பெண்கள் நிலை – அன்றும் இன்றும்!

This entry is part 1 of 12 in the series 22 மே 2016

பவள சங்கரி  பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சில துறைகளைத் தவிர வேறு எதிலும் தலையிடுவது என்பது அரிதாக இருந்த காலமும் ஒன்று இருந்தது என்று நினைவுகூரும் அளவிற்கு இன்று பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை என்ற நிலையே உள்ளது. இன்று தொழில் நிமித்தம் உலகம் முழுதும் தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக இருப்பினும் அதனை உடைத்தெறிந்துவிட்டு முன்னேற்றப் பாதையை […]

அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்

This entry is part 2 of 12 in the series 22 மே 2016

நண்பர்களே,   எனது இரண்டாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது நூல் வடிவில் வருகிறது.       – நூல் பெயர் : அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்  – பக்கங்கள் : 524 – விலை : 500 ரூ. -வெளியிடுவோர் : வையவன் தாரிணி […]

19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்

This entry is part 3 of 12 in the series 22 மே 2016

சுமார் மூன்றாண்டு காலத்துக்கு முன்பே வைகோ, சசி பெருமாள் போன்ற சமூக ஆர்வலர் மட்டுமே கையிலெடுத்த மது ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தார். ராமதாஸின் அரசியலில் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு எல்லா ஜாதி மக்களும் பாராட்டுவதாக இருந்தது. ஆறுமாதங்களுக்கு முன் வரை மதுவிலக்கே தேர்தலின் மையப் பிரச்சனையாக உருவெடுக்கும் என்னும் ஒரு தோற்றமே இருந்தது. ஆனால் அணி சேரும் கணக்குகள் ஆரம்பித்ததும் ஊடகங்கள் அதை ஒட்டி பொது மக்கள் கவனம் திரும்பி விட்டது. மதுவுக்கு அடுத்தபடியாக இலவசங்களை நாம் […]

முரசொலி மாறனை மறந்த திமுக.

This entry is part 4 of 12 in the series 22 மே 2016

 பீர்பால்  ஆணித்தரமாக இந்த தேர்தல் ஒன்றை நிரூபித்திருக்கிறது – திமுக , அதிமுக இரண்டும் தான் தலையாய தமிழக கட்சிகள் என்று. அதிலும், திரு.கருணாநிதி செய்த ஒரு தவறான , அரசியல் ரீதியாக, அணுகுமுறையால் காங்கிரஸீற்கு ஆதரவு போன்ற தோற்றம். 6.4 % மற்றும் எட்டு சீட். காங்கிரஸூடனான கூட்டணியால் திமுக இழந்தது தான் அதிகம். திமுக-வின் மேல் மக்களுக்கு ஈழத்தின் நிலைப்பாட்டால் வெறுப்புக் கிடையாது என்பதற்கு,  பிரபாகனனின் படத்தை பிரமாண்டமாக வைத்து வாக்குச் சேகரித்த திரு.சீமானிற்கு […]

 ‘முசுறும் காலமும்’

This entry is part 5 of 12 in the series 22 மே 2016

பத்மநாபபுரம் அரவிந்தன் என் பால்ய காலத்தில் வீட்டு மாமரத்தில் இலைகளைப் பிணைத்துப் பின்னி பெருங் கூட்டமாய் கூடுகளில் முசுறெறும்புகள் வசித்தன… மரமேறி மாம்பழங்கள் பறித்துண்ண ஆசை விரிந்தாலும் முசுறுகளை நினைத்தாலே உடலெரியும்.. மாம்பழங்கள் சுற்றி கூடெழுப்பிக் குழுமியிருக்கும் அவைகளின் கூட்டைக் கலைத்தால் உடலில் ஓரிடம் விடாது மொத்தமாய் விழும் விழுந்த நொடியில் கடிக்கும் கடித்த இடத்தில் தன் வால் நகர்த்தி எரி நீர் வைக்கும் எரியும் ஆனால் தழும்பாகாது, தடிக்காது.. உடலெங்கும் சாம்பலைப் பூசி அகோரிகள் போல் மேலே செல்வோம்… […]

அம்மா நாமம் வாழ்க !

This entry is part 6 of 12 in the series 22 மே 2016

ஜெயானந்தன். தமிழக அரசியல் 2016 முடிவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் அம்மா அலைதான் வீசுகின்றது. அம்மா போட்ட அரசியல்  கணக்கில், நரியாக செயல்பட்டு, வைகோ சரியாக அவரது சேவையை  செய்துவிட்டார். இந்த விளையாட்டில், பாவன் ஒரு காதநாயகன் தன் உரு இழந்து, கோமாளியாக மாறிப்போனக்கதை, அவருக்கும்  அவர்து மனைவிக்கும் புரிந்திருக்கும். போன தேர்தலில்,  ஒரு காமடியன், தன் சினிமா வாழ்க்கையே இழ்ந்தார். அம்மா உணவகம், அம்மா வாட்டர், அம்மா டாஷ்மார்க், அம்மா மிதிவண்டி, அம்மா கனணி, […]

பழைய கள்

This entry is part 7 of 12 in the series 22 மே 2016

  சேயோன் யாழ்வேந்தன் நிச்சயமாக இவை பழைய நாற்காலிகள்தாம். பலர் அமர்ந்து பார்த்தவைதாம். நிச்சயமாக இவர்களும் பழைய ஆட்கள்தாம். பல நாற்காலிகளைப் பார்த்தவர்கள்தாம். பழைய நாற்காலிகளில் பழைய ஆட்களையே அமரவைத்து புதியதோர் உலகு செய்வோம்! seyonyazhvaendhan@gmail.com

தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்

This entry is part 8 of 12 in the series 22 மே 2016

ல. புவனேஸ்வரி முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் இலாஸ்பேட்டை, புதுச்சேரி – 605008   முன்னுரை: சஞ்சிகைகளிலோ (Journals) அல்லது மாநாடுகளிலோ (Conference) ஆய்வுக்குறிப்புகளை கட்டுரையாக வெளியீடு செய்வது என்பது ஒரு ஆய்வாளரின் தலையாய கடமையாகும். இதன்மூலம், தத்தம் துறையில் ஆய்வு மேற்கொள்பவர்களை அறிந்து, தம் ஆய்வுத் திட்டத்தை மேம்படுத்தி மேலும் ஆய்வை நெறிப்படுத்த முடியும். கல்வியியல் சார்ந்த சஞ்சிகைகள் (Academic Journals) ஆய்வாளர்களின் பொதுவான கட்டுரை ஏற்பு இடமாக கருதப்படுகிறது. ஆய்வு […]

தொடுவானம் 121. சிங்கப்பூரில் நேதாஜி.

This entry is part 9 of 12 in the series 22 மே 2016

  ஜப்பானியர் ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் இருந்தபோது அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வந்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பரம எதிரி. கல்கத்தாவில் அவர்களால் வீட்டுக் காவலில் இருந்தபோது மாறுவேடம் பூண்டு தப்பித்தார். ஆப்கானிஸ்தான் வழியாக தரை மார்க்கமாக ரஷியா சென்றார். அங்கு இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போர் புரிய  உதவி கேட்டார். ஆனால் அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. அங்கிருந்து அவர் ஜெர்மன் தூதரகத்தின் உதவியுடன் ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் […]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6

This entry is part 10 of 12 in the series 22 மே 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   எத்தனை கோடி இன்பம் வைத்தாய், எங்கள் இறைவா! இறைவா! இறைவா! சித்தினை அசித்துடன் இணைத்தாய், அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுல கமைத்தாய்! அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம் ஆகப் பலபல நல் அழகுகள் சமைத்தாய்! மகாகவி பாரதியார் ‘ஒவ்வோர் அங்கமும் தனித்து நீங்கி, தனது முழுமையற்ற குறை நிலையிலிருந்து தப்பிச் சென்று, வேறோர் முழு தோற்றத்தைத் தேடிப் பிடித்து அந்த வடிவத்தை நிரப்பிக் கொள்கிறது! ‘ ‘கலைஞன் […]