This entry is part 9 of 19 in the series 24 மே 2015


தோன்றும் வேகத்தைப்                          

பிடித்து நிறுத்து

எங்கு நின்றதோ

அங்கு ஒரு

புள்ளி வை

அதை மையமாக்கி

கிளைகள் பிரி

அதன் வழியே

பயணம் மேற்கொள்

பாதை தெரியும்

தானே விரியும்

கடந்த பாதை

தனக்கான இடத்தில்

தானே நிற்கும்

உனக்கான முடிவை

உன்முன் விரிக்கும்

அங்கும் ஒரு

புள்ளி வை

அந்தப் புள்ளிதான்

அடையாளப்படுத்தும்

ஆட்கொள்ளும் உன்னை…!

————————

Series Navigation“என்னால் முடியாது”ஒலி வடிவமில்லாக் கேள்விகள்