முனைவர் ச.கலைவாணி
இணைப்பேராசிரியர்
மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர்
மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.
சங்கப்பாடல்களை நாடகத் தன்மையில் அமைந்த தனிநிலைச் செய்யுள்கள் எனலாம்.கலித்தொகைப் பாடல்களும்ää அகநானூற்றுப் பாடல்களும் ஓரங்க நாடகங்களைப் போல காணப்படுகின்றன. ‘பாடலோர்ந்தும் நாடகம் நயந்தும்’ எனும் பட்டினப்பாலை வரி அக்கால மக்கள் நாடகத்தைக் கண்டு களித்த செய்தியைக் கூறுகிறது. பெரும்பாலும் தொல்காப்பியர் கூறிய நாடகங்கள் (கூத்துக்கள்) அவற்றின் வகைகள் பற்றிச் சங்க இலக்கியங்களில் காணலாம்.கூத்தரும் பாணரும் பாடினியும்ää பொருநரும் நாடகக் கலையையும்ää இசைக்கலையையும் வளர்த்தனர். ஆனால் பாணரும் பாடினியும் இசைக்கலையை மட்டும்தான் வளர்த்தனர் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறு. இவர்களது பெயர்களை மேலெந்தவாறு பார்த்தால்ää ஒருசிலர் கூத்து நிகழ்த்துபவராகவும் மற்றவர் இசைக்கலைஞர் போலவும் நமக்குத் தோன்றுவர். எடுத்துக்காட்டாக ‘கூத்தர்’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு இவர்கள் கூத்தாடுபவர்கள் என்று கருத இடமுண்டு. ‘பாணர்’ என்ற சொல் கொண்டுää அவர்கள் யாழை வைத்துப்பாடுபவர்கள் என்றே கருதத்தோன்றும். ‘கூத்தரும் பாணரும்’ என்பதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் புறத்திணையியலில் ‘ஆடல் மாந்தரும் பாடல் பாணரும்’ என்று கூத்தரை நாடகம் ஆடுபவராகவும்ää பாணரைப் பாடல் பாடுபவராகவுமே கருதிப் பொருள் கூறுகிறார். இவர்களைப் பற்றிக் கூறுவது இக்கட்டுரை.
கூத்தர் :
‘தாவில் நல்லிசை’ எனத்தொடங்கிää ‘கூத்தரும் பாணரும்’ என வரும் தொல்காப்பியப் புறத்திணையியல் நூற்பாவுக்கு உரையெழுதும் போது நச்சினார்க்கினியர்ää “கூத்தராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புகளும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவார்” என்பர். இவ்விளக்கத்திலிருந்து எண்வகை மெய்ப்பாடுகளோடு தம் உடம்பிலும் முகத்திலும் குறிப்புகள் புலப்படுமாறு பார்வையாளருக்குச் சுவைதர ஆடுபவர்களே கூத்தர் என்று அறியலாம். ‘கூத்து’ என்ற சொல் நடனத்தையும் குறிக்கும். “இந்திய நாடக வரலாற்றில் நடனத்திற்கும் நாடகத்திற்கும் மிகுதியான வேறுபாடு இருந்ததில்லை. இந்தியக் கலைஞரின் தொன்மை காலத்தில் இதுதான் நிலைமை என்று ஆய்வாளர் கூறுவர். நாடகம் என்பது நடனத்தின் வழியாகவே நடித்துக்காட்டப்பட்டது” என்று ‘னுசயஅய in யுnஉநைவெ வுயஅடை ளுழஉநைவல’ என்ற நூலில் கார்த்திகேசு சிவதம்பி குறிப்பிட்டுள்ளார். எனவே கூத்தர் என்பவரை ‘நாடக நடிகர்’ என்பது பொருந்தும்.“கூத்தர் என்பவர் தனிக்கூத்திலும்ää கதையைத் தழுவி வரும் கூத்திலும் வல்லவர்” என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சியில் மா.இராசமாணிக்கனார் கூறுவது இக்கருத்தை அரண் செய்யும் ‘கூத்து’ மற்றும் ‘கூத்தர்’ ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் மிக அரிதாகவே காணப்படுகின்றன என்று எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆராய்ந்து ‘இலக்கியச் சிந்தனைகள்’ நூலில் கூறுவர். தொல்காப்பியத்தில் கூத்தர் என்ற சொல் மொத்தம் நான்கு இடங்களில் வரும். கூத்தர் என்ற சொல் 2381 பாடல்களைக் கொண்ட சங்க இலக்கியப் பரப்பில்; ஒரே ஒரு பாட்டில் மட்டும் தான் வந்துள்ளது. “…………. கூத்தர்@ ஆடுகளங் கடுக்கும் அகநாட்டையே” (புறம்.28) என்ற ஓரிடம் தவிர வேறெங்கும் ‘கூத்தர்’ என்ற சொல்லாட்சி இல்லை. ஆனாலும் கூத்தர் வேறு பெயர்களால் சுட்டப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஆடுநர்ää கோடியர்ääவரியியர்ääகண்ணுளர் எனச் சங்கப் பாடல்களில் வரும் பெயர்கள் கூத்தரைக் குறிப்பனவாகவே உள்ளன.“கூத்தினை ஆடுவதால் அவர்கள் ‘ஆடுநர்’ என அழைக்கப்பட்டனர். ‘கோடு’ என்பது ஊதுகொம்புää மரக்கிளைää வளைவுää யாழ்த்தண்டுää ஆட்டம் முதலியவற்றிற்காக வகுத்த தானம் முதலிய பல பொருளுடைய சொல்லாகும்” என்று கழகத் தமிழ் அகராதி கூறுகிறது. உடலை வளைத்து ஆடுவதால் இவர்கள் கோடியர் எனவும் வழங்கப்பட்டிருக்கலாம். வளைந்த மரத்தாலான ஊதுகொம்புää யாழ் முதலிய இசைக்கருவிகளை வைத்து ஆடியதாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம். ‘வயிர்’ என்ற சொல் ஊதுகொம்புää மூங்கில் எனப் பொருள்படும் என்றும் கழகத்தமிழ் அகராதி கூறுகிறது. அன்றில் பறவை இசைப்பது ‘வயிர்தல்’ என்று குறிஞ்சிப்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது. “ஏங்குவயிர் இசைய கொடுவா யன்றில்” (குறிஞ்.219) என்று குறிஞ்சிப்பாட்டில் வருதல் காணலாம். மயில் ஆடும் போது எழுப்பும் ஒலியும் ‘வயிர்’ என அகநானூற்றில் சொல்லப்பட்டுள்ளது. “ஆடுகள வயிரின் இனிய ஆலி” (அக.378) இதனால்ää அன்றில்ää மயில் போன்ற பறவைகளின் ஒலியை ஒத்த இசையெழுப்பும் ஊதுகொம்பிற்கும் ‘வயிர்’ என்ற பெயருண்டு என ஊகிக்கலாம். இத்தகைய ஊதுகொம்பு வைத்து இசைத்தபடியே ஆடுபவர் ‘வயிரியர்’ எனப்பட்டனர் எனக் கருதலாம். அல்லது ‘வயிர்’ என்பதனை மூங்கில் என்ற பொருளோடு சேர்த்துப் பார்த்தால் மூங்கில் கழையைக்கட்டி அதில் நின்று ஆடும் கூத்து ‘கழாய்க் கூத்து’ எனப்படும். கூத்தரைப் பற்றி விளக்கம் கூறும் நச்சினார்க்கினியர். அவர் விளக்கியற் கூத்தும்ää கானகக் கூத்தும்ää கழாய்க் கூத்தும் ஆடுபவர் என்று கூறுவர். இதனால் கழாய்க் கூத்தாடும் கூத்தர் ‘வயிரியர்’ எனப்பட்டனர் எனவும் கருத இடம் உண்டு. நாட்டியம்ää நாடகம் முதலியவற்றிற்குக் கண்கள் மிக முக்கியமான உறுப்புகள் என்பர். இதனை உணர்ந்த நம் முன்னோர்ää நாடகத்தைக் கண்ணின் பெயராலும் ‘கண்ணுளர்’ என அழைத்தனர். கி.பி.8ம் நூற்றாண்டில் தோன்றிய திவாகரம்ää கூத்தின் பல பெயர்களைப் பட்டியலிடும் போது ‘கண்ணுளர்’ என்பதும் அப்பெயர்களில் ஒன்றாய் இருக்கக் காண்கிறோம்.
நடமேää நாடகம்ää கண்ணுள்ää நட்டம்…..
………நிலயம்ää நிருத்தல் கூத்தெனப் படுமே” (திவா.9:191)
இதனால் கண்ணுளர் என்பார் நாடகக் கலைஞரான கூத்தரே என அறியலாம்.
ஆடுநர்ää கோடியர்ää வயிரியர்ää கண்ணுளர் என்பர் கூத்தரே எனினும் அவர்கள் கூத்தர் என்ற சொல்லால் பெருவழக்காகச் சுட்டப்படாமைக்குக் காரணம் என்ன? தொல்காப்பியர் தம் நூலில் பல இடங்களில் கூத்தர் எனச் சுட்டியிருக்கää சங்கப் புலவர்கள் ஏன்? அவ்வாறு சுட்டவில்லை? இது தனியே ஆய்வதற்குரியது. கூத்தர்கள் ஒரு குழுவாக இணைந்தே நாடகம் நடத்தினர். பாணர்ää விறலியர் ஆகிய பிற கலைஞருடன் இணைந்து ஒரு குழுவாக இயங்கினர்.
“துறைபல முற்றிய பைதீர் பாணரொடு…..
….. இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்ற” (மலை.40-46)
என்ற அடிகள் கூத்தர் குழுவில் பாணரும்ää விறலியரும் இருந்த செய்தியை அறியலாம். இதில் வரும் ‘பைதீர் பாணர்’ என்ற தொடருக்கு நச்சினார்க்கினியர்ää “கல்வி முதிர்ந்தமையின் இளமையற்ற பாணர்” என்று பொருள் கூறுகிறார். இதனால் கூத்தர் குழுவில் இருந்த பாணர்கள்ää கல்வி கற்ற முதியவர்கள் என்பதனை அறியலாம். கதை தழுவிய கூத்திற்கு ஆடவரும் பெண்டிரும் தேவை. எனவே கூத்தர் குழுவில் பாணரோடுää விறலியரும் இருந்தனர் எனலாம். இவ்விறலியர் கூத்தரைச் சுற்றிச்சுற்றி வந்து ஆடினர் என்ற செய்தியும் கிடைக்கிறது. ஆற்றுப்படை நூல்களுள் கூத்தரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் முழுநூல் ‘கூத்தராற்றுப்படை’ எனப்படும் ‘மலைபடுகடாம்’ மட்டுமே. இந்நூலில் கூத்தர்ää ‘கண்ணுளர்’ எனச் சுட்டப்படுகின்றனர். இந்நூலில் வரும் கூத்தர் தலைவன்ää“கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ” (மலை.50) எனச் சுட்டப்படுகிறான்.
பாணர்:
‘பாணர்’ என்ற சொல் ‘பண்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. பண்ணமைத்துப் பாடுவது மட்டுமே பாணர் செயல் என அறிஞர் சிலர் கருதுவர். ஆனால் பாணர்ää நாடகம் நிகழ்த்திய கலைஞராகவும் விளங்கியமை தெரியவருகிறது. பாணாற்றுப்படைப் பாடல்கள் நிறையக் கிடைத்துள்ளமையால் பாணரைப் பற்றிய செய்திகளும் நிறையக் கிடைக்கின்றன. கூத்தரைப் போலவே பாணரும் ஒரு குழுவாக இயங்கி வந்தனர் எனத்தெரிகிறது. அக்குழு ‘ஒக்கல்’ எனப்பட்டது என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.“காரென் ஒக்கல் கடும்பசி இரவல” (புறம்.141) என்பது இதற்குச் சான்று. இவ்வொக்கல் ‘கடும்பு’ எனவும் அழைக்கப்படும். “கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது” (புறம்.68) இக்குழுவில் விறலியர் இருந்த செய்தியைப் பல பாடல்களில் காணலாம். விறலியரோடு பாணர் குழுவில் ‘இளையர்’ பலரும் இருந்தனர். அவர்கள் விறலியரின் நடை வருத்தத்தால் மெலிந்த சீறடிகளை மெல்லத் தடவிவிடுவர்.
“மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி” (சிறுபாண்.31-33)
என வருதல் காணலாம். பாணர்ää’பாண்மகன்’ எனவும் அழைக்கப்பட்டனர். “கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க” (சிறுபாண்.37) என்பது இதற்குச் சான்று.
பாணர்கள் எப்போதும் கையில் யாழ் வைத்திருப்பர். புறநானூறு 153ஆம் பாடலுக்கு விளக்கவுரை எழுதிய ஒளவை சு.துரைசாமிபிள்ளைää பின்வருமாறு குறிப்பிடுகிறார். “வன் பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம்ää ஒருகால் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய செயல்களைச் செய்யாது சோம்பியிருந்தது”. இக்குறிப்பிற்கு அவர் அப்பாடலில் வரும்ää “கூடுகொள் இன்னியங் கறங்க
ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே” (புறம்.153)
என்ற அடிகளை மனத்துட் கொள்வர். இதனால் பாணர்கள் பாடுதலோடு ஆடுதல் தொழிலையும் நிகழ்த்தியவர் என்பதை அறியலாம். பதிற்றுப்பத்தில் வரும் ஒரு பாணாற்றுப்படைச் செய்யுளில் பாணன்ää “கடனறி மரபிற் கைவல் பாண” (பதிற்.67) என்று சுட்டப்படுகிறான். பாணனுக்கு அடைமொழியாகக் ‘கைவல்’ என வந்திருப்பது கவனிக்கத்தக்கது. ‘தன் கையினால் அவிநயம் செய்து ஆடுவதில் வல்ல’ என்று இதற்குப் பொருள் கூறலாம். ஆடலும் பாடலும் உள்ள கூத்தில் ஒற்றைக்கைää இரட்டைக்கைää எழிற்கைää தொழிற்கை ஆகியன அறிந்து ஏற்புடையவாறு தம் கைமுத்திரையினைக் காட்டுதல்ää கூத்து வல்லார்க்கே உரியது என்று சிலப்பதிகாரம் கூறும்.
“ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்………
….கொண்டவகை அறிந்து கூத்துவரு காலை” (சிலப். அரங்.16-19)
என்பதனால் இப்பாணாற்றுப்படைச் செய்யுளில் வரம் ‘கடனறி மரபிற் கைவல் பாண’ என்பது ஆடல் தொடர்பானது எனக் கருதலாம். ‘ஆடுதல் மரபை அறிந்து கையினை ஏற்றவாறு இயக்கும் வல்லமையுடைய பாணனே’ என்ற இவ்வடிக்குப் பொருள் கொள்ளலாம். வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் “கண்ணுளங் கடும்பு” (புறம்.153) எனச் சுட்டப்படுகிறது. ‘கண்ணுளர்’ என்பார் கூத்துக் கலைஞர் ஆவர். இப்பாடலில் பாணர் குழுவினர் ‘கண்ணுளர்’ எனப்படுவது சிந்திக்கத்தக்கது.
“கண்ணுளாள்” (சிலப்.6:184) என்பதற்கு அடியார்க்கு நல்லார் மதங்கர்ää பெரும்பாணர் எனப் பொருள் கூறுவது இங்கே ஒப்பு நோக்கத்தக்கது. சில பாணர் வெறும் பாடகராக மட்டுமே நிலைபெற்றிருக்கலாம். இத்தகைய பாணரும் பின்னர் கூத்தராக மாறிய செய்தியைää“பாடு பாணியர் பல்லியத் தோளினர்
ஆடு கூத்தராகி எங்கணும்……….” (சிலப்.26.227-228)
எனும் வரிகள் காட்டும். இக்கருத்திற்கு ஐந்திணை எழுபதின்.45 வது பாடலும் கைந்நிலையின்.42 வது பாடலும் பாணர் கூத்தராய் மாறியதற்குச் சான்றுகளாகும்.
பொருநர்:
பொருநரைப் பற்றி ஆற்றுப்படைச் செய்யுள் ஒன்றே ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது. ஆயினும் பொருநர் சங்கப் பாடல்களில் நிறைய இடங்களில் பேசப்படுகின்றனர். தொல்காப்பியத்தில் இரண்டு இடங்களிலும்ää சங்கப்பாடல்களில் 42 இடங்களிலும் சிலப்பதிகாரத்தில் ஓர் இடத்திலும் ஆக மொத்தம் 45 இடங்களில் பொருநர் என்ற சொல்லாட்சி வருவதாகவும்ää இவற்றுள் 24 இடங்களில் ‘போரிடும் வீரன்’ என்ற பொருளில் ‘பொருநன்’ என்ற சொல் சுட்டப்படுவதாகவும் கூறுவர். எஞ்சிய21 இடங்களிலும் ‘கலைஞன்’ என்ற பொருளில் ‘பொருநன்’ என்ற சொல்லாட்சி வந்துள்ளது.
பொருநரைப் பற்றித் தமிழறிஞர் தெளிவான கருத்துக் கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. ஏனெனில் பொருநரைக் கூத்தருக்கு ஒப்பானவர் என்றும்ää பாடுதல் மட்டுமே இவர் செயல் என்றும் இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. திவாகரம் கூத்தரின் பல பெயர்களுள் ‘பொருநர்’ என்பதும் ஒன்று என்று குறிப்பிடுகின்றது. இது ஆராயத்தக்கது.
கூத்தரும் பாணரும் பொருநரும்” எனத் தொல்காப்பியர் கூத்தரையும் பொருநரையும் வேறுபட்ட கலைஞர்களாக வகைப்படுத்துவர். ஆனால்ää திவாகரமோ கூத்தரும் பொருநரும் ஒருவரே என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. நச்சினார்க்கினியர் பொருநரை “ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும் பரணி பாடுநருமெனப் பலராம்” என்று விளக்கம் அளிப்பார். அதாவதுää பொருநர் என்பார் ‘பாடுகின்ற கலைஞர்’ என்பதே அவர் கருத்து. அதே நூற்பாவிற்கு உரை எழுதிய ச.சோமசுந்தர பாரதியார் “பொருநராவர் நாடகத்தில்ää குறித்த ஒருவரைப் போல நடிப்பவர்” என்று பொருள் கூறகிறார். தெ.பொ.மீனாட்சி சுந்தரம்ää “பொருநராவர் நாடகத்தில் வேடம் பூண்டு வருபவராம்” என்பர். இவர்கள் கருத்திற்குச் சங்க இலக்கியங்களில் எந்தவித ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருநர் என்று வரும் இடங்கள் அனைத்தையும் தொகுத்து அவர்களது கலைச் செயலைப் பட்டியலிட்டு இறுதியில்ää பொருநர் என்பார்ää ‘ஆடும் வழக்காறு இல்லாதவர்’ என்று வெ.மு.ஷாஜகான் கனி தமது ஆய்வேட்டில் நிறுவுவர். இவருக்கு முன்னரே பழந்தமிழ்ச் சமூகத்தில் நாடகங்கள் பற்றி ஆய்வு செய்த கார்த்திகேசு சிவத்தம்பிää பொருநர்களை நாடகக் கலைஞர் எனக் கருதுவதற்கு வழியே இல்லை (வுhநல உயnழெவ டிந வயமநn யள னசயஅயவளைவள) என்று அறுதியிட்டுக் கூறியிருப்பது கருதத்தக்கது. பொருநரைப் பற்றியப் ‘பழந்தமிழகத்தில் பொருநர்’ää என்ற தலைப்பில் விரிவாக ஆராய்ந்த கு.விஜயலட்சுமிää “தொல்காப்பியம் முதலாகக் கம்பராமாயணம் வரையிலும் பொருநர் வெளிப்படப் பெயர் சுட்டப்பட்டும்ää அவர்களின் இசைக்கருவிகளைச் சுட்டியும்ää வேறு வகையிலும் வந்துள்ள 33 இடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்ததில்ää எந்தவோர் இடத்திலும் பொருநர் கூத்தில் பங்கேற்றதாகவோ ஆடல் நிகழ்த்தியதாகவோ ஒரு சான்றும் கிடைக்கவில்லை” என்று தம் ஆய்வின் முடிபாக உரைக்கின்றார். இக்கருத்து சிந்திக்கத்தக்கது. மேலே கண்டவற்றால்ää பொருநர் என்பார் பாடுதல் மட்டுமே செய்து வந்தனர் என்பது தெளிவாகிறது. ஆடுதலான நாடகக் கலைக்கும் பொருநருக்கும் தொடர்பு இல்லை.
விறலியர் :
கூத்தர் என்ற ஆண்பால் கலைஞருக்கு நிகரான பெண்பாற் கலைஞர் விறலியர் ஆவார். இதனை நச்சினார்க்கினியர் உரைவழி அறியலாம். “கூத்தராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவார்….. அது விறலாகலின் அவ்விறல்பட ஆடவாளை விறலியென்றார்” என்ற விளக்கம் இதனைத் தெளிவுபடுத்தும். இதனால் எண்வகைச் சுவையும் மனத்தின்கண்பட்ட குறிப்புகளும் புலப்பட ஆடும் பெண்பாலரே விறலி என்பதனை அறியலாம். விறலியர் ஆடுவதில் வல்லவர் என்பதனை விறலியாற்றுப்படைப் பாடல்கள் கூறுகின்றன.
“…………நன்னுதல் விறலியர் ஆடுக்………
தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே” (பதிற்.47)
எனவரும் பதிற்றுப்பத்துப் பாடல் நமக்குக் காட்டும். “கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி” (புறம்.133) என்ற விறலியாற்றுப்படைச் செய்யுள் அடியால்ää விறலியர் மயில் போல ஆடினர் என்பதுபுலப்படுகிறது.விறல்பட ஆடுவதோடு விறலியர் பாடுவதிலும் வல்லவராக விளங்கினர். “இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்
நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடி” (மலைபடு.358-359)
என்பது விறலியர் பாட வல்லவராகவும் இருந்ததை உணர்த்தும். தமிழ்க் கலைக்களஞ்சியம் “விறலி என்பவள் எண்வகைச் சுவையும் மனத்தின் கண்பட்ட குறிப்புக்களில் புறத்துப்போந்து புலப்பட ஆடுகின்றவள். இவ்வாறு ஆடுவது விறலாகலின் ‘விறல்பட ஆடுவாள்’ விறலி எனப்பட்டாள். ……………………………….அவர்கள் தமிழக முடியுடைவேந்தர் மூவரையும் குறுநில மன்னரையும் செல்வரையும் கண்டு ஆடிப்பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தாரென்றும் தமிழ்நூல்களிலிருந்து தெரிகிறது” என்று நீண்டதொரு விளக்கமளிக்கிறது. இதனால் விறலியர் ‘பாண்சாதியர்’ என்பதும் அவர்கள் பாடுவோரும் ஆடுவோருமாக இருந்தனர் என்பதும் பெறப்படும். இவர்கள் புரவலரை அணுகிப் பரிசில் பெறும் இரவலராகவும் விளங்கினர் என அறியலாம். விறலியர் தனித்து ஒரு குழுவாக இயங்கவில்லை. பாணர் குழுவில் விறலியர்களைப் பார்க்கிறோம். வள்ளலிடத்தே பாணர் விறலியருடன் சேர்ந்து செல்லும்போதேää பரிசில் மிகுதியாகப் பெறும் வாய்ப்பு இருந்தது.
“……நும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே” (புறம்.109)
என்பதால் இதை அறியலாம். பாணர் குழுவோடன்றிää விறலியர் தனித்துச் சென்றும் நாடகம் நிகழ்த்திய செய்தி கிடைக்கிறது. விறலியற்றுப்படைப் பாடல்கள் (புறம்103ää105) விறலி தனித்துச் சென்று ஆடலும் பாடலும் நிகழ்த்திய செய்தியைக் காட்டும்.
• கூத்தர்ää பாணர்ää பொருநர்ää விறலியர் எனும் நால்வகைக் கலைஞர்களும் தமிழ் நாடகத்தில் நேரடியாகவும் ஏதோ ஒரு வகையிலும் தொடர்புடையவராகக் காணப்படுகின்றனர். கூத்தர் முழவுப் பின்னணியில் கூத்து நிகழ்த்தினர். பாணர் யாழ் இசைத்துப் பாடியதோடு நாடகமும் ஆடினர். பொருநர் கிணை ஒலித்துப் பாடுவதே தொழிலாகக் கொண்டிருந்தாலும் எப்போதாவது பாணர்ää விறலியர் முதலிய நாடகக் கலைஞரை ஒரு குழவாக இணைத்து அதற்குத் தலைமைதாங்கி நாடகம் நடத்தினர். இதனாலேயே பொருநர்ää ‘கோடியர் தலைவர்’ என்று பொருநராற்றுப்படையில் சுட்டப்பட்டனர்.
• விறலியரும் பாணர்ää கூத்தர் முதலிய குழுவில் நாடகமாடியதோடுää தனித்தும் பாணருடன் இணைந்தும் நாடகமாடியுள்ளனர். அக்காலத்தில்ää இளம்மங்கையரான விறலியர் தனித்தும் இயங்கியமைää சங்ககாலப் பெண்ணுரிமையைக் காட்டும் சான்று எனலாம். நாடகத்தைப் பாடியும் ஆடியும் ஆடவல்ல பாணர் சாதியினள் என்பதால்ää தொல்காப்பியர் வகைப்படுத்;திய நால்வகைக் கலைஞருள் விறலியின் பங்கு சிறப்பாக ஊன்றிக் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
• கூத்தர்ää பாணர்ää பொருநர்ää விறலியர் ஆகிய நால்வகைக் கலைஞருள் பொருநர் ஒழிந்த ஏனைய மூவர் மட்டுமே நாடகக் கலைஞர் என்பது தெளிவாகிறது.
- தொடுவானம் 30. மறந்து போன மண் வாசனை
- பாவண்ணன் கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 89
- சின்ன சமாச்சாரம்
- வாழ்க்கை ஒரு வானவில் – 17
- பிஏகிருஷ்ணனின் ”மேற்கத்தியஓவியங்கள்”- புத்தகமதிப்புரை
- he Story of Jesus Christ Retold in Rhymes
- பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெருங் காந்த மண்டலம் எப்படி உண்டானது ?
- க.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்
- தினம் என் பயணங்கள் -30 ஒரு முடிவுக்கு வந்தாயிற்று.
- மொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014
- ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி
- கூத்தர் பாணர் விறலி பொருநர் யார்?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 18
- மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்
- நாயினும் கடையேன்நான்…
- நீர் வழிப்பாதை
- காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்
- ஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழ்
- சகவுயிர்
- ஒரு கல்யாணத்தில் நான்
- ஆனந்த பவன் நாடகம் – காட்சி-2
- சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்
- சிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்
- தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்
- இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014
- பேசாமொழி 20வது இதழ்
- திரைதுறையும், அரசியலும்
- வடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”