வால்ட் விட்மன் வசனக் கவிதை – 89

This entry is part 3 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Song of the Open Road)

(திறந்த பாதைப் பாட்டு)

 

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

மூன்னடி வைத்துப் பயணம்

தொடங்குவேன்

திறந்த பாதை நோக்கி

எளிதாய் இதயக் கனமின்றி,

சுதந்திரமாய்,

ஆரோக்கிய மாய்,

உலகைக் கண்முன் நிறுத்தி !

நெடும் பாதை

இழுத்துச் செல்லும் என்னை

இச்சிக்கும்

எந்த இடத்துக்கும் !

 

 

நாட வில்லை நான் அதனால்

நற்பேறை !

நானே நற்பேறில் உள்ளேன்,

நான் அதனால்,

தேம்பி அழப் போவதில்லை !

காலம் தாழ்த்தப் போவதில்லை !

வேறெதும் எனக்கு

வேண்டாமே !

சொந்த வீட்டுப் புகார்கள்,

குற்றப் புலனாய்வுகள்,

ஏட்டுத் தொகுப் பாய்வுகள்,  

உறுதியாகி, திருப்தி யுடன்

திறந்த பாதையில்

புரிவ தென் பயணம் !

 

 

இந்த பூமி போது மானது

எனக்கு ! தூரத்து

விண்மீன் தோரணங்கள் இன்னும்

நெருங்கி வர

வேண்டாம் இடம் விட்டு !

இருக்கு மிடத்திலே அவை

சிறப்பாய் மின்னட்டும்.

விண்மீன் குழுவைச் சேர்ந்த வைக்கு

போதிய வசதி உடையது !

 

 

இன்னும் என் பழைய பாரத்தைக்

கனிவுடன்

இங்கு சுமந்து வருகிறேன்.

ஆடவர், மாதர்

பாரத்தையும் சுமக்கிறேன்;

செல்லுமிடம் அனைத்தும் அவற்றைத்

தூக்கிச் செல்கிறேன்.

     அவற்றை எல்லாம் தவிர்க்க

முடியா தென்று

உறுதியாய்ச் சொல்வேன் !

நிரம்பி விட்டன அவை

என்னுள்ளே !

திருப்பி அவற்றை

நிரப்புவது

என் பணியாகும்.

  

+++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

S. Jayabarathan [jayabarathans@gmail.com] August 20, 2014

Series Navigationபாவண்ணன் கவிதைகள்சின்ன சமாச்சாரம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *