காட்சி 19 காலம் பகல் களம் உள்ளே அய்யங்கார் வீடு. ஊஞ்சலை ஒட்டி அய்யங்கார் மனைவி நாயகி நின்றிருக்கிறாள். தரையில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து முகத்தை தோள் துண்டால் மூடியபடி விசும்புகிறான் அவள் சகோதரன் ரத்னவேலு. ஊஞ்சலில் ஒரு மஞ்சள் துணிப்பையில் இருந்து ரூபாய் நோட்டுக் கட்டுகள் வெளியே சரிந்து இருக்கின்றன. அதில் ஒன்று பிரிந்து, ஊஞ்சலைச் சுற்றி அங்கங்கே பணம். நாயகி : எதுக்கு அண்ணே அழுவறீங்க? அழுதாலும் தொழுதாலும் ஆட்டக்காரங்க விதி […]
படம் பார்த்தேன். கொலையாளி யார் என்கிற பார்வையாளனின் கேள்விக்கு படம் முழுவதும் வெவ்வேறு மனிதர்களை காட்சிகள் வாயிலாகவும் , வசனங்கள் வாயிலாகவும் சூசகமாக கைகாட்டிவிட்டு, இறுதியில் கொலையாளியை அடையாளம் காட்டுகிறது கதை. திரைப்படம் மூலம் இயக்குனர் சொல்ல வரும் மனப்பிணி குறித்து சொல்வதானால், ஒரு நாவலே எழுதலாம். இந்த உலகில் போனால் திரும்பி வராத, இழந்தால் திரும்பவும் பெறமுடியாதவைகளுள் ஒன்றே கதையின் மையம். மரணம் நிகழ்கையில், அதைப் பார்த்தவர்கள் தவறுதலாக பச்சை நிற கார் தான் விபத்துக்கு […]
ஒற்றை வரியை சுருட்டி மடக்கி நீட்டி நெளித்து பஞ்ச் டைலாக்கில் பல சேட்டைகளுடன் திரையை ரொப்பி பெட்டியை ரொப்புவதே சினிமானின் பாணி. ஆனால் நறுக்கென்று சுறுக்கென்று உள்ளம் தைத்து காமிராவில் எழுதிய பாலச்சந்தரின் இந்த குறும்பாக்களை மாலை தொடுத்தாலே கிடைப்பது ஒரு திரைப்படக்கல்லூரி. பாலசந்தர் குறும்பாக்கள் ================================================== 1 காப்பியாற்றிய சர்க்கஸில் ஒரு காதல் காப்பியம் சர்வர் சுந்தரம். 2 ஆரஞ்சு பழத்தோல் கூடு சுளைகள் களவு போனது. நீர்க்குமிழி. 3 கடிகார வினாடி முள் முனையில் […]
1968 இல் அமரர் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் காலத்திலேயே ஆனந்த விகடன் என்னைப் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் செய்திருந்தாலும் அவரது மறைவுக்குப் பின்னர் ஆசிரியராய்ப் பொறுப்பு ஏற்ற திரு எஸ். பாலசுப்ரமணிபன் அவர்களை 1983 இல் தான் நான் நேரில் சந்தித்தேன். வாசக இளைஞர் ஒருவர் ஒரு நாள் என் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது ஆனந்த விகடன் எழுத்தாளராக ஓரளவு நான் பிரபலமாகி யிருந்ததால் விகடன் அலுவலகத்தில் தனக்கு ஏதேனும் வேலை வாங்கித்தர முடியுமா […]
1975 ஆம் வருடம். ‘அபூர்வராகங்கள்’ திரைப்படம் வெளிவந்த வருடம். இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்பு. படித்தது பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில். விடுதியில் தங்கிப்படிக்கும் வாழ்க்கை. விடுதியில் ஏகப்பட்ட சட்டதிட்டங்கள் உண்டு. கோடை விடுமுறை தவிர மற்ற விடுமுறைகளின் போதும் பெற்றோர் மும்பையில் வ்சித்ததால் என் போன்றவர்களும் சில மலையகப்பகுதி மாணவிகளும் விடுதியிலேயே இருப்போம். அப்படி இருந்த ஒரு விடுமுறை. எப்படியொ விடுதி […]
காலக் குயவனின் மேளமிது! கோணிக் கைகள் வார்த்து விட்ட கோளமிது! கடல் சுழற்றும் பொரி உருண்டை இது! அடித்தட்டுக் குடலாடி வெம்பி எழும் கடல் மதில்கள் தாக்கும் ஞாலமிது! +++++++++++++++++ https://www.youtube.com/watch?v=wc_UHzn_GjU https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cx___bZOtWw https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sBkMLYUyUZg https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=w-8Tp3y_Tes https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qhjhTOkWeX0 ++++++++++++++++++++ முன்னுரை: ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை நூலில் கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் வாழ்ந்த வரலாற்றுப் புகழ் படைத்த பூம்புகார் என்னும் காவிப்பூம் பட்டினம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் கிழக்குக் கரையில் கடல் பொங்கி அழிந்து போனதாகக் கூறப்பட்டுள்ளது! […]
அன்பு நண்பரே ,இத்துடன் எனது கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.ஏற்று வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன், உமாமோகன் img097
வைகை அனிஷ் பண்டைய காலத்தில் திருமணத்தின்போது ஸ்ரீதனமாக பொருள் கொடுக்கவேண்டும் என்றும் அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகளும் பல நடந்துள்ளன. அதே போல தன்னுடைய தங்கைக்கு ஸ்ரீதனம் கொடுக்க இயலாமல் வேறு ஒரு மணமகனை தேர்ந்தெடுத்து அந்த மணமகன் பிடிக்காமல் தங்கை வேறு ஒரு நபரிடம் தொடர்பு கொள்கிறாள். இதனால் அந்தக்குடும்பம் கொலையும் தற்கொலைக்கும் ஆளாகிறது. வரதட்சணை அதிகமாக உள்ளதால் திருமணம் முடியாமல் பல பெண்கள் முதிர்கண்ணிகளாகவும், திருமணம் முடிக்க முயலாமலும் போகிறது […]
புத்தாண்டு இரவு மணி இரண்டு விரையும் வாகனங்கள் அதிரும் பட்டாசுகள் உற்சாகக் கூக்குரல்கள் எதையும் கண்டு களிக்காது கருமமே கண்ணாய் குளிரிலும் வியர்வை வழிய மூன்றடிச் சிறுவன் மற்றும் அரும்பு மீசை ஒருவன் மாநகர நடைபாதை ஓரமெல்லாம் காலிப் போத்தல்கள் கணக்கில்லா பிளாஸ்டிக் பைகள் போத்தல்களின் மூடிகள் பிளாஸ்டிக் கோப்பைகள் அட்டை டப்பாக்கள் எலும்புத் துண்டு கறித்துண்டுகள் மீந்த பிரியாணிப் பொட்டலக் குப்பைகள் தன் உயர […]
அதிர்ச்சிக்கும் அதிர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். ஒற்றைக் குரல் எதிர்ப்பாக இல்லாமல் சமுதாயம் முழுதும் விரவும் எதிர்வாக ஒருக்கப்பட்ட அனைவரின் ஒன்று பட்ட எழுச்சியே இந்த நாவலின் மையக் கரு. நாவலின் செய்தி மிகவும் நேரடியானதும் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டதும் ஆகும். 293ம் பக்கத்தில் வரும் இந்தப் பதிவே நாவலின் சாராம்சம்: “தாய் மொழியை ஆலயத்திலிருந்து ஓரம் கட்டியது. தலித் சமுதாயத்தை சமுதாயக் கட்டமைப்பிலிருந்து ஓரம் கட்டியது. தங்கை தமக்கை தாய்மார்களை கல்விக் […]