வணக்கம்
குவிகம் இலக்கியவாசல் என்னும் அமைப்பு கடந்த ஓராண்டாக மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நேர்காணல், சிறுகதைப் போட்டி, கலந்துரையாடல், நாடக உலகம், நூல்கள் மற்றும் நூலாசிரியர் அறிமுகம் என இதுவரை 14 நிகழ்வுகள் நடந்துள்ளன.
பதினைந்தாவது நிகழ்வாக “வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்” என்னும் தலைப்பில் இணையத்தில் இலக்கியம் பேசிவரும் வலைஞர்களும், இணைய இதழ் ஆசிரியர்களும், வாசகர்களும் சந்திக்கும் நிகழ்வாக இதனை வடிவமைத்துள்ளோம். ஸ்பேசஸ் அரங்கில் (பெசன்ட்நகர் கடற்கரை 1.எலியட்ஸ் பீஸ் சாலை) ஜூன் 18, சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடக்கவிருக்கும் இந்நிகழ்வில் வலைஞர்கள் தங்களது வலைத்தளத்தைப் பற்றியும் வாசகர்கள் தாங்கள் வாசித்துவரும் தளங்களைப் பற்றியும் அனைவருடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாக இது அமையும்.
நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். தங்கள் வருகையை 9442525191 அல்லது 9791069435 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவோ ilakkiyavaasal@gmail.com முகவரிக்கு மின்னஞ்சலாகவோ தெரிவிக்கக் கோருகிறோம்.
அன்புடன்
சுந்தரராஜன் (9442525191)
கிருபானந்தன் (9791069435)
– குவிகம் இலக்கிய வாசல்
- `ஓரியன்’
- சாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்
- அணுசக்தியே இனி ஆதார சக்தி
- அவுஸ்திரேலியா கன்பரா கலை – இலக்கியம் 2016 ஒரு பார்வை
- துரும்பு
- கோடைமழைக்காலம்
- ரகுவீரரின் ‘ஒரு கல் சிலையாகிறது’ ஒரு பார்வை
- தொடுவானம் 123.கைவிடப்பட்ட திராவிட நாடு
- ஜூன் – 08. உலக கடல் தினக் கவிதை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு மர்மங்கள் : வால்மீன்கள் முறிவது எப்படி, இணைவது எப்படி ?
- நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் உன்னதப் பிரமிடுகள் படைப்பில் காணும் புதிரான வானியல் கணித முறைப்பாடுகள் -9
- Original novel
- காப்பியக் காட்சிகள் 8.ஞானம்
- வலைஞர்கள் வாசகர்கள் கலந்துரையாடல்
- புகைப்படமாய் உருமாறும் புனைவு – [ ”வளவ. துரையன் சிறுகதைகள்” முழுத்தொகுப்பை முன்வைத்து ]
- எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’
- யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 2