ஜோதிர்லதா கிரிஜா 2. “ராஜாவை இன்னும் காணோமேடி? அஞ்சரை மணிக்கெல்லாம் ஆஃபீஸ் முடிஞ்சு உடனே கிளம்பினா ஆறரைக்குள்ளே வீட்டில இருக்க வேண்டாமோ? மணி ஏழாகப் போறதே!” என்று புலம்பியபடி பருவதம் அந்தச் சின்ன வீட்டுப் பகுதியில் உள்ளுக்கும் வாசலுக்குமாக நடந்துகொண்டிருந்தாள். “நீ இப்படிப் புலம்பிண்டே நடையா நடந்தா மட்டும் அவன் சீக்கிரம் வந்துடுவானா என்ன! ஏற்கெனவே முட்டிவலின்னு சொல்லிண்டு எதுக்கு இப்படி அலையறே? பேசாம உக்காரேன் ஒரு இடத்துலே. அவன் டைபிஸ்ட் ஆச்சே? தவிர இன்னைக்குத்தான் முதல் […]
T.K. அகிலன் இன்றைய நம் குழந்தைகள், நாளைய நம் சமூகத்தின் மனிதர்கள். குழந்தைகள் அவர்கள் இயல்பு மற்றும் சூழலிற்கேற்ப, ஒரு பகுதி அவர்களாகவே மனிதராகிறார்கள். அவர்களின் இன்னொரு பகுதி, சுற்றுச்சூழலால் உருவாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் என்பதன் பெரும் பகுதி பெற்றோர் என்றாகிறது. குழந்தைகளின் சுற்றுச்சூழல், பெற்றோராலும், பெற்றோரால் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புறஉலகாலும் ஆனது. அவர்கள் சுற்றுச்சூழலின் மற்றொரு பகுதி, அவர்களாகவே அறிமுகப்படுத்திக்கொள்ளும் புறஉலகினால் ஆனது. குழந்தைகளின் சுற்றுச்சூழலின் இந்த இரு பகுதிகளின் விகிதங்களும், அவர்களின் இயல்பிற்கேற்ப மாறலாம். நம் […]
ருத்ரா இ.பரமசிவன் இடுப்பில் டவல் கட்டிக்கொண்டு டூத் பேஸ்ட் கேட்கும் கணவன். வாசலில் பள்ளிக்கு அழைத்து செல்லும் வாகனம் வந்த போதும் வாய்க்குள் இட்லியை திணிக்கத் தெரியாமல் விழிக்கும் பையன். எட்டாவது போகிறான் என்று பெயர் இன்னும் அவனுக்கு வகுப்பு வாய்க்கால்கள் எல்லாம் எட்டி வரவில்லை. அடுப்பில் சுரு சுரு வென்று குண்டுவில் நாகம் சீறுவது போல் ஆவிப்பீய்ச்சல்கள். எத்தனையாவது விசில் இது மறந்து போய் விட்டது. ஹோம் ஒர்க் எழுதிய நோட்டு எங்கே என்று முயல்குட்டி […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 74 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Are You the New Person drawn toward Me) என்னைக் கவர்ந்த புதியவன் நீயா ? மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னைக் கவர்ந்த புதியவன் நீயா ? எச்சரிக்கை முதலில்; நிச்சயமாய் நான் வேறானவன் நீ நினைப்பது போலின்றி ! எனக்குள்ளே உன் சிந்தனைக் கொள்கை உள்ளதென […]
”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” —-நா. விச்வநாதன் [ வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை” புதினத்தைமுன்வைத்து ] ”எவன்இங்குவேற்றுமையைக்காண்கிறானோஅவன் மரணத்திலிருந்துமரணத்தையேஅடைகிறான்”—–கடோபநிஷத் [4-10] உண்மையில்கதைகளில்ஏதாவதொருபாத்திரமாகஆசிரியன்இருப்பதுபோலவேவாசகனும்உலவிக்கொண்டிருக்கிறான்என்பதுசரியானது. தமிழ்ப்படைப்புலகில்வெகுசொற்பமானவர்களாலேயேஇந்தயுக்திகையாளப்படுகிறது. வாசித்துமுடித்தவனைஎதையோதேடச்சொல்லும்உந்துதலைத்தரவேண்டும்; தொந்தரவுசெய்யவைக்கவேண்டும். ஏன்? ஏன்? இதுஏன்இப்படிஇருக்கிறது;நடக்கிறதுஎனலட்சம்கேள்விகளைக்கேட்கவேண்டும். வளவ. துரையனின்எழுதுகோல்மிகஇயல்பாகஇந்தவிந்தைகளைச்செய்கிறது. சமூகம், வாழ்க்கைமுதலானவார்த்தைகளின்இன்னும்கூடுதலான செறிவானபொருளைஅகராதிகளில்தேடிக்கண்டடையும்அபத்தமானவேலையைச்செய்வதில்லை. முழுமையற்றவாழ்க்கையிலிருந்துவிடுபடும்முயற்சிஏதுமற்றுகம்பீரமாகநிற்கும்முறைமைமகிழ்ச்சியானது. கதைவேறு, வாழ்க்கைவேறுஎன்பதாய்இல்லை; இதைகவனப்படுத்திக்கொண்டுஇவருடையஇயக்கம்சரியானதாகஇருக்கிறது. வெற்றுமுழக்கங்களும், அறைகூவல்களுமாய்அலுத்துப்போகுமளவுக்குஇரைச்சலுமாய்நிறைந்துதளும்பும்தமிழ்ச்சூழலில் ‘சின்னசாமியின்கதை’ வந்திருக்கிறது. புதியதரிசனம்ஒன்றுஇயல்பாய்க்கிடைக்கிறது. இந்தக்கதைஎன்னதான்சொல்லவருகிறது? ஒரேவரியில்சொல்லிவிடமுடியும். வாழ்வியலைச்சொல்கிறது. வாழ்தல்கலையைச்சொல்கிறது. வாழ்வியல்எனில்போஜனம், சம்போகம், சயனம்என்பதாயில்லை. நிறைந்தநேசம், மேன்மையானமானிடஉறவுகள்என்பனவற்றைக்களப்படுத்துகிறது. மென்மையானமயிலிறகுவருடல்தானாவாழ்க்கைஎன்றகேள்வியைக்கேட்பதேஅபத்தம். எல்லாமானதுதான்வாழ்வு. அவலங்களையும், நேசமின்மையையும், கயமையையும், பொய்மையையும்கூடஇன்னதுதான்இவைஎன்றுவிளக்கும்வேலையும்படைப்பாளிக்குஇருக்கிறது. அறம்சார்ந்தமெல்லியவரிகளின்சேர்க்கையில்இவைகளைஅப்புறப்படுத்திவிடலாம். இந்தப்புதினத்தின்பிரதானஅறிவிப்பாகஇதுவேஇருக்கிறது. நீதிநூல்கள்நம்மைஎதிர்காலத்திலேயேஇருக்கச்சொல்கின்றன. நாம்விரும்பியஅனைத்தும்அங்கேதான்கிடைக்கும்என்றசெய்தியைநாசூக்காகச்சொல்லித்தருகின்றன. கடந்தகாலம்மறந்துஇன்றையஇருப்பையும்மறந்துகண்களைமூடிக்கொள்ளும்இலகுவானகலையைப்பொறித்துநம்மைஇருட்டுக்குள்தள்ளிவிடுகின்றன. நம்மைநிழலாகஇருக்கச்செய்துஅதற்குள்ளானகுருதியோட்டத்தையும்உயிர்ப்பையும்அசைவுகளையும்நிஜமானதுஎனஅறிவித்துப்பழக்கப்படுத்திவிடுகின்றன. […]
தற்காலத்தில் மாணவர்க்கு மொழிப் பயிற்சி பல சமயம் சிறப்பாய் இருப்பதில்லை. பேசும் மொழி வட்டார வழக்கிலிருப்பது தவறில்லை. ஆனால் ஒரு மாணவனின் மொழியைக் கொண்டே அவனின் கற்றலை , தகுதியை ஊகிக்கலாம். மொழியறிவு, அவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிக்கிறது. மொழியறிவுப் பழுதால் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள நேருகிறது என முதலில் பார்ப்போம். 1. விளம்பரங்களில் எழுத்துப் பிழைகள். 2. கடிதம் எழுதத் தெரிவதில்லை. தமிழை எழுத்துப் பிழையுடனும்.ஆங்கிலத்தை இலக்கணப் பிழையுடனும் எழுதுகிறார்கள்.கட்டுரைகள் எழுதினாலும் ur, tq , என்றெல்லாம் எழுதுவது.ஆன்லைன் அல்லது செல்ஃபோன் லாங்குவேஜில் எழுதுவது. புதிதாக ஒன்றையும் எழுதத் தெரியாமல் எல்லாமே கட் காப்பி ,பேஸ்ட் மெசேஜ்கள் தான். 3. ப்ராஜக்டுகளை விலைக்கு வாங்கி சமர்ப்பித்தல். 4. என்ன படிப்பது, எப்படிப் படிப்பது என்ற தெளிவின்மை. 5. தமிழ் மீடியத்திலிருந்து ஆங்கில மீடியம் மாறுவதால் புரிந்துகொள்ளுதலில் சிரமம். […]
காரிருளில் கொடுங் காற்றின் கையசைப்பில் கடிவாளம் இன்றி துள்ளித் திரிகின்றன வெண்ணலைக் குதிரைகள் அவை ஒவ்வொன்றும் கப்பலைத் தகர்க்கும் வெறியுடன் அறைந்து தள்ளும் தாக்குதல் சமாளித்து தன் முழு பலம் திரட்டி உள்ளிறங்கி மேலெழுந்து முன்னேறும் கப்பல் அடிவானக் கூரையில் வேர் நட்டு கடலுக்குள் கிளை பரப்பி விரிந்தெழும் மின்னல் மரங்கள்.. ராட்டினத்தில் இருப்பதுபோல் வயிற்றினுள் குடலேறி கீழிறங்கும் பெருங்குடி குடித்தவனின் நிலைபோல் அலைந்துலையும் கப்பல் ஒவ்வொரு பேரலையும் ஏதாவதொன்றை உடைத்தெறியும் நாங்கள் சாமான்யர்களல்ல சமுத்திர சாமுராய்கள் எனத் தோன்றும்… ஆடும் கப்பல், வீசியாட்டும் தொட்டிலின் நினைவைத் தரும் மாபெரும் ஆழியில் நாம் வெறும் துரும்பென உறைக்கும் நாட்களிவை கடற் பயணத்தின் களையே இது தான் வெளிமனம் சொல்லும் வழக்கம் போலவே கடந்து போய்விடுவோம் உள்மன நினைவிலோ வந்து உறையும் குடும்ப முகங்கள்..
2014 ஏப்ரலில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திர விஞ்ஞானிகள் புதிய அணுக்கருத் துகள் ஒன்று கண்டுபிடிப்பு சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுத் தொடரியக்கம் புரிந்து அணுசக்தி வெளியாக்கியது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதல் டியென்ஏ மூலச் சங்கிலி வடித்தது போல் அகில நாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும் ! கடவுள் துகள் தடத்தைக் கண்டதாய் உறுதிப் படுத்தினர் […]
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 3 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 9, 10, 11, & 12
காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு) நெப்போலியன். விமர்சனம் – இமையம். தமிழில் கவிதை புத்தகங்கள் விற்பனை ஆவதில்லை என்று சொல்லப்படுவது நிஜமல்ல. தமிழில் ஆண்டுக்கு குறைந்தது இருநூறு முதல் முந்நூறு கவிதை தொகுப்புகள் வெளிவரும் நிலையில் கவிதை தொகுப்புகள் விற்பனை ஆவதில்லை என்று கூறுவதை ஏற்பதற்கில்லை. கவிதை படிப்பதும், கவிதை எழுதுவதும் சமூகம் சார்ந்த செயல். சமூகம் சார்ந்த சிந்தனை, அக்கறை, ஈடுபாடு, கவலை. கவிதையை எழுதுவதும் படிப்பதும்தான் முக்கியமானது. விற்பனை […]