திண்ணையின் இலக்கியத் தடம் -29

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

மே 6,2004 இதழ்:
மதங்கள் அழிக்கப்பட வேண்டும்- தந்தை பெரியார்:- பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405063&edition_id=20040506&format=html )

நாராயண குரு எனும் இயக்கம்-2- ஜெயமோகன்- தலித் சிந்தனையாளரான அயோத்திதாசப் பண்டிதர் நாராயண குருவின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதைக் காணலாம். பௌத்த மதம் ஒழிக்கப் பட்ட போது தான் பறையர்கள் தாழ்த்தப் பட்ட மக்களாக ஆனார்கள் என்பது அவர் கருத்து.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405065&edition_id=20040506&format=html )

ஃப்பூக்கோ ஓர் அறிமுகம்- 1- ஆசாரகீனன்- வரலாறு என்னும் கற்பிதம் நிறைய அறுந்த இழைகளைக் கொண்டது. எந்த ஓர் உருப்படியான தர்க்கமும் இல்லாமலேயே பல முறை புது முடிச்சுகள் போடப் பட்டு அறுந்த இழைகள் இணைக்கப் பட்டு புது வரலாறு உற்பத்தி செய்யப் படுகிறது என்றே ஃப்பூக்கோ வாதிட்டார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405069&edition_id=20040506&format=html )

கவிஞர் அன்பாதவனின் ‘நெருப்பில் காய்ச்சிய பறை’ யின் சில அதிர்வுகள்- புதிய மாதவி மும்பை-

திறமை தகுதி அழகென்பதெல்லாம்
உன்னுள் இருப்பது
தேவையற்றதை நீக்கி விட்டால்
தெரிவதது
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60405065&edition_id=20040506&format=html)

சிற்றின்பமும் பேரின்பமும் – (தூங்கும் அழகிகள் இல்லம்- நூல் அறிமுகம்)- பாவண்ணன்- முதுமையின் பாலுணர்வு சுயகௌரவம் என்னும் போர்வையால் போர்த்தப் பட்டு மௌனத்தில் உறைந்திருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60405066&edition_id=20040506&format=html )

மே 13, 2004 இதழ்:
ஈரோட்டுப் பாதை சரியா?-1 -ப.ஜீவானந்தம்- மூன்று காரியங்கள் முடியாமல் நாட்டுக்கு விடுதலை இல்லை என்று குடியரசு இதழில் பெரியார் எழுதினார். அவையாவன:
1.காங்கிரஸ் ஒழிப்பு, 2. இந்து மத ஒழிப்பு, 3.பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405131&edition_id=20040513&format=html )

சன்மார்க்கம்- துன்மார்க்கம்- தந்தை பெரியார்- ஒருவருக்கு சன்மார்க்கமாக இருப்பது மற்றவருக்கு துன்மார்க்கமாகக் காணப் படுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405134&edition_id=20040513&format=html )
ஃப்பூக்கோ ஓர் அறிமுகம்- 2- ஆசாரகீனன்-
ஃப்பூக்கோவைப் பொறுத்து நவீன கால ஆட்சி மனப்பான்மையில் வலது இடது என்னும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405137&edition_id=20040513&format=html )

மே 20, 2004 இதழ்:
ஃப்பூக்கோ ஓர் அறிமுகம்- 3- ஆசாரகீனன்-
தொலை நோக்குத் திட்டங்களைக் கைவசம் வைத்துக் கொண்டு எதிர்ப்புகளை நடத்தினால், அது பிற்பாடு தொலை நோக்குத் திட்டங்களின் அடிப்படையாக மனிதரை ஆக்குகிறது என்று சுலபமாகவே புரிய வைக்கிறார் ஃபூக்கோ.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=204052016&edition_id=20040520&format=html)

ஈரோட்டுப் பாதை சரியா?-1 -ப.ஜீவானந்தம்-
பெரியார் உப்பு சத்தியாக்கிரகத்தை எதிர்த்தார்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405209&edition_id=20040520&format=html )

மே27, 2004 இதழ்:
ஃப்பூக்கோ ஓர் அறிமுகம்- 4- ஆசாரகீனன்-
உடைவுகளும், வெடிப்புகளும், தொடர்பின்மையும், மௌனங்களும், ஒதுக்கல்களும், விபத்துகளும், தற்செயல் நிகழ்வுகளும் மனிதப் பயணத்தை நகர்த்திய அளவு, முனைந்த செயல்பாடும் திட்டமிட்ட இயக்கமும் நடத்தவில்லை என்றே அவர் கருதுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=204052710&edition_id=20040527&format=html)

மே 27, 2004: கிறித்துவ மதத்தில் பிராடஸ்டன்ட் பிரிவு உருவானது போல இஸ்லாமிலும் உருவாக வேண்டும்- ஹஷிம் ஆகாஜாரி- எல்லா மக்களின் உரிமையையும் மதிக்கும் மதமே இன்றைய தேவை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=204052711&edition_id=20040527&format=html)

ஈரோட்டுப் பாதை சரியா?-3 -ப.ஜீவானந்தம்-ஜெயபிரகாஷ் நாராயணன் ஈரோட்டில் ஈவேரா பெரியாரை சந்தித்தார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405277&edition_id=20040527&format=html)

ஜூன் 3, 2004 இதழ்:
ஃப்பூக்கோ ஓர் அறிமுகம்- 5- ஆசாரகீனன்-
கள நிலைகளைக் கருதாது அனைத்து நிலங்களிலும், மக்கள் நடுவேயும் மார்க்ஸியம் வேலை செய்யும் எனக் கருதுவதே இன்னொரு வகையான காலனிய மனப்பாங்கு தான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20406039&edition_id=20040603&format=html )
ஜூன் 10 2004 இதழ்:
ஃப்பூக்கோ ஓர் அறிமுகம்- 6- ஆசாரகீனன்-
கங்கை காவிரி இணைப்புத் திட்டம் செயற்பட்டிருந்தால் சுற்றுச் சூழலை மிகவும் பாதித்திருக்கும். இதை நாம் தாமதமாகவேனும் உணர்ந்ததே நல்லது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20406103&edition_id=20040610&format=html)

பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ழான் நோயல் பங்க்ராஸி-நாகரத்தினம் கிருஷ்ணா
விவியான் என் கிற புதிய தலைமுறைப் பெண் பதிப்பாளர் மூலம் பரபரப்புகளுக்கு முக்கியத்துவம் காட்டும் இன்றைய பதிப்புலக போலிகளைத் தோலுரிக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60406103&edition_id=20040610&format=html )

நியூயார்க் சந்திப்பு- கவிஞர் கே சச்சிதானந்தன்- காஞ்சனா தாமோதரன்
எனவே
நாமும் தொடர்ந்து
வாழ்ந்திருப்போம் நாவற்ற குயிலுடன்
மனிதக் குரங்கு நகரத்தில்
நிறமற்ற வசந்தத்தில்
நுகத்தடிக் காளைகளாய்
நாளை இல்லாத இடத்தில்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60406106&edition_id=20040610&format=html)

ஜூன் 17 2004 இதழ்:
ஃப்பூக்கோ ஓர் அறிமுகம்- 7- ஆசாரகீனன்-
மக்களின் அரசியல் செயல்பாடுகள் கறாரான ஆய்வுகளால் உந்தப்படுவதில்லை. கவலைகளால் உந்தப் படுகின்றன. யூகங்களால் பாதிப்புள்ளாகின்றன.

வெங்கட் சுவாமிநாதனுக்கு டொரொண்டோ பல்கலைக் கழகத்தின் இயல் விருது விழா- வெங்கட் ரமணன்-
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60406176&edition_id=20040617&format=html )

ஜூன் 24 2004 இதழ்:
ஃப்பூக்கோ ஓர் அறிமுகம்- 8- ஆசாரகீனன்-
ஃப்பூக்கோ பருந்துப் பார்வையையும் (macro) நுண்பார்வையையும் (micro) இணைத்த ஒரு யதார்த்தப் பார்வையைக் கைக்கொள்ள முயற்சித்திருக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20406245&edition_id=20040624&format=html )

சேலை கட்டும் பெண்ணுக்கு – சந்திர லேகா வாமதேவா
நான் சேலையணிய ஆரம்பித்த பிறகு அது பிற நாட்டவர் மத்தியில் எவ்வளவு சலுகையையும் கௌரவத்தையும் பெற்றுத் தருகிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

 

Series Navigation
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *