லதா ராமகிருஷ்ணன்
ஆளாளுக்கு புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்ற நூல்கள் என்று பரபரப்பாகப் பட்டியல் தந்துகொண்டிருக்கிறார்கள். பாதகமில்லை. இங்கே நான் புதிதாக வந்திருக்கும் வாசிக்கப்படவேண்டிய நூல்கள் சிலவற்றைத் தந்துள்ளேன்.
- அழுக்கு சாக்ஸ் – நவீன தமிழ்க்கவிதையின் குறிப்பிடத்தக்க கவிஞரான பெருந்தேவியின் கவிதைத் தொகுப்பு. விருட்சம் வெளியீடாக வந்துள்ளது.
- தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு நல்ல பல எழுத்தாக்கங்களை மொழிபெயர்த்திருக்கும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள படைப்பு ‘கடவுளின் கையெழுத்து. CODE NAME GOD என்ற உலகபுகழ் பெற்ற நூலின் தமிழ் வடிவம். கவிதா பதிப்பக வெளியீடு.
- தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர் – சிற்றிதழாளரான சி.மோகனின் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள நூல் ‘பியானோ’ இந்த நூலில் குறிப்பிடத்தக்க, நவீன உலகச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பனுவல் வெளியீடு
முன்பு பன்முகம் காலாண்டிதழை நடத்திவந்தவரும், தற்சமயம் புதுப்புனல் இதழை நடத்திவருபவருமான திரு.ரவிச்சந்திரனின் புதினம் இது. ஒரு நாவல் என்பது பக்கங்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாய் அடர்செறிவாய் கட்டமைக்கப்பட்டுள்ளது. புதுப்புனல் வெளியீடு.
மூத்த கவிஞர், இலக்கியவெளியில் தொடர்ந்த ரீதியில் வீர்யம் குறையாமல் இயங்கிவரும் எஸ்.வைதீஸ்வரனின் தேர்ந்தெடுத்த 80 கவிதைகள் இடம்பெற்றுள்ள தொகுப்பு. விருட்சம் வெளியீடு.
- தொடுவானம் 127. மருத்துவத்தில் பகுத்தறிவு …
- பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ
- நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு
- படிக்கவேண்டிய சமீபத்திய வெளியீடுகள் சில
- தாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கை ஆழியான்
- வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்
- ஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!
- ஒரு கவிதையின் பயணம்
- `ஓரியன்’ -5
- காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும்
- பனுவல் புத்தக விற்பனை நிலையம்
- காப்பியக் காட்சிகள் 12- சிந்தாமணியில் வாணிகம்
- ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை
- சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம்.
- யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4
- ஆத்மாவின் கடமை
- புதிய பயணம் – லாவண்யா சுந்தரராஜனின் ‘அறிதலின் தீ’ –
- முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி
- முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி
- மெக்காவை தேடி -2
- எஸ் அற்புதராஜ் மொழியாக்கத்தில் சத்யஜித் ரே சிறுகதைகள் வெளியீட்டு விழா