எச்.முஜீப் ரஹ்மான் “நான் ஏன் வஹாபி அல்ல?” என்ற நூல்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 14 in the series 15 ஜனவரி 2017

ff

மிசிரியா

காலத்துக்கும்,சூழலுக்கும் பொருந்தும் வகையில் எச்.முஜீப்
ரஹ்மான் அவர்களால் எழுதப்பட்ட நான் ஏன் வஹாபி அல்ல? என்ற நூல்
உள்ளடக்கத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நூல் ஆகும்.தமிழ் பேசும்
முஸ்லிம்கள் அதிகம் வாழும் அனைத்துப்பகுதிகளிலும் கிடைக்க புத்தக
ஏஜென்சிகளும் எங்களுடன் இணைந்து செயல்படவேண்டும்.சமானிய முஸ்லிம் முதல்
அறிஞர் பெருமக்கள் வரை இந்த நூலை வாங்கி சமகால பிரச்சனைகளை அணுகும்
விதங்களை அறிந்து கொள்ளவும் அதற்கான இயல்புகளை சொல்லிக்கொடுக்கவும் இந்த
நூல் எல்லாவகையிலும் பயன்படும்.

இஸ்லாமிய வரலாற்றின் கறுத்த அத்தியாயங்களை நூல் வடிவில் சிந்திக்க தக்க
எழுத்துருவில் மாற்று சிந்தனைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்நூல்
படைக்கப்பட்டிருக்கிறது.தமிழ்கூறும் நல்லுலகம் நன்மை நிறைந்த நூல்களை
புறந்தள்ளும் தன்மை கொண்ட்து அல்ல.

இந்நூலின் சிறப்பம்சங்கள்:

· வகாபிசத்தின் ஆழ அகலங்களை விவாதிக்கும் தமிழின் முதல் நூல்

· எதிர் இஸ்லாம் குறித்த விரிவான தகவல்கள்

· சுன்னத் ஜமாத்தின் அகீதாவழி நின்று
ஷரியத்,தரிகத்,ஹகீகத்,மஹ்ரிபத் நிலைகளை சொல்லும் ஏகத்துவ களம் பற்றி

· சூபித்துவத்தின் அவசியம் குறித்த பன்முகபார்வை

· பிரிட்டிஸ் உளவாளி ஹம்பரின் திடுக்கிடும் ரிபோர்ட்

· வகாபிசத்துக்கு எதிரான பத்வாக்கள்

24 அத்தியாயங்கள்

4 பாகங்கள்

20 பின்னிணைப்புகள்

பி.ஜெ குறித்த விமர்சனங்கள்

வெளிநாட்டு நிதியால் விளைந்த கொடுமைகள்

ஹதீஸ் தள்ளுபடிகளும் நிராகரிப்புகளும்

மதுகபுகள் ஆபாசமானவையா?

உள்ளிட்டிட்ட பல்வேறு விஷயங்களை ஆராயும் ஆய்வுகள்

இந்நூலை வாசிக்கும் முறைகள்

இந்த நூல் ஏன்?,எதற்கு?

தமிழகத்தில் வகாபியத்தின் வளர்ச்சியும்,வீழ்ச்சியும்

இந்நூல் அணுகப்பட்ட அணுகுமுறைகள்:

(1) வரலாற்றியல் அணுகுமுறை

(2) இலக்கிய வகைமையியல் அணுகுமுறை

(3) மானுடவியல் அணுகுமுறை

(4) மார்க்சிய அணுகுமுறை

(5) தத்துவவியல் அணுகுமுறை

(6) அழகியல் அணுகுமுறை

(7) மொழியியல் அணுகுமுறை

(8) பகுப்பியல் அணுகுமுறை

(9) ஒப்பியல் அணுகுமுறை

(10) அமைப்பியல் அணுகுமுறை

(11) பின்னை அமைப்பியல் அணுகுமுறை

(12) பின்னை நவீனத்துவ அணுகுமுறை

(13) தலித்திய அணுகுமுறை

(14) பெண்ணிய அணுகுமுறை

பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மானின் நான் ஏன் வகாபி அல்ல? என்ற நூல்
மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த நூல் சமகாலத்தின் கண்ணாடியாக
அகில உலக அளவில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய திவிரவாதம் என்ற
சொல்லாடலை மறுவாசிப்பு செய்து இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை என்பதை
ஆணித்தரமாக நிறுவுகிறது. மானுடநேயத்தை வலியுறுத்தும் சூபித்துவம்
இஸ்லாத்தின் அடிநாதமாக இருக்கிறது.ஆனால் சவுதி அரசால் முன்னெடுக்கப்படும்
வகாபியம் என்ற கருத்தியல் தான் திவிரவாத்த்தை ஆதரிக்கிறது.எனவே வகாபிய
தீவிரவாதம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.வகாபியம் வேறு.இஸ்லாம்
வேறு இந்த உண்மையை புரிந்து கொண்டால் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள்
குறித்தும் இதுவரை இருந்துவந்த கற்பிதங்கள் விலகும்.800 பக்கங்களில்
வரலாற்று ஆவணமாக வகாபியத்துக்கு சொல்லப்பட்ட எதிர்வினையாக அடித்தள
முஸ்லிம்களின் பாதுகாப்பிற்க்காக இந்நூல் பல்வேறு கோணங்களில் வகாபியத்தை
ஆய்வு செய்து அதன் கருத்தியல் தீவிரத்தை,பகுத்தறிவு அராஜகத்தை,ஜனநாயக
விரோத்த்தை தோலுரித்து காட்டுகிறது.

இன்றைய சூழலில் இது போன்றதொரு நூல் எந்த மொழியிலும் சரி எந்த நாட்டிலும்
சரி வரவில்லை என்பது இந்நூலை குறித்த ஆர்வத்தை தூண்டும்
செய்தியாகும்.சூபித்துவத்தின் அடிப்படை அம்சங்களான தஸ்கிய்யத்துன் நப்ஸ்
என்ற மனத்தூயமையாக்கம்,திக்ரு என்ற இறைதியானம்,இஹ்சான் என்ற அகமியம்
ஆகியவை இஸ்லாத்தை வழிநட்த்த வகாபிகள் சூபித்துவத்தை மறுத்து
இஸ்லாத்துக்கும் சூபித்துவத்துக்கும் தொடர்பில்லை என்று பரப்புரை செய்து
இஸ்லாத்தின் ஆன்மாவை அவம்திக்கின்றனர்.

பல்வேறு பெயர்களில் பல்வேறு முகங்களில் வகாபிகள் இருந்து கொண்டு
அரபுலகத்தின் நிதியுதவியை வைத்து தர்ஹா பண்பாட்டை சிதைப்பதோடுமட்டும்
அல்லாது தர்ஹாக்களை உடைத்தெறியவும் செய்கின்றனர்.ஹஜ்,பர்தா,ஊடகம் என்று
வகாபிய முதலாளித்துவம் கொளுத்து வளர சாதாரண விளிம்பு நிலை முஸ்லிம்களை
காபிர்களாக பார்க்கும் மனநிலையை வகாபிகள்
வளர்த்துவருகின்றனர்.ஆணாதிக்கத்தை முன் நிறுத்தி தலாக் கலச்சாரத்தை
வளர்த்து பெண்களை அடிமைகளாக்கும் எல்லா உத்திகளையும் வகாபிகள்
கடைபிடிப்பதோடு மாத்திரமல்ல போராட்டம் என்ற பெயரில் பெண்களை மூலதனமாகி
அரசியல் இலாபம் ஈட்டவும் செய்து பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்து அரசியல்
நட்த்துவதும் வகாபிய நடைமுறைகளாக இருக்கிறது.மதானிகள் உள்ளிட்ட வகாபி
மௌலவிகள் மார்க்கத்தை கடைத்தெரு பண்டமாக எப்படி மாற்றி கோடீஸ்வர்ர்களாக
மாறுகிறார்கள் என்பதும் வகாபிய தீவிரவாத்த்தை எப்படி இளைஞர்கள் மத்தியில்
விதைக்கலாம் என்பதும் வகாபிகளது மார்க்க பணிகளாக இருக்கிறது என்பன போன்ற
உண்மைகளை இந்நூல் ஆணித்தரமான ஆதாரங்களுடன் ஒரு பெரும் விவாத்த்தை
நிச்சயம் உருவாக்கும்.

நான் ஏன் வகாபி அல்ல?

எச்.முஜீப் ரஹ்மான்

கிரௌன் சைஸ்.800 பக்கம்

விலை:ரூ.750

தொடர்புக்கு:பேரா.எச்.ஹாமீம் முஸ்தபா

கீற்று வெளியீட்டகம்

மின்னஞ்சல்:thuckalayhameem@gmail.com

பேச:9791954174

Series Navigationமொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருதுகவிதை என்னும் கடவுச்சொல் – கவிஞர் தமிழ்மணவாளன் அவர்களின் “உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்”
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *