தாரிக் ஃபடா
(September 25, 2015)
நான் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது: ஜும்மா என்று அழைக்கப்படும் வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகையின் முன்பு, மசூதி இமாம்கள் ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையை செய்கிறார்கள். இந்த பிரார்த்தனையில் இமாம்கள் அல்லாவிடம் “காபிர்கள் மீது முஸ்லீம்கள் வெற்றிபெற” வேண்டுகிறார்கள். ”கௌம் அல் ஃகாபிரூன் ” (காஃ பிர்களின் தேசம்) என்ற அரபிய வார்த்தை யூதர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், நாத்திகர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் போன்ற எல்லா முஸ்லீமல்லாதவர்களையும் அடக்கிய ஒரு வார்த்தை.
நான்கு யூதர்களை பாரீஸில் இஸ்லாமின் பெயரால் ஜிகாதி பயங்கரவாதிகள் கொன்ற அந்த நாளிலும், சார்லி ஹெப்டோ படுகொலை நடந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகும், டோரண்டோ மசூதியின் இமாம் அல்லாவிடம் கிறிஸ்துவர்களையும் இதர முஸ்லீமல்லாதவர்களையும் முஸ்லீம்கள் வெற்றிகொள்ள பிரார்த்தனை செய்வதை நிறுத்தவில்லை.
அந்த 34 நிமிட பேச்சின் இரண்டு பாகங்கள் இதோ.
இஸ்லாமிய சகோதரத்துவம் (Muslim Brotherhood) அமைப்புக்குரிய முஸ்லீம் அசோசியேஷன் ஆஃப் கனடா அமைப்பினால் நடத்தப்படும் டோரண்டோ மசூதியில் இந்த பிரார்த்தனையை அந்த சமயத்திலும் நிறுத்தாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இந்த பயங்கரவாத செயல்களை கண்டிக்காமல் இருந்தது கூட விட்டுவிடலாம். ஆனால், எந்த வித அடக்கமோ பணிவோ இல்லாமல், “மற்ற எல்லா மதங்களையும் அடக்கி இஸ்லாம் எல்லா நிலங்களின் மீதும் நிலைப்பட வேண்டும் என்று தான் விரும்புவதையும், அதனை காபிர்கள் வெறுப்பதையும்” இமாம் அப்துல் ஹமீத் பேசினார்.
“அல்லாவை தவிர வேறொருத்தரும் வணங்கத்தக்கவர்கள் அல்ல என்று நான் சாட்சி கூறுகிறேன். அவர் ஒருவரே. அவருக்கு எந்த இணையும் இல்லை. நான் முகம்மது அவரது வேலையாள் என்றும், அல்லாவின் தூதுவர் என்றும் சாட்சி கூறுகிறேன். அவரிடம் அல்லா “உண்மையின் மதத்தை” அனுப்பினார். இந்த உண்மையும், அதன் வழிமுறையும்(இஸ்லாம்) மற்ற மதங்களை அழித்து அதன் மீது நிலைப்படவேண்டும் என்று அல்லா விரும்பினார். இருப்பினும் காபிர்கள்(யூதர்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள், நாத்திகர்கள்) இதனை வெறுக்கின்றனர்”
பிறகு சடங்கு முறையாக, காபிர்களை முஸ்லீம்கள் வெல்ல அல்லாவிடம் பிரார்த்தனை செய்தார்
இங்கே அவர் தன் பிரார்த்தனையில் உபயோகப்படுத்திய அரபி மொழியும், ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்கிறது. இது ஜிகாதிகள் (முஜாஹிதீன்கள்) காபிர்களை வெற்றிகொள்ள செய்யும் பிரார்த்தனை.
- முடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.
- வெளி ரங்கராஜன் – இரு நூல்கள்
- Tamil novel Madiyil Neruppu
- பொன்னியின் செல்வன் படக்கதை – 13
- உலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்
- நித்ய சைதன்யா கவிதை
- துல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்
- செந்தி கவிதைகள் — ஒரு பார்வை
- தொடுவானம் 95. இதமான பொழுது
- அவன் அவள் அது – 11
- “வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு தெரிவதில்லை. “
- தீ, பந்தம்
- திரை விமர்சனம் ஸ்பெக்டர்
- மருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் ( Autism )
- ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2015 மாத இதழ்
- சூடகம் கரத்தில் ஆட ஆடிர் ஊசல்