Posted in

கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி

This entry is part 6 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

இது அதிர்ச்சி.
கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி.
ரிக்டர் ஸ்கேலில்
ஏழெட்டுக்கு மேல் இருக்கும்.
நொறுங்கிக்கிடப்பது
சினிமாக்கலை என்ற கட்டிடங்கள்
மட்டும் அல்ல.
துடிப்புள்ள பேனாக்கள்
இதயங்கள் தூளாகிக்கிடக்கும்
அலங்கோலம் இது.
எத்தனைப்பாட்டுகள்?
எத்தனைக்கவிதைகள்?
திரைப்பட இருட்டுக்குள்
இப்படியொரு
“சைக்கடெலிக்”வர்ண வெளிச்சங்களை
இவன் ஒருவனால்
மட்டுமே தர முடியும்.
இசைக்கருவிகள் இனிமையைப்
பிழிந்து தரும்போதெல்லாம்
இதயங்களின்
அந்த ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள்
அறை ரகசியங்களின்
மதுவை வடித்துத் தரும்
அவன் உயிரின் ரசம்
அந்தப்பாடல்கள்.
இசை அமைப்பாளர்களுக்கு
ரத்னக்கம்பள விரிப்புகள் அமைத்துக்
கொடுத்ததே
இந்த சொல் அமைப்பாளன் தான்.
விருது வழங்கும் பீடங்கள்
வெறும் கூடுகள் ஆகிப்போயின.
அவை கண்ணீரால் நிரம்பி வழிகின்றன.
வயதுகளையெல்லம்
பிதுங்கி வருபவை
ஒரு கவிஞனின் கவிதை.
அதோ அந்த பிதுக்கம் தாளாமல்
அந்த காலைச்சூரியனும்
கர்ச்சீஃப் கிடைக்காமல்
நனைந்து போன
தன்வெப்ப மண்டலத்தை
கசக்கிவிட்டுக்கொண்டிருக்கிறான்.
நாமும் தான்.
Series Navigation‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்துகாணாமல் போன கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *