும் என் மனதிற்கு ஒரு நிறைவு.மற்றபடி  இங்கத்திய என் வரவு அவனுக்கு எப்படி அனுபவ மாகிறதோ.

தோழியர் கேவி பணி ஓய்வு கூட பெறவில்லை.அதற்கு இன்னும் மூன்றாண்டுகள்  பாக்கி இருக்கலாம். கே வி நல்ல ஒரு சிந்தனையாளர்.எல்லோருக்கும் உதவி செய்வதில் இயல்பாக முனைப்பு காட்டும் அதிசயப்பிறவி. அலுவலகப்பணியில் எது மிகவும் தொல்லை தருமோ அது அவருக்கு ஒதுக்கப்படும்.அது தான் எங்கும்  நியதி. நல்ல மனிதராய் இருப்பதில் எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கவே செய்யும். ஆக அதற்காக ஒருவா¢ன் இயல்பான சுபாவகங்கள் மாறிவிடுமா. கே வி சொல்லி க்கொள்ளும்படியாகவே எல்லோருக்கும் உதவியாய் இருந்தார்.அவருக்கு  சங்கத்துக்காரர்கள்  பொ¢யதாய்ச் ஒன்றும் செய்துவிடவில்லை. அவர் எதிர்பார்க்கவுமில்லை.
.
.கேவி வேலை பார்த்த அலுவலக வாயிலில் தொழிற்சங்கக்கொடி அரைக்கம்பத்தில் பறந்து தன் துயரை காண்போர்க்கெல்லாம் அறிவித்தது.இந்த கொடி மரத்தின் கீழே எத்தனையோ முறை  தோழியர் கே வி கொடி ஏற்றி க்கோஷமிட்டதை ப்பார்த்திருக்கிறேன்.மேதினம் மகளிர்தினம் எல்லாம்  கே வி தலைமையிலேதான் நிகழும்.மகளிரை சமூகத்தின் முன்னணிக்குக்கொண்டு செல்லவேண்டும் என்பதில் அத்தனை ஆத்மார்த்த  அக்கறை. எந்த மேடையிலும் மகளா¢ன் பங்கு  கூடி இருப்பதை சாதித்துக்காட்டுவார் கேவி.மகளிர்தினம்  சிறப்பாகக்கொண்டாட எத்தனையோ முன்னோடிகள்  எங்கிருந்தோ எல்லாம் இங்கே அழைக்கப்பட்டார்கள்.கொஞ்சம் சொல்லிப்பார்க்கலாம். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், பெண்ணியம் பேசும் ஏ.டி ருக்மணி, கவிதாயினி வெண்ணிலா, எழுத்தாளர் தமிழ்ச்செல்வி,சிந்தனையாளர் பத்மாவதி விவேகானந்தன்,தொழிற்சங்கதலைவர் நசீமா என அடுக்கிக்கொண்டே போகலாம்.கேவி எல்லா அமர்விற்கும் மய்யமாய் இருந்து  பம்பரமாய்ச் செயல்படுவார்.
ஒரு விஷயம் என் நினைவுக்கு வருகிறது. அதுவும் சொல்லி விடுகறேன்.ஒரு முறை  வழக்கம் போல் மகளிர்தினம். அன்று தன் அலுவலகத்தில் பணியாற்றும் எல்லா மகளிருக்கும் கேவி ரோஜா மலர் கொடுத்துக்கொண்டே வந்தார்.கணவன் இறந்து கருணை அடிப்படையில் வேலைக்கு வந்தவர்கள்  அந்த ரோஜா மலரை வாங்கித் தலையில் வைத்துக்கொள்ள முடியாமல் முகம் குழைந்துபோயினர்.  பண்பாட்டு விஷயம் அல்லவா இது  மனம் நொந்து போனார் கே வி, அடுத்த ஆண்டு தொடக்கம் மகளிர் தினத்தன்று இனிப்பு மட்டுமே  எல்லோருக்கும் வழங்கினார்.
மறைந்த தோழியர்க்கு அஞ்சலி என்று எழுதி  அவர் பணியாற்றிய  சமுத்திரகுப்பம் அலுவலக வாயிலில் இரு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.இரண்டிலும் சி¡¢த்த முகத்தோடு தொ¢ந்தார் கேவி..என்ன விஷயம் ஒரே செய்தி இரண்டு அஞ்சலி த்தட்டிகள். அருகில் இருந்தோரை சற்று வினவினேன்.’அது தொ¢யாதா சார் இங்க இரன்டு கோஷ்டி ஆயிபோச்சி.தொழிற்சங்கத்தில இப்ப சாதி  விஷயம் பேசுறாங்க  கையில காசும்  கூட வருது.  யாருக்கும்   இப்ப ஒண்ணும் செருமம் இல்லே. அதுதான் ரெண்டுதட்டி வச்சி இருக்காங்களே பாக்குல’
‘ஒண்ணு சா¢ ஒண்ணு தப்பு’
‘சார் இங்க எது சா¢ எது தப்புன்னு யாரு சொல்லுறது யாரு கேட்கிறது’
மனதிற்கு ச்சங்கடமாக இருந்தது.கொள்கை வேறுபாடு கருத்து மோதல்கள் மட்டும்தான் ஆரோக்கியமான விஷயம்.சாதியும் காசும் தன் பங்கு பணியாற்றினால் தோழமையை எங்கே கண்டு தேடுவது.தோழர் சி¡¢ல் இந்தப்ப்குதியில்தான் வாழ்ந்தார். இந்தத்துறையிலே  நல்ல தொழிற்சங்கம் கட்டிய  ஆகப்பொ¢யமனம் அவருக்கு. எல்லையற்ற தோழமை என்பதற்கு  அவரே இலக்கணமாய் வாழ்ந்தார்.அவர் தந்த பெரு வெளிச்சம். அதனில் தோழர் ஜகனும் ரகுவும் ரெங்கனும் இந்தப்பகுதி தோழர்களுக்குக்கிடைத்தார்கள்.   அவர்களே அனுதினமும் இங்கே  தொண்டால் பொழுதளந்த உத்தமர்கள். தோழமை  என்ன என்பதை அவர்களால்தான் இந்தப்பகுதித்தோழர்கள் விளங்கிக்கொகொண்டார்கள்.
எத்தனையோ தொழிற்சங்க வகுப்புக்கள். சிந்திப்புக்கள், சந்திப்புக்கள், கூர்மை விவாதங்கள். ஞானக்கூடுகைகள்.அறிக்கைகள்.பேருரைகள்,போராட்டங்கள், அதிகார வர்க்கத்தின் ஆயிரம் பழிவாங்குதல்கள், அளப்பெரும் தியாகங்கள்,எல்லாம் இப்படி  ஒரு சமயம் மெருகிழந்து போய்விடுதல்  சாத்தியமா. கட்டிய இயக்கமும்,நிகழ்த்திய போராட்டங்களும் எத்தனை எத்தனை.மனத்திரையில் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக்கொன்டிருந்தது.கேவியை மீண்டும் மனதில் நினைத்தபடியே நான் நடந்து கொண்டிருந்தேன்.எந்தப்பதவிக்கும் எந்த மேடைக்கும் ஆசைப்படாத ஒரு தூய்மை.பொறுப்பைத்தட்டிக்கழிக்காத் இயக்க விசுவாசம்,ஆகப்பொ¢ய  அதிகாரக்கொம்பனையும் அதிரவைக்கும் கம்பீரம்,எளிய மனிதர்களோடு எப்போதும்  மெய்உறவு போற்றுதல் எதனைச்சொல்வது எதனை விடுவது.
வர்க்க ஞானம் எதுவெனத்தொ¢ந்து கொண்ட  சமுத்திர குப்பத்து ஆயிரம் தோழர்கள் ஒருவரை ஒருவர்  இன்று அய்யப்பட்டுக்கொண்டும் அச்சப்பட்டுக்கொண்டுமா நாட்கள் போவது.மனம் எப்படி எல்லாமோ சிந்தித்துக்கொண்டே இருந்தது.பதவியும் பணமும் நோய் அன்றி வேறில்லை.மனிதன் நீர்த்துத்தான் போகிறான் என்பது  நிதா¢சனமாகும் மெய்.
கேவி வாழ்ந்த வீட்டருகே வந்தாயிற்று.தொழிற்சங்கக்கொடிகள் தெருவில் ஒன்றிரெண்டு கட்டப்பட்டு  அவா¢ன் வாழ்ந்த இல்லத்திற்கு வழிகாட்டிக்கொண்டிருந்தன.
கேவியின் கணவர் வீட்டு வாயில்  அருகே அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி பத்து பேருக்கு அமர்ந்து கொண்டிருந்தனர்.நான் நேராக வீட்டின் உள்ளே சென்று கேவியின் உடலம் கிடத்தப்பட்டு க்கிடந்ததைப்பார்த்தேன்.இயக்கத்தின் சக்கரம்  ஒன்று தன் சுழற்சி நிறுத்தி சயனித்து இருப்பதை க்கண்டு என் கண்கள் குளமாகி நின்றன. ஆயிரம் விளக்கங்கள் தரலாம். எதனை எப்படி ஈடு கட்டுவது.  ஒரு நல்ல மனித உயி¡¢ன் இழப்புக்கு ஈடு செய்ய எதுவும் இல்லை. இல்லைதான். தான்வாழ்ந்து முடித்தத மானிட வாழ்க்கையின் நிறைவு சொல்லி கேவியின் முகம் மலர்ந்திருந்தது.
கேவியின் கணவருக்கு என்னமோ தொ¢ந்த  ஆறுதல் சொன்னேன்.அவர் ஒன்றும் சிறு பிள்ளையும் இல்லை.எல்லாம் தொ¢ந்த தோழர்தான். அவர் சொன்னார்
.
‘கேவி போயிட்டா. அவ அளவுக்கு எனக்கு எதுவும் தொ¢யாது.   அவ அளவுக்கு செய்யவும் முடியாது.என்னைக்கட்டிகிட்டு அவதான் கஷ்டப்பட்டு இருப்பா. இன்னும் எவ்வளவோ உயரம் சமூக தளத்தில போகவேண்டிய அந்த மனிஷியை நாந்தான் முட்டுக்கட்டை போட்டு தடுத்துட்டு நிக்கறன்.பாழும் புற்று நோய் கொண்டு போய்விட்டது அவளை.  என் நிலமை  ரொம்ப கஷ்டம்’. அவர் நிறுத்திக்கொண்டார்.
நான் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘ஒண்ணா வாழ்ந்து ஒண்ணா இயங்கி ஒண்ணா  சிவப்புக்கொடிய தூக்கிப்பிடிச்ச  தோழர்கள்  இப்ப ரெண்டு கோஷ்டியா.பி¡¢ஞ்சி  இருக்கறதும் ஒத்தரை ஒத்தர் சந்தேகப்படறதும் வீண் பழி சொல்றதும் கேவியால சகிச்சக முடியல. இப்ப ஏகாதிபத்தியம் அதிகார வர்க்கம் தனியார் மயம் தாராளமயம் உலகமயம்  அது இது எல்லாம் சின்ன விஷயமா போயி ‘ தான் தான்’ என்கிற ஈகோதான் முன்ன நிக்குது. ஆயிரம்  கஷ்டங்களுக்கு இடையிலயும் கேவி மனசுல  இப்படி  ஆழமான வருத்தம் இருந்துகிட்டே இருந்ததுங்கறது உண்மை.’
‘நான் அவா¢ன் கை பிடித்து  நாம் என்ன செய்வது இங்கு யாரும் எல்லாமும் தொ¢ந்துதான் செய்கிறார்கள்’ எனக்கு மனதில் பட்டதைச் சொன்னேன்.
உறவினர்கள் அவரை ஆலோசனை  எதற்கோ அழைத்தார்கள். அவர் வீட்டின் உள்ளே போய்க்கொண்டிருந்தார்.
என்னருகே அமர்ந்திருந்தார் ஒரு தலைவர். அவர் தென் பாண்டிச்சீமைக்காரர்.  மூத்தவர்தான் அவர்தான் என்னிடம்  சொன்னார்.’உங்களுக்கும் தொ¢யட்டும் என்று சொல்லி வைக்கிறேன்’  என்று ஆரம்பித்தார்..
‘இயக்கத்துல சண்டைகள் வரும் கோஷ்டிகள் வரும்  எந்த இயக்கத்துலயும் இது  எல்லாமே சகஜம்தான்.எது ஒண்ணும் அப்படியே இருக்குமா. மாறிகிட்டேதான் இருக்கும். அதுதானே நாம ஒயாம செல்லிகிட்டு இருக்குற வெஷய்ம்.  ஆரோக்கியம் அதுமட்டும்தான்..அவுங்க அவுங்க அவுங்க அளவு மட்டத்துக்குக்குத்தான் சிந்திக்கமுடிய்ம் பு¡¢யுதுங்களா’
‘சா¢’  என்று தலையை ஆட்டியதோடு ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.
‘சிவப்புக்கட்சி ரெண்டா ஒடஞ்சப்ப  கேரளத்து கவு¡¢யும் அந்தத் தாமசும் என்ன ஆனாங்க எப்படி வாழ்ந்தாங்கன்னு  கொஞ்சம் யோசிங்க’
‘ ஆமாம் தோழர் ‘
‘ இதுக எல்லாம் தாண்டி தாண்டிதான் இயக்கம் போவுணும்’
‘பு¡¢யுது தோழர்’ சொல்லி முடித்தேன்.
பொது எதி¡¢யை முழுவ்துமாய் மறந்து விட்டு  தோழர்கள் ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்துவதும், சிறுமைப்படுத்துவதும்  அது எப்படி  மார்க்சியம் ஆகும் என்றுதான் எனக்கு விளங்கவில்லை.அது விஷயம் அவரைக்கேட்கவில்லை.எனக்கு எந்த அளவுக்கு விளங்குமோ அந்த அளவுக்குத்தானே எதுவும் விளங்கும்.
யாருக்கும் சொல்லாமல் உடன் புறப்பட்டேன். இறப்பு வீட்டில் அது ஒரு சவுகா¢யம் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டு விடலாம். சமுத்திர குப்பம் ரொம்பவும் மாறித்தான் போயிருக்கிறது.
—————————————————————————..

Series Navigationஅறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014திண்ணையின் இலக்கியத் தடம்-15ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்ஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரிஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு விமர்சன அரங்குஉடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்துதவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்நிர்வாணிமருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்புநீங்காத நினைவுகள் – 27திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறிசில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லைபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 39என்னை ஆட்கொண்ட இசையும், நானும்கிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் –பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீர் எழுச்சி ஊற்றுகள் முதன்முறைக் கண்டுபிடிப்பு
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    நல்ல கருத்தை சொல்ல வந்த கதையில் நிறைய அச்சுப் பிழைகள் உள்ளதால் சரளமாக படிக்க முடியவில்லை….டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *