வால்ட் விட்மன் வசனக் கவிதை – 76 சொட்டும் இரத்தத் துளிகள்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Children of Adam)

(Trickle Drops)

சொட்டும் இரத்தத் துளிகள்

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

 

சொட்டும் இரத்தத் துளிகள் !

விட்டுச் செல்லும்

நீல இரத்தக் குழல்கள் !

சொட்டுகள் எனது !

துளிகளாய்ச் சொட்டின மெதுவாய் !

தெளிவாய்ச் சிந்தின,

துளிகள் !

சிறைப் பட்ட போது

உன்னை விடுக்கச் செய்து

உண்டான காயத்தில்

கசிந்திடும்

இந்த இரத்தத் துளிகள் !

முகத்திலும்,

நெற்றி யிலும்,

உதட்டிலும், மார்பிலும்,

மறைந்த

உள்ளுடம்பிலும்,

வெளியேறும் குருதித் துளிகள்

பாப மன்னிப்பு கோரும் !   

 

 

ஒவ்வோர் பக்கமும் கறை !

நான் பாடிய

ஒவ்வோர் பாட்டிலும் கறை !

நான் மொழிந்த

ஒவ்வோர் சொல்லிலும் கறை,

கசியும் துளிகள் !

உணரட்டும் அவர்கள்

உனது செந்நிறச் சினத்தீயை !

மினு மினுக்கட்டும்

உதிரத் துளிகள் !

உடல் முழுதும் பூசிக் கொள்.

வெட்கப்படுவர்

எல்லாரும்

கண்ணீ ருடனே !

ஒளிரட்டும் எனது

எழுத்துப் படைப்புகள்.

இரத்தக் கசிவுகள் பற்றி

எழுதப் போகிறேன்

எனது படைப்பு களில்.

உனது விளக்கு ஒளியில்

தெரியட்டும் அந்த

சிவப்புத் துளிகள் எல்லாம் !

 

 

+++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *