ஒலி வடிவமில்லாக் கேள்விகள்

This entry is part 10 of 19 in the series 24 மே 2015

 

கருத்து அதிகாரம்

எது? எதில்?

 

நூறு பேர் சபையில்

நாலு பேர்

 

மேடைக்கு அழைக்கப் படுவதில்

அவருக்குள்

ஒலிவாங்கி வசப்படும்

வரிசையில்

 

இறுதிச் சொற்பொழிவு

இவரது என்பதில்

 

கருத்துச் சுதந்திரக்

கனவு வெளியில் ஒரு

தீவு

கருத்து அதிகார

பீடம்

 

ஒலிபெருக்கிகள் ஓய்ந்து

கரவொலி உரிமை

மட்டுமுள்ளோர்

கருத்து அதிகாரப் பேச்சாளர்

யாவரும் வெளியேற

 

வெற்றிட அரங்கம்

தோற்றம் மட்டுமே

 

அங்கே எங்கும்

வியாபித்திருக்கும்

சபைக்கு வரமுடியாத

கேள்விகள்

 

 

Series Navigationஅந்தப் புள்ளிஎழுத நிறைய இருக்கிறது

1 Comment

  1. சத்யானந்தன் கவிதைகளில் இடை இடையே வினாக்கள் வரும். ஆழமான வினாக்கள் தாம் அவை சில கவிதைகளில் கவித்வம் கூடிய வரிகள் கவிதை இடை வந்து புன்னகைக்கும்.கவிதைளில் முடியும் வரிகள் ஆழமான எண்ணத்தை வெடித்துக்கொணர்வது என்பது வாசகனுக்கு க்கூடுதல் நிறைவு தருபவை.அந்த வகையில் அமைந்தது இந்தக்கவிதையின் கடைசி வரிகள் வெற்று அரங்கம் எங்கும் வியாபித்திருக்கும் சபைக்கு வராத கேள்விகள். வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *