Posted in

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வு

This entry is part 3 of 23 in the series 30 நவம்பர் 2014


அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர்  விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன்  அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்துவருகிறது.

கடந்த  காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை  நடத்தியுள்ள சங்கம் – நாவல் இலக்கியம்  தொடர்பான  அனுபவப்பகிர்வையும்  நடத்தவுள்ளது.

சங்கத்தின் தலைவர் Dr. நடேசனின் தலைமையில் நடைபெறவுள்ள நாவல்  இலக்கிய அனுபவப்பகிர்வில் இலங்கை – தமிழக  நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின் நாவல் இலக்கிய முயற்சிகள் மற்றும் மேலைத்தேய  பிறமொழி நாவல் இலக்கியம் தொடர்பாகவும் உரைகளும் கலந்துரையாடலும்  இடம்பெறும்.

மெல்பனில்  எதிர்வரும் 13-12-2014 ஆம் திகதி சனிக்கிழமை  மாலை 4.00 மணிக்கு  Mulgrave Neighbourhood House ( 36-42 Mackie Road, Mulgrave, Victoria -3170)    சமூக    மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள்.    கலந்துகொள்ளும் இலக்கிய ஆர்வலர்களும் தமது நாவல் இலக்கிய  வாசிப்பு அனுபவங்கள் தொடர்பாக கருத்துக்களை    தெரிவிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு நடேசன்    (தலைவர்) 0411 606 767

ஸ்ரீநந்தகுமார்        (செயலாளர்)     0415 405 361

 

Series Navigationஇலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.‘நாடகங்கள் தொடரும்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *