நேர்முகத் தேர்வின் இரண்டாம் நாள்.
காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டுவிட்டேன். சரியாக காலை ஏழரை மணிக்கு உணவுக் கூடத்தில் ஒன்று கூடினோம். என்னைப் போன்றே மற்ற மாணவர்களும் உற்சாகமாகவே காணப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மருத்துவம் பயில இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை என்னைப்போல்தானே இருந்திருக்கும்? நான் அது கண்டு அஞ்சவில்லை. என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதோடு என்னை ஒரு பெரிய சக்தி இயக்கிக் கொண்டிருப்பதும் தெரிந்தது. இதுவரை நாத்திகனாக வளர்ந்து விட்ட எனக்கு இப்போது இத்தகைய கடவுள் நம்பிக்கை உண்டானது வினோதமானதுதானே!
பசியாறும் படலம் தொடர்ந்தது.சில பொதுவான பொருள்கள் பற்றி பேசிக்கொண்டே சுவையான இட்டிலி, வடையை உண்டோம். அதன் பின்பு நேற்று போலவே கல்லூரி கட்டிடத்துக்கு, செம்மண் சாலையில் நடந்து சென்றோம்.
அங்கு வகுப்பு அறைக்குள் செல்லாமல் மரம் செடி கொடிகள் நிறைந்த ஒதுக்குப்புறமான ஓர் இடத்துக்குச் சென்றோம். அங்கு சில மூங்கில் கழிகளும் கயிறுத் துண்டுகளும் கீற்றுகளும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவற்றைக்கொண்டு நாங்கள் ஒரு மாட்டுக் கொட்டகை கட்டவேண்டும். பார்வையாளர்கள் இருவரும் அதை எவ்வாறு செய்து முடிக்கிறோம் என்பதைக் கவனிப்பார்கள் என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆகவே அதை முறையாகச் செய்தோம். முதலில் தமிழ் நாட்டில் மாட்டுக் கொட்டகையைப் பார்த்துள்ளது யார் யார் என்பதைக் கேட்டறிந்தோம். நான் கிராமத்தில் இருந்துள்ளதால் அது பற்றி எனக்கு நிறையவே தெரிந்தது. அதை கூறி மாட்டுக்கொட்டகையின் அமைப்பு முறையைக் கூறினேன். அதன் நீளம், அகலம், உயரம் முதலியவற்றை குறித்துக்கொண்டோம். அதன் பின்பு வேலைகளைப் பகிர்ந்து கொண்டோம். ஒருவர் கடப்பாரையால் குழிகள் தோண்டவேண்டும். ஒருவர் மண் அள்ளி வெளியில் இடவேண்டும். சிலர் தூண்களை ஊன்ற வேண்டும். அதுபோன்று கூரையில் கீற்றுகள் வைத்துப் பின்னி கட்டவேண்டும். அனைவருமே ஏதாவது ஒரு வேலையில் தீவிரம் காட்டினோம். யாரும் வெறுமனே வேடிக்கைப் பார்க்கவில்லை. அதில் காட்டும் ஈடுபாடுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது தெரியம் .பார்வையாளர்கள் இருவரும் ஏதும் சொல்லாமல் எங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் எதை வைத்து யாருக்கு அதிக மதிப்பெண்கள் தருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவாறாக அந்த மாட்டுக் கொட்டகையை கட்டி முடிக்க இரண்டு மணி நேரமாகிவிட்டது.
பத்து மணிக்கெல்லாம் மூலைக் கடைக்குச் செல்வதற்குப் பதிலாக ஒரு பங்களாவின் தோட்டத்தினுள் புகுந்தோம். அங்கு இதர மாணவ மாணவியர்களும் கூடியிருந்தனர். அது உதவிக் கல்லூரி முதல்வர் டாக்டர் கோஷி என்பவரின் இல்லம். அங்கு கேக். சமசா, வடையுடன் தேநீரும் காப்பியும் வைக்கப்பட்டிருந்தன. திருமதி கோஷி எங்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். மற்ற குழுவைச் சேர்ந்தவர்களுடன் கலந்து பேசிக்கொண்டே சிற்றுண்டியைச் சுவைத்தோம். அப்போதும்கூட பார்வையாளர்களின் கண்கள் எங்கள்மேல்தான் இருந்தன. அங்கு ஒரு மணி நேரம் கழிந்தது.
மீண்டும் ஒரு காலியான வகுப்பறைக்குள் கூடினோம்.அங்கு எங்களுக்கு ஒரு பணி தரப்பட்டது. நாங்கள் ஒரு இந்து திருமணக் காட்சியை நடித்துக்காட்டவேண்டும். அதை தயார் செய்ய அரை மணி நேரம் தரப்பட்டது.நாங்கள் எப்படி பொறுப்பைப் பகிர்ந்துகொள்கிறோம், எப்படி தலைமைத்துவம் ஏற்கிறோம்,என்பதையெல்லாம் அவர்கள் கவனிப்பார்கள் என்பது எனக்குக் தெரியும்.எங்களில் ஒருவர் நாடக இயக்குனராகவும், இரண்டு பேர்கள் மணத் தம்பதியராகவும், ஒருவர் புரோகிதராகவும், ஒருவர் நாதஸ்வர வித்வானாகவும், ஒருவர் மேளக்காரராகவும் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டோம். மீதமுள்ள நால்வரும் மணத் தம்பதியரின் பெற்றோர் என்று தேர்வு பெற்றனர். இந்த சிறு ” நாடகக் குழுவுடன் ” சிறப்பாகவே இந்து திருமணக் காட்சியை மிகவும் தத்ரூபமாக நடித்துக் காட்டினோம்.
மதிய உணவுக்கு மீண்டும் ஆண்கள் விடுதிக்குத் திரும்பினோம். ஓய்வுக்குப் பிறகு மாலை மூன்று மணிக்கு மீண்டும் ஒரு வகுப்பறையில் கூடினோம்.
இப்போது தனிப்பட்ட வகையில் சோதனைகள் நடந்தன.இதற்கு ” இண்டெலிஜண்ட் டெஸ்ட் ” என்று பெயர். இரு பார்வையாளர்களும் எங்களை ஒவ்வொருவராக அழைத்து சிக்கலான ஒரு கேள்வியைக் கேட்டார்கள். அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.
” மூன்று நண்பர்கள் மலை ஏறுகிறீர்கள் . உங்களில் ஒருவர் ஆழமான பள்ளத்தில் தவறி விழுந்து மயக்க நிலையில் உள்ளார். அவரைக் காப்பாற்ற மீதமுள்ள இருவரும் என்ன செய்வீர்கள்? ” என்பதுதான் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி. பத்து நிமிடத்தில் பதிலைச் சொல்லிவிட வேண்டும்.
நான் சிந்தித்தேன். பள்ளத்தில் விழுந்துவிட்ட நண்பனின் உயிர்தான் முக்கியம். மலை ஏறும்போது கைவசம் கயிறு கொண்டு செல்வது வழக்கம். அதைப் பயன்படுத்தி ஒரு நண்பர் பள்ளத்தில் இறங்கி மயக்கமுற்ற நண்பனுக்கு முதலுதவி செய்யவேண்டும். அடுத்த நண்பன் வேகமாக ஓடி ஆட்களை அழைத்து வரவேண்டும்.கயிற்றின் உதவியுடன் மயக்கமுற்றவரை வெளியில் கொண்டு வந்தபின்பு அடுத்த நண்பன் கயிற்றைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்துவிடலாம். நான் சொன்ன பதில் இதுதான். இது போன்று மற்ற மாணவர்களிடம் வேறு விதமான சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டன.
- மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
- ஜெயகாந்தன்
- செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு
- பொழுது விடிந்தது
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1
- நதிக்கு அணையின் மீது கோபம்..
- நானும் நீயும் பொய் சொன்னோம்..
- முதல் பயணி
- அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)
- சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை
- கடைசிக் கனவு
- விதிவிலக்கு
- பயணங்கள் முடிவதில்லை
- அப்பா எங்க மாமா
- மூன்றாவது விழி
- தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்
- பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்
- செங்கண் விழியாவோ
- மரம் வளர்த்தது
- கூட்டல் கழித்தல்
- நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2
- வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது
- ஒரு பழங்கதை
- ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !
- ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்
- சிறுகதை உழவன்
- மிதிலாவிலாஸ்-9