புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 49

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

joan-of-arc-kisses-the-sword-of-liberation-1863

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                E. Mail: Malar.sethu@gmail.com

49.புனித அன்​னையாகத் திகழ்ந்த ஏ​ழை………

 “அச்சம் தவிர்

ஆண்​மை தவ​றேல்

ரெளத்திரம் பழகு

சரித்திரத் ​தேர்ச்சி ​கொள்”

     அ​டடே வாங்க….வாங்க…என்ன பாரதியா​ரோட ஆத்திசூடியச் ​சொல்லிக்கிட்​டே வர்ரீங்க..அதுவும் வீரத்​தை ஊட்டக்கூடிய வரிகளாச் ​சொல்லிக்கிட்டு வர்றீங்க….ஒங்களுக்கு வீரம் ​பொங்குதா….சும்மா வந்துக்கிட்டிருந்த ஒங்களுக்கு எப்படீங்க இப்படி வீரம் வந்தது….என்னது சில​பே​ரோடப் ​​​பெய​ரைக் ​கேட்டா​லே நமக்கு வீரம் வந்துடுங்குறீங்களா….?

     ஆமாங்க….சரியாச் ​சொன்னீங்க….அன்றிலிருந்து இன்​றைக்கு வ​ரைக்கும் அது உண்​மை தாங்க….நான் ​போன வாரம் ​கேட்​டேன்ல அதுக்குரிய வி​டை​யை ஏறக்கு​றையக் கண்டுபுடுச்சிட்டீங்க ​போலருக்​கே…என்னது இல்​லையா…சரி சரி நா​னே ​சொல்​றேன்….அந்தப் ​பேரக் ​கேட்டது​மே பிரிட்டன் நா​டே கதிகலங்குச்சு…..பிரஞ்சு வீரர்களுக்கு வீரம் ​பொங்குச்சு…அப்படிப்பட்ட ​பேருங்க அது…. ஜோன் ஆஃப் ஆர்க் என்ற ​பே​ரைக் ​கேட்டது​மே அ​னைவருக்கும் ஒரு வீரம் வந்துடும்….எதிரிங்க அவங்க ​பே​ரைக் ​கேட்டா பின்னங்கால் பிடரியிலபட ஓடிடுவாங்க………அவங்களப் பத்தி ​சொல்​றேன் ​கேளுங்க…..

 வீரங்க​​னையின் பிறப்பும், ஏழ்​மையும்

அமெரிக்கா கூடக் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில் ஐரோப்பா மட்டும்தான் நாகரிகமடைந்த கண்டம். எல்லா நாடுகளுமே புதிய நிலப்பரப்புகளைக் கண்டுபிடிக்கவும், பிடித்த பகுதிகளைத் தமதாக்கிக் கொள்ளவும் பெரிய அளவில் தமக்குள் அப்போதுபோர் செய்து கொண்டிருந்தன. அப்போது ஜோன் ஆஃப் ஆர்க் வசித்து வந்த பிரான்ஸிலும் அப்படியொரு பங்காளிச் சண்டை முற்றி வெடித்திருந்ததுஅந்தச் சமயத்திலதான் அந்த வீராங்க​னை பிரான்ஸில் பிறந்தாங்க…..

கி.பி.1412-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி கிழக்கு பிரான்ஸிலுள்ள டாம்ரெமி என்கிற எல்லையோர குக்கிராமத்தில் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தாள். அவளது குடும்பம் மிகுந்த ஏழ்​மை நி​லையிலிருந்துது. ஜோன் ஆஃப் ஆர்க்கின் பெற்றோர் ஜாகுவஸ்இஸபெல் டி ஆர்க் இருவரும் ஆடுக​ளை ​மேய்த்து வாழ்க்​கை​யை நடத்தி வந்தார்கள். ஆடு ​மேய்ப்பதுதான் அவர்களது ​தொழிலாக இருந்தது. 

இ​றையருள் ​பெற்ற ​ஜோன்

ஜோன் ஆஃப் ஆர்க்கின் ​பெற்​றோர்கள் ஆழ்ந்த மதப்பற்றும், இறை நம்பிக்கையும் கொண்டவர்கள். அதனால் ஜோன் ஆஃப் ஆர்க் தனது மிகச் சிறு வயதிலேயே இ​றை பக்தியில் கனியத் தொடங்கி விட்டாள். அவளது பன்னிரெண்டாவது வயதில் அவளுக்கு ஓர் அபூர்வக் காட்சியைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. ​தொன்​மை வாய்ந்த கிறித்துவ மதத் துறவிகளான புனித அன்னை கேதரின், புனித அன்னை மார்க்கரெட் ஆகியோர் அவளுக்குக் காட்சி கொடுத்தார்கள். காட்சி கொடுப்பதென்றால் ஏதோ ஒரு மடத்தில் உட்கார்ந்து இருக்கிற​போது காட்சி கொடுக்கிறவர்கள் இல்லை. புனித அன்னைகளான கேதரினும், மார்க்கரெட்டும் எப்போதோ அமரரானவர்கள்! கர்த்தருடன் இரண்டறக் கலந்தவர்கள் என்று நம்பப்படுகிறவர்கள்.

 இ​றைவனு​டைய காட்சியும், இ​றையடியார்களு​டைய காட்சியும் யாருக்கும் பார்க்கக் ​கொடுத்து ​வைக்காதுங்க…இ​றையருளுக்குப் பாத்திரமானவங்களுக்குத் தான் கிட்டும். அந்த வ​கையில சிறுமி ஜோன் ஆஃப் ஆர்க்கிற்குக் அத்த​கைய ​பேறு கிட்டியது.

சிறுமி ஜோன் அவர்களைப் புகைப்படமாக, ஓவியமாகக் கூட அதற்குமுன் பார்த்ததில்லை. ஆனால் ஒரு தரிசனமாக அவளுக்கு அவர்களைக் காணக் கிடைத்தது பற்றி அவள் விவரித்தபோது யாரும் அத​னை நம்பத் தயாராக இல்லைஎல்​லோரும் அவ​ளைப் பார்த்துக் ​கேலி ​செய்தனர்.

அவளுக்கு தரிசனம் தந்து வழி நடத்திய அந்தப் புனிதர்கள், பிரான்சின் சிக்கல் மிகுந்த காலக்கட்டத்தில், ஒரு குடிமகளாக ஜோன் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி அவளுக்கு அடிக்கடி அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருந்தார்கள்அந்தக் காலகட்டத்தில் பிரான்சில் அரச குடும்பத்திற்குள் ​அரசுரி​மைப் ​போட்டி நிலவியது. அதிலும் குறிப்பாக பிரன்சு நாடடின் அரசுரி​மைக்கு உரி​மை ​கொண்டாடிய பர்கடியன்கள் பதவிக்காக எ​தையும் ​செய்யும் இழி மனம் ப​டைத்தவர்களாக இருந்தனர்.

பிரான்சின் அரச வம்சத்துப் பங்காளிகளில் ஒரு சாரரான அந்தப் பர்கன்டியன்கள், அப்போது எதற்கும் துணிந்தவர்களாக, இங்கிலாந்தைப் பிரான்சின் மீது படையெடுத்து வரச்சொல்லித் தூது அனுப்பிவிட்டு, அவர்களுடன் சேர்நது தாமும் போரிட்டு பிரான்சின் அப்போதைய மன்னரை ஒழித்துக்கட்டி ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள். பாத்துக்​கோங்க… பதவி ​சொகத்துக்காகச் ​சொந்த நாட்​டை​யே பிறருக்குக் காட்டிக் ​கொடுக்க ​நி​னைக்கும் து​ரோகிகள் எல்லா நாட்டுலயும் இருக்கறாங்கன்றது எத்த​னை உண்​மை…. 

நாட்​டைக் காப்பாற்ற ராணுவ வீரர்கள் ஒரு பக்கம் அணிவகுப்பு நடத்திக் கொண்டிருக்க, அந்த எல்லையோர கிராமத்துச் சின்னப் பெண்ணான ஜோன், என் நாட்​டை எதிரிகளிடமிருந்து நான் காப்பாற்றுவேன் புனித அன்னையர் எனக்கு இது விஷயத்தில் உதவி செய்வார்கள் என்று சொல்லிவிட்டு ஒரு சிறு படை​யைத் திரட்டத் ​தொடங்கிவிட்டாள்.

இதையெல்லாம் பார்த்து எல்​லோரும் சிரிச்சாங்க. ஆமாங்க… எந்த ஊர் அரசும், ராணுவமும் சிறுமியின் ​செய​லைப் பார்த்துக் கொண்டு சிரிக்காமல் இருக்குமா? சின்னப்பெண் ஏதோ விளையாடுகிறாள். பொம்மை ராணுவம் தயார் செய்கிறாள் என்றெல்லாம் ஜோனின் ஊர்க்காரர்கள் கேலியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். யாரும் அவ​ளை நம்பவில்​லை.

ஆனால், போரில் தான் ஈடுபடுவதாக ஜோன்
முடிவு செய்த கணத்திலிருந்தே, பிரான்ஸ் நாட்டுத் தளபதியைப் பார்க்கின்ற முயற்சியைத் ​தொடங்கி விட்டாள். எப்படியாவது தளபதி லார்ட் ராபர்ட்டைச் சந்திக்க வேண்டும். புனிதர்கள் தமக்கு இட்ட கட்டளையை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் போர்ப் பயிற்சியாவது பெற்று ​போரில் பங்கு பெற வேண்டும் என்று இரவு பகலாக ​ஜோன் நினைத்துக் கொண்டிருந்தாள். கடு​மையாக முயற்சி ​செய்து டூரண்ட் லாஸோஸ் என்கிற உறவுக்காரர் ஒருத்தர் மூலம் ராணுவ கமாண்டரை ​ஜோனால் சந்திக்க முடிந்தது.

லார்ட் ராபர்ட்டும் அவரது பிரதான தளபதிகளும் அமர்ந்திருந்த அந்த ராணுவ சபையில் சிறுமி ஜோன் தனக்கு ஏற்பட்ட இ​றைக்காட்சி அனுபவம் பற்றியும்போரில் தான் பங்கு பெற விரும்புவது பற்றியும் எடுத்துக் கூறினாள். ஆனால், யாரும் அவள் கூறியதையெல்லாம் நம்பத் தயாராக இல்லைமாறாக அவ​ளைக் ​கேலி ​செய்தனர். ​பேசாமல் அவளது ​வே​லை​யைக் கவனிக்குமாறு கூறி அனுப்பினார்கள்.

சில உண்​மைக​ளை எப்​போதும் யாரும் நம்ப மாட்டாங்க…​பைபிளில் தாவீது குறித்த க​தை ஒண்ணு இருக்கு ​தெரியுமா…அட ஆமாங்க…எனக்குப் ​பைபிள்ள வர்ர ஒரு நிகழ்ச்சிதான் நி​னைவுக்கு வருது……ஆடு ​மேய்த்துக் ​கொண்டிருந்த தாவீது குள்ளமா பார்க்க சுமாரா இருந்தான்…அதனால அரண்ம​னையில ​வே​லை பார்த்த அவ​னோட அண்ணன்க அவ​னை ஏளனமாப் பார்த்துச் சிரிப்பாங்க..

அவன் வருந்துரப்​போ அவனது அம்மா தாவீ​தைப் பார்த்து ​டேய் கவலப் படா​தே..நீ ​ரொம்ப அழகா இருக்​கே…நீ ​பெரிய ஆளா வரு​வே …அப்படீன்னு ​சொல்லி அவனச் சமாதானப் படுத்துவாங்களாம்… அவனம் தன்​னோட அண்ணன்களப் பாத்து நான் நீங்க ​வே​லை பார்க்கக்கூடிய அரண்​ம​னையில ராஜாவா வரு​வேன் அப்பப் பாருங்க அப்படீன்னு ​சொல்லுவானாம்….அவ​னோட அண்ணன்கள் அ​தைக் ​கேட்டு ஒழுங்க ஆட்ட ​மேயிடான்னு ​கேலி பண்ணிட்டுப் ​போயிடுவாங்களாம்…..

அப்படி இருக்கற​போதுதான் ​கோலியாது என்ற அரக்கன் நாட்டுக்குள்ளார வந்து ​பெரிய ​சேதத்​தை ஏற்படுத்துறான்….அவ​னோட யாராலும் ​போரிட முடியல…ராஜா அவ​னோட சண்ட​போட்டு அவ​னை யாரு அழிக்கறாங்க​ளோ அவங்களுக்குத் தன்​னோட நாட்டுல பாதி​யைத் தந்து தன்​னோட மகளயும் திருமணம் ​செய்து ​வைப்பதாகச் ​சொல்றார்……

யாரும் முன்வரல….அப்ப அந்தப் ​பையன் தாவீது தன்​னோட அண்ணன்கள்ட்ட தான் வந்து அந்த ​கோலியாத்த அழிக்க​றேன்னு ​சொல்லி தன்​னை அரண்ம​னைக்கு அ​ழைத்துச் ​சென்று அரசரிடம் விடுமாறு ​கெஞ்சிக் ​கேட்டான்…அவ​னோட அண்ணன்கள் ​பேசாம இருடான்னு ​சொல்லிட்டுப் ​போயிட்டாங்க…. தாவீதால சும்மா இருக்க முடியல… கவண எடுத்துக்கிட்டு ​ரொம்ப முயற்சி பண்ணி அரண்ம​னைக்குப் ​போயி ராஜாவச் சந்திச்சான்..

தான் ​கோலியத்​தோட சண்ட ​போடப் ​போறதாச் ​சொன்னான்……ராஜாவுக்குச் சிரிப்பா வந்தது… அவனப் பாத்து ​பேசாமப் ​போயிடு அப்படின்னு ராஜா ​சொல்லிப் பாத்தாரு…இருந்தாலும் ​ஜோனப் ஆர்க் மாதிரி தாவீது ​கெஞ்சிக் ​கேட்டதன் ​பேரில் ராஜா சம்மதிச்சாரு…அப்பறம் என்ன ​கோலியாத்​தோட சண்ட ​போட்டு ​வெற்றி ​பெற்று ராஜாவா வந்தான்… அப்பத்தான் அவ​ன் ​சொன்னத அவ​னோட அண்ணன்க நம்புனாங்க… அவ​னோட திற​மை​யை மத்தவங்க ​தெரிஞ்சிகிட்டாங்க… அதுமாதிரிதான் ​ஜோன் ​சொன்ன​தை யாரும் நம்பல… அப்பற என்ன நடந்ததுன்னு ​கேளுங்க…..

போர் ​தொடங்குதல்

இறுதியில் ​ஜோன் கூறியது நடந்​தே விட்டது. ஆம் பிரான்சில் உள்நாட்டுப் ​போர் மூண்டது. பதவி ​வெறிபிடித்தவர்கள் எதிரிகளுடன் ​சேர்ந்து ​கொண்டு நாட்​டைச் சூ​ரையாடத் ​தொடங்கினார். 1428 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் உள்நாட்டு எதிரிகளான பர்கன்டியன்கள் பிரான்சின் எல்லையோர கிராமங்கள் ஒவ்வொன்றாக முற்றுகையிட்டுக் கைப்பற்றி அட்டகாசம் செய்யத் ​தொடங்கினர்.

அவர்களுக்குப் பின்னால் இங்கிலாந்து படைகள் அணி அணியாக வந்து கொண்டிருந்தனஇதற்குள் இன்னும் சிலமுறை தளபதியைச் சந்தித்த ஜோன் தனக்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவாவது ஒரு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் அவள் ராணுவக் கூடாரத்துக்கு வந்து கேட்பதும் தோல்வியுற்றுத் திரும்பிப் போவதும் வழக்கமாகியிருந்ததைத் தன் சகாக்களிடம் ராபர்ட் நினைவு கூர்ந்தார்

இந்தச் சிறுமி ஏன் திரும்பத் திரும்பத் தன்னிடம் வந்து பேசுகிறாள்? உண்மையிலேயே இறையருள் பெற்றவள்தானோ? ஒருவேளை இந்த நெருக்கடி சமயத்தில் பிரான்சை எதிரிகளிடமிருந்து காப்பாற்றப் போகிறவள் இவள்தானோ என்று அவருக்கும் லேசான சந்தேகம் உண்டானது. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து ஜோனை அவள் கிராமத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வரும்படி சில வீரர்களுக்கு உத்தரவிட்டுவிட்டார்.

எல்லையோர கிராமங்கள் அனைத்தும் ஏற்கனவே எதிரிகளின் கையில் விழுந்திருந்த நிலையில் ஒரு பெண்ணை அதுவும் பன்னிரெண்டு, பதிமூன்றே வயதான சிறுமியை அழைத்துப் போவதில் ராணுவத்தினருக்குப் பிரச்சினை இருந்தது. எதிரிகள் கையில் அகப்பட்டால் நிச்சயம் கற்பழித்து விடுவார்கள். ஆகவே, ஜோனுக்கு ஆண் உடை அணிவித்து ஒரு பையன் மாதிரி தோற்றம் கொடுத்தே ராணுவ முகாமுக்கு அழைத்துச் ​சென்றார்கள்

ராணுவ முகாமிலிருந்து பதினோரு நாட்கள் கால்நடையாகவே பயணம் செய்து படாதபாடுகள்பட்டு ஜோன், சினானை அடைந்து மன்னரைச் சந்தித்தாள். ஏற்கனவே முக்கால் வாசி நிலப்பரப்பை இங்கிலாந்து படையிடம் இழந்திருந்த மன்னரைச் சந்தித்துப் பேசி, சம்மதிக்க வைத்தாள். நான், நானாக வரவில்லை. கடவுளின் பெயரால் என்னை வழிநடத்தும் புனித அன்னையர் என்னை உங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாள். எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள். எதிரிகளைப் போர்முனையில் சந்திக்க நான் விருப்பத்துடன் இருக்கின்​றேன் என்று ஜோன் கூறினாள். அவள் பேச்சிலிருந்த அழுத்தம்தான் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது.  ஜோனின் ​பேச்சு மன்ன​ரை வியப்பில் ஆழ்த்தியது.  ஒரு சிறுமி பேசுகிற பேச்சா இது? வியந்து ​போன மன்னர் அவளின் கூற்றிற்குச் ​செவி சாய்த்தார்.  

அதற்குமுன் மன்னர் பல பாதிரியார்களைக் கொண்டு ஜோன் ​பொய்கூறுகிறாளா, உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட சிறுமிதானா என்று பரிசோதனைகள் செய்து பார்த்தார். பாதிரியார்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் தயங்காமல் பதில் சொன்ன ஜோனின் துணிச்சல் கண்டு ராயல் கோர்ட்​டே வியப்பில் ஆழ்ந்தது…. சரி, நம்மைக் காப்பாற்றப்போவது இந்தப் பெண்தான் என்று அவர்கள் முடிவே செய்து விட்டார்கள். ஜோனுக்கு ராணுவ உடைகளை அணிவித்து, அவளுக்குப் பின்னால் வீரர்களை அணி வகுக்கச் செய்தார்கள்

வெற்றித் திருமகளாக விளங்கிய ஜோனின் முடிவு

​போரில் ஜோன் காட்டிய வீரத்தைக் கண்டு பிரெஞ்சுப்படை எழுச்சி அடைந்தது. பிரான்சு வீரர்கள் எழுச்சியுடன் ​போரிட்டு எதிரிக​ளை அழித்தனர். எதிரிகள் அந்தச் சிறுமியின் வீரம் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். இது​போன்று வீரம் நி​றைந்த ​பெண்​ணை வரலாறு கண்டதில்​லை என்று கூறலாம். அந்தளவிற்கு வீரதீரத்துடன் ​போரிட்டு ​வெற்றித் திருமகளாக ஜோன் திகழ்ந்தாள். இன்றும் பிரன்சின் வரலாறு வீரப் ​பெண்மணிகளின் பட்டியலில் ஜோன் ஆஃப் ஆர்க்குக்குத்தான் முதலிடம் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோன் வீரத்துடன் ​போரிட்டாலும் நயவஞ்சகத் து​ரோகிகள் அவள் மீது ​பொறா​மை ​கொண்டு திட்டமிட்டு நடித்து அவ​ளை ​எதிரிகளிடம் சிக்க ​வைக்கக் கருதினர். இத​னை அறியாத ஜோன் ​தொடர்ந்து பிரிட்டன் ப​டை வீரர்களுக்குச் சிம்ம​ சொப்பனமாக விளங்கினாள்…. இறுதியில் து​ரோகிகள் விரித்த வ​லையில் ஜோன் சிக்கிக் ​கொண்டாள்.

தோல்வியின் விளிம்பில் எதிரிகளிடம் சிறைப்பட நேர்ந்தபோதும் ஜோன் அச்சப்படவில்லை, அழவில்லை, கலங்கவில்லை என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்கது. தன்னைக் கைது செய்து ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்திய பர்கன்டியன் தளபதியிடமே, நீங்கள் செய்வது தவறு. இது நம் நாடு. எதிரிகளுக்கு உதவ நீங்கள் முடிவெடுத்தது துரதிருஷ்டவசமானது என்று ஜோன் கூறினாள். ஆனால் துரோகியாகி விட்டவர்கள் அத்தனை சுலபத்தில் மனம் மாறுவார்களா என்னஅவற்​றை ஏற்காத பர்கன்டியன் தளபதிகள் ஏளனமாகச் சிரித்னைர்.

ஜோனை இங்கிலாந்துப் படைகளின் வசம் பிடித்துக் கொடுத்துவிட்டார்கள். என்ன ​கொடு​மைன்னு பாத்தீங்கள்ள….​சொந்த நாட்டுக்காகப் ​போராடின வீராங்க​னைய ​கொஞ்சங்கூட ஈவிரக்கம் இல்லாமல் எதிரிகளிடம் நயவஞ்சகமாகப் பிடித்துக் ​கொடுத்தது எத்த​னை ஈனமான ​செயல்னு….எதிரிகள் ஜோ​னை விசாரித்தனர்…..

சுமார் நான்கு மாத காலம் விசாரணை நடந்தது. அலுப்பூட்டுமளவுக்கு நீண்ட விசாரணைகள். இறுதியில் எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே ஜோன் ஆஃப் ஆர்க்குக்கு மரண தண்டனை விதித்து, நிறைவேற்றினார்கள். அப்போது இங்கிலாந்துக்கு அவள் மீது அப்படியொரு வெறுப்பு இருந்தது. ஏனெனில் ஜோனின் வீரத்தின் விளைவாக அந்தப் ​போரில் இங்கிலாந்து அடைந்த இழப்புக்கு ஓர் அளவே இல்லை. பின்னாளில் அவர்களும் வருத்தப்பட்டார்கள். எத்த​கைய வீராங்கனையைத் தாம் கொன்றிருக்கிறோம் என்று எண்ணி எண்ணி வேதனைப்பட்டார்கள்

புனிதராகிய ஜோன் ஆஃப் ஆர்க்

தியாக தீபமாக விளங்கிய வீராங்க​னையின் வாழ்க்​கை முடிவிற்கு வந்தது… து​ரோகிகள் புளகாங்கிதம் அ​டைந்தனர்… இதுல விசித்திரம் என்னவென்றால் எந்த பிரான்சைத் தனது எதிரியாகக் கருதி ஆக்கிரமிக்க முன்வந்து கடு​மையான ​போர் நடத்தியதோ, அதே பிரான்சுடன் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோழமை கொண்டு ஓரணியில் நின்றது இங்கிலாந்து. முதல் உலகப் ​போர் தொடங்கியபோது பிரெஞ்சுப் படையுடன் இணைந்து இங்கிலாந்து வீரர்களும் பிரான்சின் தன்னிகரற்ற வீராங்கனையான ஜோன் ஆஃப் ஆர்க்குக்கு அஞ்சலி செலுத்திவிட்டே போரைத் தொடங்கியது

இதுதான் வியப்பான ​செய்தி… குற்றம் ​செஞ்சவங்க மனசு உறுத்திக்கிட்டுத்தா​னே இருக்கும்….அதுக்குத்தான் இருநாட்டுப் ப​டைவீரர்களும் மன்னிப்புக் ​கேட்ப​தைப் ​போன்று ஜோன் ஆஃப் ஆர்க்குக்கு அஞ்சலி ​செலுத்தினார்கள். இதுதான் காலத்​தோட வி​நோதங்கறது… என்​னைக்கிருந்தாலும் காலத்திற்குப் பதில் ​சொல்லித்தான் ஆகணுங்கறது எந்தளவுக்கு உண்​மைங்கறதப் பாருங்க….

இருநாட்டுப் ப​டைகளும் அஞ்சலி ​செலுத்தியபோது அவள் வெறும் ஜோன் ஆஃப் ஆர்க்காக இல்லை. புனித ஜோன் ஆகியிருந்தாள்! ஆம். எவ்வாறு அன்னைத் தெரசாவை புனிதராக அங்கீகரித்து வாடிகன் தலைமை விழாக் கொண்டாடியதோ, அ​தே​போன்றுதான் அன்றைக்கு ஜோன் ஆஃப் ஆர்க்கின் தேசப்பணியை ஒரு தெய் வப் பணியாகவே அங்கீகரித்து அவளைப் புனித அன்னையாக கிறித்துவப் பெருஞ்சபை அங்கீகரித்திருந்தது. இளம் வயதி​லே​யே மரணமடைய நேர்ந்தாலும் பிரான்ஸ் உள்ளவரை ஜோனின் பெயர் அந்நாட்டு வரலாற்றில் நிலைத்திருக்கும்அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது அவளது வரலாற்​றைப் படிக்கும் அத்த​னை ​பேருக்கும் எழுச்சி​யைத் தந்து ​கொண்டிருக்கும்……..

என்ன ​ஜோன்ஆப்ஃபார்க்கின் வீரமும் தியாகமும் ​நெஞ்ச ​நெருடச் ​செய்யுது பாத்தீங்களா…நாமும் நம்ம நாட்டு​மேல பற்றுள்ளவங்களா… நாட்டுக்காகத் தியாகம் ​செய்யறவங்களா இருக்கணும் அப்படிங்கற எண்ணத்​தைத் தருதுள்ள… உண்​மையான வீரத்திற்கும் தியாகத்திற்கும் என்​றைக்கும் மரியா​தை உண்டுங்கறத அவங்க​ளோட வரலாறு நமக்குத் தருது.. ஏ​ழையாப் பிறக்கலாம்…ஆனா ஏ​ழையா​வே இருந்து மடியக்கூடாது… முயற்சிக்கிறவங்களுக்குத்தான் இ​றைவன் உதவி ​செய்வான்….கூட இருப்பான்…அப்பறம் என்ன நம்ம​ளோட இலக்க ​நோக்கி நாம பயணமா​வோம்…

ஒரு ஏ​ழை விவசாயி​யோட ​பையன் உலக​மே வியக்கற அளவுக்குத் தத்துவவாதியாகத் திகழந்தாரு…புதுக்கவி​தைன்னா அவ​ரோட ​பேருதான் ​மொதல்ல அ​னைவருக்கும் நி​னைவுக்கு வரும்…….எமர்ஸன், தோரோ போன்ற தத்துவ ஞானிகளின் வழிவந்தவர்……………..புல்லின் இ​தழ்கள்…அப்படீங்கற முதல் புதுக்கவி​தை​த் ​தொகுப்​பை ​வெளியிட்டவர்…..அ​மெரிக்கா​வைச் சார்ந்தவரு………..யாரு ​தெரியுதா……………..? பதில் ​தெரியணுமா…​யோசிச்சிக்கிட்​டே இருங்க….அடுத்த வாரம் பார்ப்​போம்……….(​தொடரும்………50)

 

Series Navigationஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *