ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
சின்னஞ் சிறுவர் மேல்நோக்கிப் பார்ப்பர்
கண்குழிந்த வெளுப்பு முகத்தோடு,
பார்க்கவே பரிதாபக் காட்சி !
முதுநரை வேதனை மாந்தர் சப்பி
நலிவுறச் செய்வர்
சிறுவர் தம் கன்னங் களை !
“உமது முதிய உலகம்
எமக்குத் துயரளிக்கும்,” என்கிறார் !
எமது பிஞ்சுப் பாதங்கள்
சக்தி யற்றுப் போகும் !
எட்டு வைத்த அடிகள் நோகும்
சோர்வுண் டாக்கும் !
குழிக்குள் அடங்க நெடுங்காலம் !
வயதினர் அழவதை ஏனெனக் கேட்போர்
மதலையர் அழுவது ஏனெனக் கேளார் !
வெளிப்புற உலகில் குளிரடிக்கும்,
எளிய சிறுவர் நாங்கள், குழம்பி
ஏதுமிலா திருக்கிறோம் !
இடு காடுகள் எமக்கில்லை,
முதியோ ருக்கே அவை !
மெய்யிது ! ஒருநாள் நேரும்
ஆயுள் முடியும் முன்பே மடிவோம் !
சிறுமி ஒருத்தி மரித்தாள்
சென்ற ஆண்டில் !
அவள் புதைநிலம் பனிமூடிக் கிடக்குது.
இடுகுழியைக் கூர்ந்து பார்த்தோம்
இடமில்லை ஏதும் செய்ய.
உறங்கும் சிறுமியை எழுப்புவோ ரில்லை !
பொழுது புலர்ந்தது
எழுவாய் கண்ணே என்று
எழுப்புவ ரில்லை !
அழுகுரல் காதில் கேளாது
புதைமண் கீழே !
முகம் காண முடியுமா ?
சிறுமி யாரென அறியோம்
உறுதியாய் !
கண்களில் புன்னகை மலரக்
காலம் எடுக்குது;
விளையாட்டுப் பொழுதுகள்
வீணாய் முடங்கின சவப் போர்வையில் !
சிறுவரின் கூக்குரல் இதுதான்:
“எமது காலம் முடிவ தற்கு முன்
மரணம் அடைவது நல்லது.”
[தொடரும்]
++++++++++++++++
மூல நூல் :
From Poems of 1844
Elizabeth Barrett Browning Selected Poems
Gramercy Books, New York 1995
- http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
- http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
- http://www.online-literature.com/elizabeth-browning/
- அறுபது ஆண்டு நாயகன்
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12
- ஆதலினால் காதல் செய்வீர்
- எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது
- தொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா
- பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.
- கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015
- வாழ்க்கை ஒரு வானவில் – 28
- எல்லா நதியிலும் பூக்கள்
- தூய்மையான பாரதம்
- ஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. ! [கவிதை -2]
- ” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்
- சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது
- திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்