விடுதலைக்கு பிந்தைய நாட்டில் பல அரசியல் /சமூக மாற்றங்களுக்கு காரணமான முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக கருதப்படும் நிகழ்வு ஷா பானு வழக்கும் அதற்கு தரப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதை மாற்ற போராடிய மத அடிப்படைவாதிகளும்,பணிந்த மத்திய அரசும் .
ஷா பானு எனும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் கணவர் அவரை இஸ்லாமிய முறைப்படி மணவிலக்கு செய்து விட்டார்.இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வழங்கப்பட மாட்டாது.இஸ்லாமிய முறைப்படி இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் நடந்த திருமணம் என்பதால் ஜீவனாம்சம் தர உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கணவர் கான் உச்சநீதிமன்றத்தில் வழக்காடினார். பல இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கின.ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் ஷா பானு அவர்களுக்கு ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
இதை இஸ்லாமியரின் தனி சட்டத்தில்/மத நம்பிக்கைகளில் தலையிடும் செயல் என்று இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்த்து போராட்டத்தில் இறங்கின. ராஜீவ் தலைமையிலான காங்கிரெஸ் அரசும் அவர்களுக்கு பணிந்து தீர்ப்பை மாற்றும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து பெண்ணிய இயக்கங்களும் ஹிந்துத்வா இயக்கங்களும் களத்தில் இறங்கின.
ஹிந்து இயக்கங்களை வசியபடுத்த ராஜீவ் அரசு பாப்ரி மஸ்ஜித் இடத்தில ராமர் கோவிலுக்கு ஷீலான்யாஸ் நடத்த அனுமதி அளித்தது. தவறான செயல்களின் மூலம் இரு சமூகங்களையும் தன பக்கம் இழுக்கலாம் என்ற காங்கிரெஸ் அரசின் செயல் அவர்களுக்கு எதிராக தான் திரும்பியது.400க்கு மேல் எம் பி க்கள் கொண்ட நிலையில் இருந்து தேய்ந்து கொண்டே வர ஷா பானு வழக்கு தீர்ப்பை மாற்றிய சட்டமும் ,அதற்கு ஈடுகொடுக்க பாப்ரி மஸ்ஜித் இடத்தில ராமர் கோவில் கட்ட பூஜை செய்ய தந்த அனுமதியும் தான் முக்கிய காரணங்கள்.
ஷா பனூ வழக்கிற்கும் இன்று பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென் அவர்கள் கேட்டிருக்கும் RTI கேள்விகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
ஷா பானு அவர்களோடு ஒப்பிட்டால் ஜசோதா பென் அவர்கள் அனுபவித்த வாழ்க்கை பல மடங்கு கொடியது.ஷா பானு அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய சட்டம் இருந்தது. கணவர் தெளிவாக மணவிலக்கு செய்து விட்டார்.இங்கு அப்படி எதுவும் கிடையாது
ஒரு நாளைக்கு 30000 ரூபாய்க்கு குறையாத உயர்ந்த உடைகளை உடுத்தும் மனிதர் ,பல ஆண்டு காலம் மாநிலத்தின் முதல்வர்/இன்று பிரதமர் பதவி வகிக்கிறவர் தான் கணவர்.ஆனால் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் 1968 ஆம் ஆண்டு தொட்டு தாலி கட்டிய கணவர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை,முறையாக மணவிலக்கு செய்யவும் முயற்சிகள் எடுக்கவில்லை, எந்த வித ஜீவனாம்சமும் தரவில்லை,
உலகில் பெண்களை ஒடுக்குவதில்,அடிமைகளாக நடத்துவதில் ,பொருட்டாக மதிக்காமல் ஆண்கள் வாழ்வதை பெருமையாக கருதிவதில் இந்து மதம் மற்ற அனைத்து மதங்களையும் விட பல படிகள் மேலே என்பதை விளக்க ஹிந்டுத்வத்தின் தலைமகன் மோடி அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு.
தங்கள உரிமைக்காக போராடிய/போராடும் இரு பெண்களில் திரு ஷா பானு அவர்கள் சந்திக்காத ஜசோதா பென் அவர்கள் சந்திக்கும் இன்னொரு மிக பெரிய துயரம் அவர் மீது விழும் பழிகளும்,எதிர்கட்சியினரின் சதிவலையின் காரணமாக ஒரு புனிதர் மீது சேற்றை வாரி இறைக்கிறார் என்று வந்து விழும் குற்றசாட்டுகளும்.
1968 இல் 17 வயதில் திருமணமாகி (1976 சட்ட திருத்தம் வருமுன் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் ஆணின் திருமண வயது 18,பெண்ணின் திருமண வயது 15)மூன்று ஆண்டுகள் தன கனவோடு வசிதததாக ஜசோதா பென் அவர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார். மூன்று ஆண்டுகளில் மூன்று மாதங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அதிகம் என்றும் அந்த பெட்டியில் சொல்லி இருக்கிறார்.
அம்பேத்காரின் கடும் முயற்சியினால் நேருவின் ஆதரவினால் காங்கிரெஸ் உள் இருந்த ,வெளியில் இருந்த ஹிந்டுத்வவாதிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசியல் சட்டத்தில் ஹிந்து மத திருமண சட்டங்களில் ஓரளவிற்கு பெண்களுக்கு சாதகமான (ஆனால் மதத்திற்கு எதிரான )சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.இதை இன்றும் மற்ற மதத்தில் கை வைக்க முடிந்ததா என்று குத்திக்காட்டி ஹிந்டுத்வவாதிகள் வாதிடுவது அன்றாட நிகழ்வு.
இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக பொது சிவில் சட்டம் என்று குதிக்கும் கூட்டம் ஷா பானு அவர்களை விட பல மடங்கு கொடுமைகளை அனுபவித்த/அனுபவிக்கும் ஜசோதா பென் அவர்களுக்கு எந்த சட்டமும் துணை புரியாத நிலையை கண்டும் காணாமல் போனால் கூட பரவாயில்லை. மனைவி எனும் உரிமைக்காக காலம் கடந்தாவது போராடும் பெண்மணியின் மீது களங்கங்களை அள்ளி வீசுவது ஞாயமா என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்
- கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்
- மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்
- என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?
- திரையுலகின் அபூர்வராகம்
- ஒரு காமிரா லென்ஸின் வழியே…..
- மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!
- கட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்
- புத்தாண்டு வரவு
- நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்
- ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்
- பாலச்சந்தர் ஒரு சகாப்தம் – Adayar Kalai Ilakkiya Sangam
- தொடுவானம் 48 . புதிய பயணம்
- ஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- ஆனந்த பவன் நாடகம் காட்சி -19
- தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்
- தொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்
- சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்
- 19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி
- இயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை..
- இலக்கிய வட்ட உரைகள்: 7 – மதிப்புரைகளும் கு.ப.ரா குறித்த மதிப்புரைகளும்
- சாவடி 19-20-21 காட்சிகள்