பாவலர் கருமலைத்தமிழாழன்
என்வீட்டுப் புறக்கடையின் வேலி யோரம்
எச்சமிட்ட காகத்தின் மிச்ச மாக
சின்னதொரு முளைகிளம்பி விருட்ச மாகிச்
சிலிர்த்துநின்ற பசுமைமரம் மகளின் முத்த
இன்பம்போல் குளிர்ந்தகாற்றால் இன்ப மூட்டி
இனிமையான மழலைமொழி கனிகள் தந்து
புன்னகையைப் பூக்களாகப் பூத்துப் பூத்துப்
புதுவழகில் பொலிந்ததுஎன் வீட்டைப் போல !
பிள்ளைகளின் தொட்டிலாக ஊஞ்ச லாக
பிடித்துவிளை யாடுகின்ற தோழ னாக
கள்ளமின்றித் தன்கிளையின் மடிய தர்த்திக்
கதைபேசி சோறூட்டி வளர வைத்தும்
அள்ளியள்ளி மகிழ்ச்சியினைக் குவித்தும் அன்பால்
அரவணைத்தும் வீட்டினெல்லா நிகழ்வு கட்கும்
துள்ளியமாய்ச் சாட்சியாகி இன்ப துன்ப
துடிப்புகளை எதிரொலித்தது என்னைப் போல!
தலைநிமிர்ந்து தனியாக நடப்ப தற்குத்
தன்காலில் வலிமையினைப் பெற்ற பிள்ளை
நிலைமாறிச் சென்றதனால் முதுமை தன்னில்
நிர்கதியாய் நிற்கின்ற என்னைப் போல
இலையுதிர்ந்து பட்டையுரிந்து கிளைவ ளைந்து
இருந்தவெழில் பசுமைகாய்ந்து மொட்டை யாகி
நிலைகுலைந்து விழுவதற்கு நேரம் பார்த்து
நின்றுளது பராமரிக்க யாரு மின்றி !
- தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு
- கம்பன் திருநாள் – 4-4-2015
- பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )
- ஞாழல் பத்து
- எழுத்துப்பிழை திருத்தி
- சான்றோனாக்கும் சால்புநூல்கள்
- என்னைப்போல
- மிதிலாவிலாஸ்-7
- குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?
- மருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்
- நிழல் தந்த மரம்
- கருவூலம்
- வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி
- ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – (7)
- ஆத்ம கீதங்கள் –21 ஆடவனுக்கு வேண்டியவை
- உளவும் தொழிலும்
- வைரமணிக் கதைகள் -8 எதிரி
- சீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரி
- ஒட்டுண்ணிகள்
- தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !
- English rendering of Thirukkural
- ஷாப்புக் கடை
- தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்
- உலகம் வாழ ஊசல் ஆடுக
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 6
- செல்மா கவிதைகள்—-ஓர் அறிமுகம்