Articles Posted by the Author:

 • அறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த  மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணி

    ஜோதிர்லதா கிரிஜா      தமிழ்நாட்டில் மாதர் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருந்த மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு ஆளாகி மே மாதம் 30 ஆம் நாளில் தம் 81 ஆம் வயதில் காலமானார். அனைத்திந்தியப் பார்வை மட்டுமின்றி, அனைத்துலக நோக்கும் கொண்டிருந்த அவர் வியட்நாம் போருக்கு எதிரான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அறுபதுகளில் ஐக்கிய நாடுகளின் அவையின் நிரு[பராய்ப் பணியாற்றினார். பின்னர், இந்தியாவுக்குத் திரும்பியதும், இடது […]


 • அதுதான் வழி!  

  அதுதான் வழி!  

                          ஜோதிர்லதா கிரிஜா (குமுதம் சிநேகிதி-இல், 2001 இல் வந்தது. இதழின் தேதி கிடைக்கவில்லை. ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’-இன் ‘அது என்ன நியாயம்?’ தொகுப்பில் உள்ளது.)       ராஜாத்தி அவசரம் அவசரமாய்ச் சமையற்கட்டுக்குள் நுழைந்த போது கெடியாரம் ஒரு முறை “டங்” என்றது. மணி ஆறரை. அவள் என்றுமே இவ்வளவு தாமதமாக எழுந்ததில்லையாதலால் அவளுக்கு உறுத்தலாக இருந்தது. மாமியார் பங்கஜம் […]


 • இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?

  இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?

    ஜோதிர்லதா கிரிஜா ஈஷா யோகா அமைப்பாளர் ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாள்களாக இந்துக் கோவில்களை அற நிலையத் துறையினின்று விடுவித்துத் தனியார் வசம் ஒப்பபடைக்க வேண்டும் எனும் கருத்தை வெளியிட்டு வருகிறார். அண்மையில் நிதித் துறை அமைச்சர் மாண்புமிகு பழநிவேல் தியாகராஜன் ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்துகளுக்கு எதிரான தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.  அவர் தெரிவித்துள்ள கருத்துகளில் ஜக்கி வாசுதேவ் பற்றிய விமர்சனமே பெருமளவுக்கு இருக்கிறதே தவிர, அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அமைச்சரிடமிருந்து […]


 • துணை

  துணை

      ஜோதிர்லதா கிரிஜா (1975, ஆகஸ்ட் மாத “ரஞ்சனி” இல் வந்தது. “தொடுவானம்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் தொகுப்பில் உள்ள சிறுகதை.)       சோமையாவுக்குத் திடீரென்று திருமணத்தில் நாட்டம் விழுந்து விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன்னந்தனியாக அவர் வாழ்ந்து வருகிற வாழ்க்கை அவருக்குச் சலிப்பையும் யாருடைய கூட்டுறவையேனும் நாடுகின்ற ஏக்கத்தையும் அளித்துவிட்டது என்பது ஒருகால் அந்த நாட்டத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். வயசு ஏற ஏற, இறுதி நாள்களில் தமக்கு ஒரு வாய் […]


 • அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!

  ஜோதிர்லதா கிரிஜா ( ‘தமிழரசு’ ஜனவரி, 1987 இதழில் வந்தது. சேது-அலமி பிரசுரத்தின்‘அம்மாவின் சொத்து’ எனும் தொகுப்பில் உள்ளது. )       வீடு முழுவதும் ஒரே வாசனை. ஒரே வாசனையா? இல்லை, இல்லை. பலவகை வாசனைகள்.  ஊதுபத்தியின், சந்தனத்தின், மலர்களின் இன்னோரன்ன பிறவற்றின் வாசனைகள். … அந்த வீட்டையே நறுமணங்களின் வாசனைகளின் கலவையில் முக்கி எடுத்திருந்தாற்போல், அது மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது.       கல்யாண வீட்டின் வாசனை அது. சண்முகம் வாய்க்குள் சிரித்துக்கொண்டார். அவருடைய திருமண நாள் பற்றிய […]


 • எத்தகைய முதிர்ந்த ஞானம்!

  எத்தகைய முதிர்ந்த ஞானம்!

  ஜோதிர்லதா கிரிஜா        23.5.2021 பிரபல எழுத்தாளரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிரிஷ்ணனின் குடும்பத்துக்கு மிக மோசமான நாள். அவருடைய ஒரே மகன் இளைஞர் அரவிந்தன் கொரொனாவுக்குப் பலியானார். செய்தி அறிந்து துடித்துப் போனோம்.         நான் முகநூல் பயன்படுத்துவதில்லை. எனவே என் வேண்டுகோளின் படி எழுத்தாளர் அம்பை திருப்பூர் கிருஷ்ணனின் முகநூல் பதிவை அனுப்பி வைத்தார். அதில் ததும்பும் ஞானச் செறிவைத் திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. …….   உண்மையாகவே […]


 • அப்பாவிடம் ஒரு கேள்வி

  அப்பாவிடம் ஒரு கேள்வி

  ஜோதிர்லதா கிரிஜா   (தினமணி கதிர் 5.7.1998 இதழில் வந்தது. ‘வாழ்வே தவமாக…’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)         இரவெல்லாம் சரியாகத் தூங்காததில் தீபாவின் கண்கள் சிவந்து கிடந்தன. முகம் கன்றி யிருந்தது. தலையைத் தாழ்த்தியவாறே, காலைக்கடன்களை முடீக்கப் பின்கட்டுக்கு மெதுவாக நடந்து சென்ற அவளது முதுகுப்புறம் பார்த்துப் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு எதுவுமே தன்னால் செய்ய இயலாது என்று எண்ணியவளாய் அவளைத் தன் பார்வையாலேயே […]


 • புகை

  புகை

  ஜோதிர்லதா கிரிஜா (23.3.1980 கல்கி-யில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       கண்ணப்பன் எரிச்சலுடன் எழுந்தான். சமையற்கட்டிலிருந்து கிளம்பிவந்த புகை கண்ணைக் கரித்ததுதான் அவனது எரிச்சலுக்குக் காரணம். புகையின் விளைவாகக் கண்களில் நீர் சோர்ந்ததால் படிக்க முடியாமல் போன எரிச்சலுடன்,  “காந்திமதி, ஏய் காந்திமதி! என்னது இது, வீடு முழுக்கப் புகைய விட்டுக்கிட்டு?” என்று கத்திய வண்ணம் சமையற்கட்டுக்குப் போனான். தானும் கண்களைக் கசக்கிக்கொண்டே அங்கிருந்து வெளிவந்த காந்திமதி, “என்ன […]


 • நீ ஒரு சரியான முட்டாள் !

  நீ ஒரு சரியான முட்டாள் !

    ஜோதிர்லதா கிரிஜா   (19.2.1978 குங்குமம் இதழில் வெளிவந்த சிறுகதை. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “திருப்பு முனை” )எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)         மணமான புதிதில் ஒவ்வோர் இளைஞனின் முகத்திலும் குடிகொள்ளும் நிறைவும், மதர்ப்பும், பொருள் பொதிந்த புன்னகையும் அவன் முகத்திலும் தவழ்ந்துகொண்டிருந்தன. அதற்கு முந்தின நாள் தனக்கும் தன் மனைவிக்குமிடையே நடந்த சிறு பிணக்கும், அதன் பல மணி நேர நீடிப்பும், அது எங்கே ஒரு நாள் முழுவதும் நீடித்துவிடுமோ எனும் அவனது […]


 • நேரு எனும் மகா மேரு !

  ஜோதிர்லதா கிரிஜா “ நேரு ” எனும் பெயரைக் கேட்டதுமே இந்தியர்களின் நினைவில் தோன்றுபவர்  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருதான். ஒருவரை விமர்சிக்கும் போது, நடுநின்று விமர்சித்தலே நேர்மையான அணுகு முறையாகும். கட்சிச் சார்புடையவர்கள் அப்படிச் செய்வதே இல்லை.  ஏனெனில் நேர்மையான விமர்சனங்களைக் கட்சித் தலைமை மதிப்பதில்லை என்பதோடு அதைச் செய்பவர்களைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்கிறது. குழந்தைகளைப் பெரிதும் நேசித்த ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 குழந்தைகள் தினமாய்க் கொண்டாடப் படுகிறது […]