நீங்காத நினைவுகள்  –   51 முரசொலி அடியார்

This entry is part 23 of 23 in the series 22 ஜூன் 2014

 

ஜோதிர்லதா கிரிஜா

 

     10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது.  நான் தேடிப் போகாமலே, சில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் கிடைப்பதுண்டு. அதன் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த அவரது கட்டுரை அடக்கியிருந்த பிரமிக்கத்தக்க செய்தியை இன்றளவும் மறக்கவே முடியவில்லை.

 பத்திரப்படுத்தியிருந்த அதை இன்றுதான் தேடி எடுக்க முடிந்தது. அதன் சில பகுதிகளை அப்படியே இதில் தருகிறேன்.

அவரது கட்டுரை: “ எங்கோ அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் தோன்றியிருப்பினும், அவரது வருகை பற்றி இந்து மத வேதங்களில் முன்னறிக்கை செய்யப்பட்டிருக்கிறது என்று பெரியவர் ஒருவர் கூறிய போது அதை ஆராய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

குறிப்புகளைப் பார்க்கிற போது பெருமளவு உண்மை இருப்பதைக் கண்டு நானே வியப்புற்றேன். மகரிஷி வியாச முனிவரால் எழுதப் பட்ட பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான பவிஷ்ய புராணத்தில் கீழ்க்காணும் சூத்திரம் வருகிறது:

“ஏதஸ் மின்னந்தரே மிலேச்ச

ஆச்சார்யண  ஸமன்வித

மஹாமத் இதிக்கியாத

சிஷ்ய சாகா ஸமன்வித

நிரூபஷ்சேவ மஹாதேவ

மருஸ்தல நிவாஸினம் “

(பவிஷ்ய புராணம் – பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5.8)

ஒரு மிலேச்ச – அதாவது அந்நிய – நாட்டிலே ஒரு ஆச்சாரியர் தன் சீடர்களுடன் வருவார். அவரது பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.

மஹாமத்  –  முஹம்மது

 

மிக மிகத் தெளிவாகப் பெயரும் இடமும் குறிக்கப்பட்டிருப்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

அந்த ஆச்சாரியரின் இனம் அவர்களுடைய தோற்றம், பற்றியும் அதே புராணம் கூறுகிறது.

“ லிங்க சேதி சிகாஹீன

சுமச்சுறுதாரி ஸதாஷக

உச்சலாபி ஸர்வபக்ஷி

பனிஷ்யகி ஆனோமம

முசலை நைஸ்மஸ்கார

     (பாகம் 3, சுலோகம் 25, சூத்திரம் 3)

“அவர்கள் – லிங்க சேதி – அதாவது, சுன்னத்து -செய்துகொண்டிருப்பார்கள். தலையில் குடுமி இருக்காது.  தாடி வைத்திருப்பார்கள். சப்தம் போட்டு அழைப்பார்கள். முசலை என்று அறியப்படுவார்கள்.” என்று அந்தப் புராணம் கூறுகிறது.

மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். மிகத் தெளிவான ஒரு காட்சி புலப்படும்!

லிங்க சேதி – சுன்னத் – என்பது இந்து மதத்தில் இல்லாதது.  குடுமி என்பது இனந்து மதத்துக்குத் தேவையானது.  ஆனால், சிகாஹீனம் – மயிரைக் களைவது – என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதை விட வியப்புத் தருவது முசலை என்ற சொல்.

முஸ்லிம் – முசல்மான் என்பவற்றோடு  “முஸலை”  என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்!

இம்மட்டோ? நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பற்றியது கூறப்பட்டதோ என நினைக்கும் வண்ணம் வேதத்திலேயே கூறப்பட்டிருக்கிறது.

“ இதம் ஜன இபக்ருத

நாரா  சம் ஸஸத விஷியதே

ஷஷ்பீம் சஹஸ்ர நவனீதம்

சசௌரம் அருவ மேஷு தன்மஹே

உஷடி ருயங்லம் பிறவாஹிணோ

வநூ மந்தோஹிர்  தசா

வத மர ரத் தஸாயனீ

ஜீ ஹிவுதே திவ

ஈஷ்மான உபஸ்மிறுத

ஏவந் தர்ஷயே மாமஹே

சதம் நிஷ்காந்த சஸரஜ

ஸ்ரீ ணி சதான்னியவதாம்

ஸ்ஹஸ்ரா தசகோ நாம்

(அதர்வ வேதம், 20 ஆம் காண்டம்)

“ ஏ, பக்தர்களே! இதைக் கவுரவத்துடன் கேட்பீர்களாக! புகழக் கூடிய, புகழ் பெறக்கூடிய அந்த மா மஹரிஷி 60,090 மக்கள் மத்தியிலே தோன்றுவார்.  (முகம்மது என்றாலே, புகழப்பட்டவர், புகழுக்குரியவர் என்று பொருள்.  அவர் தோன்றிய போது, மக்கா மாநகரின் மக்கள் தொகை 60,000!)

அவர் 20 ஆண்-பெண் ஒட்டகங்களில் சவாரி செய்வார். அவரது மகத்துவம் சுவர்க்க லோகம் வரை செல்லும். அந்த மகரிஷிக்கு 100 தங்க நாணயங்கள் இருக்கும்,-

(ஒட்டகத்தில் தோன்றும் மகரிஷியை நாம் இந்தியாவில் காணவில்லை. ஆகவே இது நபிகளைப் பற்றிக் குறிப்பதே ஆகும்.)

10 முத்து மாலைகளும் 100 தங்க நாணயங்களும் அரேபியாவைத் துறந்து அபிசீனியா சென்ற 100 நபி தோழர்களைக் கூறும்.

10 முத்து மாலைகளும், 300 அரபிக் குதிரைகளும், 10 ஆயிரம் பசுமாடுகளும் இருக்கும்.

(நபிகள் நாயகத்தால் சொர்க்கத்தின் வாரிசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 10 பக்தர்களைக் குறிக்கும் சொல்தான் 10 முத்து மாலை. நபிப் பெருமானாருடன் முதற் போர்க்களத்தில் இருந்த 313 பேர் குதிரைகளாகவும் மக்கா வரை சென்ற போது அவருடன் இருந்த 10 ஆயிரம் பேர் 10 ஆயிரம் பசுமாடுகள் எனும் செல்வங்களாகச் சித்திரிக்கப்பட்டதாகவும் மவுல்வி முகம்மது உமர் கூறுவார்.)

நபிகள் நாயகத்தை உலகத்தின் அருட்கொடை என்றே அல் குர்  ஆன் ஷரீபு கூறும்.

ரிக்வேதத்தில் உலக அருட்கொடையாக 10 ஆயிரம் பேருடன் தோன்றிப் புகழ் பெறுவார் என்று கூறப்பட்டிருக்கிறது.

“அன ஸவந்தா  ஸக்பதிர் மாமஹே

மேகாவா  சேதிஷ்ஷடா

அசுரோ பகோன

திரை விஷ்னோ அஞேத காப்பி

ஸஹஸ்னரா  வைச்சுவாரை

திறையம் ருணாஷிகேத

(ரிக்வேதம் மந்திரம் 5,  சூக்தம் 28)

ஆக, வேத மொழியிலும் “மாமஹே” என்றும், மஹாமத் என்றும் கூறப்பட்டிருப்பதும் தொடர்புடைய செய்திகள்.  சரியாகவே சொல்லப்பட்டிருப்பதும் பெரிய வியப்புக்குரியவையாக இருக்கின்றன.

அதுத்து வரும் கட்டுரைகளில் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துகளைப் போக்குவதற்கு முயல்கிறேன். (தொடரும்)

…….. மேலே உள்ளது முரசொலி அடியாரின் கட்டுரையாகும்.  “நான் காதலிக்கும் இஸ்லாம்” என்கிற தலைப்பில் நீரோட்டம் நாளிதழில் அவர் எழுதிவந்த தொடரின் ஓர் அத்தியாயமே மேற்காணும் கட்டுரை. இந்த அத்தியாயத்துக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு “வியப்பு: ஆனால் உண்மை! – இந்து மத வேதங்களால் முன் கூட்டிச் சொல்லப்பட்டவர் நபிகள் நாயகம்” என்பதாகும். இந்தக் கட்டுரையைப் படித்து நான் அடைந்த வியப்பை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டே நினைவில் நின்ற இதை இங்கே எழுதியுள்ளேன்.

வியப்படைபவர்கள் வியப்படையலாம். இந்திய மூதாதையர்கள் சொன்னது எதுவானாலும் அதைத் துளியேனும் ஆராயத் தயாராக இல்லாமல், எள்ளி நகையாடுவதையே இயல்பாகக் கொண்டவர்கள் கேலி செய்யலாம். இது அவர்களுக்காக எழுதப்படவில்லை! அவர்கள் எள்ளி நகையாடிக்கொண்டே இருக்கட்டும். அதனால் யாருக்கும் இழப்பு இல்லை! எது ஒன்றையும் சிறிதளவேனும் ஆராயாமல் அப்படியே நம்புவதும் சரி, நம்பாமல் கேலிசெய்வதும் சரி, இரண்டுமே  தவறு என்பதே நமது கருத்தாகும்.

………

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

39 Comments

  1. Avatar
    வில்லவன் கோதை says:

    எது ஒன்றையும் சிறிதளவேனும் ஆராயாமல் அப்படியே

    நம்புவதும் சரி, நம்பாமல் கேலிசெய்வதும் சரி, இரண்டுமே

    தவறு என்பதே நமது கருத்தாகும்.

    வில்லவன் கோதை

  2. Avatar
    jyothirllata girija says:

    மிக்க நன்றி, நண்பரே
    ஜோதிர்லதா கிரிஜா

  3. Avatar
    ஷாலி says:

    // எது ஒன்றையும் சிறிதளவேனும் ஆராயாமல் அப்படியே நம்புவதும் சரி, நம்பாமல் கேலிசெய்வதும் சரி, இரண்டுமே தவறு என்பதே நமது கருத்தாகும்.//

    சகோதரி சொல்வது உண்மைதான்.முரசொலி அடியார் இந்து வேதங்கள் கூறியதை ஆராய்ந்து உண்மையை அறிந்து இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்.வேதங்களை ஆராய்வதும் உண்மையை அறிவதும் அந்த உண்மையை வாழ்வில் கடைப்பிடிப்பதுதான் உண்மையான வெற்றி!வெறும் ஏட்டில் எழுதிச் செல்வதல்ல.

    நபிகள் நாயகம் பற்றிய முன்னறிவிப்பு கிறித்துவ பழைய,புதிய ஏற்ப்பாடுகளிலும் காணலாம்.

    “எல்லாம் வல்ல இறைவன் மூஸாவுடன் பேசுகிறான். உன்னைப்போல ஒரு தீர்க்க தரிசியை நான் அவர்களுக் காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதை யெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.” – உபகாமம். 18:18.

    “என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தை களுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.”¬ – உபாகமம். அத்.18:19.

    1.இயேசு கூறுகிறார்: நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வே றொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். (யோவான்:14:16)

    2. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிறவரும், பிதாவி னிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும் போது, அவர் என் னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார். (யோவான்:15:26)

    3. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். (யோவான்:16:7.8)

    எனினும், நான் உமக்கு உண்மையை உரைக்கின்றேன். நான் போய்விடுவேன் என்பது உமக்குத் தெளிவு. நான் போகாவிட்டால், உம்மிடம் உமக்கு ஆறுதல் கூறுபவர் வரமாட்டார். ஆனால். நான் பிரிந்து சென்றுவிட்டால் நான் அவரை உம்மிடம் அனுப்புவேன்.
    என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லா வற்றையும் உங்களுக்கு நினைப்வூட்டுவார். (யோவான்:14:26)
    நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். . (யோவான்:16:7)

    1. Avatar
      jyothirllata girija says:

      அடேங்கப்பா! எவ்வளவு பெரிய படிப்பாளி நீங்கள், சகோதரர்
      ஷாலி அவர்களே! I admire you!
      ஜோதிர்லதா கிரிஜா

      1. Avatar
        கரிக்குளம் says:

        பைபிளைப்படித்தவர் அறிவாளியென்றால், ஐந்தாம் கிளாசுப்பசங்க CSI நிறைய பேர் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் இருக்கிறாங்க. அவங்கெல்லாரும் அறிவாளிகதான்.

    2. Avatar
      Robin says:

      யோவான் 14:26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

      நீங்கள் குறிப்பிடும் நபருக்கும் பரிசுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்? தயவு செய்து தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.

  4. Avatar
    கரிக்குளம் says:

    எள்ளி நகையாடுவதற்கு இங்கொன்றும் இல்லை. எவரோவொருவர் புகுந்து இடைசெருகி விட்டார் எனச்சொல்லல்லாம். வேதங்களில் காலம் மஹமது பிறப்பதற்கு பல்லாயராமாண்டுகளூக்கு முன். இந்து ம்தம் இந்தியமண்ணில் பிறந்து வாழவேண்டுமெனப்து என்பது நியதி. க்டல் கடந்து செல்வது கூட தடுக்கப்பட்டுவிட்டது. இப்படியிருக்க அரேபிய மண்ணில் பிறந்த் ஒருவரைப்பற்றி வருவார் என்று சொன்னது நம்பத்தகுந்ததன்று. அப்படியே சொன்னபடி நடக்கவும் இல்லை. மஹமது அங்கு பிறந்து அங்கேயே மடிந்து விட்டார். அவர் சொன்ன மதமும் இந்தியா என்று ஒரு நாடு இருக்கிறது என்று தன் நினைப்பிலே எட்டாதபடிதான். வாழ்ந்து வளர்ந்து வெகுகாலத்திற்குப்பின் இந்தியா வந்தது. இருக்கு வேதம் சொன்ன ஆள் இந்துக்களில் பல பிரிவுகள் தோன்றும் அதில் சில ம்ஹான்கள் அல்லது மஹான் இப்படி வருவார் என இந்துக்களுக்குத்தான் சொன்னது. சந்துவில் சிந்து பாடும் வேலையைத்தான் இந்த அடிகளார் என்று தனக்குத்தானே உயர் பட்டம் சூட்டிக்கொண்டவர் எழுதியிருக்கிறார்.

  5. Avatar
    தங்கமணி says:

    http: //wikiislam.net/wiki/Bhavishya_Purana
    சொல்ல ஒன்றுமில்லை. இது அந்த பவிஷ்ய புராணத்தை குறிப்பிடுகிறது.

  6. Avatar
    jyothirllata girija says:

    முரசொலி அடியார் இந்து மதம் விட்டு இஸ்லாத்துகுத் தாமாகவே விரும்பி மாறியவர். அதன் பின் அப்துல்லா அடியார் என்று தமது பெயரை மாற்றிக்கொண்டவர். இதை அறியாதவர்க்காக மட்டுமே இத் தகவல்.
    அன்புடன்
    ஜோதிர்லதா கிரிஜா

  7. Avatar
    admin says:

    ஷாலி எழுதியது..

    பதினெண் புராணங்கள் வரிசையில் ஒன்பதாவது பவிஷ்ய புராணம். இதனை பவிஷ்யத் புராணம், பவிஷ்ய புராணம், பவிஷ்யோத்தர புராணம் என்று பலவாறாகக் கூறுவர். இது 15,500 ஸ்லோகங்கள் கொண்ட சிறிய ராஜச புராணம் ஆகும். பவிஷ்யம் என்றால் வருங்காலம் என்று பொருள். இதில் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியாலோ (அ) வேறு வகையிலோ அறிந்து கூறப்பட்டிருக்கிறது எனக் கருதப்படும்
    புராணம். வேத வியாசருக்கு ஆறு சீடர்கள் இருந்தனர். அவர்கள் சுமந்து ஜைமினி, பைலா, வைசம்பாயனர், சுகதேவர், லோமஹர்ஷனர் ஆவர். இவர்களில் சுமந்து பிஷதனிகர்க்குக் கூறிய வரலாறே பவிஷ்ய புராணம்.

    temple.dinamalar.com/news_detail.php?id=11011

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

    இணையத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை ஒரு Hypothesis ஆகக் கொள்வதை நான் எப்போதும் எதிர்த்ததும் இல்லை. எதிர்க்கவும் மாட்டேன். ஆனால் மூல ஆதாரங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை லவலேசமும் பார்க்கக்கூட விழையாதிருப்பது எள்ளி நகையாடப்பட வேண்டிய விஷயம் என்றால் மிகையாகாது.

    இணையப் பகிரல்களை அடிப்படையாக வைத்து வால்மீகி ராமாயணத்தில் வண்ணான் அவதூறு பற்றி கதைத்த அவலமும்…… மூல நூலை நாடுகையில் சீட்டுக்கட்டுகளால் கட்டப்பட்ட வீடு கவிழ்வதைப்போல் அது கவிழ்ந்த அவலமும் ……. அதற்கு இணை வைக்க அதை அப்படியே மூடிமறைக்க விழைந்து இன்னொரு புராணத்துக்கு ஓட்டப்பந்தயம் செய்த அவலமும்……….

    முரசொலி அடிப்பொடி, சுவிசேஷ ப்ரசாரகர் அன்பர் ஷாலி மற்றும் தீரா விட மற்றும் ஆப்ரஹாமிய ப்ரசாரகர் அம்மணி ஜோதிர்லதா கிரிஜா ……….. போன்ற ……. வேதம் புராணங்கள் இவற்றை கசடறக்கற்ற பெரும் படிப்பாளிகள் ஈடிணையில்லா ஆய்வின் பாற்பட்டு பவிஷ்ய புராணத்தை ஆராய்ந்து அது இன்னதான் சொல்ல வருகிறது என்று பகிர்ந்து விட்டால் அது முடிந்த முடிபு என்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் அல்லவா?

    எண்ணிறந்த நூற்பட்டியல்களை ஆதாரமாகக் கொண்டு சீதாயணம் படைத்த ….ஆனால் அவற்றில் இருந்து ஒரு அக்ஷரத்தைக்கூடப் பகிராது……..கூகுளை மட்டிலும் ஆதாரமாகக் கொண்டு உத்தரங்கள் பகிரவிழைந்த……. விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் மற்றும் அன்னாரின் கருத்துக்களின் சுவடொற்றிய சுவிசேஷ ப்ரசாரகர் என்று முடியாது ………… கூகுள் / விக்கி பீடித்த ஆதாரப் பெரும் படிப்பாளிகளின் பட்டியல் நமது தளத்தில் நீள்வது புளகாங்கிதம் அடையச் செய்கிறது.

    நுனிப்புல் மேய்வதில் இருக்கும் சுவையும் பரஸ்பரம் பேரறிஞர் பேராசிரியர் படிப்பாளி என்று பட்டம் கொடுத்து மகிழ்வதும் த்ராவிட பாரம்பர்யத்தின் அடிநாதமோ?

    ம்………….மேய்ப்பர் நுனிப்புல் மேய வைத்தால் ஆடுகள் அதற்கு மேல் எதற்கு சுவைக்க வேண்டும்?

    வாழ்க நுனிப்புல். வளர்க கூகுள் சர்ச்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திரு. கிருஷ்ணகுமார்ஜி,

      அவலை நினைத்து உரலை இடிக்கிறீர் !!!

      ////இணையப் பகிரல்களை அடிப்படையாக வைத்து வால்மீகி ராமாயணத்தில் வண்ணான் அவதூறு பற்றி கதைத்த அவலமும்…… மூல நூலை நாடுகையில் சீட்டுக்கட்டுகளால் கட்டப்பட்ட வீடு கவிழ்வதைப்போல் அது கவிழ்ந்த அவலமும் ……. அதற்கு இணை வைக்க அதை அப்படியே மூடிமறைக்க விழைந்து இன்னொரு புராணத்துக்கு ஓட்டப்பந்தயம் செய்த அவலமும்……….///

      ///எண்ணிறந்த நூற்பட்டியல்களை ஆதாரமாகக் கொண்டு சீதாயணம் படைத்த ….ஆனால் அவற்றில் இருந்து ஒரு அக்ஷரத்தைக்கூடப் பகிராது……..கூகுளை மட்டிலும் ஆதாரமாகக் கொண்டு உத்தரங்கள் பகிரவிழைந்த……. விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் மற்றும் அன்னாரின் கருத்துக்களின் சுவடொற்றிய சுவிசேஷ ப்ரசாரகர் என்று முடியாது ///

      கிரிஜா கட்டுரைக்கும், மேற்கூறிய உங்கள் கருத்துகளுக்கும்
      என்ன தொடர்பு ? கிரிஜாவை இஸ்லாமிய ஆதரவாளி என்று நீங்கள் சொல்வது அவருக்குப் பெருமைதானே !

      சீதாயணம் கொடுத்த அடிக் காயம் உங்களுக்கு இன்னும் ஆற வில்லையா ? வருந்துகிறேன் ! இது ஆயிரங் காலத்துப் போர் ? வாருங்கள் தொடர்வோம். ஷாலியும் தயாராக உள்ளார். எடுங்கள் வாளை !!!
      அது சம்பந்தமாய் உங்களுக்கு இரண்டு கேள்விகள் :
      1. இராமனும் சீதையும் எப்படிச் செத்தார்கள் ? [இதற்குப் பதில் சொல்லாமல் ஒளிந்து கொண்டது நீங்கள் !!!]
      2. அவதார தேவன் இராமனுக்கு என்று தனிக் கோயில் ஒன்று ஏன் இரண்டாயிரம் ஆண்டுகளாக வட இந்தியாவில் இதுவரைக் கட்டப்பட வில்லை ? தமிழ்நாட்டில் அவர் பெயரில் இராமாச்வரம் என்று ஓர் ஊராவது உள்ளது. கோயில்களின் மூலையில் இராமன் சிலைகள் மட்டுமே உள்ளன !!!
      அதே சமயம், புத்தருக்கு ஆயிரக் கணக்கில் பாரதம் உள்பட உலகெங்கும் ஆலயங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளனவே.
      நீங்கள் வரலாற்றில் நம்பாத ஏசு நாதருக்கு கோடிக் கணக்கான கோயில்கள் சிலைகள் உலகெலாம் உள்ளனவே !
      சி. ஜெயபாரதன்.

  9. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ கூறிய வரலாறே பவிஷ்ய புராணம். \

    வரலாறு – நடந்து முடிந்த சம்பவங்களின் விவரணை

    பவிஷ்ய – எதிர்காலத்தைச் சுட்டும் சொல்

    பவிஷ்ய புராணம் எதிர்காலத்தில் இன்னின்ன நிகழும் என்று கோடிட்டுக்காட்டும் புராணம்.

    எதிர்காலத்தில் நடக்கக்கூடும் என்று சொல்லப்படும் விஷயங்களை prediction என்று சொல்லலாம். வரலாறு என்று சொதப்பலாமோ?

    ம்………… சஹோதர சஹோதரிகளே…….ஸ்வாமி விவேகானந்தர் எடுத்தாண்ட அறைகூவல்

    உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்யவரான் நிபோதத – Arise, Awake, having reached the wise become enlightened

    ஆராய்வு என்பது ஆழ்ந்து தகவல்களை சரிபார்த்து விபரங்களை அறிய முனைவது . இப்படி நாம் நகர முனைதல் அறிவு பூர்வமான செயற்பாடு. இணைய / கூகுள் / விக்கி காபி பேஸ்ட்டே மேதாவிலாஸத்தின் அடையாளம் என்ற கோட்பாடை நாம் எப்போது துறப்போம்?

  10. Avatar
    ஷாலி says:

    க்ருஷ்ணகுமார் says:
    July 13, 2014 at 12:34 pm
    //அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.//

    அசல் மூல நூல்களை முழுப்புல் மேய்ந்து, கருத்துக்களை கறந்து கொட்டும் கனவான், மூலவர் க்ருஷ்ண குமார் அவர்களே! அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் உள்ளீர்கள்.நீங்கள் அழுது வடியுங்கள்.சிரிக்க வேண்டாம்.உங்கள் எழுத்தைப் படித்து சிரிப்பாய் சிரிப்பதற்கு வாசகர்கள் நாங்கள் உள்ளோம்.

    முழுப்புல் மேயும் மூலவரே! இன்றைய இருபதாம் நூற்றாண்டில் பழம்பெரும் நூல்கள் கிட்டத்தட்ட அனைத்தும் டிஜிட்டல் வடிவில் இணையத்தில் அச்சாகி கொண்டு வருகிறது. அதனைப் பார்த்து காப்பி அடிப்பதில் ஒரு தவறும் இல்லை.நீங்கள் மூல நூலில் முழ்கி மூச்சு திணறுவது உங்கள் விருப்பம்.

    கூகுள் சர்ச்சில் தேடுவது, (மூலம்) க்ருஷ்ண குமாருக்கு நுனிப்புல்லாக தெரிகிறது.பரவாயில்லை! நீங்கள் அடிப்புல்லை மேய்ந்து அள்ளி விடுங்கள். பேராசிரியப் பெருமகன் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை மூல நூலில் மேய்ந்து ஆய்ந்து அவிழ்த்து விடுங்கள்.

  11. Avatar
    ஷாலி says:

    //எதிர்காலத்தில் நடக்கக்கூடும் என்று சொல்லப்படும் விஷயங்களை prediction என்று சொல்லலாம். வரலாறு என்று சொதப்பலாமோ?//

    அய்யா! மூல நூல் மூலவர் கிருஷ்ண குமார் அவர்களே! Prediction னை வரலாறு என்று நான் சொதப்பவில்லை. எல்லாம் உங்கள் பங்காளி சத் சங்க தினமலர் செய்தியைத்தான் காப்பி செய்துள்ளேன்.உங்கள் தின வேதம் தினமலரிடம் இக்கேள்வியை கேளுங்கள். என்ன எழுதப்பட்டிருக்கிறது,யார் எழுதியது என்று தெரியாமல் நுனிப்புல் மேயாதீர்கள்.!

    அண்ணன்! க்ருஷ்ண குமாருக்கு வேட்டி அவிந்திருச்சு இல்லையென்றால் வீடு கட்டி அடிச்சிருப்பாரு!

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்

    \ கிரிஜா கட்டுரைக்கும், மேற்கூறிய உங்கள் கருத்துகளுக்கும் என்ன தொடர்பு ? \

    நுனிப்புல் மேய்தல்; அதை அப்படியே பரப்புரை செய்தல். Thats the issue.

    Thats is called intellectual bankruptcy. You thoroughly exposed yours in your alakkiyam.

    JG is doing that in small scale.

    And I know you people in spite of knowing what is the issue would never deliberate on the issue.

    Is that clear?

    Regarding the other issue you raised with respect to your alakkiyam, wait for my article for full length exposure of your intellectual bankruptcy. I know its a long wait. But, Sabr ka phal mITa hota hai.

    And for now, I halt at that.

  13. Avatar
    mahakavi says:

    >>அவதார தேவன் இராமனுக்கு என்று தனிக் கோயில் ஒன்று ஏன் இரண்டாயிரம் ஆண்டுகளாக வட இந்தியாவில் இதுவரைக் கட்டப்பட வில்லை ? தமிழ்நாட்டில் அவர் பெயரில் இராமாச்வரம் என்று ஓர் ஊராவது உள்ளது. கோயில்களின் மூலையில் இராமன் சிலைகள் மட்டுமே உள்ளன !!!<<

    The location where Babri Masjid stood has been proclaimed to be Rama temple by many. As for temple for Rama there are several temples in Tamilnadu, Karnataka etc., dedicated solely to Rama. Where I grew up in Mayuram, there still is a Rama temple (age unknown) on the banks of the river KAvEri.

  14. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///அவதார தேவன் இராமனுக்கு என்று தனிக் கோயில் ஒன்று ஏன் இரண்டாயிரம் ஆண்டுகளாக வட இந்தியாவில் இதுவரைக் கட்டப்பட வில்லை ?///

    ///The location where Babri Masjid stood has been proclaimed to be Rama temple by many.///

    வட இந்தியாவில் இராம பிரானுக்கு இடிபட்ட பாப்ரி மசூதி இடத்தில் இல்லாத / அல்லது இருந்ததாக நினைக்கும் ஒரே ஒரு கோயிலா ?

    சி. ஜெயபாரதன்

  15. Avatar
    கரிக்குளம் says:

    கும்பகோணத்தில் இராமசாமி கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்ய தேசம். A very big temple. இராமரும் சீதையும்தான் தெய்வங்கள் இங்கே.

    தமிழ்நாட்டில் கன்னட எல்லைக்கிராமங்களில் இராமர் கோயில்கள் இல்லாத சிற்றூர் இருக்காது. குக்கிராமங்களில் இராமர் கோயில்களைக்கண்டு வியந்தேன். ஹசனின் இராமர் கோயிலில் கூட்டமோ கூட்டம்.

    தென்னகத்தில் ஆந்திரா, கருநாடகம் இராமர் கோயில்கள் பிரசித்தம். தனிக்கோயில்கள் இல்லையென்பது பிழை.

    திரு ஜயபாரதனின் இந்துமத ஞானம் laughable.

  16. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஐயா கரிக்குளம்,

    ///அவதார தேவன் இராமனுக்கு என்று தனிக் கோயில் ஒன்று ஏன் இரண்டாயிரம் ஆண்டுகளாக வட இந்தியாவில் இதுவரைக் கட்டப்பட வில்லை ?///

    இதுதான் தர்க்கம்.

    தமிழ்நாட்டில் கட்டப்பட்ட கோயில்கள் 500 அல்லது 1000 ஆண்டுகளுக்குள் உண்டானவை என்பது என் யூகம். அதாவது இராமர் கம்பர் காலத்தில் தமிழ்நாட்டில் அவதாரத் தேவனாய் ஆக்கப் பட்டிருக்கலாம். இராமன் வாழ்ந்த போது அவர் ஓர் அவதார தேவனாகக் கருதப் பட வில்லை என்பது என் கருத்து. வால்மீகி ராமாயணம் இராமனை அவதார தேவனாக் காட்ட வில்லை. முதன்முதல் தமிழ்நாட்டில் கம்பரே தன் இராமாயணத்தில் இராமனைத் தேவனாகக் காட்டியிருக்கிறார்.

    சீதை மரணத்துக்குக் காரணமானன் இராமன். இருவரையும் கோயில்களில் இணைத்துக் காட்டுவது வேடிக்கையாக உள்ளது.

    வட நாட்டில் 2500 ஆண்டுகளாக எந்த ஓர் இந்து அரசனும் இராமர் கோயில் எங்காவது கட்டியதாக வரலாறு ஏதாவது உண்டா ? தமிழ் நாட்டைப் பற்றி இங்கு தர்க்கம் இல்லை.

    ஐயா கரிக்குளம் ! நீங்கள் தனிமனிதர் தாக்குதற்கு முன்பு உமது உண்மைப் பெயரை வெளியிடுவீரா ?

    சி. ஜெயபாரதன்

  17. Avatar
    jyothirllata girija says:

    தமிழ்நாட்டில் மட்டுமின்றி அனைத்திந்தியாவிலும் ராமர் கோவில்கள் ஏராளமாக உள்ளன. வலைத் தளம் காண்க. என் நண்பர்களும் அவ்வாறே கூறுகிறார்கள். கிட்டத்தட்ட எல்லாக் கோவில்களிலும் ராமருக்கென்று சந்நதிகளும் உள்ளன என்கிறார்கள்.
    ஜோதிர்லதா கிரிஜா

  18. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இராமர் கோயில் பற்றிய வலைத் தளங்கள் காண ஆவல். இணைப்புகளை அனுப்புங்கள். ஆலயப் பட இணைப்புகள் இருந்தாலும் போடுங்கள்.

    சி. ஜெயபாரதன்

  19. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மாற்றான் மனையில் அடைபட்ட அபலை சீதாவைக் கணவன் இராமனே வெறுத்துக் கானகம் துரத்திய பிறகு, அவதாரத் தேவன் இராமனோடு சீதையை இணைத்துத் தெய்வங்களாய்க் கோயிலில் வணங்கி வருவது ஆச்சரியமாக உள்ளது.

    சி. ஜெயபாரதன்.

  20. Avatar
    Rama says:

    “மாற்றான் மனையில் அடைபட்ட அபலை சீதாவைக் கணவன் இராமனே வெறுத்துக் கானகம் துரத்திய பிறகு, அவதாரத் தேவன் இராமனோடு சீதையை இணைத்துத் தெய்வங்களாய்க் கோயிலில் வணங்கி வருவது ஆச்சரியமாக உள்ளது.”
    No evidence of Shri Rama ever hated Sita Devi. Evidence from primary source on this please. Also, epic Ramayanam is over after Sri Rama’s pattabishekam.
    But to me and to lot of others,it is more surprising that Christians are considering the mythological Jesus, a non historical figure as son of God. Evidence on the historicity of Jesus will be helpful, obviously from primary source.

  21. Avatar
    jyothirllata girija says:

    வலைத் தளம் பற்றியெல்லாம் நான் ஏதும் அறியேன். ஆனால் நானாகவே Temples for Lord Rama in India என்றெழுதித் தட்டினேன். விவரங்கள் வந்தன. அனைத்து லிங்க் களையும் நான் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் பார்த்தால் மேலும் விவரம் கிடைக்கலாம். பெரும்பாலான கோவிலகளில் ராமருக்கான சந்நதிகள் உள்ளன. அனுமன் சந்நதி இல்லாத கோவிலே இல்லையாமே!
    ஜோதிர்லதா கிரிஜா

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      இராமயண அனுமாரை நான் முழு மனிதன் என்றே கருதுகிறேன். 3000 ஆண்டுக்கு முன்பு அனுமான் போல் பன்மொழி பேசும் வால் முளைத்த மனிதக் குரங்குகள் எங்கும் வாழ்ந்ததாக வரலாறு ஏதுமில்லை.

      அனுமாரைத் தெய்வமாக வால்மீகியோ, கம்பரோ கூறியதாக நான் படிக்கவில்லை.

      சி. ஜெயபாரதன்.

  22. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Please read Mr. Arizonan article in Tamilhindu Website [Comparison of Valmihi and Kambar]about Rama’s cold hateful reception of his beloved wife Seetha first time after killing Ravana.

    Please tell me who was responsible for Seetha’s death.

    S. Jayabarathan

    1. Avatar
      mahakavi says:

      I don’t think that Rama and Sita had to be the ideal couple living ideal family life to be considered for the divine status. The reason that Rama is considered god is that he incarnated to mainly destroy Ravana. That premise itself is the ground for divine status. Since it is a merge of divine incarnation and human life it is difficult for people to accept the divine status of Rama. The banishment of Sita to the forest was done on the basis that a king should be model for the citizens and hence he had to do what he did. But Sita was not murdered. She went into the earth whence she came. Rama also disappeared after dipping into the Sarayu river. SitA was an incarnation of Lakshmi and hence placing her in the temple along with Rama was justified. Krishna too died from a hunter’s arrow to his foot (a human end) but he is given a divine status. So it is all a perspective. Valmiki dealt with Rama on a human status because the emphasis was on that premise to kill Ravana. Valmiki attributed some divine features to Rama in passing. It is a transition zone.

  23. Avatar
    Rama says:

    As usual and as expected,Thiinai is deleting my comments. Not because they are written in English but because Thiinai wants to be seen as a politically correct site. Yes, I see many comments in English in Thiinai . Why bother with comments section if you are going to censor it?

    1. Avatar
      admin says:

      ஒரு நாளைக்கு 2000க்கும் மேற்பட்ட ஆங்கில spam commentகள் வருகின்றன. அவற்றை ஒவ்வொன்றையும் பார்த்து அவற்றை அனுமதிப்பது சாத்தியமில்லை. தமிழில் இருந்தால் நிச்சயம் அது பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்படும்.

  24. Avatar
    jyothirllata girija says:

    முரசொலி அடியார் சொன்னது பற்றிய என் கட்டுரை ராமரைப் பற்றிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது பற்றி வியப்படைகிறேன்.

    ///அவதார தேவன் இராமனுக்கு என்று தனிக் கோயில் ஒன்று ஏன் இரண்டாயிரம் ஆண்டுகளாக வட இந்தியாவில் இதுவரைக் கட்டப்பட வில்லை ?///
    ///The location where Babri Masjid stood has been proclaimed to be Rama temple by many.///
    வட இந்தியாவில் இராம பிரானுக்கு இடிபட்ட பாப்ரி மசூதி இடத்தில் இல்லாத / அல்லது இருந்ததாக நினைக்கும் ஒரே ஒரு கோயிலா ?
    சி. ஜெயபாரதன்
    Reply
    இராமர் கோயில் பற்றிய வலைத் தளங்கள் காண ஆவல். இணைப்புகளை அனுப்புங்கள். ஆலயப் பட இணைப்புகள் இருந்தாலும் போடுங்கள்.
    சி. ஜெயபாரதன்
    Reply
    பாபர் மசூதி இருந்த இடத்தில் தோண்டிப் பார்த்த பின் அங்கே புதைந்து கிடந்த விக்கிரகங்கள், கோவில் தூண்களின் சிதிலங்கள் போன்றவற்றிலிருந்து அங்கே முதலில் இருந்தது ராமர் கோவில்தான் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவரத்தையும் அறிக்கையின் சான்றுகளுடன் வலைத்தளத்திலிருந்து அறியலாம்.
    இந்தியாவில் உள்ள ராமர் கோவில்களின் வண்ணப் படங்களும் வலைத்தளத்தில் உள்ளன. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்க என்னால் இயலவில்லை. ஓரிரு தளங்களை மட்டுமே பார்த்தேன். கணினி பற்றிய அரிச்சுவடி கூட அறியாத நானே – Temples for Lord Rama in India – North and South என்று வலைத்தளத்தில் போட்டு – இந்தியாவில் உள்ள ராமர் கோவில்கள் பற்றிய விவரங்களை அறிந்த போது, கணினி வல்லுநர் ஜெயபாரதன் வலைத்தள விவரம் கேட்பது வியப்பாக உள்ளது. Why didn’t Ravana touch Sita எனும் கேள்விக்குக் கூட வலைத்தளத்தில் பதில் உள்ளது. இதைப் படித்துவிட்டு ஜெயபாரதன் தம் எதிரொலி என்னவென்பதைச் சொல்;லுவாரா?

    The banishment of Sita to the forest was done on the basis that a king should be model for the citizens and hence he had to do what he did. But Sita was not murdered. She went into the earth whence she came. Rama also disappeared after dipping into the Sarayu river. SitA was an incarnation of Lakshmi and hence placing her in the temple along with Rama was justified. Krishna too died from a hunter’s arrow to his foot (a human end) but he is given a divine status. So it is all a perspective. Valmiki dealt with Rama on a human status because the emphasis was on that premise to kill Ravana. Valmiki attributed some divine features to Rama in passing. It is a transition zone.

    சீதை அக்னிப் பிரவேசம் செய்து தனது தூய்மையை ஊரரருக்காக மெய்ப்பிப்பதை ராமன் விரும்பினான் என்று நமக்குத் தெரியும். அதன் பின் எவனோ வண்ணான் கூறிய அவதூற்றைச் செவிமடுத்து அவனைப் போன்றவர்களைத் திருப்தி செய்வதன் பொருட்டு மனைவியைக் காட்டுக்கு அனுப்பியது நியாயம் என்பது ஏற்ககக்கூடியதன்று. ஏனெனில் ஊரில் இரண்டு விதமான கருத்துகளும் கட்டாயம் நிலவி யிருந்திருக்கும். ‘அக்னிப் பிரவேசம் செய்து தன் தூய்மையை ஒருத்தி மெய்ப்பித்த பின் அவளைச் சந்தேகிப்பதில் துளியும் நியாயமில்லையே ! ஒரு வண்ணான் ஏதோ சொன்னான் என்பதற்காகச் சீதையை ராமன் காட்டுக்கு அனுப்பியது என்ன நியாயம்?’’ என்று கேட்கக்கூடியவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்திருப்பர். அவர்களைத் திருப்திப் படுத்த வேண்டிய கடமை மட்டும் ஒரு மன்னனுக்கு இல்லையா என்ன? எனவே ராமன் சீதையின் விஷயத்தில் நடந்து கொண்டது நியாயமே அன்று. அது அரச நீதியும் அன்று. அது மனிதத்தனமே அற்ற கொடுமை.
    சீதையின் மரணத்துக்கு ராமனே காரணன் என்பதே எனது கருத்தும் ஆகும். அவள் தாங்க முடியாத துயரத்தில் அதல பாதாளத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு இறந்திருந்திருக்க வேண்டும் என்பதே நமது கருத்தும் ஆகும். பூமாதேவியின் மகள் பூமிக்குள் ஐக்கியமானாள் என்பதும் பூமாதேவி வாய்பிளந்து தன் மகளை வாங்கிக்கொண்டாள் என்பதும் கவியின் symbolism ஆகும்.
    மறைந்திருந்து வாலியைக் கொன்றதற்கான தண்டனையை ராமன் தனது கிருஷ்ணாவதாரத்தின் போது மறைந்திருந்த வேடன் ஒருவன் எய்த அம்பால் கொல்லப்பட்டதன் மூலம் பெற்றான் என்பர் கற்றறிந்த பெரியோர். கடவுளே யானாலும் தப்பு தப்புதான்! அதற்கான தண்டனையும் கடவுளுக்கும் உண்டு.
    கடவுள் மனிதனாக அவதரிக்கும் போது மனிதனுக்குரிய ந\ல்லவை கெட்டவை ஆகியவற்றுடன்தான் பிறப்பார் என்று நம்பப்படுகிறது. இயேசு பிரானுக்கு ஏற்பட்ட மரண பயத்துக்கும் பைபிளில் இதே காரணம் சொல்லப்படுகிறது.
    ராமன் மறைந்திருந்து வாலியைக் கபடமாய்க் கொன்றதும், சீதையைக் கொடுமைப்படுத்தியதும் மனிதப் பிறவிக்கு உள்ள குறைபாடுகளேயாம். உயிரினங்களின் பரிணாமத்தை விளக்குபவையே அவதாரங்கள். எவ்வளவு நல்ல மனிதனாக இருப்பினும் தன்னலம் என்று வந்துவிட்டால் மறைந்திருந்து வாலியைக் கொன்றது போன்ற கபடக்காரனாகவும், கணவன் என்கிற நிலையில் மனைவியைக் கொடுமைப்படுத்துபவனாகவுமே அவன் இருப்பான் என்பதை ராமாவதாரம் கூறுவதாக நான் கருதுகிறேன். அதாவது, பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்கு நியாயம் வழங்க மாட்டார்கள் எனும் சேதியை ராமனின் அவதாரம் தெரிவிக்கிறது.
    சில ”புராணப் புளுகுகள்” அறிவார்ந்த அணுகுமுறைக்கு ஒத்துவராதவைதான். அவற்றை அம்புலிமாமா கதைகளைப் போல் ஒரு குழந்தைத்தனத்தோடு ரசிப்பது அப்படி ஒன்றும் பெரிய குற்றமன்று. அவற்றில் வெளிப்படும் செய்திகளும் நீதிகளுமே (messages and morals) நமக்குத் தேவையானவை.
    ஜோதிர்லதா கிரிஜா

  25. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    பெண்ணுக்கு நியாயமான நல்லதோர் கருத்தோட்டம் கிரிஜா. நன்றி அதற்கு.

    ஆனால் இடிபட்ட பாப்ரி மசூதி இடத்தில் இருந்ததாகக் கருதப்படும் கோயில் ராமன் கோயில் இல்லை; அது ஓர் சிவன் கோயில் என்று புதைபொருள் புலமாய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

    ஆங்கில இடுகைக்குத் திண்ணை மன்னிக்கவும் :

    en.wikipedia.org/wiki/Ayodhya_dispute#Excavations

    Since 1948, by Indian Government order, Muslims were not permitted to be closer than 200 yards away to the site; the main gate remained locked, though Hindu pilgrims were allowed to enter through a side door. The 1989 Allahabad High Court ordered the opening of the main gate and restored the site in full to the Hindus. Hindu groups later requested modifications to the Babri Mosque, and drew up plans for a new grand Temple with Government permissions; riots between Hindu and Muslim groups took place as a result. Since, then the matter is sub-judice and this political, historical and socio-religious debate over the history and location of the Babri Mosque, is known as the Ayodhya dispute.

    Excavations:

    Archaeological excavations by the Archaeological Survey of India (ASI) in 1970, 1992 and 2003 in and around the disputed site have clearly found the evidence indicating that a large Hindu complex existed on the site.[34] In 2003, by the order of an Indian Court, The Archaeological Survey of India was asked to conduct a more indepth study and an excavation to ascertain the type of structure that was beneath the rubble indicated definite proof of a temple under the mosque.[35]

    However, it could not be ascertained if it was a Rama temple as remnant had more resemblance to a Shiva temple.[35] In the words of ASI researchers, they discovered “distinctive features associated with… temples of north India”. The excavations yielded:

    “stone and decorated bricks as well as mutilated sculpture of a divine couple and carved architectural features, including foliage patterns, amalaka, kapotapali, doorjamb with semi-circular shrine pilaster, broke octagonal shaft of black schist pillar, lotus motif, circular shrine having pranjala (watershute) in the north and 50 pillar bases in association with a huge structure”

    இராவணன் வன்முறையில் சீதையை எப்படித் தொட்டிருக்க வேண்டும் என்ற வாதத்துக்கு நான் வர விரும்பவில்லை. இந்த கற்பனை யூகம் தர்க்கமே தவிர மெய்யான கருத்தோட்ட மாகாது.

    சீதையின் மரணம் பற்றி நல்லதோர் தெளிவான, ஆழ்ந்த கருத்தோட்டம் எழுதிய உங்கள் பின்னோட்டம் திண்ணை வரலாற்றிலும், தமிழ் இலக்கிய எழுத்து வரலாற்றிலும் முக்கிய இடம் பெறும்.

    சி. ஜெயபாரதன்

  26. Avatar
    jyothirllata girija says:

    அன்புமிக்க என் முப்பதாண்டுக்கால நண்பர் ஜெயபாரதனுக்கு. உங்கள் பாராட்டு மொழிகளுக்கு நன்றி. அது சிவன் கோவில் என்று தெரிவித்தமைக்கும்தான். ஏன் ராமருக்கென எண்ணிறந்த கோவில்கள் வட இந்தியாவில் இல்லை என்கிற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். காரணம் எனக்குத் தெரியாது. நீங்கள்தான் சொல்லுங்களேன் காரணம் என்ன அல்லது என்னவாக இருக்கும் என்பதை?
    உங்கள் கருத்துப்படி ராமாயணக் கதை மாந்தர்கள் தேவர்களோ, அரக்கர்களோ அல்லர், அவர்கள் மனிதர்களே என்பதுவே. பெண்பித்தனான காரணத்தாலேயே ராவணன் சீதையைக் கடத்திச் சென்றான் என்பது தெளிவு. இதை யாரும் மறுக்க முடியாது. அப்படி இருக்க, அவன் சீதையை நீண்ட நெடுங்காலம் தொடக்கூட இல்லை என்பதை எப்படி நம்புவது? அவ்வாறு காத்திருப்பது அவனது இயல்போடு – character உடன்– கடுகளவும் பொருந்தவில்லையே! எனவே அவன் சாபத்துக்கு அஞ்சியே சீதையின் மனமற்றத்துக்குக் காத்திருந்தான் என்பதே – அது கதையே என்று வைத்துக்கொண்டாலும் – நம்பும்படி உள்ளது. சாபத்தின் மீது சிலருக்கு நம்பிக்கை இல்லாதிருக்கலாம். ஆனால் ராவணனின் நம்பிக்கையையும், அதன் விளைவான அவனது அச்சத்தையும் கேள்வி கேட்க நாம் யார்? மேலும், ஒரு நல்ல ஆன்மா வயிறெரிந்து சாபமிடும்போது, அது எதிராளியைத் தாக்கவே செய்யும். Thought force இன் விளைவு அது தானே? ராவணனின் நடத்தை என் ஊகமன்று. கற்பனையும் அன்று.அவனது இயல்போடு பொருந்துவது. பெண்பித்துப் பிடித்தவனான அவன் – தக்க காரணம் இருந்தாலன்றி – சீதையைக் கெஞ்சிக்கொண்டு அத்தனை நாள்களும் பொறுமையாகக் காத்திருந்திருக்க மாட்டான் என்பதே கண்கூடான நிலை. அப்படி இருக்க, நீங்கள் விவாதிக்க விரும்பவில்லை என்பதால் உண்மையான ஒன்று பொய்யாகிவிடுமா?
    ராவணன் வெறும் மனிதனே என்பதும், சாபம் எதற்கும் அவன் அஞ்சவில்லை என்பதும் உண்மையாயின், சீதை அவனால் கெடுக்கப்பட்டு உடனே தனது இயல்பு – character – க்கு ஏற்ப அவள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருந்திருப்பாள் என்பதே உண்மையாகும்.
    ஜோதிர்லதா கிரிஜா

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ஶ்ரீ இராமருக்குக் கட்டியுள்ள சில வட இந்திய ஆலயங்களை வலைப் படங்களில் பார்த்தேன். அவை யாவும் அவர் வாழ்ந்த காலத்துக்குப் பிறகு அவதார நாயகனாகக் கருதப்பட்டு வந்த நூற்றாண்டுகளில உருவாகி இருக்கலாம் என்பது என் கருத்து.

      இராவணன் சீதையை ஒருமுறையோ, பலமுறையோ பலவந்த உறவுக்கு இழுத்துப் பாதகம் செய்தான் என்பது எனக்கு ஏற்புடமையன்று.

      சீதையின் மீட்சிக்குப் பிறகு இலங்காபுரியில் சீதை ஆருயிர்க் கணவனைச் சந்தித்த போது, அவள் கண்கள் இராமனை நேராகக் கனிவுடன் நோக்கி நெருங்க, தள்ளி அசையாது நின்ற இராமன் கண்கள் சீதாவைத் தணிவாக நோக்கின.

      சீதா களங்கப் படுத்தப் பட்டிருந்தால் புனிதன் இராமனை அவள் கண்கள் நேராக ஒருபோதும் நோக்கா. அவள் அவனை அன்புடன் நெருங்கவோ, தொடவோ கூசுவாள். பிறகு இராமனுக்கு லவா, குசா இரட்டையரைப் பெற்றிருக்க மாட்டாள்.

      சீதை மீது சந்தேகம் கொண்ட இராமனே தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.

      தங்கையை அவமானம் செய்த இராமனை அவமானப் படுத்த, இராவணன் சீதைக் கவர்ந்தானே தவிர சீதையைக்
      களங்கம் செய்யவன்று என்பது என் கருத்து.

      சீதை களங்கப் பட்ட காயத்துடன் இரு பிள்ளைகள் இராமனுக்குப் பெற்று, பல்லாண்டுக்குப் பிறகு இறுதியில் களங்கத்தால் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள் என்பது எனக்கு ஏற்புடையதாய் இல்லை.

      சி. ஜெயபாரதன்

  27. Avatar
    I I M Ganapati Raman says:

    பெண் பித்து பிடித்தவன் என்றால் பல பெண்களின் பின்னாளல் சுற்றி, பல பெண்களை வன்முறையால் மடக்கி, அல்லது கவர்ச்சியால் கவர்ந்து காமுற்று வீசிவிடுபவனே. ஆங்கிலத்தில் காசினோவா. அல்லது வுமனைசர் என்பார்கள். இராமாயாணத்தில் இராவணன் அப்படி பல பெண்களைக்கெடுத்தான் என்று சொல்லியிருக்கிறதா? அல்லது ஆயிரக்கணக்கான இளம்பெண்களை தன் அந்தபுரத்தில் வைத்து காமுற்றானா?அறியேன். சீதையில் அழகில் மையலுற்று தான் என்ற அஹ்ங்காரத்தினால் தான் நினைத்ததை விரும்பியதை அடைந்தே தீருவேன் என்ற மமதையால் சீதையை முனிவர் வேடத்தில் வந்து ஏமாற்றித் தூக்கிச்சென்று சிறை வைத்து அவளை மனமாற்றம் செய்து அடையலாம் என நினைத்தான் என்றுதான் கேட்டிருக்கிறோம். காமுகனாக, வுமனைசராக, காசினோவாக அல்லது இளையோர் தரும் கலவியே மேல் என்று கிடந்ததாக அவன் சித்தரிக்கப்பட்டிருக்கிறானா இராமாயணத்தில் ? அறியேன்.

  28. Avatar
    mahakavi says:

    Pardon me for replying in English. Ramayanam is part history and part mythology (even if some people believe otherwise). The major force that motivated Ravana to abduct Sita was to avenge his sister’s punishment by Lakshmana and also her ill-advised inducement that he should take Sita for himself by describing Sita’s beauty. Ravana complied. Perhaps this part is history. But then we come to mythology. His previous encounter with Vedavati resulted in a curse for him from Brahma that should he ever mate with another woman against her wishes his head will shatter to pieces. So he decided to wait to convince Sita.

    There is also another episode that Ravana was one of the contestants in Mithila to string the Shiva dhanus and his disappointment at not succeeding then might have bothered him. When Surpanaka goaded him into getting Sita through devious means he succumbed. There lies the human/history part and the belief in curse is the mythology part. So there is every reason to believe that he never tried to enjoy Sita.

    Kamban to his credit went one step further than Valmiki (who said he carried her by holding her groin in one hand and her locks of hair in the other) by stating that he carried her along with the earth where Sita stood but never touch her physically.

    Over and above all this rigmarole, there is a mention in Ramayanam by Valmiki, I am told, that Rama told Sita just before going after the golden deer that the time has come for them to separate (as per divine ordination).

  29. Avatar
    jyothirllata girija says:

    ராவணன் தன் தங்கை விஷயத்தில் ராமனைப் பழி வாங்கும் பொருட்டு மட்டுமே சீதையைக் கவர்ந்து சென்றான் என்பது அப்பட்டமான தவறான ஊகமாகும். உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள் செய்யும் ஊகங்களை ஏற்க இயலவில்லை. மன்னிக்கவும். பின், அவன் ஏன் அடிக்கடி சீதையைச் சந்தித்து அவளைப் பட்டமகிஷியாக்கும் ஆசையைக் காட்டிக் கொண்டிருந்தான்? அவளை மணக்கும் எண்ணத்தை அவனே வெளிப்படுத்தியுள்ளானே? ராமாயணத்தில் ஒன்று சொல்லியிருக்க, நீங்கள் உங்கள் விருப்பம் போல் தவறான வேறு ஊகங்களைச் செய்து வருகிறீர்கள். தன் தங்கை விஷயத்தில் ராமனைப் பழி வாங்குவதற்காக மட்டுமே ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதை ஒரு குழந்தை கூட நம்பாது. சீதை கெட்டுப்போனவள் என்று நான் சொல்லவே இல்லையே. அவள் ராவணனால் தொடப்படாமைக்கான காரணம் சாபத்துக்கு அவன் அஞ்சியதுதான் என்று சொல்லியிருந்தேன். சாபத்துக்கு அவன் அஞ்சினான் என்பதே கதை. அப்படி இல்லையெனில், அவன் சீதையை விட்டு வைத்திருந்திருக்கவே மாட்டான் என்பதே அவனது இயல்புக்கேற்ற முடிவாக இருந்திருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். யதார்த்தமான விளைவை ஏற்க மறுத்து முரண்படும் கருத்தைத் தெரிவிக்கும் உங்களோடு இனி வாதிடுவதில் பொருள் இல்லை என்பதாலும் – என்னதான் நமது நட்பு மிக உயர்ந்தது என்றாலும் – அது உங்களுக்கு இயல்பான மனக் கசப்பை விளைவிக்கும் என்பதாலும் இது பற்றி மேற்கொண்டு நீங்கள் என்ன சொன்னாலும் நான் மீண்டும் விவாதிக்கப் போவதில்லை. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை யெனில் அமரர் நடிகவேள் எம். ஆர். ராதா அவர்களைப் போல் வேறொரு ராமாயணம்தான் எழுதவேண்டும். எழுதுங்களேன், ஜெயபாரதன்! புதிய ராமாயணம் படைக்க இதையே ஓர் உந்துகோலாக எடுத்துக்கொண்டு தொடங்குங்கள். சீதாயணம் எழுதிய உங்களுக்கு அது சுண்டைக்காயாக இருக்கும். பல்வேறு ராமாயணக் கதைகள் இருக்கையில், அது ஜெயபாரத ராமாயணமாக இருக்கட்டுமே. சீதை ராவணனின் மகள் என்று கூட ஒரு கதையை அமரர் நடிகர் ஆர். எஸ். மனோகர் மேடையேற்றியுள்ளது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
    All the best, Jayabharathan!
    இந்த விவாதத்திலிருந்து இத்துடன் விடை பெறுகிறேன்.
    அன்புடன்
    ஜோதிர்லதா கிரிஜா

  30. Avatar
    ஷாலி says:

    ஜனகன் மகளே, உன் இஷ்டம் போல போ. இதோ பத்து திக்குகளில் எங்கு வேண்டுமானாலும் போ. உன்னால் எனக்கு ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை. உத்தமமான குலத்தில் பிறந்த எந்த புருஷன், பிறர் வீட்டில் வசித்த ஸ்த்ரீயை ஏற்றுக் கொள்வான்? தேஜஸ் உடையவனாக இருந்தால். கோபம் நிறைந்த ராவணன் மடியில் இருந்து விழுந்தவள் நீ, அந்த துஷ்டனால் கெட்ட எண்ணத்தோடு பார்க்கப் பட்டவள் நீ, உன்னை எப்படி ஏற்றுக் கொள்வான்? நான் நல்ல குலத்தில் பிறந்தவன். உன்னை எப்படி ஏற்றுக் கொள்வேன்? என் புகழைக் காத்துக் கொள்ளவே உன்னை மீட்டேன். எனக்கு இப்பொழுது உன்னிடத்தில் எந்த வித ஈ.டுபாடும் இல்லை. நீ போகலாம். இங்கிருந்து உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாம். நான் யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்தேன். ப4த்3fரே, அபலையான ஸ்த்ரீ என்பதால் அடைக்கலம் தேடி, நீ லக்ஷ்மணனிடமோ, பரதனிடமோ, யாரிடம் வேண்டுமோ போய் இரு. சுகமாக இரு. சுக்ரீவன் வானரேந்திரன் இதோ நிற்கிறான். ராக்ஷஸ ராஜன் விபீஷணனிடம் சௌகர்யமாக இருக்கலாம். யாரிடம் வேண்டுமானாலும் உன் மனதை செலுத்தி எப்படி சௌகர்யமோ செய்து கொள். மனோரம்யமான உன் திவ்ய ரூபத்தைப் பார்த்தும், தன் க்ருஹத்தில் கொண்டு வந்து வைத்த பின்னும் ராவணன் தான் எவ்வளவு நாள் பொறுத்திருப்பான்.
    மைதிலிஸ்ரீ தன் கணவன் பிரியமாக பேசப் போகிறான் என்று நினைத்து வந்தவள், இப்படி ஒரு கடுமையான சொல்லைக் கேட்டு கண்களில் நீர் ஆறாக பெருக, க3ஜேந்திரன் கையில் அகப்பட்ட கொடி போல நடுங்கினாள்.
    ஏன் என்னிடம் இப்படி தகாத வார்த்தைகளை, செவிக்கு பயங்கரமான கடும் சொற்களை சொல்லி வதைக்கிறாய். வீரனே, ப்ராக்ருதமான கிராமத்து ஆண் மகன், ப்ராக்ருத, கிராமத்து ஸ்த்ரீயிடம் பேசுவது போல பேசினாய். நீ நினைப்பது போல அல்ல நான், தெரிந்து கொள். நீ சொல்லும் சரித்திரத்தில், என் நடத்தையின் பேரில் ஆணையாக சொல்கிறேன். ஏதோ தனிப்பட்ட சில ஸ்திரீகளின் துர்நடத்தையை மனதில் கொண்டு ஸ்திரீ ஜாதியையே தூஷிக்கிறாயே. நீ என்னை முற்றிலும் அறிந்தவனாக இருக்கும் பொழுது இந்த சந்தேகம் எப்படி வரும்? அதை இப்பொழுதாவது விடு. ப்ரபோ4 (ராவண) உடல் ஸ்பரிசம் என் மேல் பட்டது என்றால் அச்சமயம் நான் என் வசத்தில் இல்லை. வேண்டும் என்று விரும்பிச் செய்த செயலா அது? விதி தான் இதற்கு காரணம். காலத்தின் குற்றம். என் அதீனத்தில் உள்ள என் மனம் உன்னையே நாடுகிறது. உன்னையே நினைத்து வந்திருக்கிறது. பராதீனமான என் சரீரத்தில் எனக்கு என்ன அதிகாரம் இருந்தது. நீயும் இல்லாமல் தனியாக இருந்தேன். மானத, (எனக்கு சம்மானமும் கௌரவமும் தந்தவனே) கூடவே வளர்ந்து உணர்ந்து கொண்ட பாவங்களாலும் (உணர்வுகளாலும்), இணைந்தே இருந்ததாலும் என்னை புரிந்து கொண்டது இவ்வளவு தான் என்றால், நான் சாஸ்வதமாக அழிந்ததாகவே கொள்ளலாம். ஹனுமான் என்ற வீரன் என்னைத் தேடி உன்னால் அனுப்பட்டு வந்த பொழுதே, லங்கையில் இருந்த என்னை ஏன் கை கழுவி விட வில்லை. வானர வீரனின் முன்னால் இந்த வாக்யத்தை கேட்டவுடனே நானே உயிரை விட்டிருப்பேன்.
    வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் அத்தியாயம் 118 (525) சீதா ப்ரத்யாதே3ச: (சீதையை ஏற்க மறுத்து திருப்பி அனுப்புதல்),
    ஹுதாசன ப்ரவேசோ என்ற நூற்று பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
    இது MLJ publications – என்ற பதிப்பகத்தின் ராமாயணத்தின் தமிழாக்கம். ராமாயணத்தின் பிரதிகள் பல விதமான பாட பேதங்களுடன் உள்ளன. மஹா பெரியவர்களின் அனுகிரஹத்துடன் எனக்கு கிடைத்ததை பல முறை பாராயணம் செய்த பின்னரே தமிழாக்கம் செய்ய முனைந்தேன்.-ஜானகி கிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *