வைகை அனிஷ்
இந்தியவரலாற்றில் கறைபடிந்தவர்களாக, தீண்டத்தகாவர்களாக கருதும் மனோபாவம் அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. நமது தமிழ் மற்றும் இலக்கிய நூல்களிலும், மதங்களின் பார்வையிலும் திருநங்கைகள் எவ்வாறு பார்க்கப்படுகின்றார்கள். காலனிய அரசியலில் திருநங்கைகள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள், காலனிய அரசியலுக்கு முன்பு அவர்களின் மதிப்பு எவ்வாறு இருந்தது என்பதைப்பற்றியம் திருநங்கையர் சமூகம் குறித்து இரக்கமற்ற அரசு அதிகார வர்க்கத்தினரும், அதற்கு உடந்தையான ஆதிக்க சாதியினரும் திருநங்கைகளை எவ்வாறு அலைக்கழிக்கப்படுகின்றனர் என்றும் தற்பொழுது அவர்களின் நிலை என்ன என்பதைப்பற்றியும் குறிப்பாக சங்ககாலத்தில் எவ்வாறு இருந்தார்கள் என்பதைப்பற்றிய வரையறை செய்யும் கட்டுரைதான் இது..
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், ஜைனம், புத்தமதம், சீக்கியர் என அனைத்து கூட்டுக்கலவைதான் திருநங்கைகள். கிரேக்க மன்னர்களின் படுக்கையறைக் காவலர்களாக இருந்துள்ளார்கள். 16 ஆம் நூற்றாண்டில் வத்திக்கான் கிங்டைன் தேவதாலயத்தில் இவர்கள் பாடற்குழுவினராக இருந்திருக்கிறார்கள். முதன் முதலில் காகிதத்தை கண்டுபிடித்தவர் ஒரு திருநங்கையே. முகலாயப் பேரரசு காலத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பில் அரவானிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் ஐந்து அடுக்கு பாதுகாப்பு இருந்துள்ளது. இதில் நான்காவது அடுக்கு பாதுகாப்பு என்பது பெண்களை பாதுகாக்கும் படை பிரிவாகும். திருநங்கைகள் படைத்தளபதிகளாக மாலிக்கப+ர், மல்லி கருஸ்கான், ஜலாவுதீன்கான் போன்றவர்கள் இருந்துள்ளனர்.
மொழி
ஓர் இனத்தை அறுதியிட்டுக் கூறும் அடையாளமாகக் கூறுகளில் மொழியும் ஒன்று. ஒருவர் கருத்தை மற்றொருவருடன் பகிர்வதற்கு மொழி இன்றியமையாதது. இவர்களுக்கு என்று தனி மொழி ஒன்றையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மொழிக்கான இலக்கணமோ அல்லது உருவ அமைப்போ இல்லாத மொழிதான் கவுடி பாஷா எனவும் கவுடி பாசை எனவும் அழைக்கப்படுகிறது.
பிறந்த பால் உறுப்பு அறுக்கப்பட்ட அல்லது விதை மட்டும் அறுக்கப்பட்ட ஆண்கள் ஆங்கிலத்தில் நரரெஉh என்றும் தமிழில் அலி அல்லது பேடி என்று சொற்களால் அழைக்கப்படுகிறது. இப்படி ஆண் உறுப்பு சிதைக்கப்பட்ட ஆண்களே பாதுகாவலர்களாக அரண்மனைகளிலும் ராணிகள் வாழும் அந்தப்புரங்களிலும் நிறுத்தப்பட்ட வரலாறு அனைத்து நாடுகளிலும் உண்டு.
ஆங்கிலத்தில் ஆண்-பெண் தவிர்;த்த பிற பாலினத்தாரை வசயளெபநனெநச என்றும் சுருக்கமாக பேச்சி வழக்கில் வப என்றும் அழைக்கின்றனர். ஆண் உறுப்போடு ஆணாகப் பிறந்து தன் மனம், செயல், குணாதிசயத்தால் பெண்ணாக தன்னை உணருபவர்களை திருநங்கையர் என்று அழைக்கிறோம். பெண் உறுப்போடு பெண்ணாகப் பிறந்து தன் மனம் மற்றும் செயல்களில் ஆணாக உணருபவர்களை திருநம்பிகள் என்று அழைக்கப்படுகிறது.
அலிகள், பொட்டை, அரவாண், 9, பொட்டைமறி, தடிமுழுங்கி, அஜக், என அழைக்கப்பட்டவர்கள் தற்பொழுது திருநங்கைகள் என அழைக்கப்படுகிறார்கள்.உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் எல்லாருமே பெண்கள் என அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள்.
9(ஒன்பது)
மருத்துவர் ஹாரி க்ளைன்பெல்டர் மற்றும் அவர் தம் உடன் உழைப்பாளர்கள் இணைந்து மார்பகங்கள் வளர்ந்த, சிறிய விரைகளை உடைய மலட்டுத்தனத்துடன் கூடிய ஒன்பது நபர்களைப் பற்pய அறிக்கையை 1942 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அதிலிருந்து ஒம்பது என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
ஹிஜிரா
தமிழ் இலக்கியத்தில் அலி, பேடி, இடமி, இப்பந்தி, கிலிபம், சண்டகம், கோஷா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹிஜிரா அரபு மொழியில் அரவாணிகளைக் குறிப்பதற்கான சொல்லாக முக்கானத்துன் உள்ளது. ஆணாகப்பிறந்து தன்னை பெண்ணாக பாவிக்கும் முஸ்லிம் நம்பிக்கை கொண்ட மூன்றாம் பாலினமாக கருதமுடியும். இது ஹனித், ஹ_ன்த என்று அழைக்கப்படுகிறது. பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் முக்கானத்துன் என்பதற்கு பதிலாக ஹிஜ்ரா என்ற உருதுச் சொல் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களின் இறுதி நபியான முகமது நபி மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்ந்ததை ஹிஜ்ரத் என்று அழைக்கிறார்கள். மேலும் உருது, ஹிந்தி வார்ததையாகும். ஹிஜ்டா, ஹிஜிடா,ஹிஜ்ரா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இது இழிவான சொல் என்பதால் க்வாஜா சாரா என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்காள மொழியில் ஹிஜிரா என்ற சொல் ஹிஜ்ரா, ஹிஜ்லா, ஹிஸ்ரே, ஹிஸ்ரா அழைக்கப்படுகிறார்கள். மத்தியப்பிரதேசகத்தில் கின்னர் என்று அழைக்கப்படுகிறார்கள். கின்னர் என்றால் இரண்டு கெட்டான் என்ற அர்த்தம். கின்னர் என்பது ஹிந்தி வழக்கில் சாக்கா என்று அழைக்கப்படுகிறது. தெலுங்கு மொழியில் தொம்மதிவாலு, கொஞ்சவாலு, கோஜா என்றும் கன்னடம் பேசும் பகுதிகளில் கோதி என்று அழைக்கப்படுகிறார்கள். கோதி என்றால் குரங்கு என்ற அர்த்தம் உண்டு. குரங்கு ஓரிடத்தில் நிலையாக அங்கும் மிங்கும் அலைந்து கொண்டிருக்கும். கொல்கத்தாவில் துரணி என்றும், கேரளத்தில் மேனகா என்றும், நேபாளத்தில் மெடி என்றும் பாகிஸ்தானில் ஜெனனா என்றும் அழைக்கப்படுகின்றனர். குஜராத்தில் பாவையா என்றும், ஓமன் நாட்டில் சனித் என்றும், அழைக்கப்படுகிறார்கள். உருது, பஞ்சாபி மொழியில் குஸ்ரா, ஜன்ஹா என்றும் க்வாஜாசிரா என்றும், நபும்சகம் என சமஸ்கிருதத்திலும் ;ஆங்கிலத்தில் ய+னக், ஹெர்மாபுரோடைட், இம்போடன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவ மதத்தில் அன்னகர் என்ற சொல் அரவாணிகளைக்குறிப்பிடுகிறது. இவற்றில் மும்பை, தில்லி போன்ற மாநிலங்களில் அரவாணிகளை 7 வகை பிரிவுகளாக பிரித்துள்ளனர். ப+லான்வாலி, லாலன்வாலி, புல்லாக்வாலி, டோங்கரிவாலி, லஸ்கர்வாலி, சகலக்வாலி, பேடி, பஜார் எனவும் இவர்களின் தலைவராக நாயக் என்ற் தலைவர்கள் இருக்கிறார்கள்.
அரவாணி
உலோபியான நாககன்னிக்கும் அருச்சுனனுக்கும் பிறந்தவனே அரவான். அரவான் பிறப்பிலேயே 32 லட்சணங்களை பொருந்தியவன். எதிர்ரோம் உடையவன். இந்த அரவானே கூத்தாண்டவர் என அழைக்கப்படுகிறார். வெட்டப்பட்ட அரவான் தலை மட்டும் குதித்து குதித்து கூத்தாடியதால் கூத்தாண்டவர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. அரவான் தெய்வம் இந்தோனேசியாவில் இரவான் என்று மருவியுள்ளது. மோனியர் வில்லியம்சின் சமஸ்கிருதம்-ஆங்கிலம் அகராதி இரவன் என்ற பெயர் இராவத் என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானது என்று குறிப்பிடப்படுகிறது. இராவத் என்ற சொல் இடா என்ற வார்த்தையுடன் நெருங்கிய தொடர்புள்ள இரா என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். கூத்தாண்டவர் கோயில் தமிழகத்தில் 44 இடங்களில் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய அரவான் சிலை கும்பகோணத்தில் ஹாஜியார் தெருவில உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் விழாவில் நடந்த அழகிப் போட்டிக்கு தலைமை ஏற்ற அப்போதைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.இரவி என்பவர 12.05.1998 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் அரவாணி என்ற பெயரை முன்மொழிந்தார்.
திருநங்கை
ஆண் குழந்தைகளாகப் பிறந்து பின் வளரும் போக்கில் தம்மைப் பெண்களாகவே உணர்ந்து பெண்ணாகவே தம்மை மாற்றிக்கொள்ள மனப்ப+ர்வமாக விரும்பி பெண்களோடு சேர்ந்திருக்கும் ஆசை கொண்டவர்களாக பெண்கள் உடையும் அணிகலன்கiயும் அலங்கரித்துக் கொள்பவர்கள். இதனால் வீட்டில் தண்டிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். குழந்தையாக இருக்கும்போது திருநங்கை என்ற உணர்வு ஏற்படுவதில்லை. பருவ வயதை எட்டியவுடன் தன்னுள் ஏற்பட்டும் மாற்றம் மற்றும் மனஉளைச்சல் ஆகியவற்றால் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். இவர்கள் ஆண் உடலுக்குள் அடைபட்டு சிறைப்பறவையாக பெண் உடலையும் பெண உள்ளத்தையும் விடுதலை செய்யும் ஆவேசம் இவர்களை உந்தித்தள்ள மும்பை சென்று அங்கு அரவாணிகள் சமூகத்தில் இணைந்து தம் ஆண் உறுப்பை அறுத்தெரிந்துவிட்டு அதையே பெண் உறுப்பாக மாற்றியமைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படும்போது பலர் இறந்துள்ளார்கள். பலர் சிறுநீரகக்கோளாறு உள்பட பலவித நோய்களுக்கு ஆளாகிவிடுகிறார்கள். இருப்பினும் ஆண் உறுப்பை அறுத்து எரிந்துவிட்டு பெண்ணாக மாறவேண்டும் என்ற உணர்வு ஏன் வருகிறது என்பது அறியப்படாத விடயம் ஆகும்.
அறிவியல் கூற்றுப்படி பொதுவாக ஆண்-பெண் சேர்க்கையினால் கரு உருவாகும் போது தாயின் கருவறையில் முதல் எட்டுவாரங்கள் அது பெண் குழந்தையாகத்தான் இருக்கும். எட்டாவது வாரத்துக்குப் பிறகுதான் அது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பது தீர்மானிக்கிறது. எல்லாக் கருவும் முதலில் பெண்ணாகத்தான் உருவாகும். சிலருக்கு ஆண் குழந்தையின் உடல் உறுப்புகள் உருவானாலும் உளப்ப+ர்வம் தொடர்பான உடலியல் கூறு ஏற்பாட்டில் மாற்றம் இல்லாமல் அது ஏற்கனவே இருந்த பெண் தன்மையோடே தொடர்கிறது. அவர்கள் தான் பின்னர் பருவவயது வரும்போது திருநங்கையராகிக்னறனர்.
ஒஒ குரோமோசோம்கள் இருப்பவர் ஆண் எனப்படுவர். ஒல குரோமோசோம்கள் உள்ளவர் பெண் எனப்படுகிறார். சிலர் ஒஒல என்றும் ஒலலல என்றும் இன்னும் விதவிதமான கலவைகளில் பிறந்துவிட நேரிடுகிறது.
பள்ளிப்படிப்பு
இவ்வாறு மாற்றம் அடைந்த திருநங்கையர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்தமுடியாது. அதே போல பெண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்தமுடியாது. இதனால் பள்ளிப்படிப்பை இடையில் விட்டுவிடுகின்றனர். அதன் பின்னர் பாலியல் தொழில், பிச்சை எடுப்பதை தொழிலாக வைத்துக்கொள்கின்றனர்.
இலக்கியத்தில் திருநங்கைகள்
தமிழின் முதல் தத்துவநூல் எனப் போற்றப்படுகின்ற நீலகேசி, திருநங்கையர்களின் துன்பங்களை பற்றி இவ்வாறு கூறுகிறது.
~~பேடி வேதனை பெரி
தோடி ய+ரு மாதலாற்
சேடி யாடு வன்மையிற்
கூடியாவதில்லை~~
என்கிறது அப்பாடல். இதற்கு முன்னால் ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின் உருவான சைவ, வைணவ பக்தி இலக்கியப் பாடல்கள் இறைவன் ஆண், பெண், அலி என மூன்று பாலினமாக பார்க்கப்படுவதை கூறுகிறது. இதனை வலியுறுத்தி திருவாசம்
~~ பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க~~
என்கிறது.
இலக்கண நூல்களில் திருநங்கைகள்
இலக்கண நூல்களை ஆய்வு மேற்கொள்ளும்போது அதில் திருநங்கைகள் பற்றி பல நிகண்டுகள் விளக்கம் தருகின்றன.
பேடி இலக்கணம் பேசுங்காலை
நச்சுப் பேகலும், நல்லுரை ஓர்தலும்
அச்சு மாறியும், ஆண் பெண் ஆகியும்
கைத்தலம் ஒன்றைக் கடுக வீசியும்,
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தலும்
விலங்கி மதித்தும் விழிவேறு ஆகியும்,
துளங்கிக் தூங்கிச் சுழன்று துணிந்தும்,
நாக்கு நாணியும், நடம்பல பயின்றும்,
பக்கம் பார்த்;தும், பங்கி திருத்தியும்,
காரணம் இன்றிக் கதம்பல கொண்டும்
வார் அணி கொங்கையை வலிய நலிந்து
இரங்கியும், அழுதும், அயர்ந்தும், அருவருந்தும்,
குரங்கியும், கோடியும், கோதுகள் செய்தும்,
மருங்கில் பாணியை வைத்தும், வாங்கியும்
இரங்கிப் பேசியும், எல்லேல் என்றும்
இன்னவை பிறவும் இயற்றுதல் இயல்பே
எனக்கூறியுள்ளது.
தொல்காப்பியம் பார்வையில்
பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் தத்தமக்கிலவே
உயர்திணை மருங்கில் பால்பிரிந் திசைக்கும்
எனக் கூறுகிறது. மேலும் பெண் தன்மை மிகுந்தால் பெண்பாலிலேயே அழைக்கவேண்டும் என்றும் பெண்ணாக இருந்தும் ஆண்தன்மை மிகுதியாக இருந்தால் ஆண்பால் வினைமுடிவே கொடுக்கவேண்டும் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. பேடி என்ற சொல் ஆண்பால் குறிக்கும் ஈறுகளுடன் வருவதற்கு இடமில்லை(495) என்று கூறுகிறது.
நன்னூல் பார்வையில்
பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மைவிட்;டு அல்லாது அவாவுவ பெண்பால்
இருமையும் அக்றிணை அன்னாவும் ஆகும் என்றும்
கூறுகிறது.
புறநானூற்றுப்பார்வையில்
சிறப்புஇல் சிதடும், உறுப்புஇல் பிண்டமும்
கூனும், குறளும், ஊமும், செவிடும்
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் என
கூறுகிறது.
திருக்குறளில்
பகையகத்து பேடிகை ஒவ்வாள் அவையகத்து
அஞ்சும் அவன் கள்ள நூல்
(திருக்குறள்727)
போர்க்களத்தில் பேடியின் கையில் உள்ள கத்தி போல் சபை ஒடுக்கம் கொண்டவன் கற்ற கல்வி யாவும் சபையில் பயனற்றுப் போகும் என்கிறார் திருவள்ளுவர்.
நாலடியார் பார்வையில்
செம்மையொன்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள் மரிஇ உம்மை
வலியால் பிறர்மனை மேல் சென்றாரே இம்மை
அலியாகி ஆடி உண்பர்
நாலடியார்-85
முப்பிறப்பில் தமது வலிமையால் பிறர் மனைவியிடம் சென்றவரே இப்பிறப்பில் அலித்தன்மை கொண்டு பிறக்கின்றனர். இவ்வாறு பிறக்கின்றவர் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தெருக்களில் வாழ்கின்றவர்கள் என்று நாலடியார் அலிப்பிறப்பு குறித்துக் கூறுகிறது.
திருமந்திரத்தில்
குழவியும் ஆணாம்வலத்து வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டக்கால் ஒக்கிலே
திருமந்திரம்-446
சுவாச உயிர்ப்பு இருவரும் மருவுங்காலத்து வலமூக்கின் வழி வந்துகொண்டிருப்பதால் பிறக்கும் மகவு ஆண்.அது இடது மூக்கின் வழி வந்துகொண்டிருந்தால் பெண்ணாகும். இரண்டு மூக்கின் வழியாகவும் ஒத்துவருமானால் பிறப்பது அலியாகும்.
சிலப்பதிகாரம்-மணிமேகலை
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பேடிக்கூத்து எனச் சுட்டுகின்றன. காமன் ஆடும் பேடாடலும் என்கிறது சிலப்பதிகாரம்(அரங்கேற்றும் காதை 22) இது வாணாசுரன் நகரத்திலிருந்து தன் மகனாகிய அநிருத்தனனைச் சிறைநீக்க ஆண் திரிந்த பெண் கோலத்துடன் காமன் ஆடிய கூத்தைக் குறிப்பதாகும்.
சமஸ்கிருத புராண இலக்கியங்கள் கிரகராசிகளின் பலாபலனை அறியும் பொருட்டு புருஷநாள், பெண் நாள், அலிநாள் என்று வகைப்படுத்துகிறது. ஆண் நட்சத்திரம், பெண் நட்சத்திரம், அலிநட்சத்திரம் (மிருகசீரிஷம், சதயம், மூலம்) என்று வகைமை செய்கிறது.
கொளடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் திருநங்கையர்களின் பணிகளை பிரித்துக் கூறுகிறது. அவையானவன, ஒற்று வேலை பார்த்தல், தன்நாட்டு மந்திரி உள்ளிட்ட அரச குடும்பங்கள், எதிரி நாட்டு அரச குடும்பங்களில் என்ன நிகழ்கிறது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து சொல்லும் ஒற்றர்களுக்கு பொருத்தமானவர்களாக குறிப்பிடப்படுகிறது. மன்னரின் அரண்மனைகளிலும் உயர்வகுப்பினர்களின் வீடுகளிலும் பெண்களுக்கு அலங்காரம் செய்வது, நடவனமாடி மகிழ்விப்பது போன்ற பணிகளை செய்துள்ளனர். அரண்மனைக்குள்ளும், அந்தப்புரத்திற்குள்ளும் எந்த வித தடையின்றி எண்பது வயதைக்கடந்த ஆண்களும், ஐம்பது வயதைக்கடந்த பெண்களும், வயதுவரம்பற்ற திருநங்கைகளும் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைக்கொண்ட அரசன் தன்னை பாதுகாத்துக்கொள்ள திருநங்கைகளைப் பயன்படுத்தி உள்ளான். படுக்கையில் இருந்து எழும் அரசனுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதில் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு குப்பாயமும், தலைப்பாகையும் திருநங்கையர் பொறுப்பிலானது. இவ்வாறு வீரம், நம்பிக்கை, விசுவாசத்தின் அடிப்படையில்; நம்பிக்கைக்குரியவர்களாக திருநங்கைகள் இடம் பெற்றுள்ளனர்.
1569 ஆம் ஆண்டு நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் தக்காணத்தை ஆட்சி செய்த பூராஹன் நிஜாம் சிங்கிற்கும், அகமத்நகரை ஆட்சிசெய்த ராஜா இப்ராகிமுக்கும் இடையே போர் நடந்துள்ளது. அதில் திருநங்கைகள் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதே போல ராணி சாந்தாவின் அரண்மனையில் இரண்டு போர்பிரிவுகள் இருந்துள்ளன. இரண்டும் திருநங்கையரால் ஆனது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
முடியாட்சியின் துவக்க காலம் துவங்கி பதினேழாம் நூற்றாண்டுவரை அரசு அதிகார மையத்தில் திருநங்கையர் வகித்த பாத்திரம் எவ்வித வீழ்ச்சிகளையும் சந்திக்கவில்லை.
19-ஆம் நூற்றாண்டில் திருநங்கைகள்
1836-1900 கால கட்டத்தில் சீசரா லொம்ப்ரோசோ என்ற இத்தாலிய மருத்துவர் குற்றமானுடவியல் என்ற நூலை எழுதினார். அதில் பாலியல் தொழிலாளர்கள், திருடிப்பிழைப்பவர்கள், திருநங்கையர்கள் உள்ளிட்டோரை அபாயகரமான வகுப்பினர் என்று அடையாளப்படுத்தினார். அடையாளப்படுத்தியதன் விளைவு திருநங்கையர்கள் நாகரீகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள், கொடுரமானவர்கள் எனப்பெயர் ச+ட்டி அவர்களை நிரந்தரமாக அகற்றும் பணியை துவக்கினார்கள். மாற்றவே முடியாத அதே வேளையில் அழித்தே ஆகவேண்டிய மனிதக்கூட்டத்தை அவர்கள் நாடு நாடாக வேட்டையாடப்பட்டும், நாடு கடத்தப்பட்டும் பல இன்னல்களுக்கு ஆளாகினார்கள். அதன் பின்னர் 1871 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி கவர்னர் ஜெனரலின் ஒப்புதலோடு குற்றபழங்குடியினர் சட்டம் என்ற சட்டத்தை இயற்றினார்கள். அதில் 180 இனக்குழுக்களை குற்றம்பரம்பரையினராக அறிவித்தது. அதில் திருநங்கையர்களை பிறவிக் குற்றவாளிகள் என சட்டமாக கூறியது. இவர்களைப் பற்றிய பதிவேடுகளை உருவாக்கி, பராமரிக்க மாகாண அரசுக்கு இச்சட்டம் உருவாக்கி, பராமரிக்க மாகாண அரசுக்கு இச்சட்டம் உத்தவிடுகிறது. அதாவது திருநங்கையராக இருந்தால் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். இச்சட்டப்பிரிவு 29ன் படி பதிவு செய்யப்பட்ட எந்த அலியும், எந்த மைனருக்கும் பாதுகாப்பு தரமுடியாது, உயில் எழுதமுடியாது, மகனை தத்தெடுத்துக் கொள்ள முடியாது என்கிறது. மேலும் 26வது பிரிவின்படி பதிவு செய்யப்பட்ட அலி பொது இடத்தில் மக்கள் பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, பெண் போன்று உடை அல்லது நகை அணிந்து வந்தால், அல்லது பொது இடத்திலோ ஒரு தனிவீட்டிலோ ஆடி, பாடினாலோ பினையில்லாமல் கைது செய்யப்படலாம். மேலும் இரண்டிற்குமே இரண்டாண்டிற்கு மிகாமல் சிறை தண்டனையோ, அபராதமோ, அல்லது இரண்டுமோ விதிக்கலாம் எனக்கூறியது.
அரவாணியும் அறுவை சிகிச்சையும்
அரவாணியாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்கிறார்கள். ஆண் உறுப்பை நீக்கி அவளை இன்னொரு அரவாணி தன்னுடைய மகளாக தத்து எடுத்துக்கொள்கிறாள். ஆரம்பத்தில் திண்டுக்கல், ஆந்திராவில் கடப்பாவில் மட்டுமே செய்துள்ளார்கள். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படும்போது விரதம் கடைபிடிக்கப்படுகிறது. முதலில் அசைவ உணவும் அதன் பின்பு சைவ உணவும் கொடுப்பார்கள். அதன் பின்னர் தனியாக விடப்பட்டு அந்த சடங்கு நடைபெறும். அந்த சடங்கு மூன்று நாள் நடைபெறும். அப்போது கம்மங்கூழ், கேப்பைக்கூழ், கஞ்சி இவைகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதன் பின்னர் யாராவது ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் அதன் பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு நி;ர்வாண ப+ஜை நடைபெறும். நிர்வாண ப+ஜை நடைபெறும் இடத்தில் போத்திராஜ் மாத்ரா படம் வைத்திருப்பார்கள். அங்கு குழி ஒன்று வெட்டப்பட்டு இருக்கும். இரவு 12 மணிக்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்யும் அரவாணி வாயில் முடியை வைத்து தலையில் எலுமிச்சை பழத்தை வைத்து அடிப்பார்கள். அந்த அடியில் அரவாணி மயங்கிய நிலையில் காணப்படுவாள். பின்னர் கைகள் இரண்டையும் பின்புறம் கட்டிவைத்துவிட்டு ப+ஜை முடிந்தவுடன் மாதாஜி கையில் இருக்கும் அரிவாளால் ஆணுறுப்பு துண்டிக்கப்படும்.அப்போது இரத்தம் பீறிட்டு குழி முழுவதும் நிரம்பி விடும். அந்த ரத்தத்தை உடல் முழுவதும் தேய்த்து விடுவார்கள். பின்னர் மயக்கத்தை தெளியவைத்து இரண்டு கால்களையும் விரித்து அமரவைப்பார்கள். அதன் பின்னர் ச+டாக காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயை எடுத்து காயம்பட்ட இடத்தில் தடவுவார்கள். அப்பொழுது கண்ணாடியை பார்க்கவோ அல்லது எந்த ஆணையும் ஏறிட்டு பார்க்க அனுமதிப்பதில்லை. பின்னர் விழா கொண்டாடப்படும். விழாவின்போது சீர் வரிசை செய்யப்பட்டு அன்று இரவு கையில் செம்பில் பாலை கொடுத்து ஏதாவது ஒரு நதிக்கரையில் கொண்டு போய் பாலை ஊற்றி திரும்பி பார்க்காமல் வந்துவிடுவார்கள். இத்தனை செலவுகளையும் வளர்ப்புத்தாய் செய்யவேண்டும்.
ஆலய வழிபாடு
அரவாணிகள் எந்த மதத்தில் இருந்து வந்தாலும் அவர்களுக்கு இனி தெய்வம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில்தான். இந்த கூவாகம் உளுந்தூர்பேட்டையில் உள்ளது. இவை தவிர தமிழகத்தில் 44 கோயில்கள் உள்ளது. கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கஞ்சப்பள்ளி, குமாரமங்கலம், குறிச்சி, குட்டாம்பட்டி, துடியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் கொத்தட்டை, புவனகிரி, தேவனாம்பட்டினம், திருட்டகளம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் களரிகியமும் சேலம் மாவட்டத்தில் பழைய ச+ரமங்கலம், பனைமடல், பேரூர், துடியலூர, திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்வாணம்பாடி, தேவனுர், வீரனேந்தல்,வேதாந்தவழியும் வேலூர் மாவட்டத்தில் சோழவரம், புதூர், வெள்ளையம்பட்டி, வரச+ர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கொணலூர், கூவாகம், பெண்ணவளம், தைலாபுரம் மற்றும் பாண்டிச்சேரியில் மதுக்கரை, பிள்ளையார்குப்பம் ஆகிய ஊர்களில் உள்ளது.
வழிபாட்டு மரபு
கூத்தாண்டவர் வழிபாட்டு மரபும் திரௌபதி வழிபாட்டு மரபும் உள்ளது. தமிழ் மரபில் அரவாண் வழிபாடு முக்கியமானது. திரௌபதி கோவிலில் அரவாணிகள் வெட்டப்பட்ட தலையின் பகுதியை காணலாம்.இந்த தலைப்பகுதி பெரும்பாலான கோவில்களில் மரத்தினால் ஆனவை. தீய ஆன்மாக்களிடம் இருந்து மக்களையும் பக்தர்களையும் காக்கும் காவல் தெய்வமாக அரவான் இருக்கிறார். உலகிலேயே மிகப் பெரிய அரவான் தலை கும்பகோணத்தில் ஹாஜியார் தெருவில் உள்ளது.
உறவு முறை
குரு-அம்மா
நானி-நானகுரு-பாட்டி
தாதி-தாதகுரு-கொள்ளுப்பாட்டி
படாகுரு-காலாகுரு-பெரியம்மா
சோட்டாகுரு-காலா குரு-சின்னம்மா
ப+ஜி-மூத்தோர்-மூதாதையர்
சாஸ்-மாமியார்
குருபாய்-அக்கா-தங்கை
நலந்த்-அண்ணி
ஜேட்டாணி-ஓரகத்தி
சேலா-மகள்
நாத்திசேலா-பேத்தி
சந்திசேலா-பேத்தியின் மகள்
சவுக்கன்-பங்காளி
டேப்கா-சிறுவன்
டேப்சி-சிறுமி
பாவ்வா-அண்ணன்
கல்லா-கிழவன்
கல்லி-கிழவி
சாதிப்பிரிவு
படே ஹவேலி, சோட்டா ஹவேலி என்று உள்ளது. ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்காலத்தில் ஒரு சமயம் நாட்டில் மிகுந்த வறட்சி ஏற்பட்டது. மக்கள் பஞ்சம் பட்டினியால் வாடினர். இப்போது இரு அரவாணிகள் நடனத்தால் மிகுந்த மழை பெய்து நாடு முழுவதும் செழுமையானதால் மன்னன் அவர்கள் இருவருக்கும் இரண்டு அரண்மனைகளைப் பரிசாகக் கொடுத்தான். அவன் கொடுத்த சோடா ஹவேலி(பெரிய அரண்மனை) படா ஹவேலி(சிறிய அரண்மனை) என்று சொல்லக்கூடிய இரண்டும் இன்னும் திருநங்கைகள் கட்டுப்பாட்டில் உள்ளது.
திருநங்கைகள் கொடி
ஹல்லி போஸ்வல் என்பவரின் கை வண்ணத்தில் ஒரு ஓவியத்தை உருவாக்கி திருநங்கை கொடியை உருவாக்கி உள்ளார். இந்த ஓவியம் ஆண், பெண், திருநங்கைகள் எல்லோரையும் பிடித்திருக்கிறது. இக்கொடி 2000த்தில் அமெரிக்காவில் வெளிர் ஊதா, வெளிர் ரோஸ் அகிய வண்ணங்களில் உருவாக்கியுள்ளார்.
முஸ்லிம் பண்பாடும்-திருநங்கைகளின் சமூக வாழ்க்கையும்
பொதுவாக திருநங்கைகள் சமூகச் சடங்குகள் இந்து, முஸ்லிம் மதங்களின் கலவையாகவே உள்ளது. தமிழகத்தில் நடத்தப்படும் சடங்குகளில் இந்து மதத் தாக்கம் அதிகமாகவும், வட மாநில சடங்குகளில் முஸ்லிம்களின் மதத் தாக்கம் அதிகமாக உள்ளன. இதற்கு காரணம் வட இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்திருப்பதே காரணம்.
திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்து முடித்து 40 ம் நாள் செய்யப்படும் சடங்கின்போது பச்சை நிற உடைகளையே அணியவேண்டும் என்ற நியதியாக உள்ளது. அது போலவே பாலூற்றும் சடங்கின் இறுதியில் தாய்வீட்டு சீதனமாக அளிக்கப்படும் 5 தங்க குண்டுமணிகள் கோர்த்த இஸ்லாமிய சமூகத்தில் திருமணத்தின்போது அணிவிக்கப்படும் லச்சா போன்று உள்ளது.
திருநங்கைகளுக்கு என்று பொதுமொழியாக ~கவுடி மொழி~ உள்ளது. இம்மொழி உருது, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் கலவையாக உள்ளது. இம்மொழியில் பல உருது சொற்கள் கலந்து உள்ளது. கானா-சாப்பாடு, ஜமாத்-மூத்த அரவாணிகள் குழு, ஜிந்தகி-வாழ்க்கை, பரிவார்-குடும்பம் என்பன.
பஞ்சாயத்து கூட்டம் நடைபெறும் இட ங்களில் அலிகள் கட்டாயமாக முக்காடு இட்டு இருக்கவேண்டும். இது முஸ்லிம் பெண்களின் பின்பற்றும் நடத்தையை நினைவு படுத்துகிறது. ஜமாத் பிரச்சினையின்போது அல்லாகி கசம், மாத்தாகி கசம் என்று கூறுவார்கள். இந்து, இஸ்லாம் மதங்களை நினைவு படுத்துகிறது. திருநங்கைகள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது வணக்கம் சொல்லவேண்டும். அப்போது சலாமலேக்கும் என்று கூறினால் பதிலுக்கு மாலேக்கும் சலாம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இவை இஸ்லாம் மதத்தின் தாக்கம் ஆகும். முஸ்லிம்களை பன்றிகளை வெறுப்பவர்கள். இதே போல திருநங்கைகளும் பற்றிக்கறி கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. பன்றிக்கறி சமைத்தவர்கள் வீட்டில் தண்ணீர் கூட குடிக்கமாட்டார்கள்.
மூன்றாம் பாலினம்
15.4.2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது. திருநங்கை பிறப்பு என்பது ஒரு தனிப்பிறப்பு கிடையாது. ஹார்மோன் குறைபாடு காரணமாக இக்குறைபாடு உடைய குழந்தைகள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கின்றன. பெண்ணாய் பிறந்து திருநங்கையாக மாறும் குழந்தைகள் குறைவு. ஆணாய் பிறந்து திருநங்கையாக மாறுபவர்களுக்கு ஒரு சமூக அமைப்பு ஆதரவு கொடுப்பது இந்த திருநங்கை சமூகம் தான். இவர்கள் வாழ்வில் உறவுமுறை, சடங்குள், நம்பிக்கை, மொழி என பல இஸ்லாம், இந்து மதங்கள் கலந்துள்ளது. இவர்களை இனிமேலாவது தீண்டக்காதவர்களாக எண்ணாமல் மனிதனாக எண்ணவேண்டும்.
ப+ர்விகம்
மும்பை, டில்லி போன்ற வடமாநிலங்களை எடுத்துக்கொண்டால் அரவாணிகளை 7 வகைப் பிரிவுக்குள் அடக்கிவிடலாம். அவை ப+னாவாலி, லாலன் வாலி, புல்லாக் வாலி, டோங்கரிவாலி, லஸ்கர் வாலி, சகலக்வாலி, பேடி பஜார் ஆகிய 7 குடும்பத்தினர் உள்ளார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் நாயக் என்று சொல்லப்படுகின்ற தலைவர்கள் இருப்பார்கள். இந்த ஏழுபிரிவினரும் வௌ;வெறு பகுதியிலிருந்து வந்து மும்பை, டில்லி போன்ற பெரிய நகரங்களில் குடியேறியவர்கள் என்கிறார்கள் அரவாணிகள். ப+னாவாலி என்ற பரிவார் ப+னாவிலிருந்து இடம் பெயர்ந்து பம்பாயில் குடியேறியதால் அப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. மும்பையில் ஏழுவகையான பிரிவுகள் இருப்பதற்கு காரணம் கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் வாழ்ந்த ஓர் அரவாணி 7 அரவாணிகளைத் தத்தெடுத்து வளர்த்தாராம். அந்த ஏழு அரவாணிகளும் ஏழாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியாகச் சென்று தங்கள் சந்ததியினரைப் பெருக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் சின்னவீடு, பெரியவீடு என்ற இரண்டு பெரும் பிரிவுகள் தோன்றியிருக்கின்றன. ஹைதராபாத்தில் கௌரி, ராஜம்மா போன்ற பெரியவர்களால் அரவாணிகள் சமூகம் வளர்ந்ததாகக் கூறுகிறார்கள்.
மதங்களின் பார்வையில் அரவாணிகள்
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவரத்தில் அரவாணிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் முஸ்லிம்களின் மதநூலான திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பற்றிப்பார்ப்போம்.
திருக்குர்ஆனில் அத்தியாயம் 24 அந்நூர் வசனம் 31ல் இடம்பெறும் குறிப்பைக் கவனிக்கலாம். இறை நம்பிக்கை உடைய பெண் தன் உடலை, அழகை மறைக்கவேண்டிய விதிகளைக் கூறும் இவ்வசனம் யாரிடத்தில் அழகை வெளிக்காட்டலாம் என்பதற்கு கணவன், தந்தை, சகோதரர், அந்தரங்கம் பற்றி தெரியாத சிறுவர்கள் என்கிற வரிசையைப் பட்டியலிடுகிறது. புகாரி ஹதீஸில் இப்னு அப்பாஸின் அறிவிப்பு ஒன்று னள்ளது. முகமது நபி அவர்கள் பெண்களைப்போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போல் ஒப்பனை செய்யும் பெண்களையும் சபித்துள்;ளார்கள். மேலும் அவர்களில் அரவாணிகளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே உமர் அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்(5886)
பெண்கள் ஆண்களைப்போன்றும் ஆண்கள் பெண்களைப்போன்றும் நடந்துகொள்வது இயற்கைக்கு விரோதமான செயலாகும். இத்தகையவர்கள் சாபத்துக்குரியவர்கள். இவர்களை வீடுகளில் தங்க வைத்தால் பாலியல் குற்றங்கள் நிகழ நேரிடும் எனவே தான் முகமது நபி அவர்களை ஒதுக்குப் புறங்களில் தங்க வைக்க கூறினார்கள் என உம்மத்துல் காரி நூல் விளக்குகிறது. முகமது நபி அன்ஜஸா என்ற கறுப்பு அடிமை திருநங்கையை வெளியேற்றினார்கள். இவர் பெண்களின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தார் என பத்ஹ_ல்பாரி நூலும் கூறுகிறது.
விவிலியத்தில் திருநங்கைகள்
ய+தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியம் ஆகும். விதையடிக்கப்பட்டவனும், ஆண் குறி அறுக்கப்பட்டவனும் என விவிலியம் சொல்வதிலிருந்தே (விப 23:1) திருநங்கையராக்கப் பட்டவர்களின் வகை புரிகிறது.
ஆலய நிகழ்வுகளில் திருநங்கை
பழங்கால இஸ்ரேயலர்களின் கடவுளுடைய தூய தன்மையையும் அவரை வழிபடுவதற்கான முறைகளையும், அவ்வழிபாட்டினை நிறைவேற்றும் குருக்களுக்கான நெறிமுறைகள் மற்றும் அவ்வினத்தார் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகளையும் லேவியர் நூல் நமக்கு அறியத்தருகிறது.
எப்படி இருப்பினம் தீட்டு மற்றும் தூய்மை என்ற சட்ட, மன அமைவியலால் மக்கள் பலர் இன்னலுற்றனர். தீட்டு எனக் கருதப்பட்டவர்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. சில பிரிவினர் ஆலயத்தினுள் அமர்வதற்கு நிரந்தரமாக பகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்னும் சில பிரிவினர் ஆலயத்திற்குள் வரவே அனுமதிக்கப்படவில்லை. அவர்களில் ஒருவகையினர் தான் திருநங்கைகள்
திருப்பேரவைக்குள் அனுமதி இல்லை
திருப்பேரவைக்குள் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் வகுக்கப்பட்டதுபோல், திருப்பேரவைக்குள் நுழைவதற்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அம்மோனியர், மோவாபியர், வேசித்தனத்தால் பிறந்த குழந்தைகள் மற்றும் விதையடிக்கப்பட்டவர், ஆண்குறி அறுக்கப்பட்டவர் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது (இச 23:1-4)
சிலை வழிபாட்டுப் பழக்கம் உள்ள இஸ்ரலேயரின் அண்டை நாட்டு மக்களிடம் விதை அடித்தல் மற்றும் ஆண்குறியை அறுத்துத் திருநங்கையை உருவாக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. அம்மக்களின் இஸ்ரயேல் மக்களிடமும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், படைப்பின் நோக்கில் பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்(தொ.நூ.1:28) இது இறைத்திட்டத்திற்கு எதிராக இருக்கிறது என்பதாலும் திருநங்கைகளுக்கான இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஏன் என்றால் விதை நசுக்கப்பட்டது என்பது முந்தைய இஸ்ரயேல் கலாச்சாரத்திலேயே தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது.
குருவாக இருக்கத்தடை
உடலில் குறைபாடுள்ள கூனன், குள்ளன், கண்ணில் ப+ விழுந்தவன், சொறி, சிரங்கு உடையவன் குருக்களாக வேண்டாம். திருநங்கைகள் குருவாக வேண்டாம்(லேவி 21:20) எனக் கூறப்பட்டிருக்கிறது. திருநங்கையர் உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர் (தொ.நூ 39:1: திப 8:27). பழைய ஏற்பாட்டில் இஸ்ரலேயர்கள் அண்டை நாட்டு அரசவையில் திருநங்கையராகப் பயன்பட்டிருந்தனர் (தானி 1:3.8,9, எஸ் 1:10-15) பெர்சிய மற்றும் பாபிலோனிய அரசவையில் பல்வேறு காரணங்களுக்காக அதிகாரிகளாகத் திருநங்கைகள் இடம் பிடித்திருந்தனர்.
வேதகாலத்தில்
வேதகாலத்தில் ஆண்பால், பெண்பால், மூன்றாம் பாலினர் என்று மூன்றாகப்பிரித்துள்ளது. ஆண்பாலை புருஷ் பிரக்ரிதி என்றும், பெண்பாலை ஸ்திரி பிரக்ரிதி என்றும் மூன்றாம் ;பாலினரை திரித்திய பிரக்ரிதி என்றும் கூறுகிறது. இவற்றிற்கான பதிவுகள் மனுஸ்மிரிதி, நாரக ஸ்மிரிதி, சம்ருத ஸ்மிரிதி, காமச+த்திரம் என்று பல நூல்களில் இடம் பெற்றுள்ளன.
இவர்களில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களைச் சமஸ்கிருத நூல்கள் சாண்டா, கலிபா, காமி எனப் பல வகையாகப் பிரித்துக் கூறுகின்றன. இவர்களைப் பற்றி சப்த கல்ப த்ருமா என்று சமஸ்கிருத அகராதியிலும், வாசஸ்பதி எழுதிய ஸ்மிருதி ரத்னாவளி என்ற நூலிலும், காமச+த்திரத்திலும் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. ஆண் விதையும், பெண்விதையும் சமமாக இருக்கும்போது மூன்றாம் பாலினமாக நபுசகம் உருவாகிறது.
வேதகால சமூகத்தில் இலக்கியத்தில் ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்போது திருநங்கைகள் நடனமாடிக் கிருஷ்ணனை வரவேற்றுள்ளனர். மேலும் துவாரகையில் கிருஷ்ணரை அரவாணிகள் வரவேற்றதாலேயே அவர்களுக்கு தெய்வ சக்தி உண்டு என்ற நம்பி இன்றளவும் வடநாட்டில் உள்ளது.
அந்தப்புரம்
அரண்மனைகளில் உள்ள அந்தப்புரத்தில் பெண்கள் பகுதியில் ஆண்களை மேற்பார்வையாளர்களாக வைத்தால் பாலியல் குற்றங்கள் நிகழக்கூடும் எனக்கருதி அந்தப்புரத்தில் திருநங்கைகள் பயன்படுத்தப்பட்டனர். இதற்கான சான்று விவிலியத்தில் (எஸ் 2:3:14) இவர்களிலும் பெண்களைக் காப்பவர்கள் (எஸ் 2:3-15) வைப்பாட்டிகளைக் காப்பவர்கள் (எஸ் 2-14) அந்தப்புர வாயிற்காப்பாளர்கள் (எஸ் 2:21:6:2) எனச் சில வகையினர் உண்டு.
தீண்டாமையும்-திருநங்கையும்
திருநங்கைகளை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் நிலை இன்றும் தொடருகிறது. எச்சில், மடி, தீட்டு என பல்வேறு சொற்களால் தீண்டாமை குறிக்கப்படுகிறது. சங்கப் பாடல்களில் இழிப்பிறப்பாளன், இழிப்பிறப்பினோன், இழிசினன், ச+த்திரன், சேவகன், ஈயேன், இழிந்தவன், இழிவன் என பல பெயர்களில் தீண்டாமை குறிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வடமாநிலங்களில் புதுமனை புகுவிழா மற்றும் சுபநிகழ்ச்சிகளில் திருநங்கைகளை வைத்து விழாக்கள் நடத்துகின்றனர்.
இமைகள் நனையும், இதயத்தின் அடி ரணமென வலிக்கும், புருவம் உயரும் இதுதான் திருநங்கைளின் அன்றாட வாழ்க்கை. திருநங்கைகளின் உணர்வுகளையும், உரிமைகளையும் நாம் புரிந்து கொள்வதும், அவர்களின் கோரிக்கைகளுக்கு துணை நிற்கவேண்டும்.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
தேனி மாவட்டம்
- பண்பாட்டு நோக்கில் பாதாதி கேசம், கேசாதி பாதம் ஆகிய சிற்றிலக்கியங்களின் வளர்ச்சி
- பராமரிப்பின்றி காணப்படும் மன்னர் கால தேர்கள்-அழியும் தமிழனின் சிற்பக்கலை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முதன்முறை மூன்று சூரியன்கள் தோன்றும் அற்புதக் காட்சிப் படமெடுப்பு
- அனேகன் – திரைப்பட விமர்சனம்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 2
- காதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வா
- ஆம் ஆத்மி கெஜ்ரிவால்
- என்னை அறிந்தால் – திரைப்பட விமர்சனம்
- ஆத்ம கீதங்கள் –16 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! என் ஆன்மாவின் முறிவு
- Caught in the crossfire – Publication
- நேரம்
- தொடுவானம் 55. உறவும் பிரிவும்
- மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை -ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்
- வைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…
- மிதிலாவிலாஸ்-2
- உங்களின் ஒருநாள்….
- வலி மிகுந்த ஓர் இரவு
- இலக்கிய வட்ட உரைகள்: 14 நாற்றுகள் தொட்டிச் செடிகள் குரோட்டன்கள்
- மரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்
- சமூக வரைபடம்
- “ கவிதைத் திருவிழா “-
- ஓர் எழுத்தாளனின் வாசலில்… “யதார்த்தமாய்….பதார்த்தமாய்…”
- இலக்கியப்பார்வையில் திருநங்கைள்