” ரூமேட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் ” என்பதை நாம் ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் என்று கூறலாம். இது உடலின் சுய எதிர்ப்பு ( Autoimmune ) காரணத்தால் உண்டாகிறது. சுயஎதிர்ப்பு என்பது உடலின் எதிர்ப்புச் சக்தி உடலின் ஏதாவது ஒரு பாகத்தையே சுயமாக எதிர்ப்பதாகும். அப் பகுதியை உடலுக்கு கெடுதி தரக்கூடியது என்று தவறாக புரிந்துகொண்டு அதை எதிர்ப்பதாகும். இவ்வாறு உடலுக்குள் ஒரு பகுதியில் போராட்டம் நடப்பதால் அப்பகுதி வீங்கி வலியை உண்டுபண்ணுகிறது. இந்த நோயில் உடலின் எதிர்ப்புச் சக்தி குறிப்பாக கைகால் மூட்டு எலும்புகளைத் தாக்குகிறது. இதனால் கைகளிலும் கால்களிலும் இரண்டு பக்கத்திலும் ஒரே மாதிரியான பாதிப்புகள் உண்டாகலாம்.
இந்த நோய் உலகில் 1 சதவிகித மக்கள் தொகையினரை பாதிக்கிறது. அதில் குறிப்பாக 30 வயதிலிருந்து 50 வயதுடையோரை இது அதிகமாகப் பாதிக்கிறது.
மரபணுவும் சுற்றுச் சூழலும் இந்த நோய்க்கு முக்கிய காரணங்கள். அவற்றில் சில:
* பெண்கள் – ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பாலியல் ஹார்மோன்களின் பங்கு இதில் உள்ளது என்று நம்பப்படுகிறது.
* குடும்பம் – குடும்ப பரம்பரையில் இந்த நோய் இருந்தால் அதன் வழித்தோன்றல்களிடையே இந்த நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
*. மரபணு – மரபணுக்கள் வழியாகவும் இந்நோய் தோன்றுகிறது.
மூட்டு எலும்புகளைச் சுற்றிலும் மூட்டு உறைச் சவ்வுப் படலம் உள்ளது.இது மூட்டு பாதுகாப்புக்கு பயன்படுவது. இந்த நோயில் இந்த சவ்வுப் படலத்தில் அழற்சி உண்டாகிறது. அதனால் அங்கு வீக்கம் உண்டாகிறது.இது நாளடைவில் கட்டியாக மாறி மூட்டு எலும்புகளில் புண் உண்டாக்கிவிடுகிறது. இது வலியை உண்டுபண்ணுகிறது
* மூட்டு வலியுடன், காலையில் எழுந்ததும் மூட்டுகள் இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வும்,துவக்கத்தில் உண்டாகும்.
* கைகளயும் கால்களிலும் விரல் மூட்டுகள் வீக்கமுறும்.
* மூட்டு செயலிழப்பும் மூட்டு நழுவுதலும் உண்டாகலாம்..
* இதுபோன்ற பாதிப்புகள் மணிக்கட்டு,முழங்கை,தோள்பட்டை, கழுத்து, முழங்கால், கணுக்கால் போன்ற மூட்டுகளுக்கும் பரவும்.
* மூட்டுக்குள் நீர் தேக்கம் உண்டாகியும் கடும் வலி உண்டாக்கலாம்.
* மூட்டுப் பகுதியின் தசை நார்களையும் பாதிக்கலாம்.
* சில வேளைகளில் ஒரு மூட்டு மட்டும் வீக்கமுற்று கடும் வலியைத் தரலாம்.
Preview attachment alisonoleft.jpg
Preview attachment angela2.jpg
- மிதிலாவிலாஸ்-3
- சுப்ரபாரதிமணியனின் ’மேகவெடிப்பு ’
- நடுவுல கொஞ்சம் “பட்ஜெட்டை”க்காணோம்.
- மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்
- விளக்கு விருது அழைப்பிதழ்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : கரும் பிண்டத்தின் ஊடே பரிதி மண்டலம் சுழல்வதால் பூமியில் நேரிடை உயிரினப் பாதிப்பு, மாறுதல் நேர்கிறது
- சீஅன் நகரம் -3 உலகின் எட்டாம் அதிசயம்
- செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை செய்திக்குறிப்பு
- அதிர்வுப் பயணம்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் -3
- நினைவுகளைக் கூட்டுவது
- ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2015
- பிறவி மறதி
- பலி
- வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்
- சிறந்த சிறுகதைகள் – ஒரு பார்வை-1
- தொடுவானம் 56. மணியோசை
- இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி
- இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்பு
- விதைபோடும் மரங்கள்
- மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்
- மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்
- ரௌடி செய்த உதவி
- ஊர்வலம்
- மருத்துவக் கட்டுரை- ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் ( Rheumatoid Arthritis )
- ஆத்ம கீதங்கள் –17 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! வாழ்வினி இல்லை எனக்கு