கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015

author
0 minutes, 14 seconds Read
This entry is part 2 of 14 in the series 9 நவம்பர் 2014
College of Engineering Guindy Global Alumni Meet 2015:
அறிவிப்பு.
கோவிந்த் கோச்சா
அறிவிப்பு.
இந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் தமிழகத்தின் முதல் பொறியியற் கல்லூரியானதும், 220 வருடங்கள் உருண்டோடிய கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015  ஜனவரி 4ம் தேதி 2015 , அன்று அக்கல்லூரியில் கொண்டாடப்படுகிறது.
செம்மை நிற வண்ணத்தில் கம்பீரமாக நிற்கும் அந்தக் கல்லூரி முன்பு நில அளவை நிலையமாகவும் இருந்துள்ளது. அதிலிருந்து தான் இந்தியாவின் பல வரைபடங்கள் வரையப்பட்டன.
பெங்களூரின் தலையான ஒரு கல்லூரியில் திரு.அப்துல்கலாம் அவர்களுக்கு பணி நியமனம் தடுமாறி இருந்த போது,
இருகரம் நீட்டி அவரை வருகவென்று வரவேற்று அரவணைத்துக் கொண்ட கல்லூரி அது.
அங்கிருந்த போது தான், திரு.கலாம் அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் பல கல்லூரிகள் இடம் பெற்றிருப்பினும்,  mom.gov.sg சிங்கப்பூர் குடிபெயர்தல் அலுவலகத்தில்,
Anna Univ Main Campus  என தனி பகுப்பில் ACTech, SAP, யுடன்  CEG யும் இடம் பெற்ற பெருமையுடைத்து.
அண்ணா பல்கலைக் கழகத்தின் மிக முக்கிய அங்கமாக உள்ளது.
AC Tech , School of Architecture and planning , CEG மூன்றும் பரந்து விரிந்த கிண்டி காந்தி மண்டபம் எதிரில் 600 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது.
இதில் மிகப் பழமையானதும் பாரம்பரியமானதுமான கிண்டி பொறியியற் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்களுடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறார்கள்.
உலகளாவிய வகையில் இருக்கும் CEG மாணவர்கள் , இதன் விவரமறிய ajbala@gmail.com அல்லது govind@heartmail.com  ஆகிய முகவரிக்கு மெயில் அனுப்பலாம்.
முன்னாள் மாணவர்கள் தங்களின் குழும அல்லது முகநூல் விவரங்களையும் எழுதலாம்.
உங்களின் கருத்துக்களை, https://www.facebook.com/groups/CEGAM/ தளத்தில் போடலாம்.
மேலும் அது தொடர்பாக செய்தி விவரங்கள் வேண்டுபவர்கள்  contact@guindytimes.com என்ற முகவரிக்கும் எழுதலாம்.
————–
வலதும் இடதுமாய் பரந்த தன் நீண்ட கைகளால்
நம்மை அனைத்த
அச் செம்மைத் தாய் (  RED MAIN BUILDING )
நம்மை ஆக்கினாள்
செம்மையாய் …
ஒவ்வொரு மணி நேரமும் அடிக்கும்
அம் மணி ஒலி அதிர்வில்
நாம் திரிந்தலைந்த நினைவுகள்
அங்கு
சிலிர்த்துக் கொண்டேயிருக்கின்றன…
அம் மணியோசை நம் எண்ணத்தில்
எதிரொலித்துக் கொண்டே…
அவ்வொலி மீண்டும் கேட்டு
ஆனந்திக்க கூடுவோம்
ஒன்றாய்
ஜனவரி 4, 2015 ல்.
——————
அறிவிப்புடன்
கோவிந்த் கோச்சா
முன்னாள் மாணவர், கி.பொ.க
Series Navigationஅறுபது ஆண்டு நாயகன்ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12ஆதலினால் காதல் செய்வீர்எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருதுதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பாபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *