வால்ட் விட்மன் வசனக் கவிதை – 83

author
0 minutes, 18 seconds Read
This entry is part 24 of 26 in the series 13 ஜூலை 2014

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Children of Adam)

(Among the Multitude)

(O You Whom I often & Silently Come)

ஆயிரம் பேரில் ஒருத்தி

அடிக்கடி வருவது உன்னிடம்

 

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

  1. ஆயிரம் பேரில் ஒருத்தி

 

ஆடவர், பெண்டிர் என்ற

பேரளவு எண்ணிக் கைக்குள்

யாரோ ஒருத்தி என்னைத்

தேர்வு செய்ததைக்

கூர்ந்து நான் நினைத்தேன் !

இரகசிய மாய்த்

தெய்வீக அம்சங் களுடன்

தேர்ந் தெடுத்தவள் !

வேறு யார் சொல்லையும்

ஏற்க வில்லை !

பெற்றோர்,

தாரம், கணவன், புதல்வர்,

சோதரர்

எவரும் இல்லை ஒருவன்

என்னைத் தவிர !

வேறு எவரும்

ஏற்க வில்லை என்னை !

குழப்பம் அடைந்தனர் சிலர்,

என்னைப் புரிந்து

பழக்க மான  —

அந்த ஒருவனைத் தவிர !

 

 

                                        **********************

 

  1. அடிக்கடி வருவது உன்னிடம்

 

 

அந்தோ ! உன்னிடம் தான்

வந்தேன் நான்

அடிக்கடி மௌனமாய்,

எங்கு நீ என்னோடு

தங்கி வாழ முடியுமோ

அங்குதான் !

உன்னோடு கைகோர்த்து

உலவும் போதோ,

அல்லது

உன்னருகில் நான்

அமர்ந்துள்ள போதோ,

அல்லது

ஒரே அறையில்

உன்னோடு நெருங்கிய போதோ,

என்னுள்ளே மெல்லப்

பொங்கிடும்

மின்னியல் கனலை

சின்ன அளவேனும் நீ

உணர மாட்டாய் !

என்னுள்ளே அது

உனக்காகத்

துள்ளி

விளையாடு வதையும்

அறிய மாட்டாய் நீ !

 

 

+++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 8, 2014

Series Navigationபுதுவிலங்குதொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *