வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

 

(1819-1892)

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Song of the Open Road)

(திறந்தவெளிப் பாட்டு -3)

 

தத்துவ விளக்கம்

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

  

மிக்க ஆய்வுகள் செய்வேன்

மீண்டும் இப்போது

தத்துவம், மதங்கள் என்ன வென்று !

கல்விக் கூடங்களில்

நல்விதம் நிரூபிக்கப் படலாம்;

ஆயினும் விரிந்த

பிரபஞ்ச வெளி விதிகளின்படி

நிரூபிக்கப் படுவ தில்லை

தாரணிச் சரிவுகளில்

ஆறுகளின் நீரோட்டத்தில் !

 

 

உள்ள திங்கே மெய்யுணர்வு;

ஒத்திசைந்த

ஓர் மனிதன் உள்ளான் இங்கே !

உள்ளத்தின் உள்ளே

இருப்பதை

உணர்வான் இங்கவன் !

இறந்த காலம், எதிர்காலம் ,

நிமிர்ந்த தோற்றம்,

நேசத்தன்மை,

இவை யாவும் உன்னிடம்

இல்லா விடில்,

நீ ஒரு வெற்றிடமே !

 

 

ஒவ்வோர் கொட்டையின்

கவசத்துள் இருக்கும்

உட்கரு தான்

ஊட்டி வளர்க்கிறது !

உனக்கும், எனக்கும்

உமியை உரித்தளிப் பவன் எங்கே ?

சூழ்ச்சியை அகற்றி

உன்னையும், என்னையும் 

சுற்றி நின்று

காப்பவன் எங்கே ?

 

 

ஒட்டி நம்மை இணைப்பது

உள்ள திங்கே !

முன்பே செய்து விட்ட

முன்னேற் பாடில்லை இது  !

முன்பின் தெரியாத

ஒருவர்

உன்னை நேசிப்பது

என்ன வென்று நீ சிந்திப்பாயா ?

முழிகள் சுழன்று

மொழிகள் பேசிடும்

அர்த்தங்கள்

என்ன வென்று நீயும்

அறிவாயா ?

 

 

+++++++++++++++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

  1. Jayabarathan [jayabarathans@gmail.com] September 24, 2014
Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *