வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 2 of 22 in the series 2 பெப்ருவரி 2014

walwhit (Children of Adam)

 

யுகங்கள் மீளும் இடைவெளி விட்டு

(Ages and Ages Returning at Intervals )

(1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

        

யுகங்கள் அடுத்தடுத்து மீளும்

இடைவெளி விட்டு !

அழியாமல்,

நிரந்தர உயிர்ப்புடன்

திரியும் !

காம உணர்ச்சி,

ஆணின் தண்டான உறுப்பு,

ஆற்றல் மிக்க

இடுப்புக்குக் கீழுள்ள

இனவிருத்தி மூலச் சாதனங்கள்,

போன்ற வற்றை

அனுதினம்

ஆதாமின் பாடல்களாய்

ஓதுபவன் நான் !

 

மேலை நாட்டுப்

புதிய பூங்கா ஊடே புகுந்திடப்

பெரு நகரங்கள் என்னை

விளித்திடும் !

மனப் பிதற்றலோடு இப்படி,

முன்குறித்துக் காட்டும்

ஏற்கனவே படைப்புகளை !

இவற்றைச் சமர்ப்பணம் செய்து

என்னை

அர்ப்பணம் செய்வேன்; என்னைக்

குளிப்பாட்டி

என் பாடல்களை

பாலுறவில் மூழ்க்குவேன்,

எனது

தொடைக் கிடையே

உள்ளதின்

கொடைச் சிசுவுக்கு !

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [ January 29, 2012]

Series Navigationமருமகளின் மர்மம் – 14பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்‘ஒப்பனைகள் கலைவதற்கே’ நாவல்தொடுவானம் – 1நவீன எழுத்தாளனின் சமூகஅக்கரைஒரு நிஷ்காம கர்மிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 44ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – 20 குரு க்ஷேத்திரம். பீஷ்மரின் வீழ்ச்சிமருத்துவக் கட்டுரை உணவுக்குழாய் புற்றுநோய்நீங்காத நினைவுகள் 32புன்னகை எனும் பூ மொட்டுதிண்ணையின் இலக்கியத் தடம் -20தினம் என் பயணங்கள் – 3பெண்களின் விஸ்வரூபம் – வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படிகாலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *