கி.மகாதேவன்
இது ஏதோ ஶ்ரீமந்நாரயணிடம் பக்தி கொண்ட இராமாநுஜர் வாழ்க்கை அநுபவமோ அல்லது ஆழ்வார்களின் அநுபவமோ அல்ல.நவீன கர்ம சித்தாந்தங்களில் ஒன்றான திருமாலுக்கு நிகராக நகரமெங்கும் நிறைந்திருக்கும் ஷாப்பிங் மால்கள் பற்றிய ஒரு சுகானுபவம்தான். ஒரு தரமான பொழூதுபோக்கு எவ்வாறு இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர ஒரு அருமையான வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. கார் உள்ளே நுழைந்ததுமே ஒரு செட் துவாரபாலகர்கள் திசைகாட்டினார்கள்.ஒரு கிடுகிடு பள்ளத்தில் கார் இறங்கும் போது தலை சிதறிவிடும் என்று குனிந்துகொள்ள தோன்றியது.பக்கத்தில் டிரைவர் என்னை ஒரு மாதிரியாக பார்க்கவும் எல்லாத்துக்குமே சந்தேகமாப்பா என்று என் பெண் கேட்கவும் சுதாரித்தேன்.ஒரிடத்தில் ஒரு கவுன்டரில் பெண் சீட்டு வழங்கினாள் பி1 க்கு வந்து சுற்றுமுறற்றும் பார்த்தால் ஒருவர் வழிகாட்டினார் பி2 ல் இருந்தவர் கொட்டாவி விட்டபடியே பி3 க்குவழி காட்டினார்.இதுக்கு கீழ் கண்டிப்பாக குருடாயில் தான் கிடைக்கும். போர்காலங்களில் பதுங்கு குழியில் தங்குவதுபோல் இங்கு நிரந்தரமாக தங்கிவிட்டால் இந்த பொருளாதார யுத்தத்தில் தப்பிவிடலாம்.என்ற உயிராசை எற்பட்டது. கீ கீ என்ற மெஷின் கத்தி லிப்டில் எறியதும் குடும்பத்தில் குழப்பம் பெண் முன்றாவது மாடி மனைவி முதல் மாடி என்றார்கள். நான பலமுள்ள பக்கம்தான் மகள் வெற்றி முன்றாம்மாடியில் மாவை சிக்கனில் தடவி பொரிக்கும் ஒரு கடைக்குபோகவேண்டும் என்றாள். .மனைவி ஒரு சாக பட்சினி.அவர்களுக்குள் ஓர் உடன்பாடு எற்பட்டது நான் தனித்துவிடப்பட்டேன். நான் அவர்களிடமிருந்து அனுமதிபெற்று ஒரு மசால் தோசை சாப்பிடுவதாக கூறி வெளியே நடந்தேன். எனக்குள் சற்று வயது குறைந்தது. மாசமா அறுமாசமா எங்கி தவித்தேனே இந்த தனிமைக்கு என்று பாட தோன்றியது. சற்று வெட்கத்தைவிட்டு ஒரு பெண்ணிடம் கேன் ஜ கெட் மசால் தோசை ஹியர்? என்று கேட்டதற்கு எனக்கு பதில் சொல்வதே பாவம் என்பதை போல் என்னை ஒரு திசை நோக்கி காட்டினாள்..நன்றி என்று சொல்வதற்க்கு முன் அடுத்த கஸ்டமரிடம் பேசினாள்.கவுன்டரில் முன்று இளைஞர்கள் கலர் சீருடைகளில் இருந்தனர்..எனக்கு முன் பத்தாம் கிளாஸ் படிக்கும் பிராயத்தில் லட்சுமி மேனன் போன்ற பெண் தன் தம்பியுடன் நின்றிருந்தது.கவுன்டர் இளைஞன் அந்த பெண்ணிடம் கூடுதல் சிரிப்பில் எதோ விபரம் சொல்லி கொண்டிருந்தான்.சிறிது உரையாடலுக்குபிறகு ரூ1000 தாளை அந்த பெண் கொடுத்தாள். அந்த பையன் ஒரு அட்டை கொடுத்தான். என் முறை வந்தது என்னை பார்த்ததும் அளவாக புன்னகைத்தான்.இதை கற்றுகொள்ளவேண்டும் என்று தோன்றியது.ஐம்பத்தி முன்று வயதில் நான் யாரையாவது பார்த்து சிரித்தால் அவர்கள் போன பிறகும் என் முகத்தில் சிரிப்பு மிச்சம் இருப்பதாக உணர்ந்து நானே பல சமயங்களில் அதை ஸிவிட்ச் ஆப் செய்துள்ளேன். ஒரு கார்டு வாங்கி டாப்அப் பண்ணுங்கள் சார் மினிமம் டு ஹண்ட்ரட் என்றான். எனக்கு தேவை மசால்தோசை கார்டு இல்லை என்றேன். மசால்தோசை இந்த முறையில்தான் கிடைக்கும் என்றான். மேலும் போர்டில் மசால் தோசை தீய்ந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல போனற பல அறிவுருத்தல்கள் இருந்தது. ரூ200 கொடுத்தவுடன் யுவர் நேம் மொபைல் நம்பர் எனறான். மசால்தோசை மொபைல் உள்ளவர்கள்தான் சாப்பிடவேண்டும் என்ற கண்டிஷன் உள்ளதா என்று கேட்டேன். இது ப்யுச்சர் ரப்பரன்ஸ்க்கு உதவும் சார் என்றான்.. சிரித்துகொண்டேன் பின்னால் நிறைய எஸ்.எம்.எஸ் வருவது உறுதியானது. நல்லவேளை ஆதார் அட்டை கேட்கவில்லை.அந்த நிலை வரும் என்றே தோன்றியது. மசால்தோசைக்கு ஸ்வைப் செய்துவிட்டு அந்த பெண் வெறே என்று கண்ணால் கேட்டாள்.அவ்வளவுதான் என்றேன்.வீ வில் கால் யு என்றாள்..பலர் கவலையுடன் உணவு வரும் திசை நோக்கி பார்த்துகொண்டிருந்திருந்தனர்..பதார்தங்கள் வரும் போது எர்போர்டில் தன் மகள் வருகையை எதிர்பார்க்கும் தந்தையைபோல ஏங்கினர்..கிடைத்தவர்கள் முகத்தில் பல்ப் எரிந்தது. மற்றவர்களை துச்சமாக பார்த்தனர்..லேட்டானவர்களுக்கு எரிச்சலை விட கவலையே அதிகமானது.சற்று பொறுத்துவிட்டு மை மசால்தோசை என்றேன். வெயிட் ப்ளீஸ் என்றாள். மகாதேவ் மசால் கௌன் என்றான் பீகார் இளைஞன் ஒருவன்.நான் திரும்பி பார்த்தேன் அந்த பெண் அடையாளம் கண்டு தேர் தேர் என்றாள்.நான் சீட்டை கொடுத்து மசால்தோசை தட்டை சீர் போல் கையில் ஏந்தி உட்கார இடம் தேடினேன்.இடமேயில்லை ஓரிடத்தில் ஒருகுடும்பம் முன்று பேருடன் உட்கார்ந்திருந்தது.அங்கே நான் அமரலாமா என்று கேட்டு நாலாவதாக அமர்ந்தேன. உடுருவிய பாகிஸ்தான் தீவீரவாதியை பார்ப்பது போல என்னை பார்த்தனர். தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலை அந்த வயதான பாட்டி மறைத்தாள்..மசால்தோசை பாதி சாப்பிடும்போது விக்கல் வந்தால் என்ன செய்வது என்ற பயம் வந்தது.. அந்த குடும்பத்தை பார்த்தேன் என் கண்ணில் கலவரத்தை அவர்கள் கண்டுபிடித்து என்னை சபையில் வைக்கபட்ட ஆதர்ஷ் ரிப்போர்ட் போல என்னை நிராகரித்து பார்த்தாகள்.பாட்டி மட்டும் நிச்சியம் கோவிலுக்கு வேண்டிக் கொண்டிருக்ககூடும்..வந்தேவிட்டது விக்கல் தண்ணீர் எங்கோ ஒரு இடத்தில் எதோ கோர்ட் உத்தரவில் வைக்கப்பட்டிருக்கும்..மற்றவரகளிடம் கோக்கும் வாட்டர் பாட்டில்களு;ம் இருந்தது. தேடி தண்ணீர் குடித்து கை கழவி அட்டையை எடுத்துகொண்டு பாக்கி வசூல்க்கு புறப்பட்டேன..கவுன்டர் இளைஞன் ரெண்டு ரூபா இருக்கா சார் என்றான்.மீதீ 85 ரூபாய் கொடுத்தான். கூடவே ஒரு படிவத்தை கொடுத்து என கருத்துகளை எழதீ பெட்டியில் போடுமாறு கூறினான்.சொன்னதை செய்தேன்.இனி குடும’பத்தை பார்க்க சென்றேன்.மனைவி மகள் அமர்ந்திருந்த மேஜை மேல் போல்பாட் கம்போடியாவில் கொலைகளை செய்து காட்சிக்கு வைத்தது போல இருந்தது.எலும்பு குவியல்கள்..மறுபடி லிப்டிற்க்கு வந்து காத்திருந்தோம்.எஸ்கலேட்டரில் போகலாம் என்றாள் மகள்..என் மனைவி சாலமன் குர்ஷீத் அமரிக்காவை எதிர்ப்பது போல கடுமையாக எதிர்த்தாள் என் மனைவிக்கு உண்மையில் பயம்..அங்கிருந்த சில நவ பேரிளம் பெண்கள் எஸ்கலேட்டர் ஆபத்து பற்றி பேசினார்கள்..ஒரு மனிதர் போபியாக்கள் பற்றி பேசினார். லிப்ட் மேலே போய்தான் சார் வரும் என்றான் லிப்ட் ஆசாமி.. சரி நாமும் மேலே போய் கீழே வரலாம் என்றேன் மகள் நோ எனறாள். கெஞ்சும் என் விழிகளை பார்த்து ஒப்புகொண்டாள்..மொபைலில் தேடீ காரில் தூங்கிகொண்டிருந்த டிரைவரை எழப்பி மலைப்பாதையில் .ஏறி வெளியேறும் வழியில் 3 மணி நேரததிற்கு ரூ120 கொடுத்து வெயிலை பார்க்கவும் மனதில் உற்சாகம் வந்து ராஜாராணி நஸ்ரியா நஸிம்போல ஆடதோன்றியது.
.மசால்தோசை ஜீரணமாகி இருந்தது.
மறுபடியுமா ?
- தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு
- பெரியவன் என்பவன்
- தினம் என் பயணங்கள் – 8
- திண்ணையின் இலக்கியத்தடம் – 25
- தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி
- சீதாயணம் நாடகப் படக்கதை – 23
- மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )
- கவிதையில் இருண்மை
- வழக்குரை காதை
- மனத்துக்கினியான்
- ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பிச்சை எடுத்ததுண்டா?
- ‘காசிக்குத்தான்போனாலென்ன’
- வலி
- மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்
- எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது
- இயக்கமும் மயக்கமும்
- மருமகளின் மர்மம் – 19
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
- நீங்காத நினைவுகள் – 37
- செயலற்றவன்
- செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி