திண்ணையின் இலக்கியத் தடம்-34

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

சத்யானந்தன்

மார்ச் 4 2005 இதழ்:

நேற்று வாழ்ந்தவரின் கனவு – எச்.பீர்முகம்மது- பாவண்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது- கன்னடத்திலிருந்து தமிழுக்குப் பல இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து சிறந்த இலக்கியப் பங்களிப்பு செய்தவர் பாவண்ணன்.
இணைப்பு

பாவங்கள் (SINS), பாடம் ஒன்னு ஒரு விலாபம்- இரு திரைப்படங்களும் தொடரும் சர்ச்சைகளும்- நேச குமார்
இணைப்பு

நேர்காணல் – வசந்த் – இகாரஸ் பிரகாஷ்

இணைப்பு

சிந்திக்க ஒரு நொடி: தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழி போயிற்று- வாஸந்தி- கோடம்பாக்கம் ஒரு மாச்சோ உலகம்.
இணைப்பு

மார்ச் 18 2005 இதழ்:
தென்னகத்தில் இனக்கலப்பா?- தி.அன்பழகன்- ஆரியர் மற்றும் திராவிடர் இனக்கலப்பு ஏற்பட்டிருந்தாலும் அது அரிசியில் கல் கலந்தது போல இருக்குமே ஒழிய இனங்காண முடியாத அளவு இருக்கவே முடியாது.
இணைப்பு

ஏப்ரல் 1, 2005 இதழ்:

ஜெயகாந்தனுக்கு ஞான பீடம்- வெங்கட் சாமிநாதன்
இந்தியா டுடேயில் இரண்டு தமிழ் நாட்டவர் பற்றிய குறிப்புகள் வந்துள்ளன. ஒன்று ஜெயகாந்தன் ஞானபீடப் பரிசு பெற்றது பற்றி ஒரு பத்தியில் நாலைந்து வரிகள் சிறிய புகைப்படத்துடன். மற்றது ஜெமினி கணேசன் மறைவைப் பற்றி கால் பக்கத்துக்குக் கட்டம் கட்டிப் பெரிய புகைப்படத்துடன். இது இன்றைய காலத்தின் கோலம் . சமூக மதிப்பீடுகள் சரிந்துள்ளதின் அடையாளம்.
இணைப்பு

பெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு – அன்பாதவன்- கோவை ஞானி அவர்களால் தொகுக்கப் பட்ட சிறுகதைத் தொகுதி ‘கானாக் காலம்’ நூல் விமர்சனம்.
இணைப்பு

வெளி ரங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்- லதா ராமகிருஷ்ணன்- ரங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில்’ கட்டுரைத் தொகுதியின் விமர்சனம்.
இணைப்பு

ஏப்ரல் 8, 2005 இதழ்:
மேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்: இர்ஃபான் ஹூஸைன்- சவுதி அரேபியா மேலை நாடுகளில் மசூதி கட்ட பண உதவி செய்கிறது. ஆனால் தன் நாட்டில் சர்ச் கட்ட அனுமதி மறுக்கிறது. பாகிஸ்தானில் ஏன் கிறித்துவ வழிபாட்டாளர்கள் கொல்லப் படுகிறார்கள்?

இணைப்பு

சிந்திக்க ஒரு நொடி- ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்- வாஸந்தி- கும்பகோணம் தீவிபத்துக்குப் பின் பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருக்கிறதா?
இணைப்பு

தலைவர்களும் புரட்சியாளர்களும் – சேகுவேரா- கேஜே ரமேஷ்
ஏரியல் டோர்ஃமேன் கம்யூனிஸம் என்னும் தீ அதன் முழு தாக்கத்தை இழந்த போதும் புரட்சிக்கும் அதன் கவர்ச்சிக்கும் சேகுவேரா ஒரு சின்னமாக விளங்கினான் என்று பதிவு செய்தார்.
இணைப்பு

ஏப்ரல் 15 2005 இதழ்:

Pope John Paul II புஷ்பா கிறிஸ்ரி- இந்த அருட் தந்தை பதவியேற்ற முதல் வைபவத்தின் போது குறிப்பிட்டது ‘Do not be afraid’

இணைப்பு

ஹினா மட்சுரி- ஜெயந்தி சங்கர்- நம் நாட்டில் கொண்டாடப் படுவது போலவே ஜப்பானிலும் ‘கொலு’ கொண்டாடப் படுகிறது. ஹினா என்றால் பொம்மை.மட்சுரி என்றால் விழா.
இணைப்பு

சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி- வாஸந்தி- “பெண்ணின் உடலில் இருக்கும் X-க்ரோமோஸோம் மரபணுக்களே அவளது சக்தியின் ரகசியம். அதுவே அவளை ஆணை விடத் திறமைசாலி ஆக்குவது”- ஆஷ்லி மான்டெகு
இணைப்பு

மீண்டும் வரும் நாட்கள்- மு.புஷ்பராஜன் கவிதைகள்- யமுனா ராஜேந்திரன்
இற்றுப் போகும் விதைக்குள்ளே
இடுங்கி இருந்த தளிர்கள் விரிந்தன
பொய்யாய் உறைந்த படிவுள்
பொசியும் நீரின் அசைவு

இணைப்பு

தொடர்ந்து ஒலிக்கும் குரல் -வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள்- பாவண்ணன்
“அனுபவம் தான் பெரிது. அந்த அனுபவத்தைத் தேடிப் பெருவது தான் தன் முயற்சி” என்று ஒரு பதிலில் பகிர்ந்து கொள்கிறார் வெ.சா.

இணைப்பு

ஏப்ரல் 22 2005 இதழ்:
சருகுகளோடு கொஞ்ச தூரம்
எஸ்.ஷங்கர நாராயணன்

நாம்
இறந்த காலத்துள்
நடந்து சென்று
எதிர்காலத்தை அடைகிறோம்
இணைப்பு

தன்னலக் குரலின் எதிரொலி- பாவண்ணன்
கானகத்தின் குரல் ஆழ்மனத்தில் உறங்கும் வெறி உணர்வை மீட்டி மீட்டி மேலே கொண்டு வரும் குரல் என்பதில் சந்தேகமே இல்லை.
இணைப்பு

ஏப்ரல் 29,2005

மதச்சார்பின்மை என்னும் அறிவியல் தன்மையற்ற அறிவியல் – பல்பீர் கே புஞ்

காந்தியடிகள் முஸ்லீம்களின் தீவிர செயல்களை ஆதரித்தார் என்பது உண்மைதான்.
இணைப்பு

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்- க.பாண்டியராஜன் – தமிழ் மொழிச் சிதைவுக்கும் பண்பாட்டுச் சீரழவிக்கும் காரணமான திரைப்படங்களும் புறக்கணிக்கப் பட வேண்டியவை தானே?

இணைப்பு

Series Navigation
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *