நழுவிப் போனவைகள்
                       
அரைத் தூக்க இரவில்
தானாய்த் தவழ்ந்து
கருத்தும்,கோர்வையுமாய்
வார்த்தைகள் பிசகற்று
உதித்து வரும் ஒரு கவிதை
எழுந்தெழுதும் சோம்பலினால்
மறக்காதென்ற நம்பிக்கையில்
தூக்கத்துள் புதையுண்டு
காலையில் யோசித்தால்
ஒரு வார்த்தை கூட நினைவின்றி
தவறி நழுவி எனைவிட்டுப்
போயிருக்கும் என் கவிதை
அக்கவிதை பிறிதொருநாள்
வெளிவந்து விழுந்திருக்கும் அதில்
வேறெவரோப் பெயரிருக்கும்..
அரைத் தூக்க இரவில்
தானாய்த் தவழ்ந்து
கருத்தும்,கோர்வையுமாய்
வார்த்தைகள் பிசகற்று
உதித்து வரும் ஒரு கவிதை
எழுந்தெழுதும் சோம்பலினால்
மறக்காதென்ற நம்பிக்கையில்
தூக்கத்துள் புதையுண்டு
காலையில் யோசித்தால்
ஒரு வார்த்தை கூட நினைவின்றி
தவறி நழுவி எனைவிட்டுப்
போயிருக்கும் என் கவிதை
அக்கவிதை பிறிதொருநாள்
வெளிவந்து விழுந்திருக்கும் அதில்
வேறெவரோப் பெயரிருக்கும்..
 கிளிமரம்
                       
உச்சிக் கிளைகளில் 
வசித்தன கிளிகள்
தூரம் பறந்து தேடித் தின்ன
தேவையற்றிருந்தது
அவற்றிற்கென்றும்
வேண்டிய நேரம்
அம்மரக் கனிகள்
பறத்தலென்பது
மரம் சுற்றி மட்டும்
ஆட்டமும், பாட்டமும்
காதலும் கூடலும்
சகலமும் அங்கே
 
கட்டியக் கூட்டுள்
முட்டையும் பொரிப்பும்
வளரும் குஞ்சும்
 மரம் சுற்றி வாழும்..
 
காலங்கள் மாறியும்
கிளிகள் மாறவில்லை
மரமும் மாறவில்லை
 
அக்கிளிகள் ஒருநாள்
சிறகடித்துக் கதறின..
திக்குதிசையறியாமல்
சுற்றிப் பறந்தன…
 
கிளிகள் வாழ்ந்த மரம்
பிணமாகிக் கிடந்தது..
- அத்தியாயம் 5 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்
 - கம்மங்கதிரின் வாசத்தோடு – குமாரகேசனின் ” வண்டிப்பாதை ” நாவல்
 - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா
 - வால்ட் விட்மன் வசனக் கவிதை – 73 (1819-1892) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம்
 - பசிமறந்து போயிருப்போம்
 - தொடுவானம். 14. பதினைந்து வயதினிலே
 - நிவிக்குட்டிக்கான கவிதைகள்
 - பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது
 - திண்ணையின் இலக்கியத் தடம்- 33
 - நீங்காத நினைவுகள் – 44
 - சுயத்தைத்தேடி ஒரு சுமூகப்பயணம்.
 - சீன காதல் கதைகள் -2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
 - திரை ஓசை வாயை மூடி பேசவும்
 - முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) -2
 - அது அந்த காலம்..
 - பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்
 - வேள்வி
 - தினம் என் பயணங்கள் -15 நமது சுதந்திர நாடு
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் அடுத்து எப்போது திசை மாறப் போகின்றன ?
 - ஒரு கலைஞனின் கதை – சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’
 - விபத்து
 - திசையறிவிக்கும் மரம்
 - அடையாளம்
 - ’ரிஷி’யின் கவிதைகள்
 - மூளிகள்
 - உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை
 - திரை விமர்சனம் நீ எங்கே என் அன்பே
 - திரைவிமர்சனம் என்னமோநடக்குது
 - களிப்பருளும் “களிப்பே”!
 - குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:
 - வாழ்க்கை ஒரு வானவில் – 1 (ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் புதிய தொடர்)