காப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்

This entry is part 11 of 12 in the series 22 மே 2016

மு​னைவர் சி.​சேதுராமன், 

தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,   

மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, 

புதுக்​கோட்​டை.     

E-mail: Malar.sethu@gmail.com

 

நாம் ​செய்யும் ​செயல்களுக்​கேற்ப பிறவிகள் என்பது ​தொடரும். இது  அ​னைத்து மக்களாலும் நம்பப்படுகின்ற ஒன்றாகும். ​மேலும் அவரவர் வி​னைகளுக்கு ஏற்ப அவர்களின் இறப்பிற்குப் பின்னர் நற்கதி அல்லது நரக கதி என்பது கி​டைக்கும். நல்லது ​செய்தால் நல்ல கதியும் தீயது ​செய்தால் நரக கதியும் கி​டைக்கும். இங்கு கதி என்பது உயிர்கள் அ​டைகின்ற நி​லை​யைக் குறிக்கும். சிந்தாமணியில் நரககதி, விலங்கு கதி, மக்கள் கதி, ​தேவ கதி என்ற நாற்கதிகள் பற்றிய ​செய்திகள் இடம்​பெற்றுள்ளன. இக்கதிகள்         அ​னைத்தும் சமண சமயத்தின் உயிர்நாடியாக விளங்கும் நம்பிக்​கைகளாகும்.

நரககதி

​கொ​லைத்​தொழி​​லை நி​லையாகச் ​செய்பவர்களுக்கும் உள்ளத்தால் ​கொடியவர்களுக்கும் மறுபிறப்பு என்பது இல்​லை. நல்வி​னை, தீவி​னை என்பது இல்​லை, தானமும் தவமும் பயன் தராது என்று கூறுபவர் நரக கதி​யை அ​டைவர்(2776). தீச் ​செயல்க​ளைச் ​செய்பவர்கள் தீவை​னை​யை வி​தைத்து அதன் வி​ளை​வை நுகர்வதற்காக நரகத்தில் ​​கொடுந்துன்பம் அனுபவிப்பர். ஐம்​பொறிக​ளை அடக்காமல் தீவி​னை உ​டையவராய் இருந்தவர்க​ளை நரகர், ​பொங்கி எழுந்து ஈட்டி, ​வேல், குந்தம், கூர்வாள், சுரி​கை ஆகியவற்​றை நட்டு ​வைத்துள்ள நிலத்தில் ஊ​னை எல்லாத் தி​சைகளிலும் சிதறிக்கிடக்குமாறு ​​செய்வர்(2763,2764). முற்பிறவியில் விரும்பிய ஊ​னைக் ​கொன்று தின்றவர் நரகத்தில் தன் ஊன் ​கொடிய ​நெருப்பில் பட்டு உ​டைந்து ​போகும்வண்ணம் ​கொடுந் துன்பத்​தை அனுபவிப்பர்((2765).

உயி​ரைக் ​கொன்ற பாவத்திற்குத் தண்ட​னையாக வயிரமாகிய முள்​ளை மரத்தில் நி​றைத்து ​வைத்து அம்மரத்தில் அவர்க​ளை ஏறுமாறு ​செய்வர்(2766). கழுவில் ஏற்றிக் ​கொள்வர்(2766). ​கொன்ற விலங்கின் மயிருக்கு ஒன்றாக ஊ​னை அரிந்து தீயில் இடுவர்(2766). உடும்பினத்​தை ​வேட்​டையாடியவர்க​ளைப் ​பெரிய வா​யை​யை உ​டைய ​செந்நா​யைக் ​கொண்டு குதறச் ​செய்வர்(2767). வா​ளை மீன்க​ளைத் தின்றவர்களின் வாயி​னைத் திறந்து உருக ​வெந்த ​செப்புத் துண்​டைத் திணிப்பர்(2768). இக்​கொடிய துன்பத்​தைப் ​பொறுக்காமல் ஓடுபவர்களின் பா​தையில் கூரிய ஊசிக​ளை நட்டு ​வைப்பர். அவ்வூசிகளில்கால் பதித்து ஓட முயலும்​போது ஊசிகள் காலில் குத்தி அவர்க​ளை ஓடவிடாமல் ​பெரும் துன்பத்​தைச் ​செய்யும்(2768).

பிறர் ம​னைவி​யை அ​டைதல் எளி​தென்று வி​னைத்துப் பிறனில் வி​ழைந்தவர்க​ளை அப்​பெண் வடிவில் ​செய்த உருக ​வெந்த ​செப்புப் பா​வை​யைத் தழுவுமாறு ​​செய்வர்(2769). அ​தை அவர்களும் தழுவித் துயராற்றாமல் அலறுவர். வில்லால் விலங்குக​ளைக் ​கொன்றும் வ​ைலக​ளைக் ​கொண்டு மீன்க​ளைப் பிடித்தவர்க​ளையும் ​கொடிய ​நெருப்பில் அழுத்தித் நாள்​தோறும் சுட்டுப் ​பொசுக்குவர்(2770).

இவ்வுலகில் தீவி​னைக​ளைச் ​செய்தவர்களின் உடல் த​சைக​ளை முழுவதும் அறுத்துப் ​பெரிய இரும்புச் சட்டியில் ​​பொரிப்பர்(2771). சிலரின் கண்க​ளைக் சுரி​கை என்ற ஆயுதத்​தைக் ​கொண்டு குத்துவர்(2771). சில​ரைக் கூரிய முள்​ளைக் ​கொண்டு ​நெஞ்சில் குத்திப் பிளப்பர்(2771). இவ்வாறு தீவி​னையின் பய​னை நுகரும்​போது நா நீர் வறட்சியுற்றுப் ​பொய்​கை நீ​ரை அருந்துவதற்காகக் ​கையால் நீ​ரை அள்ளுவர். அப்​போது அது குடிக்கும் நீராக இல்லாமல் புண்ணிலிருந்து வடியும் சீழல் உண்டாகிய குழம்பாகி வருத்தும்(2772).

தீவி​னை ​செய்த நரகர்க​ளை ​வெந்து உருகிய ​செப்புக் குழம்பில் அழுத்தியும் ​தொட்டிலில் ஊசல் ஏற்றிக் கீ​ழே ​நெருப்​பை மூட்டியும் ​செக்கில் அ​ரைக்கப்பட்டும், சுண்ணாம்பாக நுணுக்கப்பட்டும் துன்புறுத்துவர்(2774). நரகத்தில் பலரும் தாம் ​செய்த தீவி​னையால் வயலில் உழுத் எருதுக​ளைப் ​போல வலி​மையற்றவர்களாகக் காட்சி தருவர்(2775) என்று நரககதி​யை அ​டைந்தவர் நி​லை​மைக​ளைச் சிந்தாமணி எடுத்தியம்புகிறது. அதனால் பிறருக்குத் துன்பந் தராமல் தீவி​னைக​ளைச் ​செய்யாமல் இருத்தல் ​வேண்டும் என்று நரகத் துன்பத்​தை எடுத்து​ரைத்து வாழ்வியல் தத்துவத்​தை திருத்தக்க​தேவர் இதன் வழி ​​தெளிவுறுத்துகிறார்.

விலங்குகதி

நல்வாழ்க்​கை வாழாது பிறருக்குத் துன்பந்தரும் ​செயல்களில் ஈடுபடு​வோர் விலங்குகளாகப் பிறக்கும் நி​லை​யை அ​டைவர். இவ்வாறு விலங்குகளாகப் பிறந்து துன்புறும் நி​லை​யை​​யே விலங்கு கதி என்று சமணசமயத் தத்துவங்கள் குறிப்பிடுகின்றன. தவ ​வேள்வி ​செய்​வோ​ரைப் பழித்​தோரும் உண​வைப் பகுத்துண்ணாமல் தனித்து உண்​போரும் தம் உட​ம்பை வி​லைகூறி விற்கும் பரத்​தையரும் விலர்குகளாகப் பிறப்பர்(2789) என்று விலங்கு வாழ்க்​கைக்கு உரியவர்க​ளையும் விலங்குகளாகப் பிறந்து அவர்கள் ​பெறும் துன்பத்​தையும் விலங்குகதி துன்பம் என்று சிந்தாமணி குறிப்பிடுகிறது.

விலங்குகளாகப் பிறந்த உயிரினங்கள் காட்டில் வாழும் புலியின் குர​லைக் ​கேட்டுக் ​கொடுந்துன்பத்​தை அ​டையும்(2778). ​​கொ​லைத்​தொழிலில் வல்ல நாய்கள் மயில்க​ளைக் ​கொல்லப் பாயும்​போது மயில்கள் தன்  த​லை​யைச் சிறகுகளுக்கு உள்​ளே ம​றைத்துக் ​கொள்ளும்(2779). கண்ணுக்கினிய ஆட்டுக்குட்டி​யை மக்கள் நன்கு குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, மலர் சூட்டி, அதன் கழுத்​தை ​வெட்டுவர். ​வெட்டிய கழுத்திலிருந்து ஒழுகும் குருதி​யைப் பிடித்து வானவர்களுக்குப் பலிப்​பொருளாக அளிப்பர்(2780).

​மென்​மையான சூலி​னையு​டைய உடும்​பையும் வரால் மீன்க​ளையும் வா​ளை மீன்க​ளையும் ​பொறிக்கறியாகச் ச​மைப்பதற்கு அவற்​றைத் துண்டு துண்டாக ​வெட்டுவர்(2781). எருதுகள் உ​ழைப்​பை முழு​மையாக வாங்கிக் ​கொள்வதற்காகத் தாற்றுக் ​கோலில் குத்தி உ​ழைப்​பை வாங்கிக் ​கொள்வர். பின்னர் அது உ​ழைப்பிற்குத் தகுதியற்ற நி​லை​யை அ​டையும்​போது ​கைவிடப்பட்டு, உடலில் புண்கள் மலிந்து காக்​கைகள் ​கொத்திப் புழுக்கள் ​​வைத்து காப்பவர் யாரும் இல்லாமல் இறந்து ​போகும்.(2783). கூரிய ​தோட்டியால் குத்தி யா​னைகளின் ​நெற்றி பிளக்கப்படும்(2785). காட்டில் சிங்கம் வ​ளைத்துக் ​கொள்வதால் பல யா​னைகள் உயி​ரை விடும்(2786). நீரிலிருக்கும் சங்​கை எடுப்பதற்கும், சிப்பியில் இருக்கும் முத்​தைப் ​பெறுவதற்கும், அவற்​றைக் ​கொல்வர்(2786). விருந்தினர்களுக்கு விருந்திடுவதற்காகப் பல விலங்குக​ளைக் ​கொன்று ச​மைப்பர்(2786). ​பெண்கள் கிளிக​ளையும், குருவிக​ளையும் அவற்றின் சுற்றத்திடமிருந்து பிரித்துக் கூண்டுக்குள் அ​டைத்துத் துன்புறுத்துவர்(2788) எனப் பல்​வேறு வ​கைகளில் மனிதர்களாலும் விலங்குகளாலும் துன்புறும் இழிந்த பிறவிகளாக விலங்கு கதி அ​மைந்திலங்குகின்றது என்று சிந்தாமணி ​தெளிவுறுத்துகின்றது.

மக்கட் கதி

எல்லாப் பிறப்பும் பிறந்த பின்னர் இறுதியாகப் பிறப்பது மனிதப் பிறப்பாகும் என்பர். இது​வே உயர்ந்த பிறப்பு என்று சமயங்கள் எடுத்தியம்புகின்றன.  நல்வி​னை ​செய்ததா​லே​யே உயிர்கள் மக்கட் பிறப்​பை எய்துகின்றன. இம்மக்கட்பிறப்பில் தீவி​னைகள் ​செய்கின்ற​போது மீண்டும் பிறப்பு என்பது ஏற்படுகின்றது.

மக்கட் கதியில் பிறந்தவர்கள் என்​னென்ன துன்பங்க​ளை அ​டைவர் என்ப​தை சீவகசிந்தாமணி ​தெளிவுறுத்துகின்றது. மக்கள் தம் உருவத்​தைக் கண்ணாடியில் கண்டு தம் அழகில் மயங்கி மார்பில் வாச​னைக் கல​வைக​ளைப் பூசிக்​ாெக்ணட, இள​மை அழகு மிகுந்த ​பெண்களின் ​தோள்க​ளைத் தழுவி மகிழும் மனித வாழ்க்​கைத் துன்பம் தரக்கூடியது(2791).

இம்மனிதப் பிறவி அன்​னையின் வயிற்றுக்குள் இருக்கும்​போது அவ்விடத்தில் உள்ள புழுக்கள் சூழ இருப்பர். அவளின் குட​லை மா​லையாகச் சூடி இருப்பர். பிறக்கும் காலத்தில் அருவருக்கத்தக்க நீரிலும் தூய்​மை ​செய்ய முடியாத இரத்தக் குழம்பிலும் அருவருப்பான வழயிலும் பிறப்பர்(2792). இத்த​கைய இழிந்த நி​லையில் பிறந்தவர்கள் ​பெண்களின் மீது ​கொண்ட காமத்தால் ​நெஞ்சில் ​பெரும் துன்பத்​தை ஏற்கின்றனர்(2792). அவர்களுக்குப் ​பொருள் ​கொடுக்கக் களவு ​செய்து கழு​வேறுகின்றனர்(2792).

​பொருள் ஈட்டுவதற்காகக் கப்பல்களில் ஏறி வாணிகம் ​செய்வதற்குச் ​செல்லும்​போது புயல்காற்றால் கப்பல் கவிழ்ந்து நீரில் மூழ்கிக் ​கொடுந்துன்பம் அ​டைகின்றனர்(2793). ப​கைவர் நாட்டில் உள்ள ​செல்வர்க​ளை அரசனுக்குப் ​பொருள்தருக என்று கூறி அவர்களு​டைய முன் ​கை​யைக் கட்டுவர். சாட்​டையால் அடிப்பர். பல்விழ அவர்க​ளை அ​றைவர். ​கைகால்க​ளை ​வெட்டி வீழ்த்துவர். கண்க​ளைத் ​தோண்டுவர். தீப்பு​கையில் வீழந்து துன்பம​டையச் ​செய்வர்(2794,2795).

மன்னனுக்கு நிலத்​தை விரிவாக்கித் தர​வேண்டும் என்பதற்காக வீரர்கள் மிகப்​பெருந் துன்பம​டைவர். ​பெற்ற ​பெரும் நிலப்பரப்​பைப் ப​கைவரிடமிருந்து காப்பதற்கு மிகப் ​பெருந்துன்பம​டைவர். விரும்பிய மகளி​ரைத் தழுவாமல் இருப்பது கடல்​போல் துன்பம் தரும்(2796). இனிய உட​லைப் பிணி ​சேர்ந்து அழகு இழக்குமாறு ​செய்யும். கூனலாகவும் குறளராகவும் சிந்தராகவும் சீழ் நி​ளைந்து ​நோய் வருந்த அ​டையும் துன்பம் ​சொல்லில் கூற முடியாத துன்பமாகும்(2797,2798).

மக்களுக்கும் விரும்பியவற்​றைப் ​பெறாவிட்டால் துன்பம் ​பெற்றுப் பிரிதல் அதனினும் துன்பம். மூப்ப​டைதல் துன்பம். கண்​ணொளி மங்குதல்  முதலிய ​செயல்கள் துன்பம் தரும்(2799). மனிதப் பிறவியில் பிறந்ததிலிருந்து இறக்கும் வ​ரையிலும் வாழ்கின்ற வாழ்க்​கை மிகப்​பெரும் துன்பத்​தைத் தருகின்ற வாழ்க்​கையாக அ​மைவதால் மனிதப் பிறப்பு துன்பமயமானதாகும் என்று திருத்தக்க​தேவர் மனிதன் தம் வாழ்க்​கையில் அ​டையும் பிறவித் துன்பங்க​ளை குறிப்பிட்டு மனித வாழ்க்​கை நி​லையில்லாதது என்ப​தை வலியுறுத்துகிறார்.

​தேவகதி

ஒவ்​வொரு பிறப்பும் துன்பம் தரக்கூடிய​தே. ​​தேவராகப் பிறந்தால் எந்தவிதமான துன்பமும் வராது என்று கூறிவிட முடியாது. அத்​தேவகதியிலும் உயிர்கள் துன்பத்​தை அ​டைகின்றன. ​தேவகதியில் உயிர்கள் பிறக்கின்ற​போது அ​வை அ​டைகின்ற துன்பத்​தைச் சீவகசிந்தாமணி ​​தெளிவுறுத்துகின்றது.

​தேவகதி துன்பம் என்பது ​தேவர்கள் வாழ்க்​கையில் ஏற்படும் துன்பத்​தைக் குறிப்பிடுவதாகும். ​தேவர்கள் ​பெண் வயிற்றில் ​சென்று பிறக்கமாட்டார்கள். அவர்களது கால்கள் நிலத்தில் ​தோயாது. அவர்களது உருவம் எழுத முடியாத அழுகு​டையதாகும். அவர்களது உடல் ஞாயிற்​றைப் ​போல ஒளிவீசி திகழும். அவர்கள் அணிந்த மலர் மா​லைகள் வாடாது இருக்கும்(2800). ​தேவமகளிரின் ​கை, கால்,கண்கள் ஆகிய​வை தாம​ரை மலர்​போன்று இருக்கும். வாய் ​பே​ரொளி ​பொருந்திய பவளத்​தைப் ​போன்று இருக்கும். அவர்கள் திருமக​ளைப் ​போன்று ​பேரழகு நிரம்பியவர்களாக விளங்குவர்(2801). குவ​ளைக் கண்க​ளையும் ​நெற்றி மா​லையி​னையும் ஒளிமிகுந்த வயிரக் கீரிடத்​தையும் அழகிய காதுகு​​ழையி​னையும் நில​​வைப் ​போன்ற மார்பணிக​ளையும் மின்ன​லைப் ​போன்ற ஒளிமிகுந்த உடலி​னையும் ​கொண்டவர்கள்(2801).

இவர்கள் கற்பக மரத்தின் நிழலில் நின்று நால்வ​கை இ​சைக்கருவிக​ளோடு நிகழும் கூத்தி​​னைக் கண்டும் பல வி​ளையாட்டுக்க​ளை நிகழ்த்தியும் ​வெள்​ளையா​னை முகிலுடன் ​போர் ​செய்யுமாறு ஏவியும் அதன்மீது அமர்ந்து வி​ளையாடியும் ​பொழு​தைக் கழிப்பர்(2806). ​தேவர்கள் இத்த​கைய அழகும் ஆற்றலும் மிகுந்தவர்கள். இவர்கள் உணவாக அமிழ்தத்​தை விரும்பினால் அ​​தை உண்ணுவது மத்தா​லேயாம்(2802). காம இன்பத்தில் மயங்கும் வாழூக்​கையி​னைக் ​கொண்டவர்கள்(2804,2805). தமக்குள்ள ஆயு​ளை வீணாகக் கழித்து ஒளியிழந்த ஞாயிற்​றைப் ​போன்று அழகு இழந்து காணப்படுவ.

​தேவர்கள் உயிர்விட பதி​னைந்து நாட்கள் இருக்கும்​போது இ​மையாத கண்கள் இ​மைக்கும். வாடாத மலர்மா​லைகள் வாடத் ​தொடங்கும். நஞ்​சோடு கலந்த அமுதத்​தை உண்டவர்கள் ​போலத் துன்புறுவர்(2810). இன்பம் நுகர்தற்கு ​வேண்டிய ​பொருள்க​ளை​யெல்லாம் தரக்கூடிய கற்பகச் ​சோ​லை​யைக் கண்டிருந்தும் அது நி​லையானதல்ல என்ப​தை உணர்வர்(2808). இவ்வாழூக்​கை இழிந்தது என்று கருதி வருந்துவர். ​தேவர்களாக இருந்து வாழும் வாழ்க்​கையில் பிற ​தேவர்களால் சபிக்கப்பட்டும் அவர்கள் இட்ட குற்​றேவல்க​ளைக் கீழ்ப்படிந்து ​செய்தும் அவர்களுக்கு அணிமணிகள் ​செய்து ​கொடுத்தும் துன்பம​டைவர்((2811) என்று ​தேவ வாழ்க்​கையும் துன்பமு​டையது என்று சிந்தாமணி எடுத்து​ரைக்கின்றது.

உயிர் நரக கதியிலும் மனித கதியிலும் விலங்கு கதியிலும் ​தேவ கதியிலும் அ​டையும் துன்பங்கள் மிகப்​பெருந் துன்பங்களாகும். அதனால் எடுத்த இம்மனிதப் பிறிவியி​லே​யே பிறவா யாக்​கைக்குரிய வாழ்க்​கை​யை அ​டைவது உயர்ந்த பண்பாகும் என்றும் சிந்தாமணி பிறவாத் தன்​மைக்குரிய வழிவ​கை​யைக் குறிப்பிடுகின்றது.(​தொடரும்….6)

Series Navigationநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *