முகநூலை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன்
எனக்கு முகநூல்
மிகவும் பிடித்திருக்கிறது .
அதை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன் .
எனக்குப் பிடிக்காதவர்களை
மற்றவர்கள் திட்டித் தீர்க்கிறார்கள்.
மனதுக்கு ரொம்பவும்
இதமாக இருக்கிறது .
பெண்களை நான்
மிகவும் மதிப்பவன் .
அவர்கள் வீர சக்ரா
வாங்கும் அளவுக்குத்
தைரியசாலிகளாக முகநூலில்
வளைய வருகிறார்கள் .
அவர்கள்
பேட்டை ரௌடிகளை
போலீசில் ஒப்படைப்பதும்
எச்சில் ஒழுக எழுதுபவனை
வார்த்தைகளால்
கண்டதுண்டமாக்குவதும் ,
எனக்குப் பிடித்திருக்கிறது ..
தமிழில் எனக்குத் தெரியாத
பலநூறு கெட்ட வார்த்தைகளை
அவர்கள் தம் கட்டு உரைகளில்
கற்றுக் கொடுத்ததற்கும் நன்றி .
எங்கும் பிரசுரமாகாத
யாராலும் படிக்கமுடியாத
கவிதை என்னும் கிவிதைகளை
தினமும் இங்கு
பார்க்கிறேன் .
எப்படி கவிதை
எழுதக் கூடாது என்பதை
எனக்குக் கற்பிக்கும்
ஆசான்கள் அவை .
‘ மோடி சரியில்லை
கருணாநிதி சரியில்லை
ரஜனி சரியில்லை
ஜெயலலிதா சரியில்லை
அந்த டி .வி சரியில்லை
இந்த சினிமா சரியில்லை ‘
முகநூல்கார
ஒப்பாரிகளுக்கிடையே
மனதுக்கு இதமாய்
மணிகண்டன்கள் .
.
பாட்டையாவின் குறும்பு,
போகனின் வெகண்டை
கோகுலின் வெடிப்பு
மாமல்லனின் சுரீர்
விமலாரமணியின் பளார்
எல்லாம் எனக்கு
வேண்டியிருக்கிறது !
வெள்ளத்தில் நகரும்,
அதன் நகரும் மனிதர்களும்,
ஆடுகளும், மாடுகளும், நாய்களும்
மூழ்கிக் கொண்டிருக்கையில்
விரல்க் கறை பத்தி ,
பத்தி பத்தியாய்க்
கவிதை எழுதும்
கெவிங்கனையும்
இங்குதான் (வெறுப்புடன் )
பார்க்கிறேன் .
இருந்தாலும் , முகநூலை
நான் மிகவும் நேசிக்கிறேன் .
அதனை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன்.
—-
புதுமுகத்துடன் ஒரு சம்பாஷணை
” கவிதை எழுதுபவரா நீர் ? ”
“ஆமாம் ”
” யாரையெல்லாம் தெரியும் ?
” கம்பன் இளங்கோ
பாரதி கவிமணி
பசுவய்யா பிச்சமூர்த்தி … ”
“போய்ச் சேர்ந்த
ஆட்களை விடும் !
இப்போ இருப்பவர்கள் ? ”
“மனுஷ்யபுத்திரன் குட்டி ரேவதி
ரெங்கநாயகி ஜயபாஸ்கரன்
வைதீஸ்வரன் சுகுமாரன்
கலாப்ரியா.தேவதச்சன் …”
” எப்படி பழக்கம் ? ”
“படிச்சு தாங்க ”
” நேரே இல்லியா ?
என்ன ஆளுய்யா !
எந்த ஊரு உமக்கு ?
நெல்லையா ? தஞ்சையா ?
மதுரையா ? கோவையா ?
பாண்டிச்சேரியா ?
கன்யாகுமரியா?
அனந்த புரமா ?
வடக்கன் குளமா ? ”
” இதெல்லாம்இல்லீங்க .
தேனிக்கு பக்கம் .
ஆண்டிப்பட்டிங்க ! ”
” ஒண்ணும் சரியில்லே ,
உமக்கு
நல்லாத் தெரிஞ்ச ஆளும் இல்லே
சொல்றாப்புல ஒரு ஊரும் இல்லே
கவிஞராவது .
கஷ்டம்தான்யா ”
—————————————————————————————————————-
- நான் ஒரு பிராமணன்?
- தொடுவானம் 106. சோக கீதம்
- அ. கல்யாண சுந்தரம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்
- கானல் வரிகள்
- ஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்
- இரு கவிதைகள்
- காதலர் தினம்
- ‘நறுக்’ கவிதைகள்
- இளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…
- கதை சொல்லி .. நிகழ்ச்சி
- சி. கு. மகுதூம் சாயபுவின் பன்முக ஆளுமை
- “நியாயம்”
- ஒத்திகைகள்
- “ஒரு வார்த்தை ஒரு லட்சம்”
- “எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்
- இறுதி விண்ணப்பம்
- பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…
- இனிய மணம் வீசும் இருவாட்சி மலர்
- மெக்காவை தேடி -1